PDA

View Full Version : திரிவு வரலாறுகள்:



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-10-2010, 08:20 PM
பெறாத் தாயின் நிறைப் பருமனாய்
உப்பிக் கிடந்தது ஓர் வரலாற்றேடு!
உண்டு கொலுத்த வல்லூறுகளின்
கூரிய நகங்கள் பற்றியான துதி பாடல்களும்,
நா நுனியில் சமாதானம் பாடிக் கொண்டே
கக்கங்களில் ஆயுதங்கள் நீண்ட
சில காவியுடையர்களைப் போற்றியவைகளும்,
ஓசைகளற்றுக் கழிந்த அந்நிலவுக்கு கீழான
புறவையின் கிறீச்சிடல்களற்ற சில பாலைப் பொழுதுகளையும்,
மக்கியொடிந்து கிடப்பிலிடப்பட்ட வாள் பாகங்களின்
பழம் பெரும் புராதனப் புதினங்களும
பக்கங்களெங்கும் பெருகிக் கிடந்தன;
ஈரப் பொழுதுகளுக்கு முன்னாலான செழுந்த மண் வாசனைகளும்
செந்நாய்கள் கூடி மிச்சமிட்ட சில மாமிசக் கவுச்சைகளும்
ஒழுகிக் கிடந்தன அதன் அட்டைகள் வழியே
எவர் வரலாற்றை எவரும் எழுதலாம்!
எவர் நிலத்தை எவரும் எவருக்கும் பங்கிடலாம்!
நேரிய பிழைக்காய் உங்களை வினவுவதற்கில்லை
அகமறிந்த காலமும் கடவுளும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

ஆதவா
14-10-2010, 05:13 AM
நீங்க KK வைச் சொல்லலையே?? :)

வார்த்தைகளை வைத்து நன்கு இறுக்கிக் கட்டியிருக்கிறீர்கள்.
குப்பைகள் என்றைக்கும் குப்பையாகவே இருக்காது.
அவ்வப்போது சுத்தம் செய்யும் தொழிலாளிகளும் உண்டு.

வாழ்த்துக்கள் ஜுனைத்!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-10-2010, 09:52 PM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா. சிலரின் பின்னூட்டத்திற்காகவே கவிதை எழுத தோன்றும். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர்.
நீங்கள் சொன்ன kk எனக்கு விளங்கவில்லை. நான் ஈழ வரலாற்றைத்தான் எழுத முயன்றேன்.

ஆதவா
15-10-2010, 04:18 AM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா. சிலரின் பின்னூட்டத்திற்காகவே கவிதை எழுத தோன்றும். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர்.
நீங்கள் சொன்ன எனக்கு விளங்கவில்லை. நான் ஈழ வரலாற்றைத்தான் எழுத முயன்றேன்.

நான் சொன்னது கலைஞர் கருணாநிதியைங்க.... பாருங்க அப்படியே எல்லாம் பொருந்துது!!!