PDA

View Full Version : ஞானம் இல்லையே.........



Nanban
17-11-2003, 01:57 PM
ஞானம் இல்லையே.........

எனக்கு
எல்லா முகங்களும்
தெரியும்.

எனக்கு
எல்லா பெயர்களும்
தெரியும்.

ஆனாலும்
எல்லோரையும்
'நண்பனே' என்றுதான்
விளிக்கிறேன்.

மரியாதையின்
பொருட்டு மட்டுமே
அல்ல.

எந்தப் பெயருக்கு
எந்த முகம் என்ற
ஞானம்
இல்லாததினாலும் தான்.....

Nanban
17-11-2003, 03:00 PM
புரிவதற்கு சிரமம் இருக்காது என்றே நம்புகிறேன்........

இருந்தால், கேளுங்கள்........

இளசு
17-11-2003, 04:43 PM
அன்பு நண்பரே,
நம் பப்பி அவர்கள் விடுகதை சொல்லிவிட்டு
"இது ரொம்ப சுலபம்" என்பார்கள்.

குறியீடுகளும், படிமங்களும்
வடித்தவர் பக்கம் இருந்து வெகு சுலபமாய் புரியும்.
அதேபோல் படைப்பவர் படித்து சிந்தித்தாலும் புரியும்.
இரண்டு வகையிலும் நான் வர "ஞானம் இல்லையே"!

Nanban
17-11-2003, 05:41 PM
எத்தனை வடிவங்களைப் படைத்து, எத்தனை பெயர்கள் இடப்பட்டாலும், எனக்கு இறைவன் என்ற ஒருவனைத் தானே தெரிகிறது....... ஒரு பெயரால் தானே அழைக்க முடிகிறது..... பலப்பல தெய்வங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லையே........!

இளசு
17-11-2003, 05:55 PM
சொன்னபின்னாலே
சொக்கிநிற்கிறேன் உங்கள் கவிதையின் ஆழம், பரிமாணம் கண்டு.

rambal
17-11-2003, 06:16 PM
இது ஓர் எதிர்மறையான கவிதை..
ஜீனியஸ் கேட்டகரியை கொஞ்சமாக சாடல்..
எல்லாம் தெரியும் என்பவனுக்கு இனி கற்க வாய்ப்பில்லை..
எதுவும் தெரியாது என்று சொல்பவனே இறுதி வரைக் கற்றுக் கொள்கிறான்..
அப்படி இப்படி பார்த்தால்..
இதில் ஒரு பண்பு மட்டும் கொஞ்சம் தீமையிலும் நன்மையாக இருக்கிறது..
அது எல்லோரையும் நண்பனே என்று விளிக்கும் பொழுது
பகைவராக இருந்தாலும் கூட நட்பு பாராட்டப்படுவதால் நண்பனாக வாய்ப்புண்டு..

ஓர்மை இருந்தால்
எல்லா பெயர்களுக்கும் உரிய
முகங்கள் தெரியும்...

ஞானம் இருந்தால்
எல்லா முகங்களுக்கும் உரிய
பெயர்கள் தெரியும்..

நண்பனே என்று விளித்து
நட்பு பாராட்ட விரும்புவதாலே
ஞானமும் ஓர்மையும்
ஒளிந்துகொண்டன எங்கோ...

puppy
17-11-2003, 07:32 PM
அது அவர் அவர்களின் அறிவு விசாலத்தை பொறுத்தது நண்பனே....கிராமத்தில் இருப்பவனை சூரியன் எங்கே உதிக்குது என கேட்டால் அந்த மலைக்கு பின்னாடி இருந்து என சொல்வான்...அவன் அவ்வளவு தூரம் மட்டுமே அறிவால்
பார்த்து இருக்கிறான்..இன்னொருவனை கேட்டால் கடலில் இருந்து வரும் என்பான்....இன்னொருவனை கேட்டால் சூரியனா என்ன என்று கேட்பான்.....எல்லாம் ஒன்று தான்......பார்ப்பவரை ஞானத்தை பொறுத்து.....

முத்து
17-11-2003, 07:36 PM
பப்பி அவர்களே ..
ஆனாலும் உண்மை என்று ஒன்றுதானே இருக்கமுடியும் .. ?
ஆளாளுக்கு ...
நாம ஏதாவது சொல்லிக்கற வேண்டியதுதான் ....

Nanban
17-11-2003, 07:39 PM
அது அவர் அவர்களின் அறிவு விசாலத்தை பொறுத்தது நண்பனே....

உண்மை தான்.

கடவுள் எத்தனை தூரம் உண்மை என்று ஆன்மீகம், அரசியல் பகுதியில் அதைத் தான் எழுதியிருக்கிறேன்........

'பரிபூரணத்தை நோக்கி நம் அறிவின், அறிவியலின் ஆற்றலை அழைத்துச் செல்லும் சக்தி தான் இறைவன் என்று'

படித்துப் பாருங்களேன்......