PDA

View Full Version : கீழே எப்படி இருந்தது? - மன்றத்தார் கண்ணோட்டத்தில்..பூமகள்
22-10-2010, 04:56 AM
நம்ம மன்றத்தவங்க எப்படிச்சொல்வாங்க என்று சொல்ல சிவா அண்ணாவை அழைக்க வேண்டும். :lachen001:

சிலி நாட்டில் இரு மா தங்களுக்கு மேல் பூமிக்கடியில் சிக்கி ஒரு சுரங்கத்தில் மாட்டித் தப்பியவர்கள் பற்றிய செய்தி குறித்து மதுரை மைந்தன் அண்ணா ஆரம்பித்த "கீழே எப்படி இருந்தது?" (http://tamilmantram.com/vb/showthread.php?p=496625#post496625) திரியின் பிண்ணனியில் ஆரம்பிக்கப்படுகிறது இந்தத் திரி.

மன்றத்து மணிகள் இந்த மாதிரி சூழலில் சிக்கி தப்பிய போது என்னென்ன சொல்லியிருப்பார்கள்?? சிறு கற்பனை..

நிருபர்: கீழே இருக்கையில் எப்படி இருந்தது சிவா.ஜி?
.'
சிவா.ஜி: பெரிய பிரச்சனையா எதுவுமே இல்ல.. நான் பாட்டுக்கு என்னோட கைவசம் வைச்சிருந்த பேப்பரும் பேனாவும் தீரும் வரைக்கும் என்னோட அடுத்த தொடர்கதையான பசுமை வேட்டை பாகம் 2ஐ எழுத ஆரம்பிச்சிட்டேன்.. ஆனால்.. அதுக்குள்ளே என்னோட பங்கையும் சேர்த்து எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க.. பரவாயில்ல நம்ம பசங்க தானேன்னு நானும் விட்டுட்டேன்..

நிருபர்: என்னது விட்டுட்டீங்களா? உங்களுக்கு பசிக்கல

சிவா.ஜி: பசிச்சது தான்..

நிருபர்: அப்போ ஏன் இப்படி பண்ணுனீங்கன்னு அவங்கள கேக்கல?

சிவா.ஜி: அதுல ஒருத்த சொன்னா.. சிவா.ஜி அண்ணா.. எவ்வளவு நாள் வேணாலும் தாங்குவாருடா..அவரு ரொம்ப நல்லவரூஊஊஊஉ... ன்னு சொல்லிட்டான்ப்பா.... அதனால சாப்பிட்டுட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.. முடிய.............ல.......... :icon_rollout:

நிருபர்: கண் கலங்க அடுத்த நபரை காணுகிறார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


நிருபர்: தக்ஸ், உங்களுக்கு கீழே இருக்கையில் எப்படி இருந்தது?

தக்ஸ்: மனதுக்குள்(டே.. நிருபருக்கே பேட்டியா..) அதை கூடிய விரைவில் ஒரு பெரிய மர்மத் தொடராக எழுத இருக்கேன்.. அதனால என்னிடமிருந்து நோ கமெண்ட்ஸ்..

நிருபர்: சரி.. அங்க நடந்ததப் பத்தியாவது சொல்லுங்க..

தக்ஸ்: அங்கே ஒரு எலி கல்யாணம் நடந்துச்சு.. அதுக்கு நான் போனேனா.. ஒரு அழகான குட்டி எலி என்னை படாதபாடு படுத்திடுச்சி.. ஆனாலும் அதுக்கு என்னோட சோறு வைச்சி காப்பாத்தினேனாக்கும். க்கூம்.. இதை சொல்லிட்டேனா.. ஓட்ட வாயிடா தக்ஸனா உனக்கு.. இனி சொல்ல மாட்டேன்.. (இறுக்கமாக வாய் மூடி தன்னை நகர்த்துகிறார்..)

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


(தொடரும்... :D:D)

அன்புரசிகன்
22-10-2010, 06:00 AM
சிவா அண்ணா ஒன்றை பிய்த்து பிய்த்து கதையெழுதியிருப்பாரே... அது மிஸ்ஸிங்...............;)

Mano.G.
22-10-2010, 07:18 AM
பூமகள் அருமை
உறவுகளே உங்கள் பாணியில்
தொடருங்கள்

பூமகள்
22-10-2010, 11:33 AM
@அன்பு,
சுட்டியமைக்கு நன்றி அண்ணா.. இப்போது சேர்த்திருக்கிறேன் பாருங்கள்..... முடிய...........ல இன்னும்.. வரும்.

@மனோ.ஜி,

நன்றிகள் அண்ணா.. ஆமாம்.. இதில் மற்றவர்களும் கலந்து கொள்ளுங்கள்.. அனைவர் பற்றியும் இந்த திரியில் கூடி கும்மி அடிக்கலாம்.. ஹி ஹி.. :)

சிவா.ஜி
22-10-2010, 03:17 PM
ஆஹா பூவு....மொத போணியே நானா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....முடி...................................ல.

ரொம்ப நல்லாருக்கும்மா. தக்ஸுக்கு சூப்பரு.

இனி வரப்போறவங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.....!!!

சூரியன்
22-10-2010, 03:34 PM
நல்ல கற்பனை அக்கா.
தக்ஸ் அண்ணா வழி தனி வழி.:sport009:

பூமகள்
22-10-2010, 04:35 PM
இனி வரப்போறவங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.....!!!
அண்ணா.. உங்க கற்பனையைக் கொஞ்சம் அள்ளி விடுங்களேன்.... நாங்க உங்க எழுதுக்காகத் தான் வெயிட்டிங். :)

நான் ரொம்ப பிசி ஆயிட்டேன்ல.. :icon_rollout:

சிவா.ஜி
22-10-2010, 04:51 PM
இப்ப அலுவலக நேரம் முடியப்போகுது. நாளைக்கு பதியறேம்மா. யாரை உருட்டலாம்ன்னு பாக்கறேன்.

பூமகள்
22-10-2010, 04:57 PM
ரொம்ப நன்றி சிவா அண்ணா...

இருக்கவே இருக்காக... ஓவியன், அக்னி, அன்பு, ஆதன், ஆதவா, ரவி, அமரன் தாமரை... அப்பா.. லிஸ்ட்ல பல பேரு இருக்காங்க அண்ணா... எல்லார் பற்றியும் புரியாம எழுதுவது சிரமம். அதான் உங்களுக்கு கொடுத்துட்டேன்.. சிறப்பா எழுதுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு..:)

Ravee
22-10-2010, 06:52 PM
நிருபர் அடுத்ததாக மதியிடம் போக :

அட போங்க ... உள்ள சிக்கின அத்தனை பேரும் ஆம்பள பசங்க .... ஒரு பொண்ணு கூட இல்லை .......... இங்க கூட எனக்கு ஒரு பொண்ணு செட் ஆகா மாட்டிங்குது . :traurig001: :traurig001::traurig001:


நிருபர் மதியின் சோகத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து

அடுத்து ஆதவா இடம் போக ...

பாருங்க .... ஒரு ஆங்கில படம் பார்த்தேன் ... படம் பேரு ... Enemy mine

உடனே மதியும் சசியும் ஆமாம் ஆமாம் ...... அது மாதிரி ஒரு படம் சான்சே இல்லை .... :p:)

தகஸ் ... டேய் ஹாலி கட்டை தடியனுங்கள ... மூடுங்கடா வாயை ....:cool:

நிருபர் நீங்க சொல்லுங்க என்று ஆதவாவின் வாயை பார்க்க ....

ஆதவா ...தொடர்ந்தார்

அதில பாருங்க ஒரு மனுசனும் செவ்வாய் கிரக வாசியும் ஒரு கிரகத்தில ஒண்ணா ஒரு சுரங்கத்தில மாட்டிகிறாங்க... :icon_ush:

அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பையன் பிறக்குறான்.... :sprachlos020:

நிருபர் வெட்கப்பட்டு நெளிகிறார் .... சீ .... போங்க குறும்பு .... :aetsch013:

எல்லோரும் ஒரே குரலில் .....................டேய் அவனாடா நீ .............. :eek:

ஆதவா மதி தகஸ் சசி தலை தெறிக்க ஓடுகிறார்கள் ..... :D

அன்புரசிகன்
22-10-2010, 08:37 PM
ரொம்ப நன்றி சிவா அண்ணா...

இருக்கவே இருக்காக... ஓவியன், அக்னி, அன்பு, ஆதன், ஆதவா, ரவி, அமரன் தாமரை... அப்பா.. லிஸ்ட்ல பல பேரு இருக்காங்க அண்ணா... எல்லார் பற்றியும் புரியாம எழுதுவது சிரமம். அதான் உங்களுக்கு கொடுத்துட்டேன்.. சிறப்பா எழுதுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு..:)

உங்க அப்பாவையுமா....:eek:

அமரன்
22-10-2010, 08:40 PM
ஹி...ஹி...

கீதம்
23-10-2010, 12:28 AM
பிள்ளையார் சுழி போட்டு அலம்பலை ஆரம்பித்துவைத்த பூமகளுக்கு ஒரு ஷொட்டு.

அவரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ரவிக்கும் ஆதரவு தந்து சுவைகூட்டும் மன்ற உறவுகளுக்கும் என் வாழ்த்துகள்.

Ravee
23-10-2010, 01:33 AM
சுரங்கத்தில் இருந்து கடைசியாக தாமரை அண்ணாவும் செல்வாவும் வருகிறார்கள் ...

தாமரை : செல்வா சுரங்கம், சுனாமி, சுறாவளி ,,,, இதுக்கெல்லாம் என்ன ஒத்துமைடா ....

செல்வா : :eek: பலி ஆடு போல பாவமாய் பார்த்துக்கொண்டே .... :confused: எல்லாமே சு சு சு .... ன்னு வருது ..... அண்ணா

தாமரை : கிர்ர்ர் ..... கொஞ்சம் ஆழமா சிந்திடா ....

செல்வா : தெரியல அண்ணா .... :sprachlos020:

தாமரை : இப்போ சுரங்கத்தில அதிர்ச்சியில பல பாதைகள் மூடுவது மாதிரி பல புதிய பாதைகள் திறக்கவும் செய்யும் .... பாரு அதனால புதிய கனிமவளம் கிடைக்கும் .....

இப்போ சுனாமி வந்து போன கடலில் மீன்கள் அதிகமா கிடைக்கும் .......

அதே போல சூறாவளி அடித்தால் ........

அண்ணா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ...

செல்வா : நான் வரல நான் வரல.................

திரும்பவும் சுரங்கத்தை நோக்கி ரிவர்ஸ் கியர் போட்டு ஓடுகிறார் .... :lachen001:

பூமகள்
23-10-2010, 02:43 AM
வெகுவாக ரசித்தேன்.. குறிப்பாக தாமரை அண்ணாவின் பதில்கள்... ஹ ஹ... ரவி கலக்கிட்டீங்க. தொடருங்கள். சிவா அண்ணா உங்களுக்காக வெயிட்டிங்.. :)

அமரன்
23-10-2010, 07:06 AM
செல்வா ஒகே.. அவன் அப்படித்தான்..

அண்ணா கொஞ்சம் நையாண்டி கலந்து குழப்புவாரே ரவீ.

சிவா.ஜி
23-10-2010, 04:20 PM
பூம்மா......கால்ல வெந்நீர ஊத்திக்கிட்டு ஓடற மாதிரி...இங்க கொஞ்சம் பரபரப்பா வேலை போய்ட்டிருக்கு. நிதானமா சிந்திக்க முடியல. அப்படியும் நேத்து இரவு கொஞ்சம் தட்டச்சினேன்....படிச்சுப் பாத்த எனக்கே அது பிடிக்கல.

அதனால....மத்தவங்க தொடரட்டும்...நான் பின்னால வந்து சேர்ந்துக்கறேன்.

சிவா.ஜி
23-10-2010, 04:21 PM
தாமரை, செல்வாவோடது அசத்தல். நல்லாருக்கு ரவி. அசத்துங்க.

ஆதி
24-10-2010, 11:37 AM
இது மாதிரியான தருணங்களில் செல்வாவின் வழக்கமான டைலாக் ஒன்னு இருக்கு..

"இன்னைக்கு நாந்தான் சிக்குனே ? / இன்னைக்கு நாந்தானா ?"

தாமரையண்ணா, சேட்டில் பேசுவதற்கு, நேரே பேசுவதற்கு ஒரு வித்யாசமிருக்கும்..

அடிக்கடி என்ன ? என்ன ? என்று கேட்பார்..

இந்த என்ன-வில் கேள்வியும் இருக்கும் பதிலும் இருக்கும்..

சுரங்கம், சுனாமி, சூறாவளி இது முனுக்குள்ள இருக்கும் ஒற்றுமை என்ன ?

ஐம்பூதத்தில் மூனு பூதம் இங்க இருக்கு

சரி, மற்ற ரெண்டு பூதமெங்க ?


இந்த மாதிரி பல்பு தான் கொடுப்பார்..

த.ஜார்ஜ்
24-10-2010, 04:30 PM
ஆதன் ஒத்துகிட்டா அது சரியாதான் இருக்கும்.

svenkat
25-10-2010, 05:11 AM
இனிமேல் இவர்கள் எல்லாம் ஒரு குழியில் கூட இறங்கமாட்டார்கள்!!!! :)

Ravee
25-10-2010, 02:42 PM
இது மாதிரியான தருணங்களில் செல்வாவின் வழக்கமான டைலாக் ஒன்னு இருக்கு..

"இன்னைக்கு நாந்தான் சிக்குனே ? / இன்னைக்கு நாந்தானா ?"

தாமரையண்ணா, சேட்டில் பேசுவதற்கு, நேரே பேசுவதற்கு ஒரு வித்யாசமிருக்கும்..

அடிக்கடி என்ன ? என்ன ? என்று கேட்பார்..

இந்த என்ன-வில் கேள்வியும் இருக்கும் பதிலும் இருக்கும்..

சுரங்கம், சுனாமி, சூறாவளி இது முனுக்குள்ள இருக்கும் ஒற்றுமை என்ன ?

ஐம்பூதத்தில் மூனு பூதம் இங்க இருக்கு

சரி, மற்ற ரெண்டு பூதமெங்க ?


இந்த மாதிரி பல்பு தான் கொடுப்பார்..

அட அனுபவம் என்னமா பேசுது ......

:lachen001: :lachen001: :lachen001: