PDA

View Full Version : அன்னை என்பவள் நீதானா?



M.Jagadeesan
23-10-2010, 12:39 AM
அன்னை என்பவள் குழந்தைக்காக எதையும் செய்வாள்
தன்னையும் தருவாள் தன்னுயிரையும் தான் தருவாள்

காளை ஒருவன் காதல் கொண்டான் கன்னியிடம்
"கண்ணே உனக்காக எதையும் செய்வேன்"- எனச்சொல்ல

"அதையும் பார்க்கலாம், எனக்கு உன்னருமைத் தாயின்
இதயம் வேண்டும் எடுத்துவா"-எனக் கேட்க

வார்த்தை எதுவும் பேசாமல் விரைந்திட்டான் தாயிடம்
வாளால் பால்கொடுத்தத் தாயின் நெஞ்சம் பிளந்தான்

தாயின் இதயத்தைத் தனியே பிரித்தெடுத்து ரத்தம்
காயுமுன் காதலியின் கைகளில் கொண்டு சேர்க்க

ஓடினான் வழியில் கல்லொன்று கால் தடுக்க
ஆடினான் அடிபட்டான் அப்படியே விழுந்து விட்டான்

பாசமிகு தாயிதயம் பரிவுடன் அவனைக்கண்டு-"மகனே பார்த்து
வரக்கூடாதா? பலமாக அடிபட்டதோ?"- எனக்கேட்க

"ஆத்திரத்தில் அறிவிழந்து அநியாயம் செய்து விட்டேன்
நேத்து வந்தவளுக் காகத் தாயின் நெஞ்சம் பிளந்தேனே"-
எனச் சொல்லி

அழுதான் அரற்றினான் தாயின் இதயத்தைக் கையிலேந்தித்
தொழுதான் அன்னையெனும் தெய்வத்தைக் கண்ணீர்மல்க.

கீதம்
23-10-2010, 12:46 AM
அறிந்த கதையானாலும் அழகுக்கவிதையாய் படிக்க... தாயிதயம் கொண்டதே தாளாத பெருமை.

பாராட்டுகள் ஜெகதீசன் அவர்களே.

M.Jagadeesan
23-10-2010, 03:01 AM
அறிந்த கதையானாலும் அழகுக்கவிதையாய் படிக்க... தாயிதயம் கொண்டதே தாளாத பெருமை.

பாராட்டுகள் ஜெகதீசன் அவர்களே.

நன்றி.

அனுராகவன்
01-11-2010, 07:23 PM
தாயிர் சிறந்தோர் கோவிலும் இல்லை.....
அவளை போற்ற வார்த்தையும் இல்லை............

அவளை என் முதற் தெய்வம்..

நன்றி ஜெகதீசன் அவர்களே.

பென்ஸ்
07-11-2010, 01:35 AM
அறிந்த கதையானாலும் உங்கள் எழுத்தில் கவிதையாக வாசிக்கும் போது அருமையாக இருக்கிறது
வாழ்த்துகள் ஜகதீசன்...