PDA

View Full Version : சிறகுகள்..



rambal
17-11-2003, 02:04 PM
சிறகுகள்..

0
மூச்சுத் திணறுகிறது
கர்ப்பிணியாய் - குழந்தைகள்
ஏற்றிச் செல்லும் ஆட்டோ.

0
சொகுசாய் காரில் பயணம்
மேல்தட்டு வளர்க்கும் நாய்
பரிதாபமாய் நடைவாசி.

0
கட்டத்திற்குள் அடங்க
மறுக்கிறது கல்யாணம்
செவ்வாய்தோஷ பெண்.

0
எத்தனை முறை
கூட்டிக் கழித்துப் பார்த்தும்
விடை கிடைக்கவில்லை
மாதாந்திர பட்ஜெட்.

Nanban
17-11-2003, 02:23 PM
சிறு சிறு துளிகள்......

கூர்மையாக காட்சிகளைக் கண்டு விமர்சனம்.....

கவர்ந்தது - கட்டத்திற்குள் அடங்க மறுக்கும் கல்யாணம்.....

விடை கிடைக்காத பட்ஜெட் கணக்கை துண்டுவிழும் வகையில் தான் வைத்துக் கொள்ள வேண்டும்......

இக்பால்
18-11-2003, 11:11 AM
பாராட்டுக்கள் நண்பர் ராம் அவர்களே.

மனசு: இவர் நமது வார்த்தை இங்கே வரிகள் எங்கே பகுதிக்கு வந்தால்
எப்படி இருக்கும்?

உள்மனசு: நீ சும்மா இருக்கமாட்டியே!

lavanya
18-11-2003, 08:19 PM
முதல் கவிதையும் மூன்றாம் கவிதையும் முத்தாய்ப்பாய் இருந்தது
ராம்பால்ஜி....பாராட்டுக்கள்