PDA

View Full Version : உனக்குள் நான்



spsankar1
19-10-2010, 06:24 AM
யுத்தமில்லை
இரத்தமில்லை
ஆராத
காயமானது
எனக்கு
உன் ஆயுத
விழிகளால்

நீ சுடவுமில்லை
எரிக்கவுமில்லை
ஆனால்
சாம்பலானது
என்
மனது

நீ தூண்டிலிடவில்லை
வலை விரிக்கவிலை
அனால்
உனக்குள்
சிக்கிக் கொண்டது
நான்

நீ தொலைக்கவில்லை
தேடவில்லை
ஆனால்
கண்டறியப்பட்டேன்
நான்

நீ எழுதவில்லை
அடித்து
திருத்தவில்லை
உன்
பெயருக்குப் பின்னால்
என் பெயர்

நீ பேசவுமில்லை
சிரிக்கவுமில்லை
ஆனால்
அடிக்கடி
உன்
உதடுகளுக்கிடையே
நான்

நீ பயணப்படவில்லை
பழக்கமாகவில்லை
ஆனால்
பணயமானது
நான்

நீ சுட்டிக்காட்டவில்லை
தேர்ந்தெடுக்கவில்லை
உன்னை
அறியாமல்
உனக்குள்
நான்

ஆதி
19-10-2010, 08:26 AM
கவிதை நாயகன் காதல் வயப்பட்டு, நாயகி அவன் வயப்படுவம் வரை எழுதப்பட்டிருக்கும் கவிதை ஒரு படம் மாதிரி இருக்கு..

வார்த்தைகளை அழகாக கோர்த்திருக்கீங்க, சில இடங்களில் பழுது பார்த்தால் கவிதை இன்னும் அழகான கவிதையாக அமையும்..

govindh
30-10-2010, 11:26 AM
உனக்குள் நான்....

ரசித்துப் படித்தேன்...
படித்து ரசித்தேன்...

வாழ்த்துக்கள் சங்கர்.:)

பூங்குழலி
30-10-2010, 11:33 AM
உனக்குள் நான்..
வார்த்தை விளையாட்டு..
ரசிகையாய் நான்..

வாழ்த்துக்கள் தோழா..

அமரன்
30-10-2010, 08:33 PM
நவீன லேசர் முறையில் இதய மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கு.

நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 01:31 PM
படித்தேன் ரசித்தேன் உனக்குள் நான் விழுந்தேன்

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

Ravee
11-11-2010, 01:35 PM
நீ எழுதவில்லை
அடித்து
திருத்தவில்லை
உன்
பெயருக்குப் பின்னால்
என் பெயர்


அட பெண்கள் இந்த வரியை ஆணாதிக்கம்ன்னு சொல்லுவாங்க .... கவனம் கவனம் :icon_ush:

M.Jagadeesan
11-11-2010, 02:09 PM
இதயத்தைத் தொட்ட கவிதை.