PDA

View Full Version : எனக்குள் நான்..!



anbudanjram
19-10-2010, 04:36 PM
மாலையில் மூடுகிறேன் ஜன்னல்,
கொசுக்களுக்காக
காற்றும் வருவதில்லை..

-தி.ஜெயராம்

M.Jagadeesan
19-10-2010, 04:46 PM
மாலையில் மூடுகிறேன் ஜன்னல்,
கொசுக்களுக்காக
காற்றும் வருவதில்லை..

-தி.ஜெயராம்

கவிதை நன்று.

ஜன்னலுக்குப் பின்னல் வலையொன்று அடித்திட்டால்
வரும் ஆனால் வராது-அதாவது
காற்று வரும்,கொசு வராது.

அமரன்
21-10-2010, 07:52 PM
விருப்பமோ இல்லையோ அனுபவித்தே ஆகனும்.

வெளியில் சுத்தமில்லை.

தத்துவார்த்தமான கவிதை!

பாராட்டுகள்.

கீதம்
21-10-2010, 09:53 PM
உடனடி தேவை
சாளரச்சல்லடையொன்று
மனச்சன்னலுக்கு வெளியே!!

கவிதை நன்று. பாராட்டுகள்.

பூமகள்
22-10-2010, 04:52 PM
அகச்சன்னல் இரண்டுக்கும்
சல்லடை
அதி அவசியம்..!!

அகத்துக்கும் முகத்துக்கும் காற்று பரவட்டும். மகிழ்மன(ண)ம் வீசட்டும். :)

பென்ஸ்
22-10-2010, 06:20 PM
நச்..:)

Ravee
22-10-2010, 06:22 PM
சில நேரம் துர்நாற்றம் வீசும்
காற்றுக்காக கதவை சாத்த
இலவச இணைப்பாக
கொசுக்களும் வருவதில்லை .....:lachen001:

கவிதை நன்று நண்பரே ..... :)

ஆதி
24-10-2010, 01:44 AM
மாலையில் என்றொரு வார்த்தை இல்லாதவரை ஆன்மீக கவிதையாக மட்டுமே இருக்கிறது, மாலை எனும் வார்ததை சேரும் போது, கவிதை மாலையின் அடுத்த தளத்துக்கு நகர்கிறது..

கொசுக்களை - மறக்க இயலா ஞாபகங்களுக்கு/ ஆறாத (வலிக்கு) ரணத்துக்கு/ உறழ்வுகளுக்கு/ பிறழ்வுகளுக்கு/ பிரிவு துயருக்கு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்..

காற்றும் வருவதில்லை - இந்த வரியால் சுந்துரா ராமசாமியும், நித்யானந்தரும் மாறி மாறி எண்ண ஆடியில் பிரதிபளித்து போகிறார்கள்.. :)

இருவரும் கதவைத்திற காற்று வரட்டும் என்று சொன்னவர்களாயிற்றே, சுராவுடையது உறவுகளின் குறியீடு, நித்யானந்தருடையது ஆன்மீகம் :D

ஆயிரம் வாசல் இதயம் - அதில்
ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவது தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் அமைதி என்றுமில்லை

இப்படி கண்ணதாசனும் வந்து போகிறார்..


வாழ்த்துக்கள் ஜெய்ராம்

anbudanjram
24-10-2010, 04:24 PM
கருத்து தெரிவித்த அணைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி ...:)

அனுராகவன்
01-11-2010, 07:30 PM
கொசு அதற்கு ஒரு
மொவுசு;
வலை அதை
அங்கு
விலைக்கு வாங்கி
தொலை;
அதனால்
பிறகு இல்லை
தொல்லை......