PDA

View Full Version : சச்சின் - 14,000



பாரதி
10-10-2010, 06:03 PM
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய சாதனை வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். 14,000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கெதிரான இன்றைய இரண்டாவது ஐந்து நாள் போட்டியின் போது அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.

முன்னெப்போதையும் விட சமீபகாலமாக போட்டிகளில் அவரது துடுப்பாட்டம் பிரகாசித்து வருவது அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

13,000 ஓட்டங்களில் இருந்து 14,000 ஓட்டங்களைப் பெற அவர் ஆடியிருப்பது 12 ஆட்டங்கள் மட்டுமே! அந்த 1000 ஓட்டங்களை 84.18 என்ற சதவீதத்தில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்காக மட்டையாட்டம் பார்க்கப்பிடிக்கும். அதில் சச்சினும் ஒருவர். :icon_b:

அனுராகவன்
10-10-2010, 06:42 PM
நானும் செய்திதாளில் பார்த்தேன்..
நல்ல பகிர்வு..........

aren
11-10-2010, 01:33 AM
ரிக்கி பாண்டிங் வெகு அருகில் வந்துவிட்டதுதான் காரணமோ என்று நினைக்கிறேன். இருந்தாலும் சச்சின் டெண்டுல்கருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
11-10-2010, 01:45 AM
வாழ்த்துக்கள் சச்சினுக்கு. இந்த ஆயிரத்தில் சதங்கள் மற்றும் 99கள் அதிகம்.

கீதம்
11-10-2010, 01:53 AM
சச்சினுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே!

தலைப்பில் ஒரு பூஜ்யம் அதிகப்படியாக உள்ளதே, கவனிக்கவும்.

அன்புரசிகன்
11-10-2010, 01:56 AM
தலைப்பில் ஒரு பூஜ்யம் அதிகப்படியாக உள்ளதே, கவனிக்கவும்.

சீர்செய்யப்பட்டது.

jaffy
11-10-2010, 04:08 AM
சச்சினை ரசிக்காதவர்கள் இருக்கிறார்களா என்ன ?

சச்சினுக்கு வாழ்த்துக்கள், பகிர்ந்தமைக்கு நன்றி.

ஓவியன்
11-10-2010, 04:22 AM
இரண்டாவது டெஸ்டில் ஆவுஸ்திரேலியா வலுவான நிலையில் இருந்து கொண்டு வேகமாக ஷேவக், திராவிட்டின் விக்கட்டுக்களைக் கைப்பற்றிய நிலையில் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்....!! (ஆபத்தாண்டவன் லக்*ஷ்மன் கூட இந்த டெஸ்டில் விளையாடவில்லை.. :eek:)

வாழ்த்துகள்..!! :)

ஓவியன்
11-10-2010, 06:02 AM
93 ஓட்டங்களில் இருந்து கொண்டு இரண்டு சிக்சர்களை விளாசி தன் 49 வது சதத்தினை பெற்ற டெண்டுல்கருக்கு மீளவும் வாழ்த்துகள்..!! :)

பாரதி
11-10-2010, 07:33 AM
சுழியை சுட்டியவருக்கும்,
சீராக்கியவருக்கும் நன்றிகள்.

ஆம். இன்று விசித்திரம்தான் நிகழ்ந்தது. அடுத்தடுத்த ஆறு ஓட்டங்களால் நூறை சச்சின் கடந்தது வியப்புதான்..!

மதி
11-10-2010, 07:46 AM
அபாரமாக விளையாடி 49ம் சதம் அடித்த தலைவர் டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள்.

அனுராகவன்
11-10-2010, 09:17 AM
அபாரமான ஆட்டம்...
நான் கண்ட நல்ல மட்டயாட்டகாரர்..

Narathar
11-10-2010, 09:21 AM
சச்சினுக்கும்
சச்சினைப்போன்ற ஒரு திறமையாளரைப்பெற்ற
இந்திய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்

அனுராகவன்
11-10-2010, 03:05 PM
இன்று சச்சின் 190 நாட் ஒவுட்..அபாரமான ஆட்டம்..

அன்புரசிகன்
12-10-2010, 12:03 AM
சச்சின் இன்று 200 அடிக்கவேண்டும். அதற்கு தோனி விட்டுவைக்கவேண்டும். சச்சினுக்கு இந்த ஆட்டம் டபிள் ப்ரமோஷன் மாதிரி... அவரவர் தங்களது இஷ்ட குல தெய்வங்களை வேண்டுங்கள். :)

aren
12-10-2010, 03:52 AM
முதல் இலக்கு ஆஸ்திரேலியா எடுத்த ரன்களை முதல் நாம் எட்டவேண்டும். அதன்பிறகுதான் ரெக்கார்ட் மற்றதெல்லாம்.

ஓவியன்
12-10-2010, 04:30 AM
பெங்களூரில் இன்று டெண்டுல்கர் இரட்டைச்சதத்தினை நிலை நாட்டி விட்டார் (சச்சினின் 6வது இரட்டைச் சதம் இது :cool:), டெண்டுல்கர் தன் பக்குங்கு மேலாகவே துடுப்பெடுத்தாடி விட்டார், இனி அவுஸ்திரேலியாவை சமாளிப்பது அணியிலுள்ள மற்றவர்கள் கைகளிலும் தங்கியிருக்கிறது, முக்கியமாக பந்து வீச்சாளர்கள்.

அன்புரசிகன்
12-10-2010, 04:31 AM
சச்சின் 200 அடிச்சாச்சு. 337 பந்தில் 21 நான்குகள் மற்றும் 2 ஆறுகள் சகிதமாக தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார். துணையாக அணித்தலைவர் தோனி 18 ஓட்டங்களுடன்... இந்தியா 453 ஓட்டங்கள். 25 ஓட்டங்கள் பிந்திய நிலையில்.

மதி
12-10-2010, 04:36 AM
அட எவ்வளவு தான் வாழ்த்தறது.. ?? சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.

ஓவியன்
12-10-2010, 04:56 AM
டெஸ்டில் இத்தனை சாதனைகள் செய்தாலும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்த வரை சச்சினிடமும் ஒரு குறை உண்டு, இந்த போட்டி அந்தக் குறையை நிவர்த்தி செய்யுமா...?? :)

வியாசன்
12-10-2010, 05:17 AM
சச்சின் 214 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்

தாமரை
12-10-2010, 05:20 AM
புதிய பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் தன் விக்கெட்டை அவர்களுக்குத் தருவதில் பேருள்ளம் கொண்ட சச்சின் இம்முறையும் அதை நிரூபித்து விட்டார்.

தேநீர் இடைவேளை வரை இந்திய அணி ஆடி 200 ரன்கள் வரை குவிக்குமானால் வெற்றி இந்திய அணிப் பக்கம். 120 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியை 200 ரன்களுக்குள் அவுட் ஆக்குவதில் உள்ளது சூட்சமம்.

aren
12-10-2010, 05:30 AM
நம் மக்கள் எப்படி வெல்வது என்பதை நினைத்தே பார்க்கமாட்டார்கள். அதுதான் இப்பொழுதும் நடக்கிறது. 200 ரன்களாவது அதிகம் எடுத்தால்தான் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆதவா
12-10-2010, 05:33 AM
டெஸ்டில் இத்தனை சாதனைகள் செய்தாலும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்த வரை சச்சினிடமும் ஒரு குறை உண்டு, இந்த போட்டி அந்தக் குறையை நிவர்த்தி செய்யுமா...?? :)

என்னங்க அது??

ஆதவா
12-10-2010, 06:01 AM
கடைசி 9 ரன்னுக்கு 5 விக்கெட்,,,, சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு ரெண்டு ரன் கூட இல்லை.
சச்சின் அவுட் ஆனதும் மடமடவென எல்லாம் போயிற்று!!!
என்னே இந்திய அணியின் திறமை!!!

அன்புரசிகன்
12-10-2010, 06:03 AM
அப்படி சொல்லிட முடியாது ஆதவா... சச்சின் நிதானமாக ஆடினார். எத்தனை பந்துகளை பார்த்தவர்...

அவுஸிகளின் விக்கட்டுக்களும் இவ்வாறு வீழலாம்... பந்தவீச்சாளர்களின் கையில்....

எந்த விக்கட்டும் வீழ்த்தாத நேத்தன் ஹொரிட்ஸ் கடசி பந்து பரிமாற்றங்களில் மட்டும் தான் 2 விக்கட் எடுத்துள்ளார்... :lachen001: என்ன கொடுமை இது...

xavier_raja
12-10-2010, 06:29 AM
என்ன சொல்லி என்ன பிரோயஜனம்.. கடைசி ஐந்து விக்கெட்டுகள் இப்படியா மடமடவென்று சரியாய் வேண்டும்.. இந்தியா இன்னும் niraiya pakkuvapada வேண்டும் (nam veerargalai sonnen)

வியாசன்
12-10-2010, 06:30 AM
கடைசி 9 ரன்னுக்கு 5 விக்கெட்,,,, சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு ரெண்டு ரன் கூட இல்லை.
சச்சின் அவுட் ஆனதும் மடமடவென எல்லாம் போயிற்று!!!
என்னே இந்திய அணியின் திறமை!!!


494 ஓட்டங்களுடன் பலர் ஓவர்களை கடந்த இந்திய அணியின் டோனி கடைசியில் பொறுமையிழந்து அவுட்டானார்.

ஆதவா
12-10-2010, 06:35 AM
அப்படி சொல்லிட முடியாது ஆதவா... சச்சின் நிதானமாக ஆடினார். எத்தனை பந்துகளை பார்த்தவர்...

அவுஸிகளின் விக்கட்டுக்களும் இவ்வாறு வீழலாம்... பந்தவீச்சாளர்களின் கையில்....

எந்த விக்கட்டும் வீழ்த்தாத நேத்தன் ஹொரிட்ஸ் கடசி பந்து பரிமாற்றங்களில் மட்டும் தான் 2 விக்கட் எடுத்துள்ளார்... :lachen001: என்ன கொடுமை இது...

சச்சினை நான் குறை சொல்லவில்லை அன்பு, அவரது ஆட்டத்தில் குறை சொல்லும் தகுதி நம்மில் யாருக்குமில்லை. குறைந்த பட்சம் ஒரு 30 ரன்னாவது எடுத்திருக்கலாம்... 9 ரன்னுக்கு ஐந்து விக்கெட் என்பது எவ்வளவு கேவலமான ஆட்டம்!!!!

ஓவியன்
12-10-2010, 07:42 AM
என்னங்க அது??

டெஸ்டில் சச்சினின் அதிக பட்ச ஓட்டம் என்னவென்று பாருங்கள் புரியும், முச்சதம்னும் ஒண்ணு இருக்குலே..!! :)

மதி
12-10-2010, 07:55 AM
டெஸ்டில் சச்சினின் அதிக பட்ச ஓட்டம் என்னவென்று பாருங்கள் புரியும், முச்சதம்னும் ஒண்ணு இருக்குலே..!! :)
அடுத்த போட்டியில எடுப்பார். :icon_b:

ஆதவா
12-10-2010, 08:01 AM
டெஸ்டில் சச்சினின் அதிக பட்ச ஓட்டம் என்னவென்று பாருங்கள் புரியும், முச்சதம்னும் ஒண்ணு இருக்குலே..!! :)

ஆமாமாம்.////
ஒருநாளில் இருநூறு அடித்தாரே, அதுவே முச்சதம் எட்டியமாதிரிதானே..... :)
இருப்பினும் விரைவில் முன்னூரு எட்டுவார்!!!

அன்புரசிகன்
12-10-2010, 08:04 AM
பார்த்தீர்களா.. 2 விக்கட் சரிந்துவிட்டது. பெய்ன் வரை ஆட்டக்காரர்கள். இந்தியாவுக்கு இன்னும் நிலமை சாதகம் தான். பார்க்கலாம்.

ஆதவா
12-10-2010, 08:06 AM
பார்த்தீர்களா.. 2 விக்கட் சரிந்துவிட்டது. பெய்ன் வரை ஆட்டக்காரர்கள். இந்தியாவுக்கு இன்னும் நிலமை சாதகம் தான். பார்க்கலாம்.

அடுத்தடுத்து போயிருக்கிறது.... பார்ப்போம்... இன்றுக்குள் பேட்ஸ்மேன்கள் போய்விட்டால் போதும்..

ஓவியன்
12-10-2010, 09:57 AM
ஹர்பஜனும் ஓஜாவும் ஸ்பின்னோ ஸ்பின்னென்று ஸ்பின்னுறாங்க போல....

பிந்திய நிலவரம் 132/5..!! :)

ஆதவா
12-10-2010, 10:04 AM
ஹர்பஜனும் ஓஜாவும் ஸ்பின்னோ ஸ்பின்னென்று ஸ்பின்னுறாங்க போல....

பிந்திய நிலவரம் 132/5..!! :)

இன்னும் ரெண்டு விக்கட் இன்னிக்கு போச்சுன்னா, ஆஸிக்கு ஆசி நஹி!

ஓவியன்
12-10-2010, 10:07 AM
இன்னும் ரெண்டு விக்கட் இன்னிக்கு போச்சுன்னா, ஆஸிக்கு ஆசி நஹி!

எனக்கு என்னவோ அந்த பாண்டிங்கின் விக்கெட்டைத் தூக்கினாலே போதும் போலத் தெரியுது...!! :), பாண்டிங் போனால், பெயினுக்கு பெயின்(pain) கூடிடும் இல்லே..!! :)

வியாசன்
12-10-2010, 11:06 AM
எனக்கு என்னவோ அந்த பாண்டிங்கின் விக்கெட்டைத் தூக்கினாலே போதும் போலத் தெரியுது...!! :), பாண்டிங் போனால், பெயினுக்கு பெயின்(pain) கூடிடும் இல்லே..!! :)


ஓவியன் உங்கள் ஆசையை ஷாகிர்கான் நிறைவேற்றிவிட்டார். 72 ஓட்டங்களுடன் ரிக்கிபாண்டிங் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்

ஓவியன்
12-10-2010, 11:06 AM
ஐ பாண்டிங் காலி..!! :)

மதி
12-10-2010, 11:18 AM
அநேகமா நாளைக்கு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு தான் போகப்போறேன்னு நினைக்கிறேன்.

மதி
12-10-2010, 11:18 AM
7 விக்கட் காலி

ஆதவா
12-10-2010, 01:06 PM
7 விக்கட் காலி

நாளைக்கு தேநீர் இடைவேளைக்குள் ஆல் அவுட் ஆகவேண்டும்.
அப்பறமா நாம தூள்பரத்தலாம்!!!

அறிஞர்
12-10-2010, 03:44 PM
கிரிக்கெட் என்றால் சச்சின் நினைவுக்கு வருகிறார்...
விரைவில் 15000 எட்டட்டும்..

அமரன்
12-10-2010, 06:51 PM
சச்சினுக்கு வாழ்த்து.

ஆதவா
13-10-2010, 04:51 AM
219 / 9

202 ரன்கள் முன்னிலை
------------------------------
பின் : 223 / 10

206 ரன்கள் முன்னிலை! 207 எடுத்தால் ஜெயிக்கலாம்!!! ஜெயிப்பார்களா???

வியாசன்
13-10-2010, 04:56 AM
223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிட்டனர் 206 ஓட்டங்களால் முன்னிலை

ஓவியன்
13-10-2010, 09:29 AM
இரண்டாவது போட்டியிலும் வெற்றியீட்டிய இந்திய அணிக்கு வாழ்த்துகள்..!! :)

ஆரென் அண்ணாவின் கோபம் குறைந்திருக்குமென நம்புகிறேன். :)

aren
13-10-2010, 09:30 AM
இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். அனைத்து ஆட்டக்காரர்களும் சிறப்பாக ஆடினார்கள்.

அடுத்த முறை ஆஸ்திரேலியா போய் அங்கேயும் வெல்லவேண்டும் என்பதே என் வருப்பம்.

சிவா.ஜி
13-10-2010, 04:16 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். எப்பவாவது இந்தமாதிரி தப்பு நடந்துபோயிடுது...ஹி...ஹி...!!!

ஓவியன்
14-10-2010, 06:53 AM
எப்பவாவது இந்தமாதிரி தப்பு நடந்துபோயிடுது...ஹி...ஹி...!!!

எல்லாப் போட்டிகளிலும் கப்பு தூக்கும் டோனிக்கு விசில் போட்டிட்டு இருக்கிறம், நீங்க இப்படி சொல்லுறீங்களே..!! :D

சிவா.ஜி
14-10-2010, 03:56 PM
முதல் இன்னிங்ஸ்ல என்ன ஆச்சு பாத்தீங்கள்ல ஓவியன். 9 ஓட்டத்துக்கு 5 விக்கெட் காலி. இப்படி நிலைத்தன்மை இல்லாம இருக்கிற அணி ஜெயிச்சா...தப்புதானே....:lachen001:

பாரதி
14-10-2010, 04:15 PM
ஐ.சி.சி ஐந்து நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் சச்சின் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்! 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் துடுப்பாளர் வரிசையில் முதலிடத்திற்கு சச்சின் வந்திருப்பது இப்போதுதான். நடந்து முடிந்த ஐந்து நாள் போட்டிகளின் மூலம் 82 புள்ளிகள் பெற்று 891 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்!

சிவா.ஜி
14-10-2010, 04:20 PM
சச்சினுக்கு வாழ்த்துக்கள். சின்னப்பசங்களெல்லாம் தடுமாறும்போது கொஞ்சம் பெரிய பையன் பட்டையைக் கிளப்புறாரு. நல்லாக் கிளப்பட்டும்.

கலைவேந்தன்
15-10-2010, 08:50 AM
சச்சின் - ஒரு நடமாடும் கிரிக்கெட் ரோபோ..!

govindh
16-10-2010, 12:23 PM
சாதனை நாயகன்
சச்சினுக்கு வாழ்த்துக்கள்....!

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=459946#post459946

பூங்குழலி
28-10-2010, 11:46 AM
வாழும் இமயம் சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

அரசன்
28-10-2010, 01:56 PM
கிரிக்கெட் உலகின் சகாப்தம் - டான் பிராட்மென். ஆனால்,
கிரிக்கெட் உலகின் புதிய சகாப்தம் சச்சின் என்று நான் சொல்வேன். ஏனெனில், சச்சின் கிரிக்கெட்டிற்காகவே பிறந்த்தவர். சச்சினுக்கு நிகர் சச்சின்தான்!

அன்புரசிகன்
09-11-2011, 11:49 PM
ஒருவருடத்திற்கு 2 நாட்க்கள் முன்னதாக சச்சின் தனது டெஸ்ட் போட்டியில் 15000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை தாண்டியுள்ளார்... (15048 - சராசரி 56.16) இந்த சாதனையை இறுதியாக நடந்த மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் இரண்டாவது இனிங்சில் நிகழ்த்தியுள்ளார்.

சச்சினுக்கு அடுத்தபடியாக ராவிட் 12860 (சராசரி 52.92) உம் பொன்டிங் 12495 (சராசரி 52.94) உம் உள்ளார்கள்....

பத்தாயிரம் தாண்டியவர்களில் சச்சின் அதிக சராசரியுடன் இருக்கிறார்.

http://www.espncricinfo.com/db/PICTURES/CMS/138900/138905.jpg