PDA

View Full Version : சூரியனுக்கும், கொசுவுக்கும் சிலேடை.



M.Jagadeesan
23-10-2010, 12:00 PM
ஊசிபோல் தைப்பான் உறக்கத்தைப் போக்கிடுவான்
காசினியில் இல்லாத ஊரில்லை-மாசில்
விசும்பின் விளக்காய் ஒளிவீசும் வெய்யோன்
கொசுவுக்கு நேரென்று கூறு.

ஆதி
23-10-2010, 12:34 PM
காசினியில் இல்லாத ஊரில்லை *- இது மட்டும் பொருந்தாது ஐயா, பிராஞ்சு தேசத்தில் கொசுக்கள் கிடையாது..


மற்றனைத்தும் பொருந்துகிறது வாழ்த்துக்கள் ஐயா..

M.Jagadeesan
23-10-2010, 12:51 PM
காசினியில் இல்லாத ஊரில்லை *- இது மட்டும் பொருந்தாது ஐயா, பிராஞ்சு தேசத்தில் கொசுக்கள் கிடையாது..


மற்றனைத்தும் பொருந்துகிறது வாழ்த்துக்கள் ஐயா..

நன்றி

சிவா.ஜி
23-10-2010, 03:48 PM
பொருத்தமான சிலேடை. நல்லாருக்குங்க ஜகதீசன். வாழ்த்துக்கள்.

பாரதி
23-10-2010, 04:20 PM
நன்று நண்பரே..!

அமரன்
23-10-2010, 08:54 PM
நன்றாகப் பொருத்தி உள்ளீர்கள்.

பாராட்டுகள்.

M.Jagadeesan
23-10-2010, 09:08 PM
பொருத்தமான சிலேடை. நல்லாருக்குங்க ஜகதீசன். வாழ்த்துக்கள்.

நன்றி சிவா.ஜி அவர்களே.

M.Jagadeesan
23-10-2010, 09:09 PM
நன்றாகப் பொருத்தி உள்ளீர்கள்.

பாராட்டுகள்.

நன்றி அமரன் அவர்களே.

M.Jagadeesan
23-10-2010, 09:10 PM
நன்று நண்பரே..!

நன்றி பாரதி அவர்களே.

அனுராகவன்
01-11-2010, 07:27 PM
சிலேடை உங்களுக்கு வருதா..
இல்லை முயற்சியா...
எனக்கு வராது...
கொஞ்சம் கத்துக்கலாமே..