PDA

View Full Version : மாற்றத்துடன் நந்துtamil_nannu
12-10-2010, 03:16 AM
அனைவர்க்கும் வணக்கம் நான் ரமணிச்சந்திரன் நாவல் ஒன்றை பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன் எவ்வாறு பதிவேற்றுவது என யாரேனும் விளக்கவும்
நன்றி
நந்து

tamil_nannu
12-10-2010, 03:35 AM
நன்றி விராடன்...உங்கள் கருத்தினை ஏற்கிறேன் :icon_rollout:

சூறாவளி
12-10-2010, 03:41 AM
மன்ற நண்பர்களே தமிழ் நூல்களை உயிராய் நேசிக்கும் நான் ஒரு புத்தக புழு. தமிழை வாசிக்க மன்றத்தில் நுழைந்தேன் ஆனால் புத்தகங்களை டவுன்லோட் செய்ய இயலவில்லை. யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை என்ற ஏமாற்றத்துடன் நந்து செல்கிறேன் :traurig001::traurig001::traurig001::traurig001:

சின்னபுள்ளையா இருக்கிங்களே.. நந்து.. நீங்க கேட்ட கேள்வியை எத்தனை பேர் படித்திருபார்கள் என தெரியுமா? இங்கு நண்பர்கள் வருவது அவரவர் ஒய்வு நேரங்களில் தான்.. அப்படி ஒய்வு நேரங்களில் வரும் போது தான் படித்து உங்களுக்கு பதில் தர முடியும்.. ஒரு நாள் கூட காத்திருக்க மாட்டிர்களா?

காத்திருங்கள்... நானும் புதியவன் என்பதால் உறுதியான பதில் அளிக்க முடியவில்லை.. ஆனால் மன்ற நண்பர்கள் உங்களுக்கு சரியான பதில் தருவார்கள்...

பொருமைதான் கடலினும் பெரிது..

அன்புரசிகன்
12-10-2010, 03:44 AM
நண்பரே..? யாரை குறைசொல்கிறீர்கள்.

தங்களுக்கு தந்த அறிவுறுத்தலை நீங்கள் பின்பற்றினீர்களா???

தமிழ் மன்றம் மின்னூல் பதிவிறக்கும் தளம் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். உங்களை மன்றம் முழுவதும் வலம் வாருங்கள் என்று சொன்னதை எப்படி எடுத்துக்கொண்டீர்களோ தெரியாது. தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) என்ற திரியில் பதிவிறக்கல் பண்பட்டவர் தகமை என்பது பற்றி சகல விளக்கமும் உண்டு.

நீங்கள் நினைப்பது அனைத்தும் நிறைவேறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால் எதுவும் நிறைவேறாதது போன்று தான் தோன்றும். தொடர்ந்து பங்களியுங்கள். அனைத்தும் சிறப்பாக அமையும்.

aren
12-10-2010, 03:51 AM
உங்களுக்கு பண்பட்டவர் அனுமதி கிடைத்தவுடன் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு முன்னர் உங்களால் எந்தெந்த பகுதிக்குச் செல்லமுடியுமோ அங்கெல்லாம் சென்று உங்களிப்பை சிறப்பாக்குங்கள். உங்களுக்கு தேவையானது அனைத்தும் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வந்துசேரும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

tamil_nannu
12-10-2010, 04:42 AM
அனைவர்க்கும் எனது நன்றிகள். அன்பு அவர்களே மன்னிக்கவும் நான் யாரையும் குறை கூறவில்லை. நான் புதியவன் என்பதால் மன்றத்தின் வழி முறைகள் புரியவில்லை அதலால் அவ்வாறு கூறி விட்டேன் பிழை கு வருந்துகிறேன். நானும் மன்றத்தில் ஒரு பங்களானாக எனது திறமைய சமர்பிப்பேன்.
:nature-smiley-009::nature-smiley-009:

அன்புரசிகன்
12-10-2010, 04:48 AM
புரிந்துணர்வுக்கு நன்றிகள். தொடர்ந்து பங்களியுங்கள்.

ஓவியன்
12-10-2010, 04:50 AM
நல்லது நந்து, மன்றத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்கள் மட்டுமில்லை, மன்றத்தில் நிறைந்திருக்கும் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் பல படைப்புக்கள் என்று நிறைய விடயங்கள் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் வாசிப்பு பசியைப் போக்க....

ஆகவே, ஜமாயுங்கள்..!! :)

tamil_nannu
12-10-2010, 04:51 AM
நன்றி திரு ஓவியன் அவர்களே :)

விகடன்
12-10-2010, 04:53 AM
ஏமாற்றத்துடன் நந்து என்ற தலைப்பை பார்த்து சற்றே தடுமாறிவிட்டேன். ஏன் இப்படி ஓர் தலைப்பில் திரி இருக்கிறது என்ற கேள்வியுடன் வந்து பார்வையிட்டேன். புத்தகங்களை பதிவேற்றுவதில் செய்த ஆர்வம் மன்ற விதிமுறைகள் வரைமுறைகளை படிப்பதில் காட்டவில்லை என்பதை அறிந்தோம்.

கவலைப்படாதீர்கள். பண்பட்டவர் தகமை அடைந்த மறுகணமே உந்த மன்றத்தில் நீங்கள் செய்ய வேண்டியிருப்பதை செய்யலாம்.

பொருப்பாளர் ஒருவருடைய மின்னஞ்சலிற்கு உங்கள் புத்தகத்தை அனுப்பிவைத்து அவர்கள் மூலமாகவும் மன்றத்தில் போட்டுக்கொள்ளலாம்.

”ஏமாற்றத்துடன் நந்து” என்ற தலைப்பை "மாற்றத்துடன் நந்து" என்று போட்டுவிடுங்கள் :D

tamil_nannu
12-10-2010, 04:58 AM
நன்றி விராடன்...உங்கள் கருத்தினை ஏற்கிறேன்