PDA

View Full Version : மன்ற கவிகளுக்கு...

யவனிகா
11-10-2010, 10:53 AM
மன்றக் கவிகளுக்கு வணக்கத்துடன்...

திடிரென ஒரு சந்தேகம் அக்காக்கு.கற்பனை, வார்த்தை தோரணங்கள்,எதுகை,மோனை,சந்தம் எல்லாம் தாண்டி கவிதை அப்படின்னா என்ன?

மன்றக்கவிகள் தனிப்பட்ட கருத்துகளைத் தாருங்கள்...கவிநடையில்....
ஆதவா,ஆதி,அமரு,அக்னி,ஓவியன்,சிவா அண்ணாத்த,தாமரை அண்ணாத்த,பாரதீ அண்ணாத்த,ஷெரிப்,நாரதர்,விராடன்,மொக்க மதி,கண்மணி,தென்றல்,பூமகள்,சாம்பவி,கீதமக்கா,அனு அனைவரையும் அழைக்கிறேன்....யாரையாவது விட்டிருந்தா தயவு பண்ணி அவங்களும் வந்திருங்க.

மன்றத்தில் ஏற்கனவே இதுபற்றி திரி இருக்கான்னு தெரியல...இருந்தாலும் புதுப்பிக்கும் முயற்சியாக இருக்கட்டும்....

கவிதை என்பது என்ன?கவிதையில் உங்கள் பதில்கள்!!!

கண்மணி
11-10-2010, 10:58 AM
யக்கோவ்...

க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை

கவி+தை
அழகு+தை
அழகுகளை தை

கவி+தை
குரங்கு + நடனம்
குரங்காட்டம்....

மொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும்
கருத்து

கவிதை.......

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077

அப்படின்னு அண்ணா சொன்னார் ஒரு காலத்தில. அதை முதல் படியா இங்க எடுத்து வைக்கிறேன்.

ஆதி
11-10-2010, 11:05 AM
அக்காவ் உங்களுக்கு தனிமடல் அனுப்ப இயலல..

கொஞ்சம் அனுமதி கொடுங்களேன்...

விகடன்
11-10-2010, 11:12 AM
நமக்கும் கவிதைக்கும் வெகுதூரமுங்கோ. சின்னச்சின்ன வரிகளை ஒன்றுக்கு கிழ் ஒன்றாக எழுதினால் கவிதை என்று கண்டுபிடிக்கிற வர்க்கந்தான் நான் :D. இருந்தாலும் என்னுடைய பெயரைப்போட்டுவிட்டீர்கள். மற்றவர்கள் இந்த வேலையை செய்யிறதுக்கு முன்னாடி நான் செய்திடனும்.

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. அப்படி என்று விக்கிப்பீடியா சொல்லுதுங்கோ. கவிநடையில் தருவதற்கு யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏதாச்சும் தோன்றின் அதை எழுதிவிடுகிறேன்.

என்னோட அறிவுக்கு எட்டியவரை பிரிச்சு பார்த்ததில் ”கவி என்றால் பாடல் என்று பொருள்படும். கவிதை என்றால் பாட்டின் வாயிலாக கதையை/ கருத்தை/விடயத்தை சொல்வதென்று பொருள்படும்” எப்படி என்று சொல்லுவேன். அவ்வளவுதான்.

மன்றக்கவிகளுக்கு என்று சொல்லிப்போட்டு என்னோட பெயரையும் போட்டுவிட்டீர்கள் பாருங்கோ. இன்றைக்கு எனக்கு நித்திரை வந்தமாதிரித்தான்.

என்னறிவிற்கு எட்டியவரை....

கவிதை,
உரைத்திட முனைவதை
இரத்தினச்சுருக்கமாய்
எளியோரும்ம் புரிந்திட
பொறிப்பதே!

என்று சொல்லலாம். இது கவிதை என்று நான் சொல்லவில்லை. :D

மதி
11-10-2010, 11:21 AM
ஒரு வரியை
பின் முன்னாய்
பிரித்து
வார்த்தைகளாய்
இப்படி அடுக்கினால்
வருமே
கவிதை!!------------

கவித கவித...:D:D

யவனிகா
11-10-2010, 11:52 AM
ஒரு வரியை
பின் முன்னாய்
பிரித்து
வார்த்தைகளாய்
இப்படி அடுக்கினால்
வருமே
கவிதை!!------------

கவித கவித...:D:D

கவிதை வரும்
அக்கா அடிக்க
அங்க வரமாட்டேன்னு
அதிக நம்பிக்கை மதிக்கு...

மொக்கையாய் கவித ஓகே தான்
முழுநிலவாய் ஒரு கவிதைக்கு
முயற்சி செய்யேன்...

யவனிகா
11-10-2010, 11:56 AM
யக்கோவ்...

க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை

கவி+தை
அழகு+தை
அழகுகளை தை

கவி+தை
குரங்கு + நடனம்
குரங்காட்டம்....

மொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும்
கருத்து

கவிதை.......

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077

அப்படின்னு அண்ணா சொன்னார் ஒரு காலத்தில. அதை முதல் படியா இங்க எடுத்து வைக்கிறேன்.
அழகிய சீமாட்டி
அழகான குரங்காட்டி
கருத்து கண்மணிக்கு
கவிதை சார்பில்
கலக்கல் நன்றி
பலபடிகள்
பாய்ந்து வரவேண்டும்
தோழியே

யவனிகா
11-10-2010, 12:05 PM
மன்றக்கவிகளுக்கு என்று சொல்லிப்போட்டு என்னோட பெயரையும் போட்டுவிட்டீர்கள் பாருங்கோ. இன்றைக்கு எனக்கு நித்திரை வந்தமாதிரித்தான்.

என்னங்க தம்பி இப்படி சொல்லிட்டீங்க...நானென்லாம் கவிதைன்னு எழுதிதான் பலபேர் தூக்கம் போச்சின்னு நினைச்சேன்,பேரை போட்டதாலே தூக்கம் போச்சின்னா......:traurig001::traurig001::traurig001:

இருந்தாலும் உங்க விளக்கத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

ஆதவா
11-10-2010, 01:59 PM
ஒரு கவிதையே
கவிதை என்றால் என்ன என்று கேட்கிறதே!
அடடே!!
ஆச்சரியக்குறி!!!!!!!

ஆதவா
11-10-2010, 02:04 PM
காதலை தேடி போக முடியாது...
அது நிலைக்காது...
அதுவா நடக்கணும்....
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழா போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்..

விண்ணைத்தாண்டி வருவாயாவில் ஜெஸ்ஸிய பார்த்தவுடனே கார்த்திக் சொல்லுவார்.... கவிதைன்னா அப்படித்தான்!!!!

விகடன்
11-10-2010, 02:14 PM
ஒரு கவிதையே
கவிதை என்றால் என்ன என்று கேட்கிறதே!
அடடே!!
ஆச்சரியக்குறி!!!!!!!

ஆஹா..
இதெல்லவா கவிதை. :icon_b:

தாமரை
11-10-2010, 02:38 PM
மயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தலையில் அடிபட்டவங்க நான் யார் அப்படின்னு கேட்கிறதில்லையா? அது மாதிரிதான்.

ஆதவா
11-10-2010, 03:23 PM
மயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தலையில் அடிபட்டவங்க நான் யார் அப்படின்னு கேட்கிறதில்லையா? அது மாதிரிதான்.

ஆக மொத்தத்தில ஒரு பெரிய விமர்சனத்தை நீங்களும் எழுதப்போறதில்லை, நானும் எழுதப்போறதில்ல/////
ஹஹா

M.Jagadeesan
11-10-2010, 04:35 PM
கவிதை என்பது கற்பனை நிறைந்தது
கவிஞன் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி

எதுகை மோனை எல்லாம் வைத்து
எழுதப் படுவது கவிதை அல்ல

நறுக்குத் தெரித்தாற் போல வார்த்தையைப்
பொறுக்கி எடுத்துப் போட்டுக் கற்பவர்

சிந்தையை எல்லாம் சுண்டி இழுக்கும்
மந்திரச் சொற்கள் கொண்டது கவிதை

ஆயிரம் பக்கங்கள் கூறும் கருத்தை
அழகுற இரண்டொரு வரிகளில் கூறும்
ஆற்றல் மிக்கது கவிதை ஆகும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

எத்தனை அழகு எத்தனை எளிமை
எத்தனை வலிமை எத்தனை புலமை

காலத்தை வென்ற இக்கவிதை வரிகளுக்கு
ஞாலத்தைத் தந்தாலும் ஈடாகுமா?இணையாகுமா?

சிவா.ஜி
11-10-2010, 04:43 PM
உணர்வுகளின் வார்த்தை வெளிப்பாடு
ஒப்பனையூட்டப்பட்ட எழுத்துக் கோர்வை
உள்ள வெப்பத்தின் எண்ண வேர்வை
வழக்கத்திலிருந்து விலகிய வித்தியாசப் பார்வை
பல கருத்துக்களை தன்னுள் பொதிந்த போர்வை
இதற்கெல்லாம் ஏதேனுமொரு பேர் வை
எனக் கேட்டபோது வைத்த பெயர்தான்....கவிதை....!!!

ஏதோ எனக்குத் தோணினத விராடரும், மதியும் சொன்ன மாதிரி ஒண்ணுக்கு கீழ ஒண்ணா அடுக்கிப் போட்டிருக்கேன். மத்தபடி கவிதைக்கு இலக்கணம் சொல்லுமளவுக்கு மண்டையில ஒண்ணுமில்ல....!!!

பாரதி
11-10-2010, 04:58 PM
உண்மையிலேயே எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவசரமாய் இணையத்தில் தேடினேன்; உடனடியாக கிடைத்தவை உங்கள் பார்வைக்கு...

கவிதை என்றால்.....

---------------------------------------
அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாததே போல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே கவிதை எனப்படும்.

கவிதை என்பது கற்பனை உள்ளது;
கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் ஒன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும்; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
-------------------------------------------------------------------------------------------------------

உள்ளத் துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை

- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
-------------------------------------------------------------------------------------------------------

பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே!
சீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்
செய்தி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே.

- அறிஞர் அண்ணா.
-------------------------------------------------------------------------------------------------------

கவிதை என்றால் என்னவென்று இத்தனை
நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.
சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா
எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்
என்ன வென்று இப்போது புரிந்தது.

எழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை
நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!
மறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்
எழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்
வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
அனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.

வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்
கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!
தற்காலக் கவிதைகளைத் தருபவர் கவிஞரல்ல கம்பாஸிடர்தான்
என்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி!
விகடனுக்கு நன்றி!

கவிதை என்றால் என்ன வென்றே தெரியாத எனக்கு
சுரதா சுலபமாக கவிதை யெழுத கற்றுத் தந்துவிட்டார்
இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!
மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!

- சோ (விகடனில் சுரதாவும் 'சோ'வும் நடத்திய கவிதை யுத்தக்கவிதைகளிலிருந்து....)
-------------------------------------------------------------------------------------------------------

கவிதையின் வரிகளுக்கிடையே
வெடிகுண்டொன்றை வையுங்கள்
வரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்
பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்
அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்
அந்த இடிபாடுகளிலிருந்தே.

- கார்லோஸ் காஸரெங்
-------------------------------------------------------------------------------------------------------

உண்மையான கவிதை அருமையான திரவியம். அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது.
எந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மஹாபாக்யமுடையது.
தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக!

- பாரதியார்.
-------------------------------------------------------------------------------------------------------

சோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம்.

- வைரமுத்து
-------------------------------------------------------------------------------------------------------

ஒரு படைப்பாளியாக என்னைப் பொறுத்தவரை, மற்ற எல்லா இலக்கிய வடிவங்களைப் போலவே கவிதையும் ஒரு படைப்பிலக்கிய வடிவம்; அவ்வளவுதான். ஆனால் மொழியின் அடிப்படையில் பார்க்கும் போது, மற்ற வடிவங்களைவிட அபூர்வமானதும் மேலானதுமாக கவிதையை நினைக்கிறேன். கவிதை மொழியின் உச்சமான வெளிப்பாடு; மொழியின் அத்தனை சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்துகிற ஒரு வடிவமாகவும் இருக்கிறது என்னைப் பொறுத்த வரை கவிதையில் அனாவசிய வார்த்தைகளுக்கோ, அலங்காரங்களுக்கோ இடமில்லை, ஒரு சிறுகதை எழுத்தாளர், ஆசிரியரின் இடத்திலிருந்து வாசகர்களுக்கு சொல்லித்தர முடியும்; மற்ற இலக்கிய வடிவங்களிலும் இது சாத்தியம் ஆனால் கவிதையில் சாத்தியமில்லை. இங்கே கவிஞனும் வாசகனும் ஒரே தளத்தில் இயங்க வேண்டும். அது ஜன்னலைத் திறந்து, கவிஞனையும் வாசகனையும் ஒரு பெரிய வெளிக்குள் இழுத்துக் கொண்டு போய் நிறுத்தும். இது சரி, இது தவறு என்றும் நல்ல கவிதை எதையும் சொல்வதில்லை.

- கனிமொழி
-------------------------------------------------------------------------------------------------------

ஒரு கவிதையை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் என்ன? உலகம் முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கவிதைக்கோட்பாடுகள் உருவாகியிருக்கின்றன. அனைத்தையும் எளிமையாகச் சுருக்கிப்பார்த்தோமென்றால் அடிப்படையில் மூன்று பொது அளவுகோல்களை முன்வைக்கலாம். 1. வடிவம் [ Form ] 2. தரிசனம் [Vision] 3.புதுமை. [Novelty]

ஒரு கவிதையை நாம் ரசிக்கும்போது பெரும்பாலும் அதன் வடிவத்தையே ரசிக்கிறோம். ‘எப்டிச் சொல்றான் பாரு கவிஞன்’ என வியக்கும்போது கவிதை சொல்லப்பட்டிருக்கும் முறையே நம்மைக் கவர்ந்திருப்பது தெரிகிறது. அதே வரிகளை வேறுவகையில் சொல்லியிருந்தால் அதை கவிதை என்றே சொல்லியிருக்க மாட்டோம். அந்த அமைப்பு அல்லது வெளிப்பாட்டையே வடிவம் என்கிறோம்.

வடிவம் என்பது மொழிவெளிப்பாட்டின் ஒரு முறை. மொழியில் உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அந்த வடிவத்தில் உள்ள துல்லியமே நம் கவிதையனுபவத்தை தீர்மானிக்கிறது. பலவரிகளில் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லி, அல்லது வேறொன்றைச் சொல்லி குறிப்புணர்த்தி, அல்லது சொல்லவேண்டியதை மௌனமாக்கி நம் கற்பனைமூலம் அங்கே செல்லவைத்து கவிதை தன் கவிதை அனுபவத்தை நிகழ்த்துகிறது.

எது நல்ல வடிவம் என்றால் எது சிறப்பாக அதன் விளைவை நிகழ்த்துகிறதோ அது தான். எது நல்ல சிறகு என்றால் எது நன்றாகப் பறக்கச்செய்கிறதோ அது. அழகான கவிதை என்றால் என்ன, அழகாகச் சொல்லப்பட்ட கவிதை. அழகான வடிவம் கொண்ட கவிதை. கவிதையின் அழகியல் என்பது முழுக்க முழுக்க வடிவம் சார்ந்ததே.

ஆனால் ஒரு கவிதையை நாம் மகத்தானது என்று சொல்லவேண்டுமென்றால் அது அழகானதாக இருந்தால் மட்டும் போதாது. ஆழமும் இருக்க வேண்டும் என்கிறோம். அது நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படவேண்டும். நம் அனுபவங்களை விளக்க வேண்டும். நாம் அறிந்தவற்றை மேலும் விரிவாக்க வேண்டும். நமக்குத்தெரியாதவற்றைச் சொல்ல வேண்டும். நாம் உள்வாங்கிய அனைத்தையும் புத்தொளியில் தொகுத்துக்காட்டவேண்டும். இதையே கவிதையின் தரிசனம் என்கிறோம்.

கவிதையின் தரிசனம் ஓர் அறிவியல் சூத்திரம் போல நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது விரிவான தர்க்கத்துடன் முன்வைக்கப்படவேண்டுமென்பதில்லை. அதை கவிஞன் சொல்லும்போதே நாம் அதனுடன் இணைந்துகொள்கிறோம். ஆம் ஆம் என்று அதை ஏற்று நம் அகம் முழங்குகிறது. கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் மட்டுமே. அந்த மின்னலில் அது உலகை முழுக்கக் காட்டித்தருகிறது.

சிறந்த கவிதையின் தரிசனம் அதன் வடிவத்தை தீர்மானிக்கிறது. அதன் வடிவம் அந்த தரிசனத்தை உருவாக்குவதற்காக மட்டுமே பிறந்தது போலிருக்கிறது. அவற்றைப் பிரிக்கவே முடியாமல் ஒன்றாகவே நாம் எந்நிலையிலும் உணர்கிறோம்.

மூன்றாவதாக அந்தக் கவிதை நாம் அதுவரை வாசித்த கவிதைகளில் இருந்து சற்றேனும் புதிய அனுபவமாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். கம்பன் தமிழின் மகத்தான கவிதைகளை எழுதிவிட்டான். அதன் பின்னரும் நாம் ஒரு கவிஞனிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? புதுமையை. நேற்று இல்லாதிருந்த ஒன்றை. அடுத்த கட்ட நகர்வை.

இன்றைய ஒரு நல்ல கவிதை இந்த அளவுகோல்களால்தான் இயல்பாகவே அளவிடப்படுகிறது. உண்மையில் ஒரு நல்ல வாசகன் இந்த மூன்று அளவுகோல்களையும் குறித்து அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் எப்படி கவிதையை அவன் மதிப்பிடுகிறான் என்று பார்த்தால் தெரியும் இவை மூன்றும் அவனில் செயல்பட்டுக்கொண்டிருப்பது.

- ஜெய மோகன் (கண்ணதாசன் பாடல்கள் குறித்த பார்வையில் இருந்து)
------------------------------------------------------------------------

நாம் அன்றாடம் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு நெருக்கமான விஷயத்தைக் கவிதையில் கொண்டு வரும்போது அந்த விஷயம் எல்லோருக்கும் நெருக்கமான அனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவம் படிப்பவர்களின் உள்ளே எதாவது ஒன்றைத் திறக்க வேண்டும். எனக்குள் திறந்த விஷயம் இன்னொருவருக்கும் திறக்க வேண்டும். இதைத்தான் கவிதை என்ற உணர்கிறேன். யாராவது ஒரு கவிஞனின் கவிதையை நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்குள் படிந்திருந்த ஏதோ ஒரு விஷயத்தைத் திடீரென்று ஞாபகப்படுத்தும். இதைத்தான் கவிதை என்று நினைக்கிறேன்.

கவிதை சத்தமாகப் பேச வேண்டும் என்றோ அது பலவிதமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்றோ நான் நினைக்கவில்லை. எப்படியான அனுபவத்தையும் சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியும். ஹமீதின் (மனுஷ்ய புத்திரன்) சமீபத்திய கவிதைகள் எல்லாமே எளிய வார்த்தைகளைக் கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ விஷயங்களோ கொண்டவை அல்ல. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விஷயங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. அப்படித்தான் கவிதை இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு நானும் எளிய சொற்களைக் கொண்டுதான் எழுதிவருகிறேன். குறுக்கே வரும் பெரிய படிமங்களைக்கூடத் தூக்கி எறிந்திருக்கிறேன். சட்டென்று ஒருவரிடம் திறப்பைக் கொண்டுவர வேண்டும். ழாக் ப்ரெவரின் கவிதைகளைப் படித்தபோது இதை உணர்ந்தேன். மிகச் சாதாரண வார்த்தைகளில்,மனதுக்குள் உறைந்திருந்த ஒளிந்திருந்த விஷயங்களைத் துருவி எடுக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரெஞ்சு கவிஞனின் எண்ணமும் நம் எண்ணமும் எப்படி ஒரே அலைவரிசையில் வருகிறது? கவிதை என்ற மொழிதான் இதை சாத்தியப்படுத்துகிறது.

- கவிதாயினி சல்மா
-------------------------------------------------------------------------------------------------------

தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை கற்றுத்தெளிந்த பின்னரரே கவிதை எழுத முடியும் என்றால் அது அரிதான காரியமாகத் தோன்றுகிறது. வைரமுத்துவின் வரிகள் எனக்கு இசைவானவையாக புலப்படுகின்றன. ( அல்லது அவர் வரிகளைப் பின்பற்றினால் மட்டுமே கவிதை போன்ற தோற்றத்தைக் கொண்டதையாவது எழுத இயலும் என்றும் வைத்துக்கொள்ளலாம்.:))

எழுதியே வெகுகாலமாகி விட்டபடியாலும் விட்ட படியாலும் உடனே எதுவும் தோன்றவில்லை. பின்னர் வருகிறேன். நன்றி.

மதி
11-10-2010, 05:11 PM
ஆக கவிதைன்னா....

அதே எண்ணங்கள்
அதே உணர்வுகள்
அதே தோற்றங்கள்
ஆயினும்
மொழி என் வசம்
என தன்னிலை
மறந்து
இறுமாந்திருக்கும்
மனிதனின்
எச்சமோ??
இல்லை அதுவே
மிச்சமோ??

-------------------------
சர்ச்சையை கிளப்பிடும் எண்ணமில்லீங்கோ..??!!:D:D

அது சரி.. இது கவிதையா???:icon_rollout::icon_rollout:

பூமகள்
11-10-2010, 05:33 PM
கவிதை அப்படின்னா என்ன?

கவிதையப்படி (எ)ன்னா - கவிதையப்படிங்கறது என்னதான்னு..

கவிதையப் படின்னா - கவிதையைப் படிச்சின்னா

கவி தையப் படி (இ)ன்னா - கவி உள்ளம் தைக்கும்படி படிச்சின்னா

கவிதை அப்படின்னா என்னன்னு விளங்கும்னு அக்கா பதிலும் சொல்லியிருக்காங்க.. இதுல பதிலுக்கு பதிலு எப்படி சொல்றதுன்னு தெரியலையே.........:mini023::icon_ush: ;)

யவனிகா
11-10-2010, 05:38 PM
காதலை தேடி போக முடியாது...
அது நிலைக்காது...
அதுவா நடக்கணும்....
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழா போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்..

விண்ணைத்தாண்டி வருவாயாவில் ஜெஸ்ஸிய பார்த்தவுடனே கார்த்திக் சொல்லுவார்.... கவிதைன்னா அப்படித்தான்!!!!

கவிதை கிடக்குது கவிதை...பெரிய கதை இருக்குமாட்ட இருக்கு...
அதுக்கு ஒரு திரி போடணும்ன்னு நினைக்கிறேன்...யாருப்பா தம்புடு அது?

யவனிகா
11-10-2010, 05:44 PM
பாரதீ அண்ணா....
நீங்கள் தேடிக்கிடைத்தவைகள்
திரவியங்கள் தான்....

காரலோஸ் சொன்னது
கச்சிதமாய் இருக்கிறது...

பாரதியின் அக்னிக்குஞ்சைப்போல-பாங்கான கவிதை
படிப்போர் நெஞ்சிலும் பற்றி எரியவேண்டும்....

சல்மாவை சத்தியமாக ஒப்புக்கொள்கிறேன்.

உனக்குள் நீ திறந்த கவிதைச்சாளரக்காற்று வழி
என்னால் கண்மூடிஇளைப்பாற முடியுமென்றால்
ஒத்துக்கொள்கிறேன் அது கவிதை வரி.

உன் கவிதைபத்தாயத்தில் நீ சேமித்த மணிகளை
என் வீட்டு உலையில் நான் பொங்கி பசியாறமுடியுமெனில்
ஒத்துக்கொள்கிறேன் அது கவிதை வரி...

உன் கவிதை வரியை இறகாக்கி
என் மனதில் நீ தரையிறங்க முடியுமெனில்
ஒத்துக் கொள்கிறேன் அது கவிதை வரி....

யவனிகா.

நன்றி அண்ணா.

யவனிகா
11-10-2010, 05:46 PM
கவிதை அப்படின்னா என்ன?

கவிதையப்படி (எ)ன்னா - கவிதையப்படிங்கறது என்னதான்னு..

கவிதையப் படின்னா - கவிதையைப் படிச்சின்னா

கவி தையப் படி (இ)ன்னா - கவி உள்ளம் தைக்கும்படி படிச்சின்னா

கவிதை அப்படின்னா என்னன்னு விளங்கும்னு அக்கா பதிலும் சொல்லியிருக்காங்க.. இதுல பதிலுக்கு பதிலு எப்படி சொல்றதுன்னு தெரியலையே.........:mini023::icon_ush: ;)

அப்பவே சொன்னேன் அண்ணாத்த கூட சேராதேன்னு
இப்பப் இன்னாச்சி பாத்தியா?அதே காத்து அதே கருப்பு....:traurig001::traurig001:

யவனிகா
11-10-2010, 05:47 PM
ஆச்சரியக்குறி!!!!!!!

ஒரு ஆச்சர்ய குறியே
ஆச்சர்ய குறி
போடுகிறதே???
கேள்விக்குறி.

யவனிகா
11-10-2010, 05:49 PM
மயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தலையில் அடிபட்டவங்க நான் யார் அப்படின்னு கேட்கிறதில்லையா? அது மாதிரிதான்.

கேட்டுடறன்னா....

யவனிகா -அண்ணாத்த நான் யாரு?

தாமரை அண்ணா - பாத்தியாம்மா.உன்ன எப்படி கேள்வி கேக்க வெச்சேன்னு.

ஆனா ஒண்ணும்மா...இந்த கேள்விதான் உலகத்தின் முதல் கேள்வி.இந்த கேள்வி எப்ப மனிதனுக்குள்ள வந்திச்சோ அப்பவே வேதங்களும் தேடல்களும் துவங்கிருச்சி.

புத்தர்,குருட்ஜி,போதிதர்மா,ஜே.கே,ஓஷோ இவங்ககெல்லாம் தேடினாங்க.
கண்டுபிடிச்சாங்க.வெளியவும் சொன்னாங்க.அவங்க சொன்னதெல்லாம் விடும்மா.இப்பா அண்ணா நீங்க யார்னு நீ கேள்.நான் சொல்றேன்.

யவனிகா - தாமரை அண்ணாத்த நீங்க யாரு?

தாமரை அண்ணாத்த - நான் யார்ன்னு எனக்கு தெரியும்மா...ஆனா எனக்கு தெரியும்கிறது உனக்கு தெரிய வேண்டியதில்ல.அது உனக்கு கண்டிப்பா தெரியாதுங்கிறது மட்டும் எனக்கு தெரியும்மா.தெரிஞ்சுதாம்மா...போ இதை உலகத்துக்கு உரத்து சொல்லு....சிவாவ ஆட்டத்தில காணுமே...

பூமகள்
11-10-2010, 05:52 PM
ஒரு ஆச்சர்ய குறியே
ஆச்சர்ய குறி
போடுகிறதே???
கேள்விக்குறி.

?? => !!

வளைந்தது நிமிர்ந்தால்..
ஆச்சர்யம் தானே...:rolleyes:

!! => ??

நிமிர்ந்தது வளைந்தால்
கேள்வியெழும் தானே...:rolleyes:

யவனிகா
11-10-2010, 06:18 PM
?? => !!

வளைந்தது நிமிர்ந்தால்..
ஆச்சர்யம் தானே...:rolleyes:

!! => ??

நிமிர்ந்தது வளைந்தால்
கேள்வியெழும் தானே...:rolleyes:

கன்பார்ம் ஆயிருச்சும்மா..ஆயிருச்சு
பிரித்தெழுதுவோர் சேர்த்தெழுதுவோர் கூட்டணி முன்னேற்ற கழகத்தின்
துணைத்தலைவி யாரூன்னு.
தலைவர் யாருப்பா???எல்லோருக்கும் தெரிமோன்னோ....

யவனிகா
11-10-2010, 06:34 PM
கவிதை என்பது கற்பனை நிறைந்தது
கவிஞன் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி

எதுகை மோனை எல்லாம் வைத்து
எழுதப் படுவது கவிதை அல்ல

நறுக்குத் தெரித்தாற் போல வார்த்தையைப்
பொறுக்கி எடுத்துப் போட்டுக் கற்பவர்

சிந்தையை எல்லாம் சுண்டி இழுக்கும்
மந்திரச் சொற்கள் கொண்டது கவிதை

ஆயிரம் பக்கங்கள் கூறும் கருத்தை
அழகுற இரண்டொரு வரிகளில் கூறும்
ஆற்றல் மிக்கது கவிதை ஆகும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

எத்தனை அழகு எத்தனை எளிமை
எத்தனை வலிமை எத்தனை புலமை

காலத்தை வென்ற இக்கவிதை வரிகளுக்கு
ஞாலத்தைத் தந்தாலும் ஈடாகுமா?இணையாகுமா?

இப்ப தான் முதலில் உங்கள் எழுத்தைப் படிக்கிறேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.
அருமையான வரிகள்.மீண்டும் வரிகளுக்குள் பயணிக்க வைத்த உங்களுக்கு நன்றி.

யவனிகா
11-10-2010, 06:53 PM
ஆக மொத்தத்தில ஒரு பெரிய விமர்சனத்தை நீங்களும் எழுதப்போறதில்லை, நானும் எழுதப்போறதில்ல/////
ஹஹா

ஆமா திரிய கல்லாக் கட்டறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க...

இப்படியெல்லாம் எஸ்ஸாக முடியாது.

ஆதவா பாணியில் ஆழமான பாணியில் நிஜமாவே சொல்லுங்க.
கவிதைன்னா என்ன?
கவுதம் மேனன விட ஆதவா நல்லா சொல்லமுடியும்னு நம்பறமில்ல.

தாமரை
11-10-2010, 07:37 PM
கவிதை என்பது இதுதான் என்பதை வரையறுப்பது மிக மிக கஷ்டமான ஒண்ணு. ஏன்னா கவிதைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் பொதுவா சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. இப்ப நான் இங்க எழுதறது கவிதையா இல்லையா என்று மொழி தெரிந்த யாரைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்லிடுவாங்க. கவிதையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு. இந்த உரை நடையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு.

அப்படின்னா இந்த கவிதையையும் கட்டுரை நாடகங்களையும் பிரிப்பது என்ன அப்படின்னு பார்த்தோம் என்றால் அது கட்டு.

கட்டமைப்பு. கவிதை ஒரு பூச்சரம் மாதிரி வார்த்தைகளைத் தொடுத்து செய்யும் ஆரம் மாதிரி. கருத்தாழம், நயம் மற்றும் சிருங்காரங்கள் செய்யப்படுவது கவிதை.

அந்தக் காலத்தில கவிதைக்கு இலக்கணம் வகுத்தாங்க. ஏன் என்று முன்பே சொல்லி இருக்கேன். எரர் கரெக்ஷன் மெகானிசம். அதாவது நிரந்தர பதிவு செய்ய வழி கிடையாது. அதனால் கவிதைகளை ஒரு கட்டுக்குள் இலக்கண வரம்புக்குள் எழுதினால் கரையான் அரித்த வார்த்தைகளைக் கூட மீட்டெடுக்கலாம்.

இலக்கணத்தில் எழுத்து - சொல் இரண்டையும் ஒருபக்கமும் யாப்பை ஒருபக்கமும் அதனால்தான் உண்டாக்கி இருந்தாங்க.

கவிதையில் என்னென்ன இருக்கணும்னு பார்த்தால் கருத்து. இதை எப்படிச் சொல்லணும்னு வரையறுத்த விதத்தைப் பாருங்க.

1. இராகம் - அசை, தொடை, அடி இவற்றின் மூலம் இராகத்தில் பொருத்தி இனிமையாய் பாடும்படி செய்யலாம்

2. ஓசை நயம் - எதுகை,மோனை, சந்தம் இவற்றின் மூலம் குரலெடுத்து படிக்கும் பொழுது பாடும்பொழுது சீரான ஒலிகளை உண்டாக்கி நயத்தைக் கொடுக்கிறது.

3. மொழிநயம் - உபயோகிக்கப் படும் வார்த்தைகளின் பொருள்நயம், வளமை, பொருத்தம், சிக்கனம்

ஓசை நயம் - இசை நயமிக்க இந்த வார்த்தைகள் மனதில் எளிதில் பதிகின்றன. 30 வருஷத்துக்கு முன்னால படிச்ச பாட்டு கூட நினைவு படுத்தி சரளமாகப் பாடமுடியும். வசனம் அவ்வளவு எளிதில்லை.

எப்படி ஓசை நயத்திற்கு எதுகை மோனை சந்தம் போன்றவை உபயோகப் படுத்தப் பட்டனவோ அப்படி கருத்து நயத்திற்கு அணிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, உவமை, உருவகம், பிறிது மொழிதல், வேறு பொருள் வைத்தல், இப்படி பல விஷயங்கள். பல மேற்கத்திய கவிதைகள் இவற்றில் பலவற்றை இப்பொழுதுதான் உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்து உள்ளன..சிலேடை, சரியான அர்த்தம் தரும் சிக்கனமான வார்த்தைகள் இப்படி மொழிநயத்தைக் கூட்டுவன எவ்வளவோ உண்டு.

அதனால்தான் கவிதை என்ற ஒன்று மனிதனிடத்தில் உண்டானது. ச்ங்கம் வளர்த்த தமிழில் தான் யாப்பிற்கான சிறப்பிலக்கணமும் வந்தது.

அதுவும் வாழ்வியலில் வாழ்க்கையை அகம் புறம் எனப் பிரித்து எங்கும் கவிதை இழைந்து வாழ்க்கையை இனிமையாக்கியது. எத்தனை மொழிகளில் கவிதைக் கென இத்தனை இலக்கணங்கள் உண்டு என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் எல்லாம் இப்படி யாப்பிலக்கணம் என்று ஒன்று கிடையவே கிடையாது.

இப்படி சிறப்பான ஒரு இலக்கணம் படைத்த தமிழனுக்கு கவிதைகளில் என்னென்ன எழுதத் தோணியது?

இசை, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம், காதல், வீரம், அறிவியல் இப்படி கவிதைகள் தொடாத பக்கங்களே கிடையாது.

கவிதைகள் என்றால் செய்யுள்கள் மட்டும் அல்ல. பண் எனப்படும் இசையுடன் கூடிய பாடல்களும் கவிதைகளே. அவற்றிற்கென்றும் இலக்கணங்கள் உண்டு.

இப்படி வாழ்வியலின் சிறப்புகளை நுணுக்கமாகவும், அழகாகவும், தெளிவாகவும் பதிவு செய்கின்ற வார்த்தைக் கோர்வைகள் கவிதைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இலக்கணம் கற்க முயன்று தோற்றவர்களாலோ அல்லது இலக்கணம் அறியாமல் உணர்வு ஊறீயவர்களாலோ புதுக் கவிதை என்று ஒன்று தோற்றுவிக்கப் பட்டது. புதுக்கவிதை இலக்கணத்தை உடைத்தது.. அதற்கு இலக்கணம் இல்லை என்ற போதிலும் உரைநடைக்கும் புதுக்கவிதைக்கும் வித்தியாசம் பளீரெனத் தெரியும்.

என்னதான் வடிவத்தை மாற்றினாலும் கவிதை என்றால் ஓசை நயமும் கருத்து நயமும் இணைந்திருக்க வேண்டும்.. வார்த்தைகள் நயமாக குறைவாக உபயோகப்படுத்தப் பட்டு படிப்போருக்கு இன்பம் தரவேண்டும் என்ற அடிப்படைகள் அதில் மட்டும் மாறவே இல்லை.

ஆக

கருத்துகள்
அழகு
ஓசை நயம்

க+விதை (கருத்து + விதை)
கவி+தை (அழகு + தை)
கவி + தை (குரங்கு + ஆட்டம் (ஓசை நயம்)

மூன்றும் பலப்பல விகிதங்களில் கூட்டிக் குறைத்து ஆக்கப்பட்ட வார்த்தைச் சரங்களே கவிதைகள்.

ஏன் கவிதை என்று பார்த்தால்

1. சுருக்கமாய் இருக்கும்
2. மனதில் ஆழமாய் படியும்.
3. படிக்க / பாட / கேட்க இனிமையாய் இருக்கும்

உலகத்தின் எந்த வகைக் கவிதைகளை எடுத்துக் கொண்டாலும் இவைதான் அடிப்படையே...

மதி
12-10-2010, 12:48 AM
கவிதை கிடக்குது கவிதை...பெரிய கதை இருக்குமாட்ட இருக்கு...
அதுக்கு ஒரு திரி போடணும்ன்னு நினைக்கிறேன்...யாருப்பா தம்புடு அது?
ஆதவா தேவையில்லாம என் லைன்ல க்ராஸ் பண்றான். அவன் ஆளு ஜெஸிகா.. என் ஆளு தான் ஜெஸ்ஸி... :icon_rollout::icon_rollout:

மதி
12-10-2010, 12:50 AM
கேட்டுடறன்னா....

யவனிகா -அண்ணாத்த நான் யாரு?

தாமரை அண்ணா - பாத்தியாம்மா.உன்ன எப்படி கேள்வி கேக்க வெச்சேன்னு.

ஆனா ஒண்ணும்மா...இந்த கேள்விதான் உலகத்தின் முதல் கேள்வி.இந்த கேள்வி எப்ப மனிதனுக்குள்ள வந்திச்சோ அப்பவே வேதங்களும் தேடல்களும் துவங்கிருச்சி.

புத்தர்,குருட்ஜி,போதிதர்மா,ஜே.கே,ஓஷோ இவங்ககெல்லாம் தேடினாங்க.
கண்டுபிடிச்சாங்க.வெளியவும் சொன்னாங்க.அவங்க சொன்னதெல்லாம் விடும்மா.இப்பா அண்ணா நீங்க யார்னு நீ கேள்.நான் சொல்றேன்.

யவனிகா - தாமரை அண்ணாத்த நீங்க யாரு?

தாமரை அண்ணாத்த - நான் யார்ன்னு எனக்கு தெரியும்மா...ஆனா எனக்கு தெரியும்கிறது உனக்கு தெரிய வேண்டியதில்ல.அது உனக்கு கண்டிப்பா தெரியாதுங்கிறது மட்டும் எனக்கு தெரியும்மா.தெரிஞ்சுதாம்மா...போ இதை உலகத்துக்கு உரத்து சொல்லு....சிவாவ ஆட்டத்தில காணுமே...
ஹாஹா..
அண்ணாத்தேய நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க...:icon_b:

கீதம்
12-10-2010, 01:08 AM
மன்றக்கவிமணிகளுக்கு மத்தியில்
இந்தக் குன்றுமணிக்கவியையும்
கோர்த்திருப்பதற்கு
நன்றிகள் பல, யவனிகா!

************************************

நான் வளர்க்கும்
விசித்திரப்பூங்கா பற்றிச்
சொல்கிறேன், கேளுங்கள்,
உங்களிடமும் இருக்கலாம்
இப்படியொரு பூங்கா!

விதைத்தும், பதியனிட்டும்,
ஒட்டியும், போத்துகள் நட்டும்,
வேருடன் பெயர்த்தெடுத்தூன்றியுமென
பல்வகையிலும் வளர்க்கத் தலைப்பட்டேன்,
பலரதரப்பட்ட தாவரவினங்கள்!

இவ்விநோதச்சோலையில்
சத்தமின்றி வளர்கின்றன,
சாமந்தி விதைகளினின்று,
சரக்கொன்றை மலர்ச்செடிகள்!
பாரிஜாதம் சொரிவதோ
பால்வடியும் வெள்ளெருக்கு மலர்கள்!

இளமஞ்சள் ரோஜாச்செடியொன்று
இறுமாப்பு கொண்ட இயந்திரன் போல
ஒன்று பத்தாகி, பத்து பலவாகி
தன்னைத்தானே பதியனிட்டு
பூத்துக்குலுங்கச்செய்கிறது,
பற்பல வண்ண ரோஜாக்கள்!

குறுமரமென்று நினைத்ததெல்லாம்
விருட்சங்களாய் விண்ணோக்கி விரைய,
விண்முட்டுமென்று நினைத்தவையோ….
மண்முட்டி மல்லாந்து கிடக்கிறது!

விந்தையிலும் விந்தையாய்
குலை ஈன்ற வாழையொன்று
தன் காலடிக் கன்றுகளை அழித்து
களைகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது!

பூக்களோ, காய்களோ, கனிகளோ….
பலனாய் எதுவும் கிடைக்கும்வரை
இந்த விநோதங்கள் பற்றி
யாதொரு விசனமும் எனக்கில்லை!

அவை யாவற்றுக்கும்
‘கவிதை’ என்றொரு
பெயரிடப்படுவதைப்பற்றியும்
எனக்கெந்த ஆட்சேபணையுமில்லை!

யவனிகா
12-10-2010, 04:58 AM
கவிதை என்பது இதுதான் என்பதை வரையறுப்பது மிக மிக கஷ்டமான ஒண்ணு. ஏன்னா கவிதைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் பொதுவா சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. இப்ப நான் இங்க எழுதறது கவிதையா இல்லையா என்று மொழி தெரிந்த யாரைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்லிடுவாங்க. கவிதையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு. இந்த உரை நடையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு.

அப்படின்னா இந்த கவிதையையும் கட்டுரை நாடகங்களையும் பிரிப்பது என்ன அப்படின்னு பார்த்தோம் என்றால் அது கட்டு.

கட்டமைப்பு. கவிதை ஒரு பூச்சரம் மாதிரி வார்த்தைகளைத் தொடுத்து செய்யும் ஆரம் மாதிரி. கருத்தாழம், நயம் மற்றும் சிருங்காரங்கள் செய்யப்படுவது கவிதை.

அந்தக் காலத்தில கவிதைக்கு இலக்கணம் வகுத்தாங்க. ஏன் என்று முன்பே சொல்லி இருக்கேன். எரர் கரெக்ஷன் மெகானிசம். அதாவது நிரந்தர பதிவு செய்ய வழி கிடையாது. அதனால் கவிதைகளை ஒரு கட்டுக்குள் இலக்கண வரம்புக்குள் எழுதினால் கரையான் அரித்த வார்த்தைகளைக் கூட மீட்டெடுக்கலாம்.

இலக்கணத்தில் எழுத்து - சொல் இரண்டையும் ஒருபக்கமும் யாப்பை ஒருபக்கமும் அதனால்தான் உண்டாக்கி இருந்தாங்க.

கவிதையில் என்னென்ன இருக்கணும்னு பார்த்தால் கருத்து. இதை எப்படிச் சொல்லணும்னு வரையறுத்த விதத்தைப் பாருங்க.

1. இராகம் - அசை, தொடை, அடி இவற்றின் மூலம் இராகத்தில் பொருத்தி இனிமையாய் பாடும்படி செய்யலாம்

2. ஓசை நயம் - எதுகை,மோனை, சந்தம் இவற்றின் மூலம் குரலெடுத்து படிக்கும் பொழுது பாடும்பொழுது சீரான ஒலிகளை உண்டாக்கி நயத்தைக் கொடுக்கிறது.

3. மொழிநயம் - உபயோகிக்கப் படும் வார்த்தைகளின் பொருள்நயம், வளமை, பொருத்தம், சிக்கனம்

ஓசை நயம் - இசை நயமிக்க இந்த வார்த்தைகள் மனதில் எளிதில் பதிகின்றன. 30 வருஷத்துக்கு முன்னால படிச்ச பாட்டு கூட நினைவு படுத்தி சரளமாகப் பாடமுடியும். வசனம் அவ்வளவு எளிதில்லை.

எப்படி ஓசை நயத்திற்கு எதுகை மோனை சந்தம் போன்றவை உபயோகப் படுத்தப் பட்டனவோ அப்படி கருத்து நயத்திற்கு அணிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, உவமை, உருவகம், பிறிது மொழிதல், வேறு பொருள் வைத்தல், இப்படி பல விஷயங்கள். பல மேற்கத்திய கவிதைகள் இவற்றில் பலவற்றை இப்பொழுதுதான் உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்து உள்ளன..சிலேடை, சரியான அர்த்தம் தரும் சிக்கனமான வார்த்தைகள் இப்படி மொழிநயத்தைக் கூட்டுவன எவ்வளவோ உண்டு.

அதனால்தான் கவிதை என்ற ஒன்று மனிதனிடத்தில் உண்டானது. ச்ங்கம் வளர்த்த தமிழில் தான் யாப்பிற்கான சிறப்பிலக்கணமும் வந்தது.

அதுவும் வாழ்வியலில் வாழ்க்கையை அகம் புறம் எனப் பிரித்து எங்கும் கவிதை இழைந்து வாழ்க்கையை இனிமையாக்கியது. எத்தனை மொழிகளில் கவிதைக் கென இத்தனை இலக்கணங்கள் உண்டு என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் எல்லாம் இப்படி யாப்பிலக்கணம் என்று ஒன்று கிடையவே கிடையாது.

இப்படி சிறப்பான ஒரு இலக்கணம் படைத்த தமிழனுக்கு கவிதைகளில் என்னென்ன எழுதத் தோணியது?

இசை, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம், காதல், வீரம், அறிவியல் இப்படி கவிதைகள் தொடாத பக்கங்களே கிடையாது.

கவிதைகள் என்றால் செய்யுள்கள் மட்டும் அல்ல. பண் எனப்படும் இசையுடன் கூடிய பாடல்களும் கவிதைகளே. அவற்றிற்கென்றும் இலக்கணங்கள் உண்டு.

இப்படி வாழ்வியலின் சிறப்புகளை நுணுக்கமாகவும், அழகாகவும், தெளிவாகவும் பதிவு செய்கின்ற வார்த்தைக் கோர்வைகள் கவிதைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இலக்கணம் கற்க முயன்று தோற்றவர்களாலோ அல்லது இலக்கணம் அறியாமல் உணர்வு ஊறீயவர்களாலோ புதுக் கவிதை என்று ஒன்று தோற்றுவிக்கப் பட்டது. புதுக்கவிதை இலக்கணத்தை உடைத்தது.. அதற்கு இலக்கணம் இல்லை என்ற போதிலும் உரைநடைக்கும் புதுக்கவிதைக்கும் வித்தியாசம் பளீரெனத் தெரியும்.

என்னதான் வடிவத்தை மாற்றினாலும் கவிதை என்றால் ஓசை நயமும் கருத்து நயமும் இணைந்திருக்க வேண்டும்.. வார்த்தைகள் நயமாக குறைவாக உபயோகப்படுத்தப் பட்டு படிப்போருக்கு இன்பம் தரவேண்டும் என்ற அடிப்படைகள் அதில் மட்டும் மாறவே இல்லை.

ஆக

கருத்துகள்
அழகு
ஓசை நயம்

க+விதை (கருத்து + விதை)
கவி+தை (அழகு + தை)
கவி + தை (குரங்கு + ஆட்டம் (ஓசை நயம்)

மூன்றும் பலப்பல விகிதங்களில் கூட்டிக் குறைத்து ஆக்கப்பட்ட வார்த்தைச் சரங்களே கவிதைகள்.

ஏன் கவிதை என்று பார்த்தால்

1. சுருக்கமாய் இருக்கும்
2. மனதில் ஆழமாய் படியும்.
3. படிக்க / பாட / கேட்க இனிமையாய் இருக்கும்

உலகத்தின் எந்த வகைக் கவிதைகளை எடுத்துக் கொண்டாலும் இவைதான் அடிப்படையே...

பலாப் பழங்கள் பலவற்றை
பதமாக பகுத்து
தேன் மொழி தோய்த்து
திகட்டாமல் புகட்டும்
வித்தைக்காரர்...

தாமரை அண்ணா மேல் தனிமரியாதை தோன்றுவதை தடுக்கமுடிவதில்லை.அருமையான பதிவு அண்ணா.நன்றிகள் பல.

யவனிகா
12-10-2010, 05:01 AM
ஆதவா தேவையில்லாம என் லைன்ல க்ராஸ் பண்றான். அவன் ஆளு ஜெஸிகா.. என் ஆளு தான் ஜெஸ்ஸி... :icon_rollout::icon_rollout:

ஆமா..இதுக்கு கண்டிப்பா பஞ்சாயத்து வெக்கணும்...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.

யவனிகா
12-10-2010, 05:27 AM
மன்றக்கவிமணிகளுக்கு மத்தியில்
இந்தக் குன்றுமணிக்கவியையும்
கோர்த்திருப்பதற்கு
நன்றிகள் பல, யவனிகா!

************************************

நான் வளர்க்கும்
விசித்திரப்பூங்கா பற்றிச்
சொல்கிறேன், கேளுங்கள்,
உங்களிடமும் இருக்கலாம்
இப்படியொரு பூங்கா!

விதைத்தும், பதியனிட்டும்,
ஒட்டியும், போத்துகள் நட்டும்,
வேருடன் பெயர்த்தெடுத்தூன்றியுமென
பல்வகையிலும் வளர்க்கத் தலைப்பட்டேன்,
பலரதரப்பட்ட தாவரவினங்கள்!

இவ்விநோதச்சோலையில்
சத்தமின்றி வளர்கின்றன,
சாமந்தி விதைகளினின்று,
சரக்கொன்றை மலர்ச்செடிகள்!
பாரிஜாதம் சொரிவதோ
பால்வடியும் வெள்ளெருக்கு மலர்கள்!

இளமஞ்சள் ரோஜாச்செடியொன்று
இறுமாப்பு கொண்ட இயந்திரன் போல
ஒன்று பத்தாகி, பத்து பலவாகி
தன்னைத்தானே பதியனிட்டு
பூத்துக்குலுங்கச்செய்கிறது,
பற்பல வண்ண ரோஜாக்கள்!

குறுமரமென்று நினைத்ததெல்லாம்
விருட்சங்களாய் விண்ணோக்கி விரைய,
விண்முட்டுமென்று நினைத்தவையோ….
மண்முட்டி மல்லாந்து கிடக்கிறது!

விந்தையிலும் விந்தையாய்
குலை ஈன்ற வாழையொன்று
தன் காலடிக் கன்றுகளை அழித்து
களைகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது!

பூக்களோ, காய்களோ, கனிகளோ….
பலனாய் எதுவும் கிடைக்கும்வரை
இந்த விநோதங்கள் பற்றி
யாதொரு விசனமும் எனக்கில்லை!

அவை யாவற்றுக்கும்
‘கவிதை’ என்றொரு
பெயரிடப்படுவதைப்பற்றியும்
எனக்கெந்த ஆட்சேபணையுமில்லை!

கீதம் சகோதரி...உங்கள் கவிதைகளை கவிச்சமரில் மட்டுல் படித்திருக்கிறேன்.நல்ல வரிகள்.சமரில் நல்ல கவிதை வரிகள் ஈற்றாய் கிடைத்தால்,சமராட விரலும் மனமும் பரபரக்கும். குன்றி மணி என்று குறைத்து மதிப்பிடவில்லை உங்களை....

உங்களின் எண்ணத்தோட்டத்தில்
என் வளர்ப்பு வண்ணத்துப்பூச்சிகள்
இதோ வலம் வர ஆரம்பித்துவிட்டன...

சரக்கொன்றையோ சாமந்தியோ
சேதமின்றி அமர்ந்து கீதம் இசைத்துக்கொள்ள
அனுமதி தேவை என் செல்ல சிட்டுக்குருவிக்கு....

மஞ்சள் ரோஜா பதியன் ஒன்றை மட்டும்
உடையவர் அறியாமல் கவர்ந்து வர
உத்தரவிட்டுள்ளேன் குறும்புக்கார அணில்செல்லத்துக்கு
மஞ்சள் ரோஜாக்கள் மேல் மயக்கம் எனக்கும்..

நாகணவாய்ப்புள்ளொன்று...
சத்தியமாய் நானனுப்பவில்லை...
தானே வருகிறது...கீதத்தின் கவித்தோப்பில்
காற்றும் கவிதை சொல்கிறதாம்...
பிண்ணணி இசைக்க தீராதாஆசையாம்....

எல்லோரும் வந்துவிட்டார்களா?
எண்ணிப்பார்த்துச் சொல்லுங்களேன்!!!

ஆதவா
12-10-2010, 05:27 AM
அவன் ஆளு ஜெஸிகா.. என் ஆளு தான் ஜெஸ்ஸி... :icon_rollout::icon_rollout:

இது உங்களுக்கே அநியாயமா தெரியலயா?
பொண்ணே கிடைக்கலைங்கறதுக்காக..... இப்படியா????

ஜெஸி யாருன்னு யவனிக்காவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்..

யவனிகா
12-10-2010, 05:39 AM
இது உங்களுக்கே அநியாயமா தெரியலயா?
பொண்ணே கிடைக்கலைங்கறதுக்காக..... இப்படியா????

ஜெஸி யாருன்னு யவனிக்காவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்..

மன்றக்கக்கதைகள்ல ஜெஸிகாங்கிற பொண்ண படிச்சிருக்கேன்.அவங்களா இருக்குமோ?

ஜெசிகா ஓகே,ஜெஸ்ஸி ஒத்துவருமாப்பா மதி....

லேட்நைட் பார்டீஸ்,ஈசியார் டிரைவ்,சீ த்ரு ஏட்பிலிம்னு நம்ம கல்ச்சருக்கு ஒதைக்குதே???உங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமா?உனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்? ஆனந்த:traurig001::traurig001:கண்ணீர்....தாங்கமுடியலப்பா....ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆதவா
12-10-2010, 05:41 AM
ஆமா..இதுக்கு கண்டிப்பா பஞ்சாயத்து வெக்கணும்...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.

நாட்டாமை வரதில்லைங்கோ!

ஆதவா
12-10-2010, 05:43 AM
மன்றக்கக்கதைகள்ல ஜெஸிகாங்கிற பொண்ண படிச்சிருக்கேன்.அவங்களா இருக்குமோ?

ஜெசிகா ஓகே,ஜெஸ்ஸி ஒத்துவருமாப்பா மதி....

லேட்நைட் பார்டீஸ்,ஈசியார் டிரைவ்,சீ த்ரு ஏட்பிலிம்னு நம்ம கல்ச்சருக்கு ஒதைக்குதே???உங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமா?உனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்? ஆனந்த:traurig001::traurig001:கண்ணீர்....தாங்கமுடியலப்பா....ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அக்கா, நீங்க தப்பா டைப் அடிச்சிங்.....

இந்த லிங்கை படிங்க.... ஜெஸ்ஸின்னா யாருன்னு தெரியும்!!

http://tamilmantram.com/vb/showthread.php?t=23925

மதி
12-10-2010, 05:49 AM
இது உங்களுக்கே அநியாயமா தெரியலயா?
பொண்ணே கிடைக்கலைங்கறதுக்காக..... இப்படியா????

ஜெஸி யாருன்னு யவனிக்காவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்..
நான் சொல்றது வி. தா. வ. ஜெஸ்ஸி.. !! அந்த விமர்சனம் பாருப்பா...புரியும்.. ஹிஹி.. :icon_rollout::icon_rollout::icon_b:

மதி
12-10-2010, 05:51 AM
மன்றக்கக்கதைகள்ல ஜெஸிகாங்கிற பொண்ண படிச்சிருக்கேன்.அவங்களா இருக்குமோ?

ஜெசிகா ஓகே,ஜெஸ்ஸி ஒத்துவருமாப்பா மதி....

லேட்நைட் பார்டீஸ்,ஈசியார் டிரைவ்,சீ த்ரு ஏட்பிலிம்னு நம்ம கல்ச்சருக்கு ஒதைக்குதே???உங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமா?உனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்? ஆனந்த:traurig001::traurig001:கண்ணீர்....தாங்கமுடியலப்பா....ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் எப்போ திரிஷாவ லவ் பண்றேன்னு சொன்னேன்..??:eek::eek:

ஆதவா
12-10-2010, 05:52 AM
நான் சொல்றது வி. தா. வ. ஜெஸ்ஸி.. !! அந்த விமர்சனம் பாருப்பா...புரியும்.. ஹிஹி.. :icon_rollout::icon_rollout::icon_b:

நான் சொன்னது உ.எ.பே.இ.நா.ஏ.ஜெ.ல.ப ஜெஸ்ஸியை...... :D

யவனிகா
12-10-2010, 06:04 AM
அக்கா, நீங்க தப்பா டைப் அடிச்சிங்.....

இந்த லிங்கை படிங்க.... ஜெஸ்ஸின்னா யாருன்னு தெரியும்!!

http://tamilmantram.com/vb/showthread.php?t=23925

கண்ணுவலிக்க வலிக்க உத்துப்பாத்திட்டேன்.:mad::mad:

யவனிகா
12-10-2010, 06:07 AM
நான் எப்போ திரிஷாவ லவ் பண்றேன்னு சொன்னேன்..??:eek::eek:

அப்ப நீ என்ன சொல்லிருக்கணும்...ஜெசி மாதிரி டாட்டா காட்டிட்டு போற ஒரு பொண்ணுக்கா...அப்படின்னு சொல்லிருக்கணும்...நானே ட்யூப்லைட்டு...என்கிட்ட வந்து ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னா...பாரு உனக்கு வேண்டி சிம்புகிட்ட நம்பரெல்லாம் வாங்கி வெச்சிட்டேன்.

யவனிகா
12-10-2010, 06:09 AM
நான் சொன்னது உ.எ.பே.இ.நா.ஏ.ஜெ.ல.ப ஜெஸ்ஸியை...... :D

உ.இ.பொ.இ.ஏ.இ.ப.ஜெ.பி.தி???

ஊர்ல இத்தன பொண்ணுங்க இருந்தும் ஏன் இந்தப் பசங்க ஜெசி பின்னால திரியறாங்க???:confused::icon_p::icon_p:

ஆதவா
12-10-2010, 06:28 AM
உ.இ.பொ.இ.ஏ.இ.ப.ஜெ.பி.தி???

ஊர்ல இத்தன பொண்ணுங்க இருந்தும் ஏன் இந்தப் பசங்க ஜெசி பின்னால திரியறாங்க???:confused::icon_p::icon_p:

கலக்கல்ஸ்!!!! :):sprachlos020:

பாரதி
12-10-2010, 01:52 PM
மழலை மொழி
மார்கழிப்பனி

மழையின் தாளம்
செந்தூர வானம்

சந்தூர் இசை
பச்சை நிறம்

எறும்பின் வழித்தடம்
இரும்பின் மென்மை

மலர்ந்த மொட்டு
தளர்ந்த முகம்

முளைத்த தளிர்
முல்லையாறு

கயிலை மலை
பிறை நிலா

குற்றாலக்குளியல்
பெற்ற பதக்கம்

இழந்தவன் வருத்தம் - மதி
பிறழ்ந்தவன் மகிழ்ச்சி

புத்தனின் அமைதி
காந்தியின் சிரிப்பு

தால் ஏரித்தோட்டம்
கடல்நீராட்டம்

உழைப்பவன் கரம்
உழவனின் வியர்வை

குறிப்பில் உணர்த்தும் எழுத்து
சிரிப்பில் வரும் கண்ணீர்

ஆதவன் எழுச்சி
புவிக்கோளச் சுழற்சி

கோடைக்குளிர்
தடையில்லா இணையம்

..............
..............
எல்லாம் நினைத்து
அறிய முனைந்து
ஆவல் வந்தது
கவிதை புனைய ..

எல்லாம் அறிவோம் என்றெண்ணி
எழுதி முடித்த பின்னர்
எம்மிலக்கணம் பார்த்தபின்னர் - தமிழ்
எழுந்தோடி நகைக்கும்.
கணினிக் கருவியால்
காகிதம் பிழைக்கும்.

நற்கவியைப் படித்தால்...
பசியாரலுக்குப்பின்
ஏதிலியின் முகமாய்
வேனற்கால மழைக்குப்பின்
வேலியோர காட்டுப்பூவாய்
உறங்கிக்கிடக்கும்
உட்கண்ணின் முன்னே நிற்கும்
உடனே படையென
உத்வேகம் பிறக்கவைக்கும்.

ஆதவா
12-10-2010, 02:15 PM
ஆதவன் எழுச்சி
புவிக்கோளச் சுழற்சி

ஹி ஹிஹ் இ தேங்யூ அண்ணே!! :D

சிவா.ஜி
12-10-2010, 04:14 PM
அசத்திட்டீங்க பாரதி. எல்லாம் சொல்லும் கருவிதான் கவிதை. பாராட்டுக்கள்.

அமரன்
12-10-2010, 04:36 PM
வாங்க யவனிக்கா.

நேரம் கொ,ஞ்சம் மட்டு மட்டு.

அதனால் வழக்கம் போல ஒரு சுட்டியை தந்திடுறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12206

சிவா.ஜி
12-10-2010, 04:39 PM
அதென்ன பாஸ் கொ வுக்கு பக்கத்துல ஒரு அரைப்புள்ளி....அப்புறம் அதென்ன மட்டு...மட்டு...
சட்டு புட்டுன்னு....ஒரு கவிதை தாங்க பாஸ்.

யவனிகா
12-10-2010, 06:25 PM
எல்லாம் அறிவோம் என்றெண்ணி
எழுதி முடித்த பின்னர்
எம்மிலக்கணம் பார்த்தபின்னர் - தமிழ்
எழுந்தோடி நகைக்கும்.
கணினிக் கருவியால்
காகிதம் பிழைக்கும்.

நற்கவியைப் படித்தால்...
பசியாரலுக்குப்பின்
ஏதிலியின் முகமாய்
வேனற்கால மழைக்குப்பின்
வேலியோர காட்டுப்பூவாய்
உறங்கிக்கிடக்கும்
உட்கண்ணின் முன்னே நிற்கும்
உடனே படையென
உத்வேகம் பிறக்கவைக்கும்.

நல்லாருக்கு அப்படின்னு சொன்னா வெறும் வார்த்தையா போய்விடும்.அதுக்கும் மேல என்ன சொல்ல அப்படின்னு யோசிக்கிறேன்?

இன்னும் எழுதுங்கங்க பாரதி அண்ணா
இளைப்பாறிச் செல்கிறோம்.

நன்றி அண்ணா.

யவனிகா
12-10-2010, 06:26 PM
வாங்க யவனிக்கா.

நேரம் கொ,ஞ்சம் மட்டு மட்டு.

அதனால் வழக்கம் போல ஒரு சுட்டியை தந்திடுறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12206

சுட்டிக்கு நன்றி அமரு.தேவையான எடுத்துக்கிறேன்.

கீதம்
12-10-2010, 09:41 PM
நற்கவியைப் படித்தால்...
பசியாரலுக்குப்பின்
ஏதிலியின் முகமாய்
வேனற்கால மழைக்குப்பின்
வேலியோர காட்டுப்பூவாய்
உறங்கிக்கிடக்கும்
உட்கண்ணின் முன்னே நிற்கும்
உடனே படையென
உத்வேகம் பிறக்கவைக்கும்.

வேலியோர காட்டுப்பூக்களில் ஒன்றாய் என்னை நானும் உணர்கிறேன். கவிமழைக்குப் பாராட்டுகள் பாரதி அவர்களே.

கீதம்
12-10-2010, 09:45 PM
கீதம் சகோதரி...உங்கள் கவிதைகளை கவிச்சமரில் மட்டுல் படித்திருக்கிறேன்.நல்ல வரிகள்.சமரில் நல்ல கவிதை வரிகள் ஈற்றாய் கிடைத்தால்,சமராட விரலும் மனமும் பரபரக்கும். குன்றி மணி என்று குறைத்து மதிப்பிடவில்லை உங்களை....

உங்களின் எண்ணத்தோட்டத்தில்
என் வளர்ப்பு வண்ணத்துப்பூச்சிகள்
இதோ வலம் வர ஆரம்பித்துவிட்டன...

சரக்கொன்றையோ சாமந்தியோ
சேதமின்றி அமர்ந்து கீதம் இசைத்துக்கொள்ள
அனுமதி தேவை என் செல்ல சிட்டுக்குருவிக்கு....

மஞ்சள் ரோஜா பதியன் ஒன்றை மட்டும்
உடையவர் அறியாமல் கவர்ந்து வர
உத்தரவிட்டுள்ளேன் குறும்புக்கார அணில்செல்லத்துக்கு
மஞ்சள் ரோஜாக்கள் மேல் மயக்கம் எனக்கும்..

நாகணவாய்ப்புள்ளொன்று...
சத்தியமாய் நானனுப்பவில்லை...
தானே வருகிறது...கீதத்தின் கவித்தோப்பில்
காற்றும் கவிதை சொல்கிறதாம்...
பிண்ணணி இசைக்க தீராதாஆசையாம்....

எல்லோரும் வந்துவிட்டார்களா?
எண்ணிப்பார்த்துச் சொல்லுங்களேன்!!!

அற்புதம் யவனிகா!

இப்போதுதான் என் விநோதப்பூங்கா விசேஷம் பெறுகிறது. நன்றி.