PDA

View Full Version : ஊடல் சுரங்கம்



inban
15-10-2010, 10:39 AM
தவறுதான்.

கன்னங்களைத்
தீண்டிய கரங்களிடம்
மூடிய உன்விழிகள்
தவறான தகவலை
தந்து தொலைத்துவிட்டன.

இளமலரின்
இதழ் வெடிக்கும் முன்னரே
முந்திக்கொண்டு வந்த
முட்டாள் வண்டுபோல
அவசரப் பட்டுவிட்டேன்

அந்தத் தனிமை...
அந்த தகிப்பு...
என்னசெய்வேன் நான்?
ஏதும் செய்யாமல் போனால்
நான் என்ன ஆண்?

தீண்டாமல் போயிருந்தால்
நின் திரு உதட்டுக்கல்லவா
தீங்கிழைத்தவன் ஆகியிருப்பேன்?

கோபித்துக்கொள்ளாதே!
கள்ள முத்தமிடாதவனும்
ஓர் காதலனா என
பிற்பாடு நீ என்னை
பரிகசிக்கக் கூடாதல்லவா?!

பூமகள்
15-10-2010, 10:47 AM
ரோஜா இதழ்
மூடிய பனித்திரை
கதிரவனால்
சுவைக்கப்பட்ட
ஊடலில்
பொய்யழுகை வடிக்கின்றன
மீதி இதழ்கள்...!!

--

வரம்பு மீறத் துடிக்கும் இளமை..
வடிக்கும் புதிய கொள்கை..
தன்னிலை மறக்கையிலும்
தன்னியல் மறக்காதவனே ஆண்..

வாய்ப்புகளும் சந்தர்ப்பமும்
வாய்த்தாலும் வழுநெறி
தவறாதவரே மனிதரன்றோ??!!

காதலுக்கு இது விதிவிலக்கோ??
தேவை இங்கும் இதழ் விலக்கோ??!!

--

தொடருங்கள் இன்பன். :)

கீதம்
15-10-2010, 10:48 AM
இன்பன் - பெயருக்கேற்றபடி இன்பக்கவிதைகள் பொங்கி வழிகின்றனவே!

பாராட்டுகள், இன்னுமின்னும் தோண்டப்படட்டும் கவிச்சுரங்கம்!

கீதம்
15-10-2010, 10:51 AM
ரோஜா இதழ்
மூடிய பனித்திரை
கதிரவனால்
சுவைக்கப்பட்ட
ஊடலில்
பொய்யழுகை வடிக்கின்றன
மீதி இதழ்கள்...!!

--

வரம்பு மீறத் துடிக்கும் இளமை..
வடிக்கும் புதிய கொள்கை..
தன்னிலை மறக்கையிலும்
தன்னியல் மறக்காதவனே ஆண்..

வாய்ப்புகளும் சந்தர்ப்பமும்
வாய்த்தாலும் வழுநெறி
தவறாதவரே மனிதரன்றோ??!!

காதலுக்கு இது விதிவிலக்கோ??
தேவை இங்கும் இதழ் விலக்கோ??!!

--

தொடருங்கள் இன்பன். :)

கவியெழுத்து மிக அழகு!
கையெழுத்து மட்டும் சற்றே கலவரப்படுத்துகிறதே!:confused:

பூமகள்
15-10-2010, 11:06 AM
கவியெழுத்து மிக அழகு!
கையெழுத்து மட்டும் சற்றே கலவரப்படுத்துகிறதே!:confused:
வாழ்க்கை வழியில் வலி இயல்நிலை தானே...??!!:rolleyes:

இறப்பு ஒரு வலியெனில்
வாழ்வு பலவலியுள்ளடக்கியதே..!!:fragend005:

சூறாவளி
15-10-2010, 12:38 PM
வாழ்க்கை வழியில் வலி இயல்நிலை தானே...??!!:rolleyes:

இறப்பு ஒரு வலியெனில்
வாழ்வு பலவலியுள்ளடக்கியதே..!!:fragend005:

கவிதை மட்டும் தான் பூவுகிட்ட இருந்து மலரும்ன்னு பாத்தா தத்துவமும் மலருதே...:icon_b:

அமரன்
16-10-2010, 07:06 AM
என்னமாக் கொடுகிறாப்பா விளக்கம்.

வாழ்த்துகள்.

govindh
16-10-2010, 11:20 AM
நின் திரு உதட்டுக்கல்லவா .....

மரியாதையுடன்...திருட்டு முத்தம்...!

இன்பக் கவிக்கு
இனிய வாழ்த்துக்கள்.

govindh
16-10-2010, 11:24 AM
பூமகள் பதித்திட்ட
விமர்சனக் கவியும்
வெகு அழகு...
மிகவும் ரசித்தேன்...

inban
18-10-2010, 08:11 AM
ரோஜா இதழ்
மூடிய பனித்திரை
கதிரவனால்
சுவைக்கப்பட்ட
ஊடலில்
பொய்யழுகை வடிக்கின்றன
மீதி இதழ்கள்...!!

--

வரம்பு மீறத் துடிக்கும் இளமை..
வடிக்கும் புதிய கொள்கை..
தன்னிலை மறக்கையிலும்
தன்னியல் மறக்காதவனே ஆண்..

வாய்ப்புகளும் சந்தர்ப்பமும்
வாய்த்தாலும் வழுநெறி
தவறாதவரே மனிதரன்றோ??!!

காதலுக்கு இது விதிவிலக்கோ??
தேவை இங்கும் இதழ் விலக்கோ??!!

--

தொடருங்கள் இன்பன். :)
இதழுக்கு விலக்களித்துவிட்டு இன்பன் எப்படித் தொடர்வதாம் ?:lachen001::lachen001::lachen001:
கவிதைக்கு பாராட்டும் கருத்துரையும் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி.