PDA

View Full Version : இட்டலியும் சாம்பாரும்



M.Jagadeesan
14-10-2010, 01:47 PM
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.

ஆதவா
14-10-2010, 02:06 PM
இட்லிக்குக் கவிதை எழுதியிருக்கீங்க
வாழ்த்துக்கள்.
இது வெண்பா முறையில் எழுதப்பட்டதா? எனில் தளை தட்டுகிறதே!
கவனிக்கவும்!

அறிஞர்
14-10-2010, 02:19 PM
இட்லியும் சாம்பருக்கும் கூட கவிதை...
அருமை

M.Jagadeesan
14-10-2010, 02:23 PM
இட்லிக்குக் கவிதை எழுதியிருக்கீங்க
வாழ்த்துக்கள்.
இது வெண்பா முறையில் எழுதப்பட்டதா? எனில் தளை தட்டுகிறதே!
கவனிக்கவும்!

நன்றி. பிழையை திருத்திக்கொள்கிறேன்.

M.Jagadeesan
14-10-2010, 02:25 PM
இட்லியும் சாம்பருக்கும் கூட கவிதை...
அருமை

நன்றி.

ஆதவா
14-10-2010, 03:07 PM
ஆவியிலே வேகும் இட்டலியுடன் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலிக்கு இணையான உணவேதும் இல்லையென
கொட்டி முழக்கிடுவாய் முரசு.

வேகும் - தேமா - மா முன் நிரை வரவேண்டும்.. வந்தது “இட்“ - நேர்
இட்டலியுடன் - கூவிளங்கனி - கனிச்சீர் வெண்பாவில் வராது.
இட்டலிக்கு - கூவிளங்காய் - காய் முன் நேர் வரவேண்டும், வந்தது “இணை” - நிரை
இணையான - புளிமாங்காய் - காய் முன் நேர் வரவேண்டும் - வந்தது “உண” நிரை
முழக்கிடுவாய் - கருவிளங்காய் - காய்முன் நேர்(பு) வரவேண்டும் வந்தது “முரசு” நிரைபு.

இவற்றைக் களைந்தால் வெண்பா சரியாக இருக்கும்....
அன்புடன்
ஆதவா.

சிவா.ஜி
14-10-2010, 04:00 PM
ஆதவாவோட பின்னூட்டம் இட்லிக்கு சாம்பார் இல்லாதக் குறையைப் போக்கிடிச்சு. அவர் சொன்ன எல்லாக் காயையும் போட்டு கம கமன்னு சாம்பார் வெச்சுடலாம்...ஹி...ஹி...

கவிதை நல்லாருக்கு ஜகதீசன். வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
14-10-2010, 04:12 PM
ஆதவாவோட பின்னூட்டம் இட்லிக்கு சாம்பார் இல்லாதக் குறையைப் போக்கிடிச்சு. அவர் சொன்ன எல்லாக் காயையும் போட்டு கம கமன்னு சாம்பார் வெச்சுடலாம்...ஹி...ஹி...

கவிதை நல்லாருக்கு ஜகதீசன். வாழ்த்துக்கள்.

நன்றி.

அமரன்
14-10-2010, 09:51 PM
சுவைதரும் தட்டு.

பாராட்டுகள், ச’மையல்’காரர்களுக்கு

M.Jagadeesan
15-10-2010, 01:21 AM
சுவைதரும் தட்டு.

பாராட்டுகள், ச’மையல்’காரர்களுக்கு

நன்றி பல.

கீதம்
15-10-2010, 04:38 AM
வெண்மாவால் வந்த இட்டலிக்கு
வெண்பாவால் ஒரு புகழாரம்!
வட்டிலே இட்டலி கண்டதும்
வடிவாய் வந்ததோ கவிதை?
பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே!

M.Jagadeesan
15-10-2010, 06:42 AM
வெண்மாவால் வந்த இட்டலிக்கு
வெண்பாவால் ஒரு புகழாரம்!
வட்டிலே இட்டலி கண்டதும்
வடிவாய் வந்ததோ கவிதை?
பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே!

நன்றி

அனுராகவன்
01-11-2010, 07:16 PM
இட்லி அதனுடன் சட்னி
உண்ட பின் நண்பர் பட்னி
நான் வருவது சிட்னி
அதனால் நீ பல கவிதை தட்டுனி..

நன்றி ஜெகதீஷ்......