PDA

View Full Version : ஹைக்கூ

inban
18-10-2010, 08:28 AM
கொட்டும் மழை
கொஞ்சம் கூட சாயம் போகவில்லை
வண்ணத்துப்பூச்சி

ஆதி
18-10-2010, 12:59 PM
ரொம்ப நாளுக்கு அப்புறம் வாசித்த உண்மையான ஹைகூ தமிழ் கவிதை..

அது அது அதனுடைய இயல்புடன் இருக்கிறது, எதனாலும் எதுவும் மாறுவதில்லை..

இங்கே வீட்டுக்கெதிரே இருக்கும் வேப்பமரத்தில் பின்னப்பட்டிருந்த சிலந்தி வளையில் வெள்ளை வண்ணத்துப்பூச்சி ஒன்று சிக்கி கொண்டது, எனக்கு முந்திக் கொண்டு போன மனது நான் வளையை அறுக்கும் வரை வண்ணத்துப்பூச்சியோடு தவித்திருந்தது, தப்பித்து பறந்த வண்ணத்துப்பூச்சியின் படபடக்கும் சிறகில் பயம் வழிந்து சிதறியதும், வண்ணத்துப்பூச்சியை காப்பாற்றிவிட்ட திருப்தியில் திரும்பும் போது சிலந்தி வளையில் சிக்கி தவித்தது மனது ஒரு உயிரின் சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டுவிட்டதாய் எண்ணி..

பாராட்டுக்கள் இன்பன்..

ஆதவா
18-10-2010, 01:10 PM
ஹைக்கூ நல்லா இயல்பா இருக்குங்க இன்பன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் வாசித்த உண்மையான ஹைகூ தமிழ் கவிதை..

அது அது அதனுடைய இயல்புடன் இருக்கிறது, எதனாலும் எதுவும் மாறுவதில்லை..

இங்கே வீட்டுக்கெதிரே இருக்கும் வேப்பமரத்தில் பின்னப்பட்டிருந்த சிலந்தி வளையில் வெள்ளை வண்ணத்துப்பூச்சி ஒன்று சிக்கி கொண்டது, எனக்கு முந்திக் கொண்டு போன மனது நான் வளையை அறுக்கும் வரை வண்ணத்துப்பூச்சியோடு தவித்திருந்தது, தப்பித்து பறந்த வண்ணத்துப்பூச்சியின் படபடக்கும் சிறகில் பயம் வழிந்து சிதறியதும், வண்ணத்துப்பூச்சியை காப்பாற்றிவிட்ட திருப்தியில் திரும்பும் போது சிலந்தி வளையில் சிக்கி தவித்தது மனது ஒரு உயிரின் சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டுவிட்டதாய் எண்ணி..

.

உங்களுக்கு நேர்மாறாக நான் செய்திருக்கிறேன். அதே மாதிரி வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து கோழிக்கு உணவாகக் கொடுத்தேன்... (அது சாப்பிடவில்லை என்பது வேறுவிஷயம்!)

govindh
18-10-2010, 01:48 PM
நல்லா இருக்கு இன்பன்..
வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
18-10-2010, 02:35 PM
கவிதை நன்று. மூன்று வரிக்கவிதைக்காக ஒரு திரியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு திரியில் மூன்று கவிதை எழுதுவது நன்று.

சிவா.ஜி
18-10-2010, 04:19 PM
அழகான ஹைக்கூ. ஆதன் சொன்னதைப்போல அதனதன் இயல்பு மாறுவதில்லை. வாழ்த்துக்கள் இன்பன்.

ஆதனின் அனுபவம் அழகான சம்பவம்.

inban
19-10-2010, 03:43 PM
உணர்வாழம் கொண்ட சம்பவத்தோடு ஹைக்குவை ஒப்பிட்டு கருத்துரைத்தமைக்கு நன்றி ஆதன்.பாராட்டு நல்கிய ஏனையோருக்கும் நன்றிகள் பல....

anbudanjram
19-10-2010, 04:37 PM
அருமை

அமரன்
19-10-2010, 07:44 PM
தத்துவம் தாங்கிய காட்சிப்பா.

அருமை இன்பன்.

Ravee
30-10-2010, 02:05 PM
கொட்டும் மழை
கொஞ்சம் கூட சாயம் போகவில்லை
வண்ணத்துப்பூச்சி

சாயம் போகவில்லை சரி ... நனைந்ததால் இறக்கை கொண்டு பறக்க முடியுமா ... சற்றே சிந்தித்தேன் ... இல்லை வண்ணத்து பூச்சி நனைந்திருக்க முடியாது ஏன் என்றால் அதுதான் பட்டர் ப்ளை ஆயிற்றே .... பட்டர்( வெண்ணை) மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை அல்லவா .... யாரோ ரொம்ப மோசமான வார்த்தையில் திட்டுவது கேட்கிறது வரட்டா ............ :lachen001:

mania
30-10-2010, 02:38 PM
ஹைக்கூ சூப்பர்.......ரவியின் பதிவு அதைவிட சூப்பர்....:D:D
அன்புடன்
மணியா..:D

ஓவியன்
31-10-2010, 04:28 PM
அழகான ஹகூவும், அருமையான பின்னூட்டங்களும்....

வாழ்த்துகள் அனைவருக்கும்..!!! :)

____________________________________________________________________________________

அதுசரி, மழையில் நனைந்து வண்ணத்துபூச்சி தன் வண்(ர்)ணங்களை இழந்து விட்டால் எப்படி அழைப்பது...??? :eek:

பென்ஸ்
01-11-2010, 04:22 PM
ஆதவா கொடுத்த சுட்டி வழி வந்தேன்... அற்ப்புதம்...
ஹைக்கு எனக்கு பிடித்த சுவை...

அருமை இன்பன்...