PDA

View Full Version : உன் நடையினிலே ..!



vasanth111193
08-10-2010, 03:13 PM
உன் அழகினிலே
அன்னப் பறவையை
அசரவைத்து...
உன் நடையினிலே
புள்ளி மானை
மிரளவைத்து...
உன் நளினத்திலே
கோலமயிலை
கோபப் படவைத்தபடி
கோதை நீ வருகிறாய்..!
எனைக் கொள்ளையிட வருகிறாய்..!

சிவா.ஜி
08-10-2010, 03:37 PM
என்னங்க வசந்த்....இன்னும் தியாகராஜ பாகவதர் காலத்திலேயே இருக்கீங்க....
நிகழ்காலத்துக்கு வாங்க....

அன்னப்பறவை, கோல மயில், புள்ளிமானெல்லாம் வழக்கொழிஞ்சிப்போயிடிச்சு....

புதுசா முயற்சி பண்ணுங்க....வாழ்த்துக்கள்.

அமரன்
08-10-2010, 05:38 PM
நீ....ண்ட பயணம் போல..

அன்னம், புள்ளிமான், கோல மயில் எல்லாம் தாண்டி வந்திருக்கிறாங்க.


அப்படியே மன்றத்தையும் சுற்றி வாங்க.

கவிதைகளை எங்கே பதிய வேண்டும் என அறியலாம்..

இது கவிஞர்கள் அறிமுகப் பகுதி!