PDA

View Full Version : நிலவைப்பிரிந்து என்றும்..!



vasanth111193
09-10-2010, 03:42 PM
நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!

அனுராகவன்
09-10-2010, 07:33 PM
உங்கள் கவியா..அப்படி என்றால் மிக நல்ல கவி..
இன்னும் தொடருங்கள்..
நல்ல வரிகள்..ம்ம் என் வாழ்த்துக்கள்..:4_1_8:

அமரன்
09-10-2010, 08:13 PM
வசந்த்!

கவிதைகளைச் சரியான இடத்தில் பதிக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நன்றி.