PDA

View Full Version : கங்கையாடிலென்? காவிரியாடிலென்?



M.Jagadeesan
17-10-2010, 02:45 PM
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

புறத்தே ஏற்படுகின்ற அழுக்குகளை நீரானது நீக்குகிறது.அகத்தே அழுக்குகள் உண்டாகாமல் இருக்க உண்மை பேசவேண்டும்.இது மேலோட்டமான பொருள்.

ஒருவன் செய்த பாவத்தை நீரால் கழுவிக் களையமுடியாது. கங்கையில் குளித்தாலும்,அல்லது காவிரியில் குளித்தாலும் அல்லது கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தாலும் ஒருவன் செய்த பாவம் அவனைவிட்டு நீங்காது.நாம் செய்த பாவத்தின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இக்குறளின் மறை பொருளாகும்.
மனத்தது மாசு ஆக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.

என்ற குறளின் கருத்து இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

aathma
25-10-2010, 02:22 PM
திருவாளர் ஜெகதீசன் அவர்களுக்கு ,

வணக்கம் , ஐயா உங்களது இந்த பதிவானது ஒரு ஆக்கப்பூர்வமான புது முயற்சி .
தொடர்ந்து இதுபோன்று திருக்குறள்களையும் , ஆன்மீக கருத்துக்களையும் இயைபு படுத்தித் தாருங்கள் .
மிக்க நன்றி