PDA

View Full Version : முரண்பாடு.



M.Jagadeesan
18-10-2010, 06:35 AM
எண்பது வயது ஏகாம்பரம்
இளைஞர் காங்கிரஸ் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி
லஞ்சம் வாங்கும்போது
பிடிபட்டார்.

கடுமையான வெயில் அடிக்கும் என்று சொன்ன
வானிலை ஆராய்ச்சி இயக்குனர்
மழையில் நனைந்துகொண்டே வீடு சென்றார்.

ஊமைக் குழந்தையின் ஜாதகம் பார்த்த ஜோசியர்
"எதிர்காலத்தில் இவன் பெரிய வக்கீலாக வருவான்"
என்று சொன்னார்.

தேர்வு எழுதும்போது
காப்பி அடித்ததற்காக
ஆசிரியர் பிடிபட்டார்.

அரசன்
18-10-2010, 06:48 AM
இது கவிதையா? இல்ல கடியா?

அமரன்
21-10-2010, 07:54 PM
நையாண்டி..

நன்றாகாவே வருது..

ஆதி
23-10-2010, 06:02 AM
நடமுறையில் சகஜமானமாய் போன முரண் நடப்புக்கள்...

சில விஷயங்களை கண்டு சிரிப்பு, சில விஷயங்கள் சிந்தனையும் தருகிறது, மாற்ற வேண்டியவைகளை மாற்றுவோம்..

வாழ்த்துக்கள் ஐயா...

M.Jagadeesan
23-10-2010, 07:24 AM
நடமுறையில் சகஜமானமாய் போன முரண் நடப்புக்கள்...

சில விஷயங்களை கண்டு சிரிப்பு, சில விஷயங்கள் சிந்தனையும் தருகிறது, மாற்ற வேண்டியவைகளை மாற்றுவோம்..

வாழ்த்துக்கள் ஐயா...

நன்றி

அனுராகவன்
01-11-2010, 07:25 PM
முரண்பாடு கவியில் மிக தெளிவாக தெரியுது...
அதற்காக தான் இந்த தலைப்பா............