PDA

View Full Version : கடிதம்.. (காதல் கீழ் கணக்கு..)



rambal
16-11-2003, 09:24 AM
கடிதம்.. (காதல் கீழ் கணக்கு..)

சின்ன பேட்டரியாய்
நீ..
பேட்டரிக்குள்
சேமித்து வைக்கப்பட்ட
மின்சாரமாய்
உன் காதல்..

ஓடாத கடிகாரம்
நான்..
நங்கூரம் பாய்ச்சிய
முட்களாய்
என் காதல்..

என்னுள் புகுந்து
எனை ஓட வைப்பாயா?

இக்பால்
16-11-2003, 09:29 AM
கடிகார கணக்கு அருமைதான்.

ஒரு நாள் ஓடும்.-அன்புடன் அண்ணா.

Nanban
16-11-2003, 03:57 PM
எளிமையாய், எல்லோருக்கும் விளங்கக் கூடிய குறியீடுகள் - அதனால் கவிதை சக்தி பெறுகிறது......

பாராட்டுகள், ராம்........

இக்பால்
17-11-2003, 10:43 AM
ஒரு நாள் ஓடும்


இன்று ஒரு நாள் மட்டும் ஓடும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

விரைவில் ஒரு நல்ல நாளில் ஓடத் துவங்கும் என்னும் அர்த்தத்தில்

சொல்ல வந்தேன்.-அன்புடன் அண்ணா.