PDA

View Full Version : படி படி தமிழ் படி.



M.Jagadeesan
21-10-2010, 02:18 PM
படி படி தமிழ் படி
படிப் படியாய் படி
படித்தபின் அதன்படி
நடந்திடு முறைப்படி

உண்மையைக் கடைப்பிடி
உயர்ந்திடும் உன்குடி
என்றும் கீழ்ப்படி
வெற்றியின் முதல்படி

சோம்பல் எனும் "மடி"
சோர்வினைத் தருமடி
உழைத்திடு அனுதினம்
கிடைத்திடும் வரும்படி

"எடுபிடி" எனும்படி
இருப்பது தவறடி
"கெடுபிடி" செய்தால்
சறுக்கிடும் ஒருபடி

கோபம் அடிக்கடி
நோயினைத் தருமடி
இறைவன் திருவடி
வெற்றியைத் தருமடி.

பென்ஸ்
21-10-2010, 03:28 PM
கடி ஆகாமல் அடிக்கு அடி டி போட்டு நல்ல கவிதை...
பெண்களுக்கு இது சத்தியமா பிடிக்காது போங்கோ...:p

சிவா.ஜி
21-10-2010, 04:33 PM
வார்த்தைக் கோர்வை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஜகதீசன்.

M.Jagadeesan
21-10-2010, 05:01 PM
வார்த்தைக் கோர்வை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஜகதீசன்.

நன்றி

M.Jagadeesan
21-10-2010, 05:03 PM
கடி ஆகாமல் அடிக்கு அடி டி போட்டு நல்ல கவிதை...
பெண்களுக்கு இது சத்தியமா பிடிக்காது போங்கோ...:p

பென்ஸுக்கு பிடித்தால் சரி.

பூமகள்
21-10-2010, 05:07 PM
அப்படி எப்படி
இப்பகுதி வந்தது
இப்படி??

காதலுக்கும்
கருத்துக்கும்
கவிதைப்படி
தூரமிருக்கு அம்மாடி..!!

நகர்த்துவார் அப்படி
நடத்துனர் இப்படி
வந்தால் தடாலடி..!!

--

என்னை எப்படி இப்படி எழுத வைச்சீங்க ஒரே சிரிப்பு வெடி...!! :D:D

வல்லம் தமிழ்
21-10-2010, 05:21 PM
அடிக்கடி எடு தடி!அகந்தையை அடித்தொழி!

அமரன்
21-10-2010, 06:23 PM
அழகான சொல்லடுக்குடன் கவர்கிறது கவிதை.

பாராட்டுகள் ஜகதீசன்