PDA

View Full Version : தமிழ்த் தேன்



M.Jagadeesan
15-10-2010, 04:27 AM
கலைமணமும் தமிழ்மணமும் நிறைந்து நல்ல
கலைஞர் களை ஈன்றெடுத்த மதுரை என்னும்
தலைசிறந்த நற்பதியில் சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த பாண்டியரின் சங்கம்போல
விலைமதிக்க வொண்ணாத கவிதைச் செல்வம்
விரல்நுனியில் சொடுக்கிடவே திரையில் தோன்றும்
மலைமலையாய் மன்றத்தில் குவியக் காண்பீர்
மகிழ்வுடனே தமிழ்த்தேனைப் பருக வாரீர்.

கீதம்
15-10-2010, 04:57 AM
வந்தேன், வந்தேன்!
சுவைத்தேன் தமிழ்த்தேன்!
தேன் பெற்று பதிலாய்
கள் தந்து மகிழ்ந்தேன்!
வாழ்த்துகள், பாராட்டுகள்!

M.Jagadeesan
15-10-2010, 06:38 AM
வந்தேன், வந்தேன்!
சுவைத்தேன் தமிழ்த்தேன்!
தேன் பெற்று பதிலாய்
கள் தந்து மகிழ்ந்தேன்!
வாழ்த்துகள், பாராட்டுகள்!

தங்கள் "கள்" குடித்து மகிழ்ந்தேன்.

அனுராகவன்
01-11-2010, 07:11 PM
ஐயா ஜெகதீசன் அவர்களே!!
கவிதை ,மிக அருமை....
வந்தோம் உன்
தமிழின் சொல்வன்மையில்
திகழ்ந்து ஆகா ,ஆகா
என்று என் மனமே
மகிழ்ந்ததது........
இன்னும் கவி படைத்தால்
நான் ரசிக்க ரெடி......