PDA

View Full Version : ஏதிலியின் வாழ்வு

அகத்தியன்
14-10-2010, 12:21 PM
தூக்கம் வர மறுக்கும் இரவுகள்
பெருமூச்சுகளோடு கழிகின்றன.
தனிமையினை மட்டும் போர்வையாக்கி தூங்கும் அனாதை அவன்
நிர்க்கதிகளற்று
மற்றோரின் வாழ்வு பற்றி அங்கலாய்க்கும் ஏதிலிக்களிடம்
அக்கறை கொள்ள யாருமில்லை.

அலங்காரமாய் வார்த்தைகள் எப்போதும் அவனிடம் சேருகின்றன.
ஏதும் நிஜமாய் இல்லை…
அவனது திசைகள் பற்றிய அக்கறை யாருக்குமில்லை
அவன் தவிர்த்து……..
இதோ இருள் நோக்கி எப்போதும் மூழ்கிப்போகின்றன அவ் ஏதிலியின் பகல்கள் கூட……….

ஆதவா
14-10-2010, 01:45 PM
ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தியங்கும் அகதிகள் இருக்கிறார்கள். ஏதிலிகள் தாய்நாட்டில் இருப்பதில்லை, இவர்கள் தாய்நாட்டிலேயே இருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.
தனிமையை போர்வையாக்கிக் கொள்ளாமல் துணைக்கு இரண்டு தலையணைகளை வைத்துக் கொள்ளுதலும், அதை உருவாக்கிக் கொள்ளுதலும்தான் அவரவர் திறம்..
அக்கறை கொள்ள யாருமில்லை என்று புலம்புவதைக் காட்டிலும் நாம் யாருக்கு அக்கறை கொண்டுள்ளோம் என்று நினைக்கவும் வேண்டும்...
சிறையில் கிடந்தவர்கள் நட்புக்கு செங்கற்களை பயன்படுத்த, சிலசமயம் தன்னையே வெளியே உலவவிட்டு நட்பு கொண்டாடும் ஆட்களும் உண்டு.

பகலை இருளாக்குவது இமைகள்தான்.....
இமைகளைத் திறந்துவிட்டால் இருளும் பகலாமே!

கவிதைக்கு வாழ்த்துகள் அகத்தியன்

அகத்தியன்
15-10-2010, 08:59 AM

நிதர்சனமான வார்த்தைகள்,,,, நன்றி ஆதவா

தாமரை
15-10-2010, 10:16 AM
தூக்கம் வர மறுக்கும் இரவுகள்
பெருமூச்சுகளோடு கழிகின்றன.
தனிமையினை மட்டும் போர்வையாக்கி தூங்கும் அனாதை அவன்
நிர்க்கதிகளற்று
மற்றோரின் வாழ்வு பற்றி அங்கலாய்க்கும் ஏதிலிக்களிடம்
அக்கறை கொள்ள யாருமில்லை.

அலங்காரமாய் வார்த்தைகள் எப்போதும் அவனிடம் சேருகின்றன.
ஏதும் நிஜமாய் இல்லை…
அவனது திசைகள் பற்றிய அக்கறை யாருக்குமில்லை
அவன் தவிர்த்து……..
இதோ இருள் நோக்கி எப்போதும் மூழ்கிப்போகின்றன அவ் ஏதிலியின் பகல்கள் கூட……….

கதிகள் - வழிகள்
நிர்கதிகள் - ஒரு வழியும் இன்றி, ஒரு அடைக்கலமும் இன்றி, ஆதரிப்போர் யாரும் இன்றி

நிர்கதிகளற்று என்பது சரியானப் பிரயோகம்தானா?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-10-2010, 09:17 PM
இன்று இணையத்தில் படித்த கவிதைகளில் இதுதான் சிறந்த கவிதை என நினைக்கிறேன். பாராட்டுக்கள் அகத்தியா.

அகத்தியன்
16-10-2010, 05:27 AM
கதிகள் - வழிகள்
நிர்கதிகள் - ஒரு வழியும் இன்றி, ஒரு அடைக்கலமும் இன்றி, ஆதரிப்போர் யாரும் இன்றி

நிர்கதிகளற்று என்பது சரியானப் பிரயோகம்தானா?

நன்றிகள் அண்ணா! தவறு என்றுதான் கருதுகின்றேன்.. எதுவோ மயக்கம் தெரிகின்றது.. உணர்ச்சி வேகத்தில் வழுக்கள் வருவதுதானே!! திருத்திக்கொள்கின்றேன் :):)

அகத்தியன்
16-10-2010, 05:29 AM
இன்று இணையத்தில் படித்த கவிதைகளில் இதுதான் சிறந்த கவிதை என நினைக்கிறேன். பாராட்டுக்கள் அகத்தியா.

நன்றிகள் சுனைத். உயிர்மையில் உங்கள் கவிதைகள் படித்தேன். அருமை. அதுவும் மன்ற நண்பர் என்ற உரிமை இன்னும் மகிழ்ச்சியினைத் தந்தது.. தொடர்ந்து எழுதுங்கள்

அமரன்
16-10-2010, 06:43 AM
கவிதையில் என்னைக் கண்டேன் அகத்தியன்.

ஏதிலிக்கும் அகதிக்கும் வித்தியாசம் உண்டு.

ஏதும் இல்லாதவன் ஏதிலி. சொத்து இல்லாதவன் ஏதிலி என்ற நடைமுறை வழக்கும் உண்டு.

கதி அற்றவன் அகதி. சொத்திருந்தும், சொந்தமில்லாதவன் அகதி.

நான் அகதியின் வாழ்க்கையை வாழ்கிறேன் என வரையறுக்கப்பட்டிருக்கிறேன்.

தெருவோர ஏதிலிகளைக் காணும் போது நட்புக் கொண்டாட விரும்புவதில்லை.

மாறாக கவிதையின் வழியில் போகிறேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-10-2010, 08:13 PM
நன்றிகள் சுனைத். உயிர்மையில் உங்கள் கவிதைகள் படித்தேன். அருமை. அதுவும் மன்ற நண்பர் என்ற உரிமை இன்னும் மகிழ்ச்சியினைத் தந்தது.. தொடர்ந்து எழுதுங்கள்

உங்களைப் போன்றவர்களின் தோழமையால்தான் கற்க ஆரம்பித்திருக்கிறேன் அகத்தியா! இன்னும் நன்றாய் தேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.