PDA

View Full Version : புதிய மனிதா...பூமிக்குவா.. (எந்திரன் இரண்டாம் பாகம்)கலைவேந்தன்
15-10-2010, 08:40 AM
புதிய மனிதா... பூமிக்கு வா...!


நாம் கிரேக்க எஞ்சினியர்கள் பற்றி முன்பகுதியில் (http://http://www.tamilmantram.com/vb/showthread.php?p=495823#post495823) குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா..? அவர்கள் பலவித எந்திரங்கள் புதிதாக கண்டு பிடித்தாலும் அவை யாவும் போருக்கே பயன்பட்டன. ஆக்கத்திற்கு பயன் படுத்தப்படவில்லை. மேலும் எந்திர வடிவில் இருந்த கண்டுபிடிப்பை மனித வடிவில் கொணர காலம் காத்திருந்தது.


1495 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சி என்னும் இலக்கிய விஞ்ஞானி செயற்கை மனிதனை உருவாக்கும் முயற்சியில் சற்றேறக்குறைய வெற்றியும் பெற்றார்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Leonardo_Da_Vinci_Robot_Leonardo3_2008-1.jpg/130px-Leonardo_Da_Vinci_Robot_Leonardo3_2008-1.jpg

அதனைத் தொடர்ந்து ஜாக்வஸ் டெ வாகன்சன் என்பவர் 1739 இல் இத்தகையமுயற்சி செய்தார். அதை அடிகோலிய முயற்சிகளாக 1796 இல் ஜப்பானிய கரகுரி ஜு என்பவரும் 1898 இல் நிகோலா டெஸ்லா என்பவரும் இத்தகைய முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்.

1926 ஆம் ஆண்டில் வெஸ்டிங் ஹௌஸ் கார்பரேஷன் டெலிவோக்ஸ் என்னும் மனித வடிவான ரோபோவுக்கு அடித்தளமிட்டது. ஆனால் முழு ஆண்ட்ராய்ட் ஹ்யூமன் ரோபோட் என்பது முழுவடிவம் பெற காலம் காத்திருந்தது.

ரோபோக்களின் தந்தை.


காலத்தின் கைகளில் மனித உருவிலான ஆண்ட்ராய்ட் ரோபோக்கள் உருவாக அடிப்படைக்காரணமாக அமைந்தது அறிவியல் கதைகள் எழுத்தாளர் ஐசாக் அசிமோவ்தான். அவர் எழுதிய ’ரன் அரௌண்ட்’ என்னும் கதையில் ரோபோடிக்ஸ் என்னும் வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தி ஆண்டிராய்ட் ஹ்யூமன் ரோபோக்களின் அதீத வளர்ச்சியையும் அதன் விளைவுகளையும் 1941 ஆம் ஆண்டில் வெளியிட்டு ரோபோக்களின் தந்தை என்னும் பெயரைப்பெற்றார்.

http://www.robotics.utexas.edu/rrg/images/learn_more/history/isaac_asimov.jpg
ரோபோக்களின் தந்தை ஐசாக் அசிமோவ்.

அவர் மேலும் எழுதிய இவ்வகைக்கதைகள் 1950 ஆண்டு தொகுக்கப்பட்டு I,ROBOT என்றபெயரில் வெளியாகி மிகப்பெரிய புகழைப்பெற்றது. ஐசாக் அசிமோவ்(1920 - 1992) எழுதிய கதைகளில் முதன் முறையாக உருவான ரோபோ பெண்வடிவிலான எலீசா என்னும் ஹ்யூமனாய்ட் ரோபோ கேரக்டர்தான்.

அதன் அடிப்படையில் 1966 ஆம் ஆண்டில் புரஃபசர் ஜோசஃப் வெய்சென்பாம் (Professor Joseph Weizenbaum ) என்பவர் எலிசா என்னும் மனிதவடிவிலான ரோபோவை ப்ரோகிராம்களாக எழுதினார். அந்த எலீசா 240 வகை கணிணி ஆணைகளைக் கொண்டதாக மனவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்கும் சைக்கோதெரபிஸ்டாக உருவானாள்.


ஐசாக் அசீமொவின் மூன்று கட்டளைகள்.

ஐசாக் அசிமோவ் தனது கதைகளில் வரும் ஆண்ட்ராய்ட் ஹ்யூமன் ரோபோக்களுக்காக மூன்று கட்டளைகளைப் "Laws of Robotics",) (பிறப்பித்தார். அவை:

1. மனித ரோபோக்கள் எவ்வகையிலும் மனிதவர்க்கத்துக்கு காயங்கள் உயிர்ச்சேதங்கள் ஏற்படுத்தக்கூடாது.

2.ரோபோக்கள் மனிதர்களின் கட்டளைக்கு எவ்வகையிலும் கீழ்ப்படிதல் வேண்டும். அவ்வாறு கீழ்ப்படிதலுக்கு கட்டுப்படக்கூடாது என்னும் உயர் கட்டளைச் சமயத்தில் இது பொருந்தாது.

3. உயர்கட்டளை இல்லாத பட்சத்தில் எவ்வகையிலும் தன்னைக் காத்துக்கொள்ள முயலவேண்டும்.
ஆக இவ்வகையில் இன்றைய மனிதவடிவிலான ரோபோக்களுக்கும் இந்த மூன்று முக்கியக்கட்டளையும் கடைபிடிக்கப்படுவது சிறப்பானது.


புதியமனிதன் பூமிக்கு வந்தான்.

1956 ஆம் வரலாற்றுமிக்க ஆண்டில் ஜார்ஜ் டெவொல் மற்றும் ஜோசஃப் எங்கெல்பெர்ஜர் என்னும் இருவரது சந்திப்பு நிகழந்தது.ஒரு ரம்மியமான நேரத்தில் ஐசாக்கின் எழுத்துக்களைப்பற்றி விவாதித்த இந்த இருவரும் அசிமோவின் எழுத்துக்கு இயற்பியல் வடிவம் அளிக்க முன்வந்தனர். இவ்வாறாக உலகின் முதல் ரோபோ த யுனிமேட் ( The Unimate ) உருவானது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Unimate.jpg/182px-Unimate.jpg


http://www.robotics.utexas.edu/rrg/images/learn_more/history/unimate_puma500.jpg


அந்த முதல் ரோபொ அப்போதைய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக மிக அதிக உஷ்ணப்படுத்துதலில் டைகாஸ்டிங் வேலையை செய்தது. தொடர்ந்து ஜோசஃப் எங்கெல்பெர்ஜர் யுனிமேஷன் என்னும் ரோபோ தொழிற்சாலையை உருவாக்கினார். அதுவே வியாபார ரீதியான ரோபோக்களைத் தயாரித்த முதல் கம்பெனி என்னும் பெயரையும் பெற்று விளங்குகிறது. இன்றைய நாளிலும் அந்த யுனிமேஷன் மிகப்பெரிய ரோபோ நிறுவனமாக விளங்கி வருகிறது.அடுத்த பகுதியில் நவீன ரோபோக்களின் நர்த்தனங்களைப் பார்ப்போமா..?

நாஞ்சில் த.க.ஜெய்
03-12-2010, 03:43 PM
தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன நண்பரே ! எதனை கண்டும் கலங்காது உங்கள் தகவல்களை தாருங்கள் நண்பரே ! மிகவும் நன்றாக உள்ளது இத்திரி .தொடருங்கள்
என்றும் ஆவலுடன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
03-12-2010, 05:28 PM
எந்த கண்டு பிடுப்புக்கள் கண்டு பிடித்தாலும் ,அதுவே மக்களுக்கு பயன் பட்டாலும்,
அதனால் மக்களுக்கு அது எமனாக தான் அமையும் ......


உங்கள் கருத்துக்கு ,நன்றி .....

ரொம்ப அருமையான தகவல் , தொடருங்கள் ........