PDA

View Full Version : திணை மயக்கம்



inban
21-10-2010, 04:28 PM
1
'இந்த யாமத்திலே
எதற்கு வரச் சொன்னீர்கள்'?
-முச்சிரைத்தபடி கோபத்தோடு
கேட்கிறாய்
சுவர் ஏறி குதித்து
அரைமையில் ஓடி வந்துவிட்டு
2
உன்னை முத்தாடுகிறேன்
உணர்வுகளை ஒன்று குவித்து
உயிருக்கு நீ
உணஊட்டுகிறாய்
உண்மையில் இப்போதை விடவும்
நீ அதிகமாய் நாணிச் சிவந்தது
உன் நிழலுக்கு முத்தமிட்ட போதுதான்
3
உன்னை தழுவியபடியே
உறங்க முயன்றவனை
கட்டில் கேட்கிறது
'நீயா தற்கொலைக்கு முயன்றவன்'!?
4
மோகம்
மூப்பெயிதும் தருணங்களில் எல்லாம்
காற்று பாவம்.
5
தொடக்கூட அனுமதிக்காமல்
காதலிக்க அனுமதித்திருக்கிறாய்
தொட்டுக்கொள்வது
காதலின் அடிப்படை அலகு என்பதை
ஆமோதிக்காதவரை
உனக்குத்தான் சிரமம்
அது முதலிரவில் தெரியும்.
6
புணர்வுக்கு முன்னால்
முரண்டு பிடிக்கும் போதுதான்
ஒரு பெண் எப்போதையும் விட
அழகாகி விடுகிறாள்.

ஆதவா
27-10-2010, 01:11 PM
கலக்கல் இன்பன்!!
1. முதல் கவிதைதான் முழுக்கவும் படிக்க இழுக்கிறது. ரொம்பவும் இழுக்காமல் சட்டென்று ஆரம்பித்து முடித்தவிதமும் அருமை!
தன் காதலின் செவிசாய்த்தலுக்குப் பிறகு எத்தனை நேரம் கழித்து அறிவு வேலை செய்திருக்கிறது பாருங்கள்! அழகான கவிதை!!

2. நுண்ணிய பார்வை உடையவர்களாலும் ஆழமாக எழுதக் கூடியவர்களாலும் கவனிக்கப்படும் விஷயம் இது! காதல்வயப்படுபவர்களின் மயக்கவேலை.. அழகு கவிதை./

3. கட்டிலுக்குத் தெரியவில்லை போலும் உங்களைப் பற்றி..... தழுவலும் தற்கொலைக்குச் சமம்தானே!!

4. மிகச் சில தருணங்களில் இம்மாதிரியான எளீய அதேசமயம் அழுத்தமான கவிதையை வாசிக்கிறேன். ஒரு பண்பட்டவர் கவிதையை அந்த போர்வைக்குள் புகாமல் கொடுத்திருக்கும் விதம் பிடித்திருக்கிறது!

5. நோ கமெண்ட்ஸ்...

6. இதுவும் அழகு. நான்காவது கவிதையைப் போலவே, இதில் ஒளிந்திருக்கும் காமம் விஷமமில்லாத காதலை மட்டுமே வெளிக் கொண்டுவருகிறது! அவ்வகையில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!!
ஆனால் ஐந்தும் ஆறும் அனுபவமில்லாத காரணத்தால் விர்சுவலாக எண்ணமுடியவில்லை :D

inban
27-10-2010, 02:30 PM
உணர்வு பூர்வமாகவும், அதே சமயம் ஆழமாகவும் கவிதைகளுக்கு கருத்துரை வழங்கிய ஆதவாவுக்கு நன்றிகள். "ஒரு படைப்பாளிக்கு அளிக்கப்படும் ஆக மிகப்பெரிய தண்டனை அவன் படைப்பை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதுதான்" என்று சீன எழுத்தாளர் லூசுன் சொல்வார். அதே சமையம் அவனுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பது அவனின் உணர்வு மட்டத்தை சரியாக புரிந்து கொள்வது . அந்த வகையில் உங்களுக்கு பாராட்டுகள், நன்றிகள்....

பென்ஸ்
27-10-2010, 03:46 PM
உணர்வு பூர்வமாகவும், அதே சமயம் ஆழமாகவும் கவிதைகளுக்கு கருத்துரை வழங்கிய ஆதவாவுக்கு நன்றிகள். "ஒரு படைப்பாளிக்கு அளிக்கப்படும் ஆக மிகப்பெரிய தண்டனை அவன் படைப்பை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதுதான்" என்று சீன எழுத்தாளர் லூசுன் சொல்வார். அதே சமையம் அவனுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பது அவனின் உணர்வு மட்டத்தை சரியாக புரிந்து கொள்வது . அந்த வகையில் உங்களுக்கு பாராட்டுகள், நன்றிகள்....

கவிதைக்கான விமர்சனங்கள் கிடைக்காத போது வரும் ஆதங்கம் இயல்பானதே... உங்கள் கவிதைகள் வாசிக்கபட்டு , அறியபட்டு ...பின் தேடி வரபடும்...

நண்பன் இதை பற்றி அழகாக கவிதை ஒன்றை எழுதி இருந்தார் நேரம் கிடைக்குமானால் வாசித்து பாருங்கள் "வெட்கங்கெட்டத் தாய்..... (http://tamilmantram.com/vb/showthread.php?t=385)"

கவிதைக்கு வருவோம்...
கவிதைகள் எழுத ஆரம்பிக்கும் போது காதல் கவிதைகள் ஒரு பிடி கம்பாய்... காதல் ஒரு சிக்கலான உணர்வு என்றாலும்... எளிதாக உணரமுடியும்.. அந்த வகை கவிதைகளும் தான்...

எழுதுங்கள் வாசிக்க தயாராய் இருக்கிறேன்.. விமர்சிக்கவும்..

தாமரை
27-10-2010, 04:49 PM
திணை மயக்கம் என்ற தலைப்பு, கவிதைகளோடு எப்படி ஒன்றுகிறது என விளக்குங்களேன்.

inban
27-10-2010, 05:18 PM
திணை மயக்கம் என்ற தலைப்பு, கவிதைகளோடு எப்படி ஒன்றுகிறது என விளக்குங்களேன்.

திணை என்றால் ஒழுக்கம் என்ற ஒரு பொருளும் உண்டு .காதல் தனது உச்சத்தை எட்டும் போது ஒழுக்கம் தன் திசை வழியில் இருந்து பிறழப் பார்க்கிறது. அதாவது பிறழ்வது போல மயங்குகிறது

ஆன்டனி ஜானி
27-10-2010, 06:55 PM
திணை என்பது ஒழுக்கம். காதல் செய்து உச்சத்தை அடைந்தால் மட்டும் ஒழுக்கம் வராது. ஒழுக்கம் என்பது சிறுவயதில் நாம் கற்று கொள்ளும் பாடத்தில் இருக்கிறது ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது :sport-smiley-002: