PDA

View Full Version : சாதியும் சாமியும் ..



"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:00 AM
உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்


தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பா(ர்)க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா


வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு


வடக்கு வழிபோனா ஒரு சாதி
கிழக்கு வழிபோனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி


சாமிய மறந்துட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா


காவ(ல்)காக்குற அம்மனுக்கு
காக்கிச் சட்டை
காவலுக்கு நிக்குதய்யா




http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html (http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html)
பிரியமுடன் பிரபு ...

த.ஜார்ஜ்
26-10-2010, 09:05 AM
தங்கத்தால் தகதகக்கிற சாமிய நீங்க ஏன் தள்ளி நின்னு பாத்தீங்க பிரபானந்த சாமி

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:13 AM
தங்கத்தால் தகதகக்கிற சாமிய நீங்க ஏன் தள்ளி நின்னு பாத்தீங்க பிரபானந்த சாமி


எதாவது தப்ப எழுதிட்டேனோ ?
துரம நின்று பார்த்தாலே மனச எதோ பண்ணும்
பக்கத்துல போனா ......?!?!

அனுராகவன்
01-11-2010, 07:34 PM
கடவுளை போற்ற
எத்தனையோ வந்தனர்
ஆனால் அவரை
இகழ சிலர் வந்தனர்..
அவரை போற்றவா
இல்லை தூற்றவா..

உண்மை எங்கு
போட்டாலும்
அது சில இடத்தில்
பொய்;
அதை போல்
சில நல்ல
சாமியாரும் உள்ள
இடத்தில் சில
போலிகளும் உண்டு;