PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 12



rambal
16-11-2003, 09:02 AM
முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 12

இந்தியா ஒரு பெண்மை நாடு.. முரட்டுத்தனமான ஆண் அதிகார தேசம் இல்லை..
வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் தெரியும்.. ரத்தம் குடிக்கும் புரட்சிகள் என்று எதுவும் கிடையாது..
சரித்திரத்தில் நடந்த ஒரு புரட்சியைக்கூட சிப்பாய்கலகம் என்றுதான் அழைக்கின்றனர்..
சுதந்திரம் கூட அடுத்த உயிரை ஹிம்சிக்காத அஹிம்சாமுறையில் தான் வாங்கினோம்..
இல்லை இல்லை கொடுத்தார்கள்.. வாங்கிக் கொண்டோம்.. உயிர்ப்பலி வாங்காத தேசம்
கண்டிப்பாக பெண்தான்.. அதனால்தான் என்னவோ.. இங்கு சுவாசிக்கும் காற்றில் இருந்து ஓடும் நதி வரை
பெண்கள் பெயராக வைத்து பூஜித்து அவர்களை கடவுளாக்கிவிட்டோம்.. அத்தோடு அவர்கள் மனங்களையும் கல்லென்று
சொல்லி.. அவர்களையும் உணர்ச்சிகள் அற்ற தோல் சிலையாக்கி.. வெறும் போகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்..

குட்டைப்பாவாடையும் அரைக்கை சட்டையுமாய் பள்ளிக்கு, சுரிதார் குடை சகிதம் அலுவலுக்கு, ஜீன்ஸ் டீ சர்ட்டுமாய் கல்லூரிக்கு,
காட்டன் சேலையும் குடையும் படத்தில் வரும் ஆசிரியை, கண்ணாடி, பாலியஸ்டர் புடவை கொண்டை என்றால் கல்லூரி பேராசிரியை,
வெள்ளை நிற கவுன் என்றால் தேவதையாய் உயிர் காக்கும் செவிலி, கொஞ்சம் போல் கிரே கலரில் முழு நீள அங்கி என்றால்
கிறித்தவ மதர், அல்லது ஸிஸ்டர்.. மயக்கும் மல்லியும் மெல்லிய நைலக்ஸ் சேலையும் என்றால் வேசி என்று
உடைகளின் மூலமே அவர்களின் தொழிலையும் அவர்களின் தன்மைகளையும் மட்டுமே அளவிடத் தெரிந்து வைத்திருக்கும்
கொஞ்சம் கேடுகெட்ட சமூகத்தை சில தலைமுறைகளாக வளர்த்துவிட்டோம்..

- உனக்கு என்ன பிரச்சினை?
- எனக்கு ஒன்றும் இல்லை.. என்னை கல்யாணம் செய்தவனுக்குத்தான் பிரச்சினை..
- அப்படி என்ன பிரச்சினை அவனுக்கு..
- அவன் ஒரு கிராமத்தான்.. சொந்தம் விட்டுப் போகக்கூடாதென்று என்னை என் அம்மா அவளது தம்பிக்குக் கட்டிவைத்தாள்..
- அப்படியானால்.. உன் கணவன் உன் மாமன் தானே..
- ஆமாம்.. ஆனால், அவனுக்கு அந்த ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் பல வைப்பாட்டிகள்..
- அதனால்..
- அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.. ஆனால், அவன் என்னோடு கூடி முடித்த பிறகு திரும்பிப்படுத்துக் கொள்கிறான்..
பழக்கதோஷத்தில்.. மேலும், என்னிடம் இது வரை பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம்..
- அதற்கு?
- அதனால் அவனை விவாகரத்து செய்துவிட்டேன்..
- இனி என்ன செய்யப் போவதாய் உத்தேசம்..
- வேலைக்குப் போகலாம் என்றால்.. என்னுடைய முன் கதை தெரிந்த முதலாளிகள் படுக்கைக்கு அழைக்கின்றனர்..
விவாகரத்து வாங்கியவள் என்றால் அவ்வளவு இளப்பமா?
- சரி.. உனக்கு லோன் வாங்கித் தருகிறேன்.. டிஸைனர் ஷோ ரூம் மாதிரி வைத்து நடத்துகிறாயா?
- ஏன் என் மேல் இவ்வளவு கரிசனம்.. உன் மனதில் வேறு ஏதேனும் எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்..
- நீ என்னை தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாய்..
- பின் எனக்கு உதவ வேண்டும் என்று உனக்கு என்ன வந்தது? கண்டிப்பாக இன்று இல்லாவிட்டாலும் வேறு என்றாவது ஒருநாள்
என்னிடம் இருந்து நீ எதிர்பார்க்கப்போவது என் உடலைத்தானே..
- கண்டிப்பாக இல்லை..
- பின் ஏன் என் மீது உனக்கு இவ்வளவு அக்கறை?
- எனக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் உனக்கு செய்கிறேன்..
அவள் விசும்பத் தொடங்குகிறாள்..

- உனக்கு என்ன ஆச்சு?
- எனக்கு ஒன்றும் ஆகவில்லை..
- பின் ஏன் நீ இப்படி குடிக்கிறாய்.. அதுவும் சோடாவோ தண்ணியோ கலக்காமல் ராவாக?
- எனக்கு சாக பயமாக இருக்கிறது.. வாழவும்தான்..
- அதற்கு?
- அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துச் சாகிறேன்..
- அப்படி என்ன பிரச்சினை?
- உன் வகுப்புத் தோழியை உன் அப்பா உடல் உறவு கொள்வதை பார்த்திருக்கிறாயா?
- இல்லை..
- உன் வீட்டு கார் ஓட்டும் டிரைவரோடு உன் அம்மா உடல் உறவு கொள்வதை பார்த்திருக்கிறாயா?
- இல்லை..
- ஆனால், நான் இவைகளை பார்த்திருக்கிறேன்.. பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
- ஏன்?
- ஏன் என்று என்னைக் கேட்டால்? நான் பத்தாவது படிக்கும் பொழுது என் தோழியை வீட்டிற்கு அழைத்து வந்தேன்..
அவளை என் அப்பா வசியம் செய்துவிட்டார்.. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்பது என் அப்பாவிற்கும்
அம்மாவிற்கும் தெரியும்..
- அதற்கு நீ இப்படி குடித்தால் எல்லாம் சரி ஆகிவிடுமா?
- சரி ஆகாது.. ஆனால், இவைகளை மறக்க விரும்புகிறேன்..
- அதற்கு குடி ஒரு மருந்தாகாது..
- சரி.. என்னைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடு..
- மாட்டேன்.. நீ அளவிற்கதிகமாக குடித்துவிட்டு போதையில் ஏதேதோ உளறுகிறாய்..
- இல்லை.. நான் உளறவில்லை..
- நீ என்ன சொன்னாலும் நான் கொடுக்க மாட்டேன்..
- இதுவரை மூன்று பேரோடு நான் உறவு கொண்டிருக்கிறேன்.. நீ ஒருவன் தான் நான் எப்போது கேட்டாலும்
முடியாது என்று சொல்கிறாய்.. ஏன் நான் அழகாக இல்லையா?
- நீ அழகுதான்..
- பின் வேறு என்ன?
- முடியாது..
- ஏன் நீ ஆண் இல்லையா?
- நான் ஆண்தான்.. ஆனால்..
- என்ன ஆனால்?
- உன்னை என் தங்கையாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
- உண்மையாகவா?
- ஆமாம்.. எனக்கு தங்கை கிடையாது.. அதனால்தான் உன்னை..
அதன் பின் அவள் தேம்பி அழ ஆரம்பிக்கிறாள்..

- நீ கொஞ்சம் இருக்கமுடியுமா?
- ஏன் என்ன ஆச்சு?
- இல்லை.. இந்த டிசைன் முடிய லேட்டாயிடும்.. ஏற்கனவே எல்லோரும் போயிட்டாங்க.. எனக்கு பயமாக இருக்கு..
- சரி இருக்கேன்..
- மணி பத்தாயிடுச்சு.. என்னை கொஞ்சம் வீட்டில் விட்டுடுறியா?
- உன் வீட்டில் தப்பா எடுத்துக்க மாட்டாங்க..
- மாட்டாங்க..
வீட்டில்..
- எனக்கு ரெண்டு பசங்க.. இருந்தும் அவங்க பிரெண்ட்ஸ்ஸை வீட்டுக்குக் கூட்டிட்டு வரமாட்டாங்க..
ஏன்னா.. இவ இருக்கிறதுனால.. ஆனால், இவளே இன்னிக்கு உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கா..
- ஏம்மா? ஏதும் பிரச்சினையா?
- இல்லை.. உன்னை நான் பார்க்கணும்னு சொன்னேன்.. அதனாலதான்..
- என்னை ஏன் பார்க்கணும்..
- இல்லை.. இவளுக்கு ஒரு பாதுகாப்பா இருந்து இத்தனை நேரம் லேட்டாகியும்..
- அதுக்கென்னம்மா..
- இவள் உன்னப் பத்தி என்ன சொல்லி வைச்சிருக்கா தெரியுமா?
- தெரியாதே..
- மூணாவது அண்ணன்..
நான் எப்படி பஞ்சாபி குடும்பத்திற்குள் நுழைந்தேன்.. இப்போது என் கண்கள் பனித்திருந்தன..

இப்போது ஜடாமுனி சித்தர் என்னிடம் கேட்டார்..

- உனக்கு என்ன பிரச்சினை?
- எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை..
- ஓ அதுதான் பிரச்சினையா? அப்படியானால் யாரையாவது காதலி..
- அதுதான் ஏற்கனவே ஏகத்திற்கு காதலித்துவிட்டேனே..
- அதனால்தான் இந்தப் பெண்களிடம் அண்ணன் தம்பி என்று உறவு கொண்டாடுகிறாயா?
- இல்லை.. காதலின் உச்சம் இதுவாகத்தான் இருக்கமுடியும்..
- அப்படியானால்..
- ஆமாம்.. நான் இந்தப் பெண்களை காதலிக்கிறேன்.. ஆனால், இவர்கள் என் காதலியாகமுடியாது..
- ஏன்?
- நான் தேடும் முழுமை இவர்களிடம் இல்லை..
- இப்படியே போனால்?
- ஒரு நாள் நான் தேடும் ஆதியைக் கண்டுபிடிப்பேன்..
- அதுவரை..
- இது தொடரும்...

சேரன்கயல்
16-11-2003, 09:18 AM
அடடே...
ராம்பால் மறுபடி பதிக்க துவங்கிவிட்டார்...
முடிவிலியை மறுபடி முதல் அத்தியாயத்திலிருந்து படித்துவிட்டு என் கருத்தை பதிக்கிறேன்...
மீண்டும் உங்கள் பதிவுகள் தொடர்வதில் மகிழ்ச்சி ராம்பால்...

இக்பால்
16-11-2003, 09:39 AM
சேரன்கயல் தம்பி ...உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்.

இக்பால்
16-11-2003, 09:40 AM
நானும் அத்தியாயம் 11 படித்துவிட்டு வந்து சேர்கிறேன்.-அண்ணா.

சேரன்கயல்
16-11-2003, 09:49 AM
இல்லை இக்பால் அண்ணே...
ராம்பாலின் முடிவிலி வித்தியாசமான முயற்சி...முதலில் பதித்தைவை மறந்தாலும் படிக்கும் அத்தியாயாம் புரியக்கூடும்...ஆனால் ஆசிரியரின் நோக்கும் அவரது நாவலின் போக்கும் விளங்கிக்கொள்ள அல்லது சவாலை சரியாக எதிர்கொள்ள ஆரம்பம் முதலே மீண்டும் படிப்பது நல்லதாக தோன்றியது...அதான்...

இக்பால்
16-11-2003, 09:59 AM
எல்லா பகுதிகளும் வில்லங்கமான பகுதிகளாதலால் நன்றாகவே நினைவில்
இருக்கிறது. நீங்களும் எல்லா பகுதிகளையும் படித்திருப்பது எனக்கு
நினைவில் இருக்கிறது சேரன் கயல் தம்பி.

முத்து
16-11-2003, 06:18 PM
ராம்பால் அவர்களே ..
இந்த நாவல் ஒரு வித்தியாசமானது ..
என்ன ஒரு சுவாரசியம் என்றால்..

இதே பாணியில் வேறு நாவல்கள் யாராவது எழுதிப்
பக்கங்களைக் கலந்து வைத்துவிட்டால் ...
எழுதியவரைத் தவிர மற்றவர்களால் அதைப் பிரித்து எடுக்கமுடியாது ..... :D

ஒரு நாவலாசிரியர் சொன்னதாய் ஞாபகம் -...
என்னுடைய நாவல்களின் கதாபாத்திரஙகள் என்னைத்
தூங்கவிடாமல் தினம் தினம் தொந்தரவு செய்கின்றன....

இத்தனைக்கும் அவரின் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையானவை ...

அப்புறம் ....
முடிந்தால்
ஜடாமுடிச் சித்தரையும் , சங்கரையும் விசாரித்ததாய்ச் சொல்லவும் ...

இக்பால்
17-11-2003, 10:56 AM
அப்பாடி ...படித்து முடித்து விட்டேன்.

நண்பர் ராம் 11-ல் விட்டதை 12-ல் பிடித்து விட்டார்.

-அன்புடன் அண்ணா.