PDA

View Full Version : கின்னஸ் கிழவி.



M.Jagadeesan
24-10-2010, 03:09 AM
கிழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.இப்பவோ,அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்தது.கிழவியின் பேரன் மாடசாமி, கிழவியின் தலைமாட்டில் கவலையுடன் உட்கார்ந்திருந்தான்.வீட்டின் முன்பாகக் கூட்டம் கூடியிருந்தது.
ஊர்ப்பெரியவர்கள் மாடசாமியிடம்,"தம்பி சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடு.இன்னிக்கு ராவுக்குக்கூடத் தாங்காது."-என்று சொன்னார்கள்.

வைத்தியர் வந்து பார்த்தார்."பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு,நம்ப முடியாது.ஆகவேண்டியதைக் கவனிங்க"-என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஊர்மக்கள்,ஆண்களும், பெண்களுமாக வந்து கிழவியைப் பார்ப்பதும், போவதுமாக இருந்தார்கள்.மங்காத்தா கிழவியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அவளுக்குப் பிரசவம் பார்க்கத் தெரியும்.அந்த ஊரில் முக்கால்வாசிப்பேர்
கிழவிப் பிரசவம் பார்த்துப் பிறந்தவர்கள்.

அந்தஊர் ஜோசியர் கிழவியை வந்து பார்த்தார்.முகத்தை சற்றுநேரம் உற்று நோக்கினார்.மூக்கிலே கை வைத்துப் பார்த்தார்.கிழவியின் உள்ளங்கையை விரித்துப் பார்த்துவிட்டு சற்றுநேரம் சிந்தனை செய்தார்."தம்பி பாட்டியோட ஜாதகம் ஏதாவது இருக்கா? ?"-என்று மாடசாமியிடம் கேட்டார்.
"தேடிப் பார்க்கணும்"-என்று மாடசாமி சொன்னான்.

ஜோசியர் மாடசாமியைப் பார்த்து," தம்பி இந்த உலகத்துல பொறக்குற ஒவ்வொருத்தரும் ஒரு நோக்கத்துக் காகத்தான்
ஆண்டவன் படைக்கிறான்.அந்த நோக்கம் முடியற வரைக்கும்
ஆண்டவன் அவங்களை அழைச்சிக்கிறது இல்ல.அதே சமயத்துல. வந்த நோக்கம் முடிஞ்சிட்டுதுன்னா ஆண்டவன் அவங்களை விட்டு வைக்கிறதும் இல்ல.சிலபேரு சின்ன வயசுல சாகறதுக்கும், சிலபேரு நூறு வயசுலகூட நல்லா இருக்கிறதுக்கும் இதுதான் காரணம். கிழவி இந்த உலகத்துக்கு
வந்த நோக்கம் இன்னும் முடியல.அந்த நோக்கம் முடியற வரைக்கும் எமன் கிட்ட நெருங்கமுடியாது.இதுநான் கத்துகிட்ட ஜோசியத்து மேல ஆணை."-என்று சொன்னார்.

ஜோசியர் சொன்னதைக் கேட்டு வீட்டின் முன்பு கூடியிருந்தவர்கள் சிரித்தார்கள்." என்ன ஜோசியரே கிழவி மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறா. இனிமே கிழவி என்ன செய்யப்போறா? நோக்கம் அது, இதுன்னு பேசறீங்களே?' என்று பரிகாசம் செய்தார்கள்.

"ஐயா நான் சொல்றது முக்காலும் உண்மை.கிழவி எந்த நோக்கத்துக்காக வந்தான்னு அவ செத்த பின்னாடிதான் தெரியும்"-என்று அடித்துப் பேசினார்.

மறுநாள் காலை.கிழவி கோமா நிலையில் இருந்தாள். வெறுமனே மூச்சு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது.நேரம் செல்லச்செல்ல நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது.பாதம் சில்லிட்டு அந்தக் குளிர்ச்சி மெல்ல மெல்ல மேலேறியது.திடீரென்று கிழவியின் உடல் ஒரு வெட்டு வெட்டி இழுத்தது.அவ்வளவுதான்.அதற்குப்பின் கிழவியின் உடலில் எந்த அசைவும் இல்லை.

கிழவி இறந்துவிட்டதை உறுதி செய்த ஊர்மக்கள் அவளது இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.வீட்டின் முன்பு பந்தல் போடப்பட்டது.வெகு நேர்த்தியாக பாடை கட்டி, ஆட்டபாட்டத்துடன் ,வாண வேடிக்கையுடன் கிழவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

ஒருவழியாகக் கிழவியை அடக்கம் செய்துவிட்டு ஊர்மக்கள் திரும்பினர்.வீட்டின்முன்பு இருந்த பெஞ்சில் சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.சிலர் செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தனர்.ஜோசியரும் ஒரு ஓரமாக குந்தியிருந்தார்.

மாடசாமி வெளியில் வந்தான்.ஜோசியரைப் பார்த்து,"ஐயா வீட்டின் பரண்மீது இந்தப் பஞ்சாங்கம் கிடந்தது."-என்று சொல்லி அதை ஜோசியரிடம் கொடுத்தான்.
ஜோசியர் அதை வாங்கிப் பார்த்தார்.அதில் கிழவியின் பிறந்த ஆண்டு, தேதி,நேரம் ஆகியவை குறிப்பிட்டிருந்தது.

அப்பொழுது செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,"ஜோசியரே இந்த செய்தியைப் படியுங்க.ஜப்பானில் ஒரு கிழவி நேத்து செத்துப் போனாளாம்.அவளுக்கு வயசு 116 -ன்னு போட்டிருக்கு.அவளோட பிறந்த தேதி எல்லாம் போட்டிருக்கு.உலகத்துல அதிக வயசான கிழவி அவதானாம்.கின்னஸ் சாதனைன்னு சொல்றாங்க."-என்று சொல்லி பேப்பரை ஜோசியரிடம் கொடுத்தார்.

பேப்பரை அவசரமாக வாங்கிப் பார்த்தார் ஜோசியர்.அவர் முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம் தோன்றியது."நான் சொன்னது வீண் போகல.நம்ம கிழவி சாதனை படச்சுட்டா.இந்த பஞ்சாங்கத்தையும்,இந்தப் பேப்பர்ல வந்திருக்குற செய்தியையும் பாருங்க.நம்மூர் கிழவியின் பிறந்த தேதியும்,ஜப்பான் கிழவியின் பிறந்த தேதியும் ஒன்னா இருக்கு,ஜப்பான் கிழவி நேத்து செத்துப் போனா.நம்மூர் கிழவி இன்னிக்கு செத்துப் போனா.ஆக ஜப்பான் கிழவியைவிட நம்மூர் கிழவிக்கு வயசு ஒருநாள் அதிகம்.இந்த சாதனை படைக்கிறதுக்கு தான் கிழவியோட உசிரு இழுத்துக்கிட்டு இருந்தது.என்னோட கணிப்பு எப்பவும் சரியாத்தான் இருக்கும்"-என்று சொல்லி முடித்தார்.

உலகில் அதிக வயதான கிழவி என்ற பெருமையை மங்காத்தா கிழவி பெற்றுவிட்டாள்.இந்த சாதனைப் படைத்த கிழவியின் பெயரை கின்னஸ் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

விகடன்
24-10-2010, 06:56 AM
கதையை விட தில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

அதாவது, நாம செய்ய வேண்டி வந்ததை செய்யும்வரைக்கும் கடவுள் நம்மளை விட்டுவைப்பார்! :)

M.Jagadeesan
24-10-2010, 07:02 AM
கதையை விட தில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

அதாவது, நாம செய்ய வேண்டி வந்ததை செய்யும்வரைக்கும் கடவுள் நம்மளை விட்டுவைப்பார்! :)

நீங்கள் சொன்னது முற்றிலும் சரி.

பாரதி
24-10-2010, 08:37 AM
கின்னஸ் கிழவி - கதையும் கூறப்பட்ட விதமும் நன்றாக இருந்தது.
கதை என்பதால் ஏற்கலாம் என்றாலும் கூட, மங்காத்தா கையைப் பார்த்தே ஜோசியர் கணித்தது பின்னர் உண்மையானது எனும் விதமாக கதை அமைந்திருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?
தொடர்ந்து உங்களின் பதிவுகள் வெளிவருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

M.Jagadeesan
24-10-2010, 09:15 AM
கின்னஸ் கிழவி - கதையும் கூறப்பட்ட விதமும் நன்றாக இருந்தது.
கதை என்பதால் ஏற்கலாம் என்றாலும் கூட, மங்காத்தா கையைப் பார்த்தே ஜோசியர் கணித்தது பின்னர் உண்மையானது எனும் விதமாக கதை அமைந்திருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?
தொடர்ந்து உங்களின் பதிவுகள் வெளிவருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

கைரேகை ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.மேலும் நாட்டில் நிலவும் சில நம்பிக்கைகளை வைத்தே கதை எழுதப்படுகிறது.

நன்றி.

சிவா.ஜி
24-10-2010, 09:33 AM
கிடைச்சது பஞ்சாங்கமா....கிழவியோட ஜாதகமா...? பஞ்சாங்கம் பொதுவா நாள், நட்சத்திரம் பார்க்கப் பயண்படுவது. அதில் எப்படி கிழவி பிறந்த தேதியும் நேரமும் இருந்தது?

மற்றபடி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

(வைத்தியர்ன்னா நாடிதான் பார்ப்பார்....டாக்டர்தான் பல்ஸ் பார்ப்பார்....ஹி...ஹி...)

M.Jagadeesan
24-10-2010, 11:15 AM
கிடைச்சது பஞ்சாங்கமா....கிழவியோட ஜாதகமா...? பஞ்சாங்கம் பொதுவா நாள், நட்சத்திரம் பார்க்கப் பயண்படுவது. அதில் எப்படி கிழவி பிறந்த தேதியும் நேரமும் இருந்தது?

மற்றபடி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

(வைத்தியர்ன்னா நாடிதான் பார்ப்பார்....டாக்டர்தான் பல்ஸ் பார்ப்பார்....ஹி...ஹி...)

அந்தக் காலத்தில் பஞ்சாங்கத்திலேயே பிறந்த நாள், நட்சத்திரம்,நேரம் ஆகியவைகளைக் குறிப்பது வழக்கம். நேரம் கிடைக்கும்போது ஜாதகத்தைக் கணித்துக் கொள்வார்கள்.

எதையும் நுணுகி ஆராயும் தங்களுடைய திறன் மெச்சத் தக்கது.ஆனால் தாங்கள் [சிவா] எழுதிய சங்கப் பாட்டிலேயே நக்கீரர் குறை கண்டார் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

joy001
24-10-2010, 12:49 PM
நல்ல கற்பனை நயம் நண்பரே வாழ்த்துக்கள்..

M.Jagadeesan
24-10-2010, 01:25 PM
நல்ல கற்பனை நயம் நண்பரே வாழ்த்துக்கள்..

நன்றி ஜாய் அவர்களே.

த.ஜார்ஜ்
24-10-2010, 04:09 PM
எல்லா செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்று புரிந்து கொள்வதே சௌகரியமானது. ஒரு நெகிழ்சியான கதையாக தொடங்கின கதை காமெடியாக முடிந்து விட்டதோ.

கீதம்
25-10-2010, 12:12 AM
கதை நடையும் நோக்கமும் நன்று.

அந்தக்காலத்தில் பிறப்புச்சான்றிதழ் முறையாகப் பதிவுசெய்யப்படாத நிலையில் இறந்துபோன கிழவியின் வயதுக்கணக்கை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது சாத்தியமா என்று எழும் ஐயத்தைத் தவிர்த்துப்பார்த்தால் கதையோட்டத்தை ரசிக்கமுடிகிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

M.Jagadeesan
25-10-2010, 02:36 AM
கதை நடையும் நோக்கமும் நன்று.

அந்தக்காலத்தில் பிறப்புச்சான்றிதழ் முறையாகப் பதிவுசெய்யப்படாத நிலையில் இறந்துபோன கிழவியின் வயதுக்கணக்கை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது சாத்தியமா என்று எழும் ஐயத்தைத் தவிர்த்துப்பார்த்தால் கதையோட்டத்தை ரசிக்கமுடிகிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.

முரளி
06-01-2013, 05:59 AM
வேடிக்கை தான். நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கு ஒரு வித்தியாசமான பார்வை.


உலகில் அதிக வயதான கிழவி என்ற பெருமையை மங்காத்தா கிழவி பெற்றுவிட்டாள்.இந்த சாதனைப் படைத்த கிழவியின் பெயரை கின்னஸ் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். - கிழவிக்கு தெரியாமலே அவளது பிறப்புக்கு / இறப்புக்கு ஒரு அர்த்தம கொடுத்து விட்டீர்கள். கதையோட்டத்தை ரசிக்கமுடிகிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

M.Jagadeesan
06-01-2013, 10:49 AM
முரளியின் பாராட்டுக்கு நன்றி !