PDA

View Full Version : ஆசைப்படாமலிருக்க ஆசைப்பட்டாராம் புத்தர்

ஆதி
11-10-2010, 04:20 AM
உட்தாழ்பாளிட்ட வீடுகளில்
ஆடையின்றி சுற்றித் திரிகிறவர்கள்
அசைபோடுகிறார்கள்
ஆசையறுத்தலை

அல்லிராணி
11-10-2010, 04:36 AM
உட்தாழ்பாலிட்ட வீட்களில்
ஆடையின்றி சுற்றித் திரிகிறவர்கள்
அசைப்போடுகிறார்கள்
ஆசை அறுத்தலை

ஆசையறுத்தலை அவர்கள் அசைபோடட்டும்..
பிழையறுத்தலை நீங்கள்...???

ஆதி
11-10-2010, 04:39 AM
திருத்திட்டேன் அக்கா

தாமரை
11-10-2010, 04:54 AM
இதை நம்ம ஊர்ல எப்படிச் சொல்லுவாங்க தெரியுமா ஆதன்..?

"கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனையில் வை"

வீடிருக்கு, வீட்டிற்கு கதவுகள் இருக்கு.. இப்படி பல இருக்குகளில் ஆடைகளைத் துறத்தல் என்பது அப்படித்தானே..

ஆதவா
11-10-2010, 06:02 AM
உட்தாழ்பாளிட்ட வீடுகளில்
ஆடையின்றி சுற்றித் திரிகிறவர்கள்
அசைபோடுகிறார்கள்
ஆசையறுத்தலை

பண்பட்டவர்கள் பகுதியில் எழுதவேண்டிய கவிதையை குறுங்கவிதை பகுதியில் எழுதியமைக்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

தாமரை
11-10-2010, 06:49 AM
உட்தாழ்பாளிட்ட வீடுகளில்

தங்கள் மனக்கதவுகளை வெளியுலகினர் புகா வண்ணம் இறுகச் சாத்திக் கொண்டவர்கள் தங்கள் மனதில்

ஆடையின்றி சுற்றித் திரிகிறவர்கள்
அசைபோடுகிறார்கள் ஆசையறுத்தலை

தவறாக புரிந்த தத்துவங்களைக் கைக்கொள்வதாக எண்ணி தாங்கள் மஹாத்மாக்கள் எனப் பெருமிதமாய் பிதற்றிக் கொள்கிறார்கள்...

இப்ப அப்படியே தலைப்புக்குப் போங்க ஆதவா!!

ஆசைப்படாமலிருக்க ஆசைப்பட்டார் புத்தர்

இதில்தான் தப்பு செய்திட்டார் ஆதன், அவர் சொல்ல வந்தது புத்தர் ஆசைப்படாமலிருக்க ஆசைப்படலை. அவர் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்று சொன்னது ஆசையினால் இல்லை. அனுபவத்தினால்.

துன்பங்களுக்குக் காரணம் என்ன என்று மனதில் பல ஆய்வுகள் செய்து அவருக்குத் தோன்றிய பல மன விவாத பிரதிவாதங்களுக்குப் பிறகு நுணுக்கமாய் ஆராய்ந்து துன்பங்கள் வராமலிருக்க ஆசைகளை அறுக்க வேண்டும் என்று சொன்னார். ஆசை அறுத்தல் என்பது சுகங்களைத் தியாகம் செய்வது என்று குறுகிய நோக்கத்துடன் சொல்வார்கள் சிலர். ஆனால் அது மட்டுமில்லை என்பதுதானே உண்மை.

ஆசைப்பட்டு ஆசையை அறுக்கலை புத்தர். துன்ப வாழ்க்கையின் காரணம் ஆசையே என்ற ஞானம் தோன்றியதால் ஆசையை அறுத்தல் தேவை எனக் கண்டார். துன்பத்தை வெல்ல வேண்டும் என்பதே ஆசை அறுத்தலின் காரணம். எனவே ஆசைப்படக்கூடாது என ஆசைப்பட்டார் எனச் சொல்வதே புத்தரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆசைப்படாமலிருக்க ஆசைப்பட்டாராம் புத்தர் என்று மூன்றாமவர் சொல்வது போல் சொல்லி இருக்க வேண்டியதைத் தான் சொல்லியதைப் போல சொல்லி இருக்கிறார் ஆதவா.

மனக் கதவை இறுக மூடிவிட்டு, அரைகுறையாய் புரிந்து கொண்ட தத்துவங்களைக் கடைபிடிப்பதாய்ச் சொல்லி பிதற்றும் மூடர்களைச் சாட நோக்கம் கொண்ட கவிதை..

பட்டி பார்க்கணும் ஆதன்.

கீதம்
11-10-2010, 06:56 AM

இந்தக் கவிதையின் தலையையும் அறுத்திருந்திருக்கலாமோ....
ஆழ்ந்த யோசனையில் ஆதன்!

தாமரை
11-10-2010, 06:57 AM
இந்தக் கவிதையின் தலையையும் அறுத்திருந்திருக்கலாமோ....
ஆழ்ந்த யோசனையில் ஆதன்!

இதுவே நல்ல தலைப்புதான்

ஆதி
11-10-2010, 07:00 AM
இந்தக் கவிதையின் தலையையும் அறுத்திருந்திருக்கலாமோ....
ஆழ்ந்த யோசனையில் ஆதன்!

:D :D :D

இது தலைப்புக்கு பிறந்த குழந்தை, அதனாலேயே தலையறுக்காமல் விட்டுடேன் ;)

தளையறுத்தா சாம்பவி கொட்றாங்க
தலையறுத்தா கீதமக்கா கொட்றாங்க
மொத்தத்தில்
த(ளை)லையால என் தலை வீங்குது :D :D :D

ஆதவா
11-10-2010, 07:02 AM
உட்தாழ்பாளிட்ட வீடுகளில்

தங்கள் மனக்கதவுகளை வெளியுலகினர் புகா வண்ணம் இறுகச் சாத்திக் கொண்டவர்கள் தங்கள் மனதில்

ஆடையின்றி சுற்றித் திரிகிறவர்கள்
அசைபோடுகிறார்கள் ஆசையறுத்தலை

தவறாக புரிந்த தத்துவங்களைக் கைக்கொள்வதாக எண்ணி தாங்கள் மஹாத்மாக்கள் எனப் பெருமிதமாய் பிதற்றிக் கொள்கிறார்கள்...

இப்ப அப்படியே தலைப்புக்குப் போங்க ஆதவா!!

ஆசைப்படாமலிருக்க ஆசைப்பட்டார் புத்தர்

இதில்தான் தப்பு செய்திட்டார் ஆதன், அவர் சொல்ல வந்தது புத்தர் ஆசைப்படாமலிருக்க ஆசைப்படலை. அவர் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்று சொன்னது ஆசையினால் இல்லை. அனுபவத்தினால்.

துன்பங்களுக்குக் காரணம் என்ன என்று மனதில் பல ஆய்வுகள் செய்து அவருக்குத் தோன்றிய பல மன விவாத பிரதிவாதங்களுக்குப் பிறகு நுணுக்கமாய் ஆராய்ந்து துன்பங்கள் வராமலிருக்க ஆசைகளை அறுக்க வேண்டும் என்று சொன்னார். ஆசை அறுத்தல் என்பது சுகங்களைத் தியாகம் செய்வது என்று குறுகிய நோக்கத்துடன் சொல்வார்கள் சிலர். ஆனால் அது மட்டுமில்லை என்பதுதானே உண்மை.

ஆசைப்பட்டு ஆசையை அறுக்கலை புத்தர். துன்ப வாழ்க்கையின் காரணம் ஆசையே என்ற ஞானம் தோன்றியதால் ஆசையை அறுத்தல் தேவை எனக் கண்டார். துன்பத்தை வெல்ல வேண்டும் என்பதே ஆசை அறுத்தலின் காரணம். எனவே ஆசைப்படக்கூடாது என ஆசைப்பட்டார் எனச் சொல்வதே புத்தரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆசைப்படாமலிருக்க ஆசைப்பட்டாராம் புத்தர் என்று மூன்றாமவர் சொல்வது போல் சொல்லி இருக்க வேண்டியதைத் தான் சொல்லியதைப் போல சொல்லி இருக்கிறார் ஆதவா.

மனக் கதவை இறுக மூடிவிட்டு, அரைகுறையாய் புரிந்து கொண்ட தத்துவங்களைக் கடைபிடிப்பதாய்ச் சொல்லி பிதற்றும் மூடர்களைச் சாட நோக்கம் கொண்ட கவிதை..

பட்டி பார்க்கணும் ஆதன்.

அண்ணே.. நான் சும்மா சொன்னேன்.

ஆசையறுத்தல் - புணரவெறுத்தல் என்பதாக அர்த்தம் கொண்டு சொன்னேன்.
பார்க்கப் போனால் அர்த்தம் ஒன்றுதான்!

கீதம்
11-10-2010, 07:02 AM
:D :D :D

இது தலைப்புக்கு பிறந்த குழந்தை, அதனாலேயே தலையறுக்கலை அப்படியே விட்டுடேன் ;)

தளையறுத்தா சாம்பவி கொட்றாங்க
தலையறுத்த கீதமக்கா கொட்றாங்க
மொத்தத்தில்
த(ளை)லையால என் தலை வீங்குது :D :D :D

கடைசியா கீதமக்காவுக்கே தலையறுத்தாகிவிட்டதா? பலே!

தலை பாவம் சிவனேன்னு இருக்கிறார்.. அவரை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க?

ஆதி
11-10-2010, 07:06 AM
கடைசியா கீதமக்காவுக்கே தலையறுத்தாகிவிட்டதா? பலே!

அறுக்கப்பட்டது அக்கா தலையல்ல எழுத்துக்களின் தலை 'அ'

திருத்திட்டேனக்கா...

தாமரை
11-10-2010, 07:09 AM
கடைசியா கீதமக்காவுக்கே தலையறுத்தாகிவிட்டதா? பலே!

தலையறுத்த கீதமக்கா என்றால் கீதமக்காதான் தலையறுத்ததா அர்த்தம். கீதமக்கா தலை அறுந்திருந்தா தலையறுந்த கீதமக்கா என்றுதான் சொல்லணும்..

ஆதவா
11-10-2010, 07:10 AM
அறுக்கப்பட்டது அக்கா தலையல்ல எழுத்துக்களின் தலை 'அ'

திருத்திட்டேனக்கா...

அ”வுக்கு அக்கா கோச்சுக்கப் போவுதுங்க.....

கீதம்
11-10-2010, 07:11 AM
தலையறுத்த கீதமக்கா என்றால் கீதமக்காதான் தலையறுத்ததா அர்த்தம். கீதமக்கா தலை அறுந்திருந்தா தலையறுந்த கீதமக்கா என்றுதான் சொல்லணும்..

கீதமக்கா இங்கே மக்காயிட்டேன்.

தாமரை
11-10-2010, 07:12 AM
தலையை அறுத்திட்டா அப்படித்தான். :D:D:D:eek:

விகடன்
11-10-2010, 07:19 AM
'ஆசையறுத்தல்' என்றால் என்ன விளக்கம்?
ஆசைப்பட்டதை அனுபவித்து ஆசையிலிருந்து விடுபட்டுக்கொள்வதா? அல்லது,

ஆசைப்பட்டதை அனுபவிக்காது துறப்பதா?

தாமரை
11-10-2010, 07:24 AM
'ஆசையறுத்தல்' என்றால் என்ன விளக்கம்?
ஆசைப்பட்டதை அனுபவித்து ஆசையிலிருந்து விடுபட்டுக்கொள்வதா? அல்லது,

ஆசைப்பட்டதை அனுபவிக்காது துறப்பதா?

ஒண்ணு ரஜ்னீஷ் (ரஜினி'ஸ்) தத்துவம்
இன்னொன்னு காசி யாத்திரை தத்துவம்

இவை இரண்டுமே ஆசை வெறுத்தல்

ஆனா ஆசைப்படுவதையே நிறுத்திக் கொள்வதுதான் உண்மையான ஆசை அறுத்தல்.

ஆதி
11-10-2010, 12:59 PM
அ”வுக்கு அக்கா கோச்சுக்கப் போவுதுங்க.....

விடுப்பட்டதென்னவோ 'ஆ' தான்
தட்டச்சும் போது விடுப்பட்டது 'அ'தானே..

அக்கவுக்கு எல்லாம் புரியும் ஆதவா..
அக்கா கோவிக்க வாய்ப்பில்ல்லை.. :)

மதி
11-10-2010, 05:19 PM
எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்த பாலக்குமரானின் "இரும்புக்குதிரை" தொடர் நினைவுக்கு வந்தது.... அநேக வருடங்களிலிருக்கும்... ஆயினும் அதில் வந்தது மனதில் ஒட்டிக் கொண்டது

"மக்கள் ஆசைப்படக்கூடாதென
புத்தர் ஆசைப்பட்டார்"

இந்த வரிகளை நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன். உண்மையா என்று..:eek::eek:

ஆதவா
12-10-2010, 06:07 AM
விடுப்பட்டதென்னவோ 'ஆ' தான்
தட்டச்சும் போது விடுப்பட்டது 'அ'தானே..

அக்கவுக்கு எல்லாம் புரியும் ஆதவா..
அக்கா கோவிக்க வாய்ப்பில்ல்லை.. :)

ஒரு சந்தேகம்...

அ வுக்கு அப்பறம்தானே ஆ பிறக்கிறது.... அப்படியென்றால் எது அக்கா? அ” வா? இல்லை ஆ”வா?

தாமரை
12-10-2010, 06:11 AM
அக்கவுக்கு எல்லாம் புரியும் ஆதவா..
அக்கா கோவிக்க வாய்ப்பில்ல்லை.. :)

அக்கவுக்கு என்றால் அந்த கவுக்கிற அக்காவுக்கு என்று எடுத்துக் கொள்ளலாமா ஆதன்?

தாமரை
12-10-2010, 06:14 AM
ஒரு சந்தேகம்...

அ வுக்கு அப்பறம்தானே ஆ பிறக்கிறது.... அப்படியென்றால் எது அக்கா? அ” வா? இல்லை ஆ”வா?

ஏன் அண்ணனா இருக்கக் கூடாதா?

ஒவ்வொரு எழுத்தும் பல பிறவிகள் எடுக்குது ஆதவா. ஒரு பிறவில ஒண்ணு முந்தி ஒண்ணு பிந்தி இருக்கலாம். இன்னொரு பிறவியில இரண்டுமே ஒண்ணா இருக்கலாம். இன்னொரு பிறவியில் இன்னொன்னு முந்தி ஒண்ணு பிந்தியா இருக்கலாம்.இன்னொரு பிறவியில் இரட்டைப் பிறவியா இருக்கலாம்.

ஆதி அந்தம் என்னும் போது ஆ முன்னால அ பின்னால வருமே கவனிச்சதில்லையா?

ஆதவா
12-10-2010, 06:20 AM

உயிர் உருவாவது பெண்களிடம்தான்.... தமிழ்தாய் ஒரு பெண் தான். அவள் பிரசவிக்கும் உயிர் எழுத்துக்கள் பெண்களாக இருக்கும் ஆகவே எழுத்துக்களை நான் பெண்களாகவே பார்க்கிறேன். மெய்யெழுத்துக்கள் ஆண்கள் லிஸ்ட்ல சேர்த்துக்கலாம்.

ஆதி அந்தம் லாஜிக் நல்லா இருக்கு.
பிள்ளை பிறப்பது அம்மா அப்பாவால்.. அவில் தொடங்கி ஆவில் முடிவதுதான் அம்மாவும் அப்பாவும்!!! இங்கேயும் அ”வுக்குப் பிறகு ஆ” தான்...

(ஏதோ என்னால முடிஞ்சது)

யவனிகா
12-10-2010, 06:35 AM
இந்த வரிகளை நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன். உண்மையா என்று..:eek::eek:

இதுவேறெயா?எப்ப இருந்து?சொல்லவே இல்ல.....தம்ம்ம்பீடா:icon_b::icon_b::icon_b:

மதி
12-10-2010, 06:45 AM
இதுவேறெயா?எப்ப இருந்து?சொல்லவே இல்ல.....தம்ம்ம்பீடா:icon_b::icon_b::icon_b:
அப்போ மூளை வேலை செஞ்சப்போ...!:icon_ush::icon_ush::icon_ush:

தாமரை
12-10-2010, 06:49 AM
உயிர் உருவாவது பெண்களிடம்தான்.... தமிழ்தாய் ஒரு பெண் தான். அவள் பிரசவிக்கும் உயிர் எழுத்துக்கள் பெண்களாக இருக்கும் ஆகவே எழுத்துக்களை நான் பெண்களாகவே பார்க்கிறேன். மெய்யெழுத்துக்கள் ஆண்கள் லிஸ்ட்ல சேர்த்துக்கலாம்.

ஆதி அந்தம் லாஜிக் நல்லா இருக்கு.
பிள்ளை பிறப்பது அம்மா அப்பாவால்.. அவில் தொடங்கி ஆவில் முடிவதுதான் அம்மாவும் அப்பாவும்!!! இங்கேயும் அ”வுக்குப் பிறகு ஆ” தான்...

(ஏதோ என்னால முடிஞ்சது)

உயிரெழுத்து பெண்கள், மெய்யெழுத்து ஆண்கள் எனபது வரை சரி.. அப்படின்னா உயிர்மெய் என்னவாம்?

முதல்ல எந்த பிள்ளை மூத்த பிள்ளை அப்படின்னு கேட்ட அடுத்த பதிவில் அந்தப் பிள்ளைகள் ஆண் பெண் ஆகி அப்பா அம்மா ஆகிட்டாங்க. இப்படிப் போனா மக்கள் தொகையை எப்படிக் கட்டுபப்டுத்துவதாம்?

குழ்ந்தை பிறந்த போது எழுப்பும் முதல் ஒலி என்ன? அதுதானே மூத்த ஒலிக் குழந்தையா இருக்க முடியும்?

ஆதவா
12-10-2010, 07:14 AM

உயிர் எழுத்துக்கள் = பெண்கள்,
மெய்யெழுத்துக்கள் = ஆண்கள்
உயிர்மெய் எழுத்துக்கள் = பிள்ளைகள் (ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம், மெல்லினத்தில் இணைவதை பெண்ணா எடுத்துக்கலாம்!! :))

இப்போ, பெண்களில் எந்த பெண் மூத்த பெண்.... இதுதான் கேள்வி...
அ”வைக் காட்டிலும் ஆ” வே ஒலியிலும் அதிகாரத்திலும் எழுத்து வடிவிலும் மூத்ததாகத் தெரிகிறது. ஆதி அந்தத்தில் கூட “ஆ”னாவே முதலாக இருக்கிறது...
இதற்கு பிறவியைக் காட்டி எதுவேணும்னாலும் இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள்...

குழந்தை பிறக்கும் பொழுது ”அ”ழுவதால் அது நெடில் எழுத்தான ஆ”வில் தான் இருக்கும்.. அதனால் இதை ஒத்துக்கொள்ள முடியாது!! :)