PDA

View Full Version : ராஜபோதை.. (காதல் கீழ் கணக்கு)rambal
16-11-2003, 05:07 PM
ராஜபோதை.. (காதல் கீழ் கணக்கு)


நீ வெறும்
சிகரெட்..
கஞ்சாவை கலந்து
பற்றவைத்தேன்..

ராஜபோதை
தந்தாய்...
கிறக்கத்தில்
ஆழ்த்தினாய்..

என்னுள் புகுந்த
பின்னோ..
தலைக்குள் ஏவுகணைகளை
செலுத்தினாய்..

சிறிது நேரத்திற்கெல்லாம்
நாவை உலர்த்தி
குடம் குடமாய்
நீர் அருந்த வைத்தாய்..

இத்தோடு சர்க்கரை
அதிகமான
காபியும் கொடுத்தாய்..

போதையின் உச்சத்திற்கு
சென்ற பின்பு
நிரந்தரமாய் தங்கினாய்...

காணும் பொருள் யாவும்
மங்கலாய்..
பூமி சுற்றுவது..
எல்லாம் அறிய வைத்தாய்..

என்னை உனக்கு
முழுமையாய்
அடிமையாக்கிய பிறகு
எங்கு சென்றாய்?

rambal
16-11-2003, 05:08 PM
இந்தக் கவிதைக்கும் அறிந்தவர்கள் விளக்கம் கொடுக்கலாம்..
இல்லையெனில் நாளை நான் கொடுக்கிறேன்..

முத்து
16-11-2003, 05:19 PM
நன்றாக இருக்கிறது ராம்பால் அவர்களே ...

விளக்கம் கொடுக்கும் அளவுக்கு
எதுதான் நமக்கு முழுமையாய் புரிந்தது ..?
ஒரு சிறிய அணுவினையே இன்னும் மனிதனால்
புரிந்துகொள்ளமுடியவில்லை ....
இருந்தும் ...


நிலாவையும், கடலையும், வானத்தையும் ரசிப்பதில்லையா ...
இன்னும் சொல்லப்போனால் ..
புரியாத நிறைய விஷயங்கள்தான்
மனிதனுக்கு மிகவும் ரசிக்கும்படியாய் இருக்கின்றன ...
அனைவரும் செய்து அவஸ்தைப்படும்
காதலைப் போல .....

முத்து
16-11-2003, 05:25 PM
ராம்பால் அவர்களே ...
அது என்ன காதல் கீழ் கணக்கு .. ?
கிபி கிமு மாதிரி ...
காகீ காமே ... இப்படியா ? :wink:

இக்பால்
17-11-2003, 10:46 AM
அறிந்தவர்கள் என்றால் கஞ்சா உபயோகப் படுத்தியவர்களா?
(இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாத மாதிரி எல்லாம் கேள்வி
கேட்கக் கூடாது என்று சொல்ல பப்பி வந்து கொண்டு
இருப்பது போல் தோன்றுகிறது....ஸோ....எஸ்கேப்.)

Nanban
17-11-2003, 01:45 PM
இந்த உலகில் மயக்கம் தரும் வஸ்துகள் நிறைய இருக்கின்றன...... இந்த வஸ்துகளின் குணநலன்கள் - ஒரு துளியூண்டு உபயோகத்தில், போதையை ஆரம்பித்து வைக்கும்.... பின்னர், தன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில், எந்த அளவும் சமாதானம் அடையச் செய்யாது.... இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று நிம்மதி இழந்து அதன் பின்னே செல்லச் சொல்லும் - அதாவது, போதையைத் தேடித் தேடி ஓட வைக்கும் - எங்கே போய்விட்டாய் என்று கதற வைக்கும்...... இது நேரிடையாக போதையைத் தரும் வஸ்துகள் என்று மட்டுமல்ல ------ காதல், பணம், புகழ், அந்தஸ்து என்று பலவும் உண்டு.

இங்கு ராம் குறிப்பிடும் போதை - காதல்? உள்ளே சென்று, கிளர்ச்சியுற செய்து, மனதைப் பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டதே?

இளசு
17-11-2003, 05:46 PM
ராம்
நண்பனின் விளக்கத்துக்குப்பின் (தைரியமாய் :D)
அண்ணனின் விமர்சனம்...


தாய்ப்பாலில் முதல் போதை
ஏப்பம்
தாலாட்டில் ஒரு போதை
உறக்கம்
விளையாட்டில் அடுத்த போதை
வளர்ச்சி
பாடத்தில் கிடைத்த போதை
பதக்கம்

நல்ல போதை நிறைய உண்டு -
முன்னாளில்...
வேறு போதை நான் நாடியது
எந்நாளில்?

போதை...தேவை - மாறாதது..
அது கிடைக்கும் பாதை..- மாறுவது..
நல்ல போதையில் மட்டும்
மீண்டும் அமிழ்த்திவிட
வேண்டி ஏங்குது உள்மனது...


பாராட்டுகள் ராம்!
(பிரவுன் சுகரிலும் உடற்பயிற்சியிலும்
மூளைக்குக் கிடைக்கும் சுகமான எண்டார்பின்கள் ஒன்றே)

rambal
17-11-2003, 06:43 PM
இந்தக் கவிதையில் கொஞ்சம் வித்யாசமாக கஞ்சாவை
பாடுபொருளாக பயன்படுத்தியுள்ளேன்..
எங்கு சர்ச்சையாகிவிடுமோ என்று பயந்துதான் யாராவது விளக்க்கம் கொடுங்கள்
என்று கோரிக்கை வைத்திருந்தேன்..
நல்லவேளையாக நண்பனும், அண்ணனும் அதை நிவர்த்தி செய்துவிட்டீர்கள்..
நன்றி..நன்றி..

முத்து
17-11-2003, 06:47 PM
அட .. ! நான் காதல் என்றல்லவா நினைத்தேன் ...

Nanban
17-11-2003, 07:31 PM
இந்தக் கவிதையில் கொஞ்சம் வித்யாசமாக கஞ்சாவை
பாடுபொருளாக பயன்படுத்தியுள்ளேன்...

ஆனாலும் அத்தனை தெளிவு, நுணுக்கம்........கஞ்சா உபயோகத்தைப் பற்றி.

கல்லூரியில் படிக்கும் பொழுது, இந்தப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், எப்போதும், கஞ்சாப் பொட்டலத்துடன், கூடவே மிட்டாய்களும் வைத்திருப்பார்.... அப்பொழுது தான் போதையின் முழுசுகமும் கிடைக்கிறது என்பார். அதை 'சர்க்கரை கூட்டிய காப்பி' என்று படித்ததும் வியந்து போனேன்......

முத்து
17-11-2003, 07:52 PM
கல்லூரியில் படிக்கும் பொழுது, இந்தப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், எப்போதும், கஞ்சாப் பொட்டலத்துடன், கூடவே மிட்டாய்களும் வைத்திருப்பார்.... அப்பொழுது தான் போதையின் முழுசுகமும் கிடைக்கிறது என்பார்.


இவ்வளவு விஷயம் இருக்குதா இதிலே ....
ஒருவேளை கஞ்சாவில் இருக்கும் அல்கலாய்டும் ,
மிட்டாயில் இருக்கும் சுக்ரோசும் சேர்ந்து வினை புரிந்து
வேறு ஏதாவது உருவாகுமோ என்னவோ .. ?

kavitha
23-02-2004, 05:39 AM
நிகோடின் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்.
என்ன வஸ்துவோ? முன் பின் செத்தால் சுடுகாடு தெரியும்! (என்னை மட்டும் தாங்க சொன்னேன்)