PDA

View Full Version : கவிதைக்கு தலைப்பு பின்னர் சூட்டப்படும் :)



விகடன்
24-10-2010, 08:09 PM
காலம் கரைந்தோடும்
ஞாயிறு திங்களாகும்
நான் எங்கு சென்றாலும்
நீ எங்கு போனாலும்
என் மனம் விட்டோடுமா? -இல்லை
நான்தான் விடுவேனா...


1. கவிதைக்கான தலைப்பு உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

2. இந்தக் கவிதைக்கான உங்கள் பின்னூட்டங்கள் வெகுவாக வரவேற்கப்படுகின்றன...

அமரன்
24-10-2010, 08:15 PM
கவிதை எழுதுவது எப்படியில் நீங்கள் கதைத்தது ஞாபகத்துக்கு வருது!

அந்தக் கொடியில் பூத்த சக பூ என்பதால் அதிக சந்தோசம்.

பொங்கல் வாழ்த்து மட்டையில் எழுதிய வாழ்த்துகள்..

தீபாவளி வாழ்த்தட்டையில் வாழ்த்திய எழுத்துகள்..

ஆட்டோகிராஃப் வசனங்கள்.. மறக்க முடியுமா?

பாராட்டுகள் விராடன்.. தொடர்ந்து கவிதை இதழ்கள் விரியட்டும்.

கீதம்
25-10-2010, 12:31 AM
காலம் முழுவதும்
கண்ணாமூச்சி ஆட இயலுமா?
என்றேனும் ஓர்நாள்
இளைப்பாற அமருவாயே,
அப்போதிருப்பேன் நானும்
உன்னருகில்!

பாரதி
25-10-2010, 12:49 AM
மன்றத்தின் புதிய கவிஞருக்கு இனிய பாராட்டு.
தொடர்ந்து எழுதுங்கள்.

இப்போது இருக்கும் தலைப்பில் 'சூடப்படும் என்பதற்கு பதிலாக சூட்டப்படும்' என்றிருந்தால் சரியாக இருக்குமா விராடன்?

M.Jagadeesan
25-10-2010, 03:03 AM
தலைப்பு: என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

ஞாயிறு திங்களானால்
உலகம் என்ன ஆகும்?
உயிர்கள் என்ன ஆகும்?

அன்புரசிகன்
25-10-2010, 03:45 AM
ஞாயிறு திங்களானால் வெம்மையா தண்மையா???*

ஞாயிறு திங்களானால் காலம் கரையாது. காலன் தான் கரைவான்.:D

விகடன்
25-10-2010, 07:50 AM
"கவிதை எழுதுவது எப்படி?"யில் நீங்கள் கதைத்தது ஞாபகத்துக்கு வருது!

இன்னமமுமா அதை மறக்கவில்லை. சரி போகட்டும் விடுங்கள்.
அந்தக்கதை கதைத்ததோடு அப்படியே நிற்கின்றது அமரா...அதுதான் உண்மை!

நானும் பலதடவை கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். எழுதிவிட்டு படித்தால் அது கவிதையா அல்லது கதையா என்ற குழப்பம் வருமளவிற்கு இருப்பதால் பிரசுரிப்பதே இல்லை. என் கவிதைகளால் எனக்கருகிலிருக்கும் குப்பைத்தொட்டிக்குத்தான் சந்தோசம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


கவிதையாலேயே பின்னூட்டமெழுதிய கீதத்திற்கு நன்றி.

பாரதி அண்ணா, தலைப்புடன் பின்னூட்டமிட்ட ஜெகதீசன், புதிரோடு மட்டும் முடித்திட்ட அன்புரசிகன் அனைவரிற்கும் நன்றிகள்.

பரதி அண்ணா தலைப்பில்லாத தலைப்பிற்கு திருத்தம் சொன்னீர்களே? ஆனால் நிரந்தரமாகவே போட்டுவைக்க ஒரு தலைப்பு சொல்லவில்லையே?

அன்புரசிகா, ஏன் தலைப்பு வைக்க மறந்துவிட்டாய்???

govindh
25-10-2010, 08:51 AM
தலைப்பு: உன்னுடன் நான்...

"உனைத் தொடர்வேன்....
நிழலாகவே...!
நிஜமாகவே.... !"

தொடர்ந்து எழுதுங்கள்...
பாராட்டுக்கள்..