PDA

View Full Version : இனம் புரியா உணர்வு



Mano.G.
18-10-2010, 04:49 AM
நான் மலேசிய மண்ணில் தமிழ் நாட்டிலிருந்து
புலம் பெயர்ந்த இரு தமிழ் குடும்பத்தின் மூன்றாவது
தலைமுறையை மேலும் கொண்டு செல்ல பிறந்தவன்,
நான் வளர்ந்தது படித்தது பணிபுரிவது எல்லாம் மலேசிய
மண்ணில். இங்கே திருமணமும் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு
தந்தையும் ஆகினேன்.

ஆனால் ஊர் , தமிழகம், இந்தியா இம்மூன்று சொற்களும்
சிலகாலங்களுக்கு முன்புவரை எனக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்து வந்தன.அதற்கு சில காரணங்களும் உள்ளன.

கடந்த 2003 ம் ஆண்டு ஜுலை 13ம் நாள் இரவு 10.35 மணிக்கு
சென்னை அண்ணா அனைத்துலக வானூர்தி நிலையத்தில் முதல்
காலடி வைத்த வரையே.

அந்த தமிழ் மண்ணில் முதல் காலடி வைத்த சம்பவம் மன்ற உறவுகளுக்கு சிலருக்கு தெரியும்.

ஆனால் தற்பொழுது எனது உணர்வுகளும் எனது ஈடுபாடும்
மாறிவருவதை நானே உணருகின்றேன்.


http://www.youtube.com/watch?v=TImOBenn3XY


http://www.youtube.com/watch?v=77i8kH-Iw8Q&feature=related

http://www.youtube.com/watch?v=ubvhzYRbKBY

இம்மூன்று தேசபக்தி பாடல்களையோ இல்லை இசையயை கேட்கும்
பட்சத்தில் இனம்புரியா உணர்வு , உடலிலுள்ள உரோமங்களில்
அவ்வுணர்வினால் ஏற்படும் மாறுபாடு, இதய துடிப்பு , சுவாசத்தில்
மாற்றம்.அண்மையில் நடந்த காமல்வெல்த் போட்டி விளையாட்டுகள்
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவிப்பில்
ஒவ்வொரு முறையும் இந்திய நாட்டின் தேசிய பண் இசைக்கும் பொழுது ஏற்பட்ட இந்த மாறுதல்கள் தான்
என்னை இந்த திரி துவக்க தூண்டியது.


ஏன் ???

எனக்கு இந்த இனம்புரியா உணர்வு ????

விட்டகுறையோ இல்லை தொட்டகுறையோ.




மனோ.ஜி

பாரதி
18-10-2010, 07:33 AM
இந்தியா, தமிழகத்தின் மீதான உங்கள் ஆர்வத்தை கண்டிருக்கிறேனே..! உங்கள் முதல் பயணத்தேதி, நேரத்தை இன்னும் நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்திருப்பது வியப்பளித்தாலும் அதன் முக்கியத்துவம் உங்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சாரா ஜஹான் சே அச்சா... பாடலை குழந்தைகள் வாயிலாக கேட்டுப்பாருங்கள் அண்ணா.

ரங்கராஜன்
19-10-2010, 03:10 AM
உங்கள் தலைமுறையின் பிறந்த வீ்ட்டு பாசம் என்னை மிகவும் கவர்ந்தது அண்ணா

அதுவும் மன்ற சந்திப்பின் போது நீங்கள் முதல் முறையாக விமான நிலையத்தில் கால் வைத்த அனுபவத்தை சொன்ன போது என்னுக்கும் மெய் சிலிர்த்தது............ பின்னர் வெட்கமாகவும் இருந்தது. இந்தியாவை பார்க்காமலே நீங்கள் வைத்திருக்கும் அன்பு பாசம் .......... இந்தியாவில் வாழும் எங்களில் பலருக்கு இருப்பதி்ல்லை.......... திருத்திக் கொள்கிறோம்.......

உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் சில வீடியோக்கள் அடங்கிய இந்த சுட்டியையும் பாருங்கள்.... உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்........ வாழ்த்துக்கள் அண்ணா

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24170

aren
19-10-2010, 05:52 AM
நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் இந்த மண் மீது ஆசை அதிகம். ஆனால் இந்தியாவில் பிறக்காத உங்களைப் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றிப் பெருமையாக பேசும்போது கேட்கவே மிகவும் இன்பமாக இருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

எப்போ சென்னைக்கு மறுபடியும் போகப்போகிறோம் என்ற நினைப்பே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

Mano.G.
19-10-2010, 07:23 AM
நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் இந்த மண் மீது ஆசை அதிகம். ஆனால் இந்தியாவில் பிறக்காத உங்களைப் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றிப் பெருமையாக பேசும்போது கேட்கவே மிகவும் இன்பமாக இருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

எப்போ சென்னைக்கு மறுபடியும் போகப்போகிறோம் என்ற நினைப்பே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

தம்பி பாரதி, தம்பி தாக்ஸ்,
நண்பர் ஆரேன் உங்கல் பின்னூட்டங்கல்
என்னை மேலும் தூண்டுகின்ரன தமிழ் பிறந்த நாட்டுக்கு அடிக்கடி சென்று வர. கூடிய விரைவில் மீண்டும் எனது
சென்னை விஜயம் உள்ளது.

நன்றி