PDA

View Full Version : கொலுசுச் சத்தங்களை..!



vasanth111193
11-10-2010, 03:22 PM
கொலுசுச் சத்தங்களைக்
கேட்கும் போதெல்லாம் நீதான்
வந்துவிட்டாயோ என
ஆவலோடு திரும்பிப் பார்க்கிறேன்..?
அப்படி திரும்பித் திரும்பிப்
பார்த்ததில் என் கழுத்து
வலிக்கிறதோ இல்லையோ..?
நீ இன்னும் வரவில்லை என்பதால்
என் மனசு வலிக்கிறது..!

அமரன்
21-10-2010, 07:48 PM
காத்திருத்தலின் வேதனை சொன்ன கவிதை..

காலங்காலமாய் நடந்து வரும் கதை.

அனுராகவன்
01-11-2010, 07:19 PM
முன்னே நீ
பின்னே நான்
பெற்றோர் உன்னை
அதரவற்றோர் என்னை
அதில் ஏன் சந்தோசம்
இதுவே எனக்கு தோசம்............


நன்றி வசந்த்.........

பென்ஸ்
07-11-2010, 01:39 AM
காத்திருப்பின் வலி அவள் அறிவாளோ என்பதின் வலி கொடியது...
நாயகனின் வலி தீரட்டும் ....
நிறைய வாசியுங்கள், பின் எழுதுங்கள் கவிதை இன்னும் செம்மை அடையும்...

ஓவியன்
07-11-2010, 02:32 PM
கண்கள் மூடியிருந்தாலும்
உரியவளின்
கால் கொலுசோசையை
பிரித்தறியும்
வல்லமை வலுப்பெற
என் வாழ்த்துகளும்..!!

பிரேம்
09-11-2010, 10:25 AM
கொலுசை உங்ககிட்டேர்ந்து கடன் வாங்கிட்டு... ஓடி போய்ட்டாங்க போல..

ஜனகன்
09-11-2010, 10:32 AM
நினைவிற் கவிந்த நிஜம்,
பார்க்குமிடமெல்லாம் நிழலிட்டது...
கனவுகள் நிஜமானாலும்,
காட்சிகள் கனவுதானே...
கனவுகள் எல்லை மீறினாற்
தொல்லைதான்...

இவை சுகமா சோகமா..
அது அவரவர் மனநிலையைப் பொறுத்து..


பாராட்டுக்கள் வசந்த்.