PDA

View Full Version : மனமே எதிரி!!



அனுராகவன்
07-10-2010, 08:07 PM
மனந்தான் ஒரு
வீரனுக்கு துணை
குரங்கு மனமே
முதல் எதிரி;

மனந்தனை தடுமாறி
மாந்தர் நிலைமாறி
நெஞ்சில் வலுவிழந்து
புழுவாகி இறப்பான்;

வெற்று நிலத்தை
மேயவைக்கும்.....
குரங்கை போல்
தாவ வைக்கும்...

இதுவே இங்கனம்
மனமே எதிரி
என்பதன் அடிப்படை..........

ஆதவா
08-10-2010, 05:13 AM
மனந்தான் ஒரு
வீரனுக்கு துணை
குரங்கு மனமே
முதல் எதிரி;

மனந்தனை தடுமாறி
மாந்தர் நிலைமாறி
நெஞ்சில் வலுவிழந்து
புழுவாகி இறப்பான்;

வெற்று நிலத்தை
மேயவைக்கும்.....
குரங்கை போல்
தாவ வைக்கும்...

இதுவே இங்கனம்
மனமே எதிரி
என்பதன் அடிப்படை..........

இதை இன்னும் தாமரை அண்ணாவும் பென்ஸும் படிக்கவில்லை. படித்திருந்தால் கவிதையை பிரிச்சு மேய்ந்திருப்பார்கள்.

குரங்கு மனமே எதிரி என்பது தவறு. அவ்வாறில்லையெனில் நீங்கள் அமர்ந்து இக்கவிதையை தட்டச்சு செய்திருக்கவும் முடியாது, நான் உங்களுக்கு பதில் போட்டிருக்கவும் முடியாது.

தொடருங்கள்.

அனுராகவன்
08-10-2010, 03:47 PM
மனம் ஒரு கல் குடித்த ,பேய் பிடித்த ,தேள் கொட்டிய குரங்கு மாதிரி...
நானே இங்கு அகங்காரம்..
பின்னே எங்கும் சேதாரம்