PDA

View Full Version : நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

அகத்தியன்
25-10-2010, 02:10 PM
சிறு பராயத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதென்றால் ஒரு வகை அலாதி ஆன்ந்தம் எல்லோருக்கும் உண்டுதான்.

அப்போதெல்லாம் தெருவில் உள்ள பொடிசுகள் சேர்ந்தால் புழுதி கிளம்பும். எவனாவது எங்கிருந்தோ ஒரு பூனைக்குட்டியினை கொண்டு வந்துவிடுவான். அதற்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்து சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தும் அப்பூனையினை நோக்கியே நகரும். அதுவும் அதற்கு உணவு வைத்துவிட்டு ஒளிந்திருந்து பார்ப்பது ஒரு குஷி. ஆனால் ஏனோ தெரியவில்லை, ஒரு பூனைக்குட்டியாவது, கார்ட்டுன்களில் வருவது போல, எங்களைக் கண்ட்தும் ஓடி வந்து கால்களினை உரசவோ, விளையாடவோ இல்லை. ஒன்று, ஈனமாக கத்திக்கொண்டிருக்கும் அல்லது எப்படியாவது ஓட முயற்சிக்கும். இப்படித்தான் ஆரம்பகால செல்லப்பிராணிகளுடனான தொடர்புகள் உண்டாயின.

பின்னர், புறாக்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் – பக்கத்து வீட்டு அண்ணன். அவரிடம் பெருந்தொகை புறாக்கள் இருந்தன. அவை சுதந்திரமாக உலவின. அதோடு அவரது கையசைப்புக்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அவை நடக்கும். கூண்டுக்குள் இருக்க, இரையினை எடுக்க என எல்லாவற்றுக்கும் அவர் ஒரு கை தேர்ந்த சர்க்கஸ் ரிங்க் மாஸ்டர் போல அவற்றுக்கு ஆணைகளினை தன் உடல் மொழி மூலம் சொல்வார். அது பார்க்க ரொம்ப சுவாரசியாமாக இருக்கும்.
அந்த ஆசையில் புறாக்கள் வாங்கி, அம்மாவின் திட்டுடன் கிடந்த தகரம் பலகை எல்லாம் சேர்த்து கூடுகள் தயாரித்து, பல்வேறு கனாக்களுடன் வாங்கிய இரு ஜோடிகளினையும் விட்டாச்சு. இதில் கூட இருப்பவனுகளின் அட்வைஸ்கள் வேரு. ஆளாளுக்கு அள்ளி இறைத்துக்கொண்டிருந்தானுகள். புறாக்கு படுக்க வைக்கோல், முட்டை சீக்கிரமா விட வேண்டுமெண்டா சிப்பித்தூள் இப்பிடி பலப்பல..

எனது கனவெல்லாம், பக்கத்து வீட்டு அண்ணன் போல புறாக்கள் தன்பாட்டுக்கு சுதந்திரமாக திரிய வேண்டும், எனது கை அசைவுகளுக்கு ஏற்றவாறு அவை நடக்க வேண்டும் என்பதே! சிறிது காலம் அடைத்து வைத்து அவற்றினை பழக்கிய பின் திறந்து விட்டால் அவை பழகிவிடும் என்ற ஆலோசனையின் பேரில் ஒரு சுப யோக சுப தினத்தில், புறாக்கள் வானில் பறந்து பின் என் கைகளில் வந்து நிற்பது போன்ற பல கனவுகளுடன் கூண்டினை திறந்து விட்டேன். வேகமாக சிறகசைத்தவாறு, நான்கு புறாக்களும் பறந்து எங்கள் வீட்டு க்கூரை மேல் நின்று கொண்டு என்னை தலையினை சாய்த்து பார்த்தன. நானும் ஒரு எதிர்பார்ப்புடன் கீழே நின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அப்பார்வையின் அர்த்தம் புரியவில்லை. “ இவ்வளவு அப்பாவியா இஎஉக்கியே? எப்பிடி பொழைக்கப்போற?” என்ற கேள்விப்பார்வை என்பது, பின்னர் புரிந்த்து. பிறகு அப்புறாக்கூடு, அம்மாவிற்கு விறகாக பயன்பட்டது எனக்கு மிக வருத்தமாய் போனது.

பின்னர் காலங்களுக்கும் கால்களுக்கும் ஓய்வில்லாமல் போனதால் வளர்ப்பு பிராணிகள் பக்கம் நாட்டம் செல்லவில்லை. தற்போது வாழ்க்கை வெளிநாட்டில் என்றான போது, ஆரம்பங்களில் தனிமையினை போக்க ஏதாவது செய்யலாம் என்ற எண்ண்த்தில் எனது அலுவலக அறையில் மீன் வளர்க்கலாம் என முடிவு செய்து அதனை செய்து வருகின்றேன். ஒரு சோடி தங்க மீன்கள் அதாங்க Gold fish உள்ளன. கண்ணம்மா, செல்லத்தாயி.. பெயரைக்கேட்டு சிரிப்பு வரலாம். எனது பாரதிக்கு பிடித்த பெயர் எனக்கும் பிடித்துள்ளது. இப்போது அவை இரண்டுக்கும் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

அலுவலக கதவினை திறந்து உள்ளே வருவது முதல் எனது ஒவ்வொரு அசைவ்களுக்கும் அவை செய்யும் சேட்டைகள் சுவாரசியமானவை. கூட பணியாற்றும் நண்பர்கள் கூட இப்போது அவற்றிற்கு ரசிகர்கள். என்ன! கொஞ்சம் கண்ணம்மா செல்லம்மா வினைத்தான் கடித்து குதறுவார்கள்.
எதுவும் தோணாத, வெர்மையான எனது கணங்களினை நிரப்ப நான் அவற்றின் மீதுதான் கவனம் செலுத்துவேன். நீர்னின் மேல் மெதுவாக விரல்களினை கொண்டு செல்லும் போது கை விரல்களினை சுற்றிக்கொண்டும் மெதுவாக தீண்டும் போதும் ஒரு வித மகிழ்ச்சி.. இப்படி அவை தரும் அனுபங்கள் ஏராளம்.. ஏராளம்… அவை இன்னும் வாழ நான் பிரார்த்திக்கின்றேன்.. எனக்காக நீங்களும் செய்யுங்களேன்…

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

Ravee
25-10-2010, 02:21 PM
ஆஹா என்னை போல ஒரு பிறவி .... அகத்தியன் நான் புறாவை தவிர எல்லாவற்றையும் வளர்த்திருக்கிறேன் .... மீன்களில் ஆரம்பித்து பாம்புகள் வரை .... உண்மையில் பறவைகள் மீன்கள் நாய் பூனை எல்லாம் நாம் அதற்கு அமைத்து கொடுத்த உறைவிடத்தை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு குட்டி போட்டு பெருகும் போது ஏற்படும் சந்தோசம் இருக்கே ... அதெல்லாம் லாலாக்கடை லட்டு போல .... எத்தனை சொன்னாலும் தெரியாது ... அனுபவித்து பார்க்கணும் ..... :lachen001: :aetsch013: :)

அகத்தியன்
26-10-2010, 12:27 PM
அப்படியா ரவி!! மிக்க மகிழ்ச்சி நண்பரே. ஒத்த ரசனை கொண்டவர்களினை காண்பதில் இரட்டிப்பு மகிழிச்சி. நீங்கள் சொல்வது போல அது அனுபவித்துப்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.. எனக்கும் அவ்வனுபவம் உண்டு.. பாம்புகள் வளர்த்த அனுபவம் எப்படி இருந்தது??

Ravee
26-10-2010, 12:42 PM
அப்படியா ரவி!! மிக்க மகிழ்ச்சி நண்பரே. ஒத்த ரசனை கொண்டவர்களினை காண்பதில் இரட்டிப்பு மகிழிச்சி. நீங்கள் சொல்வது போல அது அனுபவித்துப்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.. எனக்கும் அவ்வனுபவம் உண்டு.. பாம்புகள் வளர்த்த அனுபவம் எப்படி இருந்தது??

அது ரொம்ப "திர்லிங்" அனுபவம் , யாருக்கும் தெரியாமல் ஒரு வாளியில் போட்டு வளர்த்தேன் , ஒரு நாள் நான் இல்லாத வேலையில் வீட்டின் சொந்தக்கார அம்மாள் அதை பார்த்து கத்தி பெரிய ரகளை ஆனது. கண்டிப்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் :lachen001:

விகடன்
26-10-2010, 07:27 PM
அப்பாவி அகத்தியன்.

புறாக்களை திறந்து விட்டது போல கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் பிடித்து வெளியில் விட்டுடாதீர்கள். தண்ணீரிலேயே இருக்க விடுங்கள்.:lachen001:

சுகந்திரம் அளிப்பதாக எண்ணி கடலிலும் விட்டிடாதேங்கோ......:aetsch013: சொல்லிப்போட்டேன்

கீதம்
26-10-2010, 09:50 PM
உங்கள் அனுபவம் கேட்டபிறகு என் அனுபவங்களையும் எழுதும் ஆவல் பிறந்துவிட்டது.

உங்கள் காதலிகள் நெடுநாள் வாழ வாழ்த்துகள், அகத்தியன்.

விகடன்
27-10-2010, 04:52 AM
நானும் எனது சகோதரர்களும் இணைந்து ஓர் பொமேரியன் வகை நாய்க்குட்டி வளர்த்தோம்.

ஒருவருடத்திற்கு மேலாக வீட்டினுள்ளும் வெளியேயுமாக தனது இஸ்ட்டம்போல் வளர்ந்துவந்த நாய்க்குட்டி ஒருநாள் திடீரென்று இறந்துவிட்டது.

அது அதீத பனிக்குளிரால் இறந்ததா? இல்லை தென்படாதிருந்த சுகவீனமேதாவதோ தெரியவில்லை.

அன்றைய தினத்திலிருந்து எந்த உயிரினங்களையும் எமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து வளர்ப்பதில்லை.

அமரன்
27-10-2010, 07:55 PM
செல்லப்பிராணி..

ஆங்கிலத்திலும் தமிழிலும் இதைப் பற்றிக் கட்டுரை எழுதாத இலங்கையர் இருக்க முடியாது..

இப்ப யோசித்துப் பார்த்தால் அப்போ எவ்வளவு தப்புத் தப்பாக எழுதி பாஸ் மார்க் வாங்கி இருக்கோம் என்று புரிகிறது..

சகிப்புத்தன்மை போன்ற மிக அவசியாமன குணங்களைத் தருவதில் செல்லப் பிராணிகளுக்கு என்றும் தனி இடம்..

அகத்தியன்..

இன்னும் பலர் எழுத நீங்கள் காரணமாகிவிட்டீர்கள்.

பென்ஸ்
27-10-2010, 07:59 PM
நல்ல கட்டுரை....

ஆனால்..

காதலிக்கிறேன் என்ற வார்த்தை நேருடுகிறதே...

அகத்தியன்
28-10-2010, 05:15 AM
நல்ல கட்டுரை....

ஆனால்..

காதலிக்கிறேன் என்ற வார்த்தை நேருடுகிறதே...

ஏன் அப்படி நண்பரே? அவ்வார்த்தை பிரத்தியேகமான ஒன்றா??

ரங்கராஜன்
31-10-2010, 05:54 AM
அகத்தியன் நன்றாக இருந்தது உங்களின் இந்த கட்டுரை குறிப்பாக இதற்கான தலைப்பு.

எனக்கும் செல்லப்பிராணிகளிலே ரொம்ப பிடித்தது, மீன் தான். அதுவும் வண்ண வண்ண மீன்களை பார்க்க பார்க்க மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போய் மனதில் சந்தோஷம் நிறையும். அதிலும் எனக்கு அடிக்கடி வரும் ஒரு ஆசை ஆழ்கடலில் மீனாக பிறக்க வேண்டும் என்பது தான், அதுவும் சில வருடங்களுக்கு முன்பு finding nemo என்ற ஆங்கிலப்படத்தை பார்த்த பின்னர் எப்படியாவது அடுத்த ஜென்மத்தில் ஆழ் கடலில் இருக்கும் எதாவது ஒரு வண்ண மீனாக பிறக்க வேண்டும் என்று ஆசை அதிகரித்து விட்டது.

நானும் சிறு வயதில் பல மீன்களை வளர்த்து இருக்கிறேன், அது மீதுள்ள அதீத ஆசையால் தெரியாமல் அதற்கு அதிக உணவளித்தே கொன்றும் இருக்கிறேன். இந்த தவறு எனக்கு உறைத்ததில் இருந்து நான் மீன் வளர்ப்பதையே விட்டு விட்டேன்.

ஆனால் உங்களின் இந்த திரியை படித்தவுடன் மறுபடியும் அந்த ஆசை துளிர்த்துள்ளது, விரைவில் மீன்களை வாங்க வேண்டும். அளவான தீனியை போட்டு வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

திரிக்கு வாழ்த்துக்கள்.

அகத்தியன்
31-10-2010, 12:42 PM

அதிக உணவளித்து கொல்லுதல் என்பது எனக்கும் நடந்துள்ளது.. :confused::confused:

மீன்கள் உணவினை எப்போது போட்டாலும் உண்டு கொண்டே இருக்கும். அதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

ஒரு நாளைக்கு ஒரு தடவை இட்டால் போது. Gold Fish உக்கென பிரத்தியேகமான உணவுண்டு. Gold Fish Flake என கேட்டால் தருவார்கள். ( அங்கு என்ன பெயர் என்று தெரியாது. பார்ப்பதற்கு அவல் போல இருக்கும் கருஞ்சிவப்பு, பாசிப்பச்சை நிறம் ) 2 மீன்களுக்குஅதில் ஓர் 5 , 6 இழைகள் போதுமானாது.

அமீரகத்தில் நிறைய வளர்ப்பு பிராணிகள் விற்பனை நிலையங்கள் இருப்பதால், எந்த வித சிரமங்களும் இல்லை. அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

எனது கண்ணம்மாவும் செல்லத்தாயியும் :

http://4.bp.blogspot.com/_dSjWyO0FKMc/TMW3Cf4xaaI/AAAAAAAAAWk/ZvIqnBisEt4/s1600/DSC00297.JPG

Mano.G.
31-10-2010, 04:40 PM
அகத்தியன் உங்கள் செல்லப்பிராணிகளை பற்றி பதித்தற்க்கு
வாழ்த்துக்கள். செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு தான்
அதன் அருமை தெரியும் அவர்களோடு பேசும் பொழுது நேரம் போவது கூட
தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.

என்னிடமும் செல்லப்பிராணிகள் உண்டு அதை மன்றத்தில் பதித்துள்ளேன்

இதோ அதன் சுட்டி

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23493&page=4

ஓவியன்
31-10-2010, 04:54 PM
அகத்தியன் பிராணிகள் மீதான உங்கள் அன்பு கண்டு மிக்க சந்தோசம், ஆனால் இரண்டு தங்க மீன்களையும் கண்ணாடிக் குவளையிலா வைத்திருக்கின்றீர்கள்...??

அந்த குடுவையிலுள்ள நீரினை எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை மாற்றுகிறீர்கள்...??

உங்கள் பதிலைக் கொண்டு நான் இது பற்றி நிறைய எழுதக் காத்திருக்கின்றேன், ஏனென்றால் மீன் வளர்பில் நிறைய ஆர்வமும் கொஞ்ச அனுபவமும் எனக்குண்டு...

கருணை
25-06-2011, 01:51 PM
அகத்தியன் பிராணிகள் மீதான உங்கள் அன்பு கண்டு மிக்க சந்தோசம், ஆனால் இரண்டு தங்க மீன்களையும் கண்ணாடிக் குவளையிலா வைத்திருக்கின்றீர்கள்...??

அந்த குடுவையிலுள்ள நீரினை எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை மாற்றுகிறீர்கள்...??

உங்கள் பதிலைக் கொண்டு நான் இது பற்றி நிறைய எழுதக் காத்திருக்கின்றேன், ஏனென்றால் மீன் வளர்பில் நிறைய ஆர்வமும் கொஞ்ச அனுபவமும் எனக்குண்டு...

அகத்தியன் உங்கள் செல்லப்பிராணிகளை பற்றி பதித்தற்க்கு
வாழ்த்துக்கள். செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு தான்
அதன் அருமை தெரியும் அவர்களோடு பேசும் பொழுது நேரம் போவது கூட
தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.

என்னிடமும் செல்லப்பிராணிகள் உண்டு அதை மன்றத்தில் பதித்துள்ளேன்

இதோ அதன் சுட்டி

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23493&page=4

செல்லப்பிராணி..

ஆங்கிலத்திலும் தமிழிலும் இதைப் பற்றிக் கட்டுரை எழுதாத இலங்கையர் இருக்க முடியாது..

இப்ப யோசித்துப் பார்த்தால் அப்போ எவ்வளவு தப்புத் தப்பாக எழுதி பாஸ் மார்க் வாங்கி இருக்கோம் என்று புரிகிறது..

சகிப்புத்தன்மை போன்ற மிக அவசியாமன குணங்களைத் தருவதில் செல்லப் பிராணிகளுக்கு என்றும் தனி இடம்..

அகத்தியன்..

இன்னும் பலர் எழுத நீங்கள் காரணமாகிவிட்டீர்கள்.

நானும் எனது சகோதரர்களும் இணைந்து ஓர் பொமேரியன் வகை நாய்க்குட்டி வளர்த்தோம்.

ஒருவருடத்திற்கு மேலாக வீட்டினுள்ளும் வெளியேயுமாக தனது இஸ்ட்டம்போல் வளர்ந்துவந்த நாய்க்குட்டி ஒருநாள் திடீரென்று இறந்துவிட்டது.

அது அதீத பனிக்குளிரால் இறந்ததா? இல்லை தென்படாதிருந்த சுகவீனமேதாவதோ தெரியவில்லை.

அன்றைய தினத்திலிருந்து எந்த உயிரினங்களையும் எமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து வளர்ப்பதில்லை.

அது ரொம்ப "திர்லிங்" அனுபவம் , யாருக்கும் தெரியாமல் ஒரு வாளியில் போட்டு வளர்த்தேன் , ஒரு நாள் நான் இல்லாத வேலையில் வீட்டின் சொந்தக்கார அம்மாள் அதை பார்த்து கத்தி பெரிய ரகளை ஆனது. கண்டிப்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் :lachen001:

இந்த திரியின் இணைப்பை தந்த ரவி அங்கிளுக்கு நன்றி ....

ஆர்வலர்கள் இத்தனை பேரை ஒரே நேரத்தில் சந்தித்த சந்தோசம்... முதல் பதிவில் நிரம்ப ரத்த களறியாய் ஒரு சம்பவத்தை பதிவிட்டதற்க்காக ரவி அங்கிள் கடிந்துகொண்டார்.

ஏதோ ஒரு வருத்தத்தில் அப்படி பதிந்து விட்டேன். அது எண்ண எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கும். எனவே எனக்கு தெரிந்த எளிய முறையில் விலங்குகளை பராமரிக்கும் திரிகளை பதிவிடலாம் என்று எண்ணி உள்ளேன். தெளிவான தமிழில் பதிவது ரொம்ப கஷ்டமாக உள்ளது. எனவே சில ஆங்கில கட்டுரைகளை தமிழ் படுத்தி அனுப்ப முயற்சி செய்கிறேன். எழுத்து பிழை திருத்தி தந்தால் நன்றாக இருக்கும். ரவி அங்கிள் உங்களுக்கு சம்மதமா ?