PDA

View Full Version : சாதிச்சண்டை



ஷாஜஹான்
24-10-2010, 11:32 AM
சாதிச்சண்டைக்கு சமரசம் பேச
சாமிகளே வந்தாலும் சாய்க்க தயங்காதவர்களே ...

எல்லார் ரத்த நிறமும் சிவபென்று அறிய
இன்னும் எத்தனை தலைகளைதான் வாங்கபோகிறீர்கள்

ஆதி
24-10-2010, 11:41 AM
சதார்ன கவிதைப் போல் தோன்றினாலும் கவிதையில் ஈர்க்கிற மாதிரி ஏதோ ஒன்னு இருக்குங்க ஷாஜஹான்..

இன்னும் நிறைய எழுதுங்க..

அப்படியே அறிமுகப்பகுதியில் உங்க அறிமுகத்தையும் தந்தால் உங்கள் முகத்தை நாங்கள் அறிந்து கொள்வோமில்லையா

M.Jagadeesan
24-10-2010, 12:28 PM
கவிதை நன்று. தொடர்ந்து எழுதவும்

முக்கனியில் ஒன்றாம் மாம்பழத்தைப் பெறுவதற்கு
முருகனுக்கும் வேழ முகத்தானுக்கும் சண்டை
விரிசடை கடவுளின் அடிமுடி காண்பதிலே
விஷ்ணுவுக்கும் நான்முக பிரம்மாவுக்கும் சண்டை
சாமிகளே தங்களுக்குள் சண்டை இடும்போது
சாதிச் சண்டையைத் தீர்த்துவைக்க சாமிகளுக்கு ஏதுநேரம்?

அமரன்
25-10-2010, 08:47 PM
கண் தெரியாதவர்களுக்கு நிறம் எப்படித் தெரியும்.

சாவு மணி இன்னும் அடிக்கலையோ!!

சிவா.ஜி
25-10-2010, 09:41 PM
அதானே...சாதி இருட்டு கண்களை மூடியிருக்கும்போது....நிறம் எப்படித் தெரியும்....(இது...மதத்துக்கும் பொருந்தும்.....!!)

வாழ்த்துக்கள் ஷாஜகான்.

கீதம்
25-10-2010, 09:48 PM
இரத்தப்பரிசோதனை

இரத்தத்தின் நிறம் சிவப்பென்பதை
இன்னமும் நம்பாத பாவிகளே!
இத்தனை மனிதர்களின்
இதயத்தைப் பிளந்துபார்த்தப் பின்னுமா
நீங்கவில்லை,
நீங்கள் கொண்ட சந்தேகம்?

இது முன்பு பதிவுகளில் வெளிவந்த என் கவிதை. உங்கள் கருத்தை ஒத்திருந்ததால் பதிவிட்டேன்.

பாராட்டுகள் ஷாஜகான் அவர்களே. தொடர்ந்து கவிமழை பொழியட்டும்.

govindh
26-10-2010, 08:47 AM
பாராட்டுக்கள் ஷாஜகான்.

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 08:50 AM
நன்று