PDA

View Full Version : விலகிப் போனவன்

M.Rishan Shareef
12-10-2010, 05:30 AM
விலகிப் போனவன் (http://mrishanshareef.blogspot.com/2010/10/blog-post.html)

பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்

சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று

இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது

சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
26032009

நன்றி
# அம்ருதா இதழ் - 51, அக்டோபர் 2010
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# உயிர்மை

ஆதவா
13-10-2010, 05:09 AM
தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, சுமையேறி கரை கடந்து, சுமை வலியாகி, பின் அடிபட்டு......
சிலசமயம் இந்த அடிபடல் வாழ்க்கையிலிருந்து தள்ளி நேராகவே சென்று, ஒரு சோம்பேறி போல......
வாழ்வியல் எப்படிவேண்டுமானாலும் அமையலாம்..
ஆசிரியனது வாழ்வு பெரும்பாலும் கசப்புத் தோட்டங்களில்தான் விளைகிறது. ஆனால் விளைவுகள் ஆரோக்கியமானது.

பார்த்து பார்த்து மகிழும் வாழ்வு விட்டுச் செல்லவில்லைதான்... ஆனால் பார்த்துப் பார்த்து மகிழும் வாழ்வைக் கொடுத்துச் சென்றவன்@
விட்டுச் சென்றவன் என்ற படிமம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.... காதலாகவும் கூட.

வாழ்த்துக்கள் ரிஷான்.

M.Rishan Shareef
14-10-2010, 05:23 AM
அன்பின் ஆதவா,

//தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, சுமையேறி கரை கடந்து, சுமை வலியாகி, பின் அடிபட்டு......
சிலசமயம் இந்த அடிபடல் வாழ்க்கையிலிருந்து தள்ளி நேராகவே சென்று, ஒரு சோம்பேறி போல......
வாழ்வியல் எப்படிவேண்டுமானாலும் அமையலாம்..
ஆசிரியனது வாழ்வு பெரும்பாலும் கசப்புத் தோட்டங்களில்தான் விளைகிறது. ஆனால் விளைவுகள் ஆரோக்கியமானது.

பார்த்து பார்த்து மகிழும் வாழ்வு விட்டுச் செல்லவில்லைதான்... ஆனால் பார்த்துப் பார்த்து மகிழும் வாழ்வைக் கொடுத்துச் சென்றவன்@
விட்டுச் சென்றவன் என்ற படிமம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.... காதலாகவும் கூட.

வாழ்த்துக்கள் ரிஷான்.//

மிக அருமையான, நிதர்சனமான கருத்து. மிகவும் ரசித்தேன். :-)

நீங்கள் சொல்வது உண்மைதான். கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !