PDA

View Full Version : வெளிநாடு பயணம்!!அனுராகவன்
11-10-2010, 03:46 PM
திரைகடல் ஓடி
தெருவில் நிற்காதே
உத்தியோகம்
புருச லட்சனம்
என்பர்....
உள்ளூரில் உழைக்காத
நீ வெளிநாடு
என்று பிறருக்கு
தலை குனிவதேன்..
கிரமத்தில் சொல்வர்
இது மலேசியா வீடு..
இது சிங்கை வீடு..
இது பெருமைக்கா..
இல்லை சிங்கிள் டீக்கா..
கபடி சட்டை,ஹீரோ பென்
பித்திக்கிட்டான்..
ஆனால் மற்றொரு நாள்
உணவுக்கு திண்டாட்டமே!!

சிவா.ஜி
11-10-2010, 04:04 PM
வெற்றிக்கொடிக் கட்டு வடிவேலு ஞாபகம் வருது.

அதுசரி...எங்க உழைச்சாலும் உழைப்புதானே...ஏங்க அனு இவ்ளோ காட்டம்...

அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம்....

சூறாவளி
11-10-2010, 06:40 PM
வெளிநாட்டு தமிழ்வாழ் சங்கம் சார்பாக அனுவுக்கு ஒரு கண்டனம் அறிவிப்பு மடல் தயாராகிகிட்டு இருக்கு... :D கூடிய சீக்கிரமா வரும்.. :)

இந்தியாவில் உழைத்தால்தான் அதற்க்கு பெருமை என்று இல்லையே..

எங்கு உழைத்தாலும் நம் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு இருக்கா என்றுதான் பார்க்கனும்.. உள்ளூரில் தகுந்த மதிப்பீடு கிடைக்காததால்தான் வெளிநாடு செல்கின்றனர்.. அங்கு யாரும் தலை குனியவில்லையே.. உள்ளூரிலும் தலைகுனிந்து வேலை பார்க்கவில்லையா!!!

சிலர் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்றதும் சில நாள்கள் செழிப்போடு பகட்டோடு செலவு செய்து கடைசி கட்ட நாள்களில் கடன் கேட்கத்தான் செய்வார்கள்.. அவர்களை மட்டுமே மனதில் வைத்து கவிதை படைத்தீர்களா!!!

ஆனால் சிலர் வெளிநாட்டின் மோகம் கொண்டு வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கி ஏஜண்டுக்கு கொடுத்து வெளிநாடு சென்றால் அங்கு இவர்கள் கொடுத்த பணத்துக்கு ஈடாக சம்பளம் கிடைக்காமல் போய் விடுகிறது, அது அவர்கள் குற்றமல்ல... அந்த இடைநிலை ஏஜண்ட்கள் செய்த குறுக்கு விபரித புத்தி.. அப்போது அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிழையால் தலை குனிகிறார்கள்.. ஏனெனில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்பதற்க்காக...

இந்தியாவின் அந்நியசெலாவனியின் பெரும்பகுதி ஈடுசெய்வது வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணங்களில் இருந்துதான்... ஆனால் அதன் மதிப்பீடு யாராலும் கண்டுகொள்வதே இல்லை..

aren
12-10-2010, 03:57 AM
நான் வெளிநாடு வந்ததால்தான் என்னால் என்னுடைய குடும்பத்தை காப்பாற்றமுடிந்தது. ஆகையால் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி எனக்குப் பொருந்தும்.

அல்லிராணி
12-10-2010, 04:52 AM
யாதும் ஊரே யாவரும் கேளிர்.

சொன்னவன் தமிழன்.

நாடுகள் என்பவை கற்பனைக் கோடுகள்.

பிரேம்
16-10-2010, 02:30 AM
எங்க மேல உங்களுக்கு என்ன கோபம் அணு மேடம்... நாங்க என்ன வேணும்னா இங்க வந்து கஷ்டப்படறோம்..? எங்களோட குடும்ப சூழ்நிலை அப்டி இருக்கு.. இப்டி சாபம் விடுறீங்களே..

அரசன்
18-10-2010, 06:52 AM
வெளிநாட்டு தமிழ்வாழ் சங்கம் சார்பாக அனுவுக்கு ஒரு கண்டனம் அறிவிப்பு மடல் தயாராகிகிட்டு இருக்கு... :D கூடிய சீக்கிரமா வரும்.. :)

இந்தியாவில் உழைத்தால்தான் அதற்க்கு பெருமை என்று இல்லையே..

எங்கு உழைத்தாலும் நம் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு இருக்கா என்றுதான் பார்க்கனும்.. உள்ளூரில் தகுந்த மதிப்பீடு கிடைக்காததால்தான் வெளிநாடு செல்கின்றனர்.. அங்கு யாரும் தலை குனியவில்லையே.. உள்ளூரிலும் தலைகுனிந்து வேலை பார்க்கவில்லையா!!!

சிலர் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்றதும் சில நாள்கள் செழிப்போடு பகட்டோடு செலவு செய்து கடைசி கட்ட நாள்களில் கடன் கேட்கத்தான் செய்வார்கள்.. அவர்களை மட்டுமே மனதில் வைத்து கவிதை படைத்தீர்களா!!!

ஆனால் சிலர் வெளிநாட்டின் மோகம் கொண்டு வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கி ஏஜண்டுக்கு கொடுத்து வெளிநாடு சென்றால் அங்கு இவர்கள் கொடுத்த பணத்துக்கு ஈடாக சம்பளம் கிடைக்காமல் போய் விடுகிறது, அது அவர்கள் குற்றமல்ல... அந்த இடைநிலை ஏஜண்ட்கள் செய்த குறுக்கு விபரித புத்தி.. அப்போது அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிழையால் தலை குனிகிறார்கள்.. ஏனெனில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்பதற்க்காக...

இந்தியாவின் அந்நியசெலாவனியின் பெரும்பகுதி ஈடுசெய்வது வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணங்களில் இருந்துதான்... ஆனால் அதன் மதிப்பீடு யாராலும் கண்டுகொள்வதே இல்லை..

பொறியில் தட்டியது போல் உள்ளது உங்கள் வார்த்தைகள். உண்மையான வார்த்தைகள்!

Narathar
18-10-2010, 07:14 AM
வெளிநாட்டில் வேலைசெய்பவர்கள் மீது தப்பில்லை.......
ஆனால் அவர்கள் விடுமுறை காலத்தில் வந்து காட்டும் வெட்டி பந்தாவினால்தான் அவர்கள் பெயர் கலங்கப்படுகின்றது!!!!!

அமரன்
21-10-2010, 07:55 PM
உலகம்
என்னைப் பொறுத்த வரை
வான் கூரை வீடு!

பூமகள்
22-10-2010, 05:05 AM
அமர் அண்ணாவின் பாணியே எனதும்..

யாதும் ஊரே.. யாவரும் கேளிர்.

M.Jagadeesan
22-10-2010, 07:51 AM
சொர்க்கமே என்றாலும் அது
நம்ம ஊரு போலாகுமா?

u2barathi
22-10-2010, 10:20 AM
யாதும் ஊரே யாவரும் கேளிர்

u2barathi
22-10-2010, 10:22 AM
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்தித்ிடுமா ?

Ravee
22-10-2010, 07:04 PM
நான் பார்த்த தேசங்களில் என்னுடன் பணி புரிந்த எந்த ஐரோப்பியனுக்கும் இந்த குற்ற உணர்ச்சி வருவதில்லை .... இதற்கு யாராவது விளக்கம் சொல்ல முடியுமா ? :confused:

பென்ஸ்
22-10-2010, 07:37 PM
அனு
மன்றத்தின் தூண்
பண்பட்டவர்

Join Date: 24 Jan 2008
Location: யாதும் ஊரே
Posts: 3,095
iCash Credits: 14,176.8 [Donate]

Awards Showcase

Total Awards: 1
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது என்னக்கா,,,

ஆதி
23-10-2010, 06:08 AM
இது அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம்..

அனு அக்கா சிங்கை போன கதை எல்லாம் மன்றத்தில் இருக்கிறதே..

காட்டமான கவிதைக்கு வாழ்த்துக்கள் அக்கா

அனுராகவன்
24-10-2010, 05:36 PM
உறவுகளே.....
கவிகள் எழுத எனக்கு ஒரு நுட்பமான கரு கிடைக்கல..
அதனால் என் நண்பரின் ஆதங்கமே இது...

சூறாவளி
24-10-2010, 06:13 PM
உறவுகளே.....
கவிகள் எழுத எனக்கு ஒரு நுட்பமான கரு கிடைக்கல..
அதனால் என் நண்பரின் ஆதங்கமே இது...

கவிஞன் என்பவன்... நல்ல சொற்பொழிவுகள், நல்ல விஷயங்கள், நல்ல கொள்கைகள், நல்ல அறிவுறைகள் இவைகளை மட்டும் கவிதையாய் கொடுக்க வேண்டும் என்பவன் இல்லை.. கவிஞனின் கைகளில் கிடைக்கும் எதையும் ஒவியமாய் செதுக்க வைத்து விடுவான்... அவன் தான் கவி..

இந்த கவிதையும் அதுபோல் உங்கள் நண்பரின் சிந்தனையை செதுக்கியுள்ளிர்கள்... அதுபோல் நானும் (மன்ற உறுப்பினர்களும்) எங்கள் மனதில் தோன்றிய ஆதங்கம் வைத்துள்ளோம்... அவ்வளவே..

இனியும் கவிதைகளை தொடருங்கள்.. :icon_b:

அனுராகவன்
29-10-2010, 07:12 PM
நன்றி சூறா...