PDA

View Full Version : உனக்கும் எனக்குமான தூரங்கள்



அகத்தியன்
14-10-2010, 05:57 AM
உனக்கும் எனக்குமான தூரங்கள்
ஓர் திரைக்கப்பால் ஒளிந்துள்ளன
மௌனங்களாகவும், அழுகைகளாகவும்,
திரைவிலக்கும் தருணங்கள் பற்றி
எப்போதும் நாம் பேசிக்கொள்கின்றோம்.
ஆனாலும்,
முடிவென்னவோ -, அவற்றின் கனதிகளை அதிகமாக்கவே..
நிபந்தனைகள் மீது நீ சத்தியம் செய்து சொல்
நீ தயாரா?
நம் திரைவிலக்க??

ஆதவா
14-10-2010, 01:53 PM
தூரத்திற்கும் காலத்திற்கும் தொடர்புண்டு அகத்தியன்
தூரமும் காலமும் அதிகம் ஆவது இருவருக்கும் ஆகாது....

ஒரு பெண்ணுக்கு தூரமும் காலமும் அதிகமாவதால் நம் மன்ற கவிஞர் பூவின் திரைவிலகக் காத்திருக்கிறேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8619) கவிதையைப் போல ஏங்கியிருக்கவேண்டியிருக்கும்
ஆணுக்கு அவ்வாறில்லை.

ஆணின் ஏக்கம் குறித்து கவிதை படை(டி)த்ததுமில்லை

யாராவது ஒருவர் ஜெயலலிதா மாதிரி படார் என்று முடிவெடுத்துவிடுங்கள். இல்லையென்றால் திண்டாட்டம்தான்.