PDA

View Full Version : இயலறிதல்..!!பூமகள்
16-10-2010, 06:07 PM
இயலறிதல்..!!


http://img37.imagefra.me/img/img37/7/10/16/poomagal/f_wpcc8me7vdim_85140db.jpgதூக்கத்தின் விழிப்பில்
தூறலிடும் மேகத்தின்
தூரிகை மைச் சிதறலாய்
தூபமிடும் தவிப்புகள்..!

அக்னிப் பிழம்பின்
ஆனந்த மழையினில்
அடங்கி ஏறும்
ஆட்கொள்ளும் ந(பு)கைப்புகள்..!

துயில் தொலைத்த
தூரமளக்கும் ஈரவிழி
உணர்த்தும் ஊழ்
உள்வலி என்றும்..!

காணா புதிரும்
காணும் ஆவலும்
கண்ட கனவில்
கானலாய் போகும்..!

ஆழ்மூளை அழுத்தும்
ஆழ்தூக்க குறை
அம்மா பெயருக்கு
அடுத்த பொருள் உணர்த்தும்..!

கீதம்
16-10-2010, 11:35 PM
தூக்கத்தின் விழிப்பில்
தூரலிடும் மேகத்தின்
தூறிகை மைச் சிதறலாய்
தூபமிடும் தவிப்புகள்..!


[/CENTER]


குறை தூக்கக் குறையோ?
தூறலும் தூரிகையும்
ரகர றகரங்களை
இடம் மாற்றிக்கொண்டனவே!

இயலறிய இயன்றதோ?
இங்கே பொருளறியாமல் நான்!

M.Jagadeesan
17-10-2010, 12:07 AM
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை.

பூமகள்
17-10-2010, 05:45 AM
குறை தூக்கக் குறையோ?
தூறலும் தூரிகையும்
ரகர றகரங்களை
இடம் மாற்றிக்கொண்டனவே!
மிகச் சரி..
பின்னிரவுக் கவி வடித்த விளைவு அக்கா..
மாற்றிவிட்டேன். :)


இயலறிய இயன்றதோ?
இங்கே பொருளறியாமல் நான்!
எனக்கும் இயலறிய கொஞ்சம் இம்சை தான்..:traurig001: இயலுமா பாருங்கள்..:icon_ush::rolleyes: இல்லையேல் அர்த்தப்படுத்த ஏதேனும் ஒரு கவி வருவார்..:icon_rollout:

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை.
ஏதோ சொல்ல வருகிறேன்.. எனக்கும் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெளிவாகவில்லை.. இன்னும் மன்ற கவிகள் வந்து படித்து சொல்வார்கள் என்று காத்திருக்கிறேன்.. பாருங்கள். :)

சூறாவளி
17-10-2010, 04:06 PM
கவிதை புயல் "கீதம்" மே பொருளறியாமல் போறாங்களா.. !!! :confused: பதிந்த அந்த இரண்டு வரிக்குள்ளும் எதாவது அர்த்தம் புதைச்சி வச்சிருப்பாங்க.. :)

நாம சின்ன குழந்தைதானே.. எனக்கு என்ன தோணுதுனா... குழந்தையின் உறக்கம் எழுந்த தவிப்பும், அம்மாவின் அரவணைப்பையும் கலந்து கவியாய் தந்துள்ளிர்கள் எனவே நான் அர்த்தப்படுத்தியுள்ளேன்..

இன்னும் கவிகள் வருவாங்க... அவங்க விளக்கம் பார்ப்போம்..

பாராட்டுக்கள்

சிவா.ஜி
17-10-2010, 04:29 PM
நானும் காத்திருக்கிறேன்....கவிதையுணர.....!!!

பூமகள்
17-10-2010, 06:33 PM
@சூறாவளி,

அப்பாடா.. அர்த்தப்படுத்த ஒருவர் சிக்கிட்டார்ன்னு ஒரே குஷி... ஹி ஹி.. :D:Dஅர்த்தம் அற்புதம்.. சரியாக நாடியை யார் பிடிக்கிறார் என்பதே கேள்வி... புதிய அர்த்தங்கள் வரவேற்கப்படுகின்றன... :)

@சிவா.ஜி,

என்னண்ணா.. உங்களுக்கும் புரியலையா?? :confused::confused:
யாராவது வாங்கப்பா...:redface: எனக்கே புரியாம போயிடும் போல இருக்கு... :icon_ush::frown:

சூறாவளி
18-10-2010, 04:15 AM
சரியாக நாடியை யார் பிடிக்கிறார் என்பதே கேள்வி... [/COLOR]

யாராவது வாங்கப்பா...:redface: எனக்கே புரியாம போயிடும் போல இருக்கு... :icon_ush::frown:[/COLOR]

பூவு.. கண்டிப்பா விளக்கம் கொடுக்கணும்.. :) :icon_rollout:

ஆதி
18-10-2010, 08:07 AM
கவிதையின் பொருள் ஒவ்வொரு வரியிலும் இருக்கிறதென்றாலும்,

//தூக்கத்தின் விழிப்பில்
தூறலிடும் மேகத்தின்
தூரிகை மைச் சிதறலாய்
தூபமிடும் தவிப்புகள்..!
//

பசியினாலோ, நெடுநேரம் படுக்கையிலே இருப்பதால் உண்டாகும் உடல் வலியினாலோ, இன்ன பிற முகாந்திரத்தாலோ எழுந்தழும் குழந்தையை சொல்கிறார்..

தூபமிடும் தவிப்புக்கள் - தாய் மனசு..

மற்ற வரிகளை பிந்தொடருங்கள் பொருள் பிடிப்படும்..

இப்ப கடைசி வரி பார்ப்போம்..

//ஆழ்மூளை அழுத்தும்
ஆழ்தூக்க குறை
அம்மா பெயருக்கு
அடுத்த பொருள் உணர்த்தும்..!
//

ஒவ்வொரு தாயும் கடந்து வரும் நிலை இது..

குழந்தைக்கு ஒரு மூனு வயசு ஆகுற வரைக்கும் தாயால் ஒரு அமைதியான தூக்கம் உற முடியாது, ஒரு வயசு வரை தூக்கமே வந்தாலும் தாய் சரியாக தூங்க மாட்டாள் கவனமெல்லாம் பிள்ளை மீதே இருக்கும், ஒரு வயசுக்கப்புறம் தாய்ப்பால் மறக்கும் வரை பிள்ளை தாயை தூங்கவே விடாது, இதுக்கு நடுவுல பிள்ளைக்கு மேலுக்கு முடியலைனாலோ ? மற்ற பிற பிரச்சனையினாலோ தூக்கம் தொலையும்..

சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் உண்டாகிற மன அழுத்தம் இருக்கே அது தானே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முகதூவாரம்..

அம்மாவின் பெருமை எல்லார்க்கும் தெரியும், ஆனால் ஒரு அம்மாவாக இருந்து பார்த்தால் தான் அந்த வார்த்தையின் உண்மையான பொருள் புரியும்.. வாழ்த்துக்கள் பூமகள்..

பூமகள்
18-10-2010, 08:24 AM
ஆதன் அருமை..

நீங்கள் பெருங்கவி என்பதை மறுபடி பறைசாற்றினீர்கள்.. வியந்தேன்..

அட்சர சுத்த பொருள் விளக்கம்.. கரடு முரடாக எழுதிவிட்டேனென வருந்தியிருந்தேன்.. யாருக்குமே புரியாமல் போய்விடுமோவென்று.. புரிந்து கொண்டீர்கள் என்பது பெருமகிழ்ச்சி..

இதை படித்த பின், நாளைக்கு வீட்டுல யாருக்காவது குழந்தை பிறந்திருந்தா கண்டிப்பா இதை முதல்ல புரிந்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.. :)

மிக்க நன்றிகள் ஆதன்.

அக்னி
17-11-2010, 12:45 PM
சேயின் முடி தொடும் தென்றல் கூடத்
தாயின் உணர்வில் சூறாவளியாகும்...

சேயின் மனதுக்கும் தாயின் மனதுக்கும் இடையே
அறிவியலும் அறியவியலாத்
தடங்கலில்லாத் தொடர்பாடல்...

தூக்கம் கலையும் விழிகள் ஊழ்வினை எனக் குற்றம் சொல்லி
தூக்கம் கலைத்த விழிகள் பார்த்ததும் பிறவிப்பயன் என, உடன் மாற்றிச் சொல்லும்.

தாயின் உடலுக்கும் பாசத்துக்குமிடையே கயிறிழுத்தல் ஆரம்பமாவது என்னவோ வாஸ்தவம்தான்...
ஆனால், பாசத்துக்குப் பலப்பரீட்சை செய்யாமல் உடல் ஒத்துப்போவதும் உண்மைதான்...

தொப்புள் கொடி அறுவது அவசியம்...
தொடர்புக்கொடி அமைவது அதிசயம்...

பாராட்டுக்கள் பல...

பென்ஸ்
18-11-2010, 10:39 PM
கவிஞனின் உணர்வுகள் கவிதையில் அதிகமாய் தெறிக்கின்றன...
நான் வழிபோக்கனாயிருந்திருந்தால் கருவுற்ற பெண்ணின் இடத்திலிருந்து வாசித்திருப்பேன்....
கவிஞனை அறிந்ததாலோ என்னவோ பெற்ற தாயின் இடத்திலிருந்து வாசிக்கிறேன்...

குணமதி
25-11-2010, 02:12 PM
தலைப்பு சிறப்பு!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-12-2010, 03:49 PM
கவிதைக்கு அவசியமே இல்லை. கவிதைக்கு மேலான படமே ஆயிரம் கவிதை பகரும். வாழ்த்துக்கள் மலர் மகள்.

அமரன்
27-12-2010, 09:10 PM
அம்மா பெயர்...:)

பொருத்தமான கவிப்பொருள்தான்..

கஷ்டத்தையும் இஷ்டத்துடன் ஏற்றுக்கொள்ளும் பூமனம் தாயுளம்.

வார்த்தை தவறவில்லை..:)

CEN Mark
31-12-2010, 04:57 PM
இயலறிதல்..!!


http://img37.imagefra.me/img/img37/7/10/16/poomagal/f_wpcc8me7vdim_85140db.jpgதூக்கத்தின் விழிப்பில்

துயில் தொலைத்த

காணா புதிரும்
காணும் ஆவலும்
கண்ட கனவில்
கானலாய் போகும்..!

ஆழ்மூளை அழுத்தும்
ஆழ்தூக்க குறை
உங்கள் கவியே
உங்களுக்கு பதிலாய்