PDA

View Full Version : திரும்பிப்பார்க்கிறேன்!----ஓர் உரத்த சிந்தனை!



கலைவேந்தன்
15-10-2010, 08:05 AM
திரும்பிப்பார்க்கிறேன்!-----ஓர் உரத்த சிந்தனை!

நடந்து வந்த ஓரடிப்பாதை
கிடந்துகொண்டு தான் உள்ளது இப்போதும்!
குத்திய முட்களை முறைக்கிறேன்......

இல்லை நண்பா!
உன்னை வருத்தும் எண்ணம்
எங்களுக்கில்லை எப்போதும்..........
உரசும்போதுதானே வைரமும்
புன்னகைக்கிறது?
உன்னை பதப்படுத்த நாங்கள்
எடுத்த எத்தனிப்பில்
சிறிது கடுமை கூடிப்போயிற்று அவ்வளவே!

எத்தனை எளிதாய் சமாதானம் ?
வலித்த என்னிதயம்
வடித்த குருதிக்கு இழப்பீடு என்னவாம்.....?

அட நீயும் சராசரி மனிதனா?
நாங்கள் பதமாய் பக்குவமாய்
உனக்களித்த அனுபவங்களுக்கு
எந்த மதிப்பாளர்
அறுதியிட்டு விலைகூற முடியும்?
முயற்சித்துப்பார்!
முடிவெடு நீ!

அட ஆமாம்!
இதை எப்படி மறந்தேன் நான்?
பலமுகஙகளையும்
சில பொய்முகங்களையும்
என் மூளைக்கு தெரிவித்த
ந்யூரான்கள் அல்லவா நீங்கள்!
நன்றி முட்களே.....!
இன்னும் பலமாய்
என்னை உரசுங்கள்!
வாழ்க்கை மகுடத்தின் மூலவைரமாய்
என்னை மாற்றுங்கள்.............!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-10-2010, 09:22 PM
அடித்தலில்தான் தங்கம் ஜொலிக்கிறது. அறுத்தலில்தான் வைரம் பளபளக்கிறது. பிணியும் பாடமென்றுரைக்கும் நல்ல கவிதை தோழரே. இது போன்ற கவிதை மன்றத்தில் வெகுவாக குறைந்து விட்டதென்று நினைக்கிறேன். குறையை களைந்தமைக்கு நன்றி.

கலைவேந்தன்
07-11-2010, 09:59 AM
மிக்க நன்றி என் ஒரே ரசிகரே...! :)