PDA

View Full Version : பித்தம்



inban
14-10-2010, 03:19 PM
வீதி மண்ணை
குனிந்து முத்தமிடுகிறேன்
பார்த்த எல்லோரும் என்னை
பைத்தியம் என்கிறார்கள்
முட்டாள்கள்!
அவர்களுக்கு என்ன தெரியும் ?
நான் முத்தமிட்டது
உன் பாதச் சுவடுகளை என்று.....

அனுராகவன்
14-10-2010, 03:22 PM
முதல் பதிப்பே கவிதை...
கவி அருமை....
நீங்களும் அறிமுகம் செய்து கொள்ளலாமே!!

சிவா.ஜி
14-10-2010, 04:12 PM
கவிதை நல்லாருக்குங்க இன்பன். வாழ்த்துக்கள்.

nambi
14-10-2010, 04:22 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

அமரன்
14-10-2010, 09:47 PM
கவிஞர்கள் தவழ்வது காதலின் மடியில் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

ஒரு தலைக் காதலா..
தொலைந்து விட்ட காதலா..
தலைக் கனமா..
என்ற குழப்பங்களுடன்
ரசிக்கிறேன்
உன் காதலை..

கீதம்
15-10-2010, 12:21 AM
காதலியின் பாதச்சுவடுகளை முத்தமிட்ட உம்மை 'காதல் பைத்தியம்' என்றால் சாலப்பொருந்துமோ?

கவிதை நன்று, பாராட்டுகள், இன்பன் அவர்களே.

M.Jagadeesan
15-10-2010, 01:52 AM
நல்ல கற்பனை.பாராட்டுக்கள்.

ஆதவா
15-10-2010, 04:37 AM
வீதி மண்ணை
குனிந்து முத்தமிடுகிறேன்
பார்த்த எல்லோரும் என்னை
பைத்தியம் என்கிறார்கள்
முட்டாள்கள்!
அவர்களுக்கு என்ன தெரியும் ?
நான் முத்தமிட்டது
உன் பாதச் சுவடுகளை என்று.....

பார்த்துங்க.... மண்ணுல நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அது உங்களை லவ் பண்ணிடப் போவுது!!!
காதல் வந்தால் கண்டதெல்லாம் பண்ணத் தோணும். அதுல இதுவும் ஒண்ணு!

நல்ல ஆரம்பம் இன்பன்..