PDA

View Full Version : பாலைப்புறா



inban
15-10-2010, 01:36 AM
நீ போனதும்
உன்னோடேபோய்விட்டது
என் கவிதையும்.

நீ சிரிக்கும் போதெலாம்
வார்த்தைகள் என்னை
வட்டமிட்டபடி இருக்கும்.

உன்னோடு நடந்திடும்
ஒவ்வொருஅந்தியிலேயும்
உன் வதன வெளிச்சத்திலே
ஒரு கவியரங்கு
களைகட்டும்.

சினுங்கிடும்
உன் கால்கொளுசுக்கு
சந்ததங்கள் எல்லாம்
சேவை செய்ய ஓடும்.

நம் உறவின்
முதற் பிள்ளையாக
கவிதை என்னை
செல்லமாய் உதைக்கும்.

என் கனவுச்சோலையின் பூக்களைக் கொய்து...
என் வதன உலகினை நிர்மூலமாக்கி...
என் வாழ்வுப் படகிலே உளிகொண்டு தாக்கி...

குங்குமம் ஏந்தி நீ
குடித்தனம் போனபின்னால்,
தீயோடு சேர்ந்த தேகம் போல
உன்னோடே
ஓடிப்போய் விட்டது
என் கவிதையும்.

M.Jagadeesan
15-10-2010, 01:45 AM
நீ போனதும்
உன்னோடேபோய்விட்டது
என் கவிதையும்.

நீ சிரிக்கும் போதெலாம்
வார்த்தைகள் என்னை
வட்டமிட்டபடி இருக்கும்.

உன்னோடு நடந்திடும்
ஒவ்வொருஅந்தியிலேயும்
உன் வதன வெளிச்சத்திலே
ஒரு கவியரங்கு
களைகட்டும்.

சினுங்கிடும்
உன் கால்கொளுசுக்கு
சந்ததங்கள் எல்லாம்
சேவை செய்ய ஓடும்.

நம் உறவின்
முதற் பிள்ளையாக
கவிதை என்னை
செல்லமாய் உதைக்கும்.

என் கனவுச்சோலையின் பூக்களைக் கொய்து...
என் வதன உலகினை நிர்மூலமாக்கி...
என் வாழ்வுப் படகிலே உளிகொண்டு தாக்கி...

குங்குமம் ஏந்தி நீ
குடித்தனம் போனபின்னால்,
தீயோடு சேர்ந்த தேகம் போல
உன்னோடே
ஓடிப்போய் விட்டது
என் கவிதையும்.

ஓடிப்போன கவிதையைத் தேடிப்பிடியுங்கள்.

ஆதவா
15-10-2010, 04:44 AM
வாழ்க்கையில் இந்தமாதிரி கீறல்கள் பின்னொருநாளில் படிக்க சுவாரசியமானவை இல்லையா?
சிலபேருக்கு குங்குமம் கொடுத்தும் கவிதை மறந்து போகிறது. துணை நம்மைச் சாராதவரைக்கும் நாம் பணிந்து செல்லப் பார்க்கிறோம். துணை நம்மைச் சார்ந்த பிறகு பணிவதை மறந்துவிடுகிறோம்!!
கவிதை நன்று இன்பன்.
கவிதைக்கு தலைப்பு அருமையான தேர்ந்தெடுப்பு.
வார்த்தை தேர்ந்தெடுத்ததும் நன்கு கோர்த்ததும் சிறப்பாக இருக்கிறது!!



உன்னோடு நடந்திடும்
ஒவ்வொருஅந்தியிலேயும்
உன் வதன வெளிச்சத்திலே
ஒரு கவியரங்கு
களைகட்டும்.

வழக்கமான வரிகள் என்றாலும் சொன்னவிதத்தில் பாராட்டு மிகுந்திருக்கிறது.
இன்னும் நிறைய எழுதுங்கள்!!

பிரேம்
15-10-2010, 07:40 AM
ரொம்ப அருமையா இருக்கு தல..
ஒரு வலிய கொடுத்துடீங்க..டைரக்டர் வசந்தபாலன் மாதிரியே..

பிரேம்
15-10-2010, 07:46 AM
ஓடிப்போன கவிதையைத் தேடிப்பிடியுங்கள்.

வேண்டாம் தல..
இடம் மாறிய கவிதைய தேடிப்போன பிரச்சனைதான் வரும்..

அமரன்
15-10-2010, 05:53 PM
காதலியுடன் ஓடிப்போன கவிதை.

காட்டுக்குயிலாக காதலன்.

காட்சியும் கானமும் அருமை.

எத்தனை பேரால் முடிகிறது
இப்படி காதலிக்குக் கவிதையை சீதனமாகக் கொடுக்க.

பாராட்டுகள்.