PDA

View Full Version : பிறவிக்கடன்



rameshkumar.rsm
10-10-2010, 08:13 AM
ஏழு கடல் தாண்டி
இமயமலையில் சென்று
செல்வம் ஈட்டினாலும் - உனது
உதிரத்தற்கு விலை ஏதும்மா!
நீ எனக்கு ஊட்டிய தாய்பாலுக்கு
விலை கேட்கின்றயே - எங்கு
என்று இந்த கடனை அடைப்பேன்.
இன்னொரு ஜென்மம் பிறந்து
அதில் உன்னை என் கருவறையில்
சுமந்து எனது உதிரத்தை
உனக்கு உணவாக கொடுக்க வேண்டும்
எனது ஆசைகளும் கனவுக்களுக்கும்
முற்றுப்புள்ளி வைத்தாய் நீ - ஆனால்
உனது விருப்பம் என்ன என்று அறிந்து
அதை நிறைவேற்ற வேண்டும்.
கண்ணீர் ஒன்றை மட்டும் - எனக்கு
சொந்தமாக்கினாய் ஆனால்
சந்தோஷத்தை மட்டும் நான்
உனக்கு தர வேண்டும்.
அம்மா என்ற வார்த்தைக்கு
அதிபதியாக மாறி அன்போடு உன்னை
அள்ளி அணைக்க வேண்டும்..........

விகடன்
10-10-2010, 08:35 AM
அம்மா என்ற தலைப்பில் எத்தனை விதமாக கவிபாடினும் படிக்க சலிக்காது.

சிவா.ஜி
10-10-2010, 10:10 AM
அம்மா செய்யறது ஒண்ணுகூட சரியில்லாம இருக்கே...

தாய்பாலுக்கு விலை கேட்கிறாள், ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறாள், கண்ணீரை மட்டுமே தருகிறாள்....

அப்படியிருந்தும் அவளுக்கு உதிரத்தை உணவாகக்(ரத்தமும் குடிப்பாளா) கொடுக்க ஆசைப்படும் மகன்....