PDA

View Full Version : LAN Networking



siva
15-11-2003, 08:07 AM
நான் ஒரு cc(cyber cafe) திறக்காலாம் என்று நினைக்கின்றேன். எப்படி LAN networking செய்வது என்று ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா?

பாரதி
16-11-2003, 01:44 AM
அன்பு சிவா,
எத்தனை கணிணிகள், என்ன ஆபரேட்டிங் சிஸ்டம் உபயோகிக்கப் போகிறீர்கள் என்பது சொன்னால் கொஞ்சம் நலம்.

poo
17-11-2003, 02:50 PM
பாரதி அவர்களே...

4-கணனிகள்..
விண்டோஸ்'2000.

எப்படி இணைப்பது?!!


விண்டோஸ்'98- வசதியானது என்கிறார்கள்.. அப்படியா? ஆமெனில் அதைவைத்து சொல்லவும்!

(எனக்கும் ஒரு ஐடியா கீதூப்பா....)

இளசு
17-11-2003, 04:56 PM
முயற்சி நனவாக வாழ்த்துகள் தம்பி பூவுக்கு..

பாலமுருகன்
18-11-2003, 02:39 AM
இந்த கேள்வி யாருக்காக? பூவுக்கா? இல்லை சிவாவுக்காக?
சரி உங்களிடம் எந்தமாதிரியான இனைப்பு உள்ளது? 1.cablemodem, 2.ISDN Leased line, 3.dialup connectivity
உங்களிடம் router உள்ளதா? ஏனென்றால் router இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ப்ராக்சி செர்வர் மென்பொருளும் மற்றும் அதற்கென்று ஒரு கனினியும் தேவைப்படாது.

ஆகையால் உங்கள் இனைப்பை பற்றி முதலில் கூறுங்கள்.

பாலமுருகன்

poo
18-11-2003, 05:58 AM
நெல்லுக்கே இறையுங்கள் பாலா...புல்லாய் இந்த பூவும் புசித்துக் கொள்கிறேன்!!

poo
18-11-2003, 06:02 AM
dialup connectivity.

router இல்லை.. (அதை வாங்க எவ்வளவு செலவாகும்... அது இருந்தால் வேகம் கூடுமா?!!)

proxy server ஒரு கணனியில் நிறுவும்பட்சத்தில் அந்த கணனியையும் உபயோகிக்கலாம் அல்லவா பாலா?

(dedicated server or non-dedicated server?!!)

பாலமுருகன்
18-11-2003, 10:44 AM
router ன் விலை 10ஆயிரம் முதல் உள்ளது.

ப்ராக்ஸி செர்வர் சாப்ட்வேர் நிருவப்பட்ட கனினியையும் உபயோக படுத்தலாம்.
என்ன ஒரு பிரச்சினை என்றால் சில வகையான பிராக்ஸி மென்பொருள் உபயோக படுத்தும்போது கிளையன் மெசினில் இருந்து நீங்கள் வீடியோ ஆடியோ சாட் செய்வது போன்ற பிரச்சினை வரும். அதாவது சில போர்ட் வழியாக செயல்படும் application தடைசெய்யப்பட்டுவிடும். ஆனால் பிராக்சி மெபொருள் நிறுவப்பட்ட கனினியில் இந்த பிரச்சினை இருக்காது. அதானல் தான் router உபயோகபடுத்துகிறோம். இதற்காக மட்டும் அல்ல.. இன்னும் நிறைய உபயோகம் நிறைந்த ஒரு கருவி. நீங்கள் 4 கனினிதான் உபயோக படுத்த போகிறீர்கள் என்றால் பிராக்ஸி போடுவது நலம்.

என்ன dialup connection உபயோக படுத்தபோகிறீர்கள்.? ISDN or PSTN?
என்ன வகையான மோடம் உங்களிடம் உள்ளது?

மேலும் விளக்க எனக்கு வசதியாக இருக்கும்

பாலமுருகன்

இளசு
18-11-2003, 04:43 PM
தொடரும் அன்புத்தம்பி பாலாவின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பாலமுருகன்
24-11-2003, 02:59 AM
எங்கே சிவாவும் பூவும்???? கேள்விகனைகளை தொடுத்துவிட்டு பாதியிலே????

poo
24-11-2003, 12:15 PM
மன்னிக்கவும் பாலா... பதிலை இன்றுதான் கண்டேன்.நன்றி!



PSTN Line.

மேலும்.. proxy (winproxy) என்ற மென்பொருள் பைரட் செய்யப்பட்டது உபயோகிக்கலாம் அல்லவா?.. (புதிதாய் வாங்க அதிக செலவு பிடிக்குமே?!)


பாலா.. ஒரு சிறு வேண்டுகோள்..

விண்டோஸ்'98- க்கே விளக்கவும்!!

பாரதி
24-11-2003, 01:02 PM
அருமை பாலா. நன்றி.

அன்பு பூ, பாலா நன்கு விளக்குவார் என்று நம்புகிறேன். அதற்கு பின்னரும் உங்களுக்கு விபரம் தேவை எனில் சொல்லுங்கள். தனிமடலில் ஆங்கிலத்தில் தர முயற்சி செய்கிறேன்.

பாலமுருகன்
24-11-2003, 02:41 PM
நீங்கள் மோடம் வழியாக உங்கள் இனையதொடர்பை அமைக்கிறீர்கள் என்று வைத்துக்கொன்டால்....

முதலில் win98 கனினியில் மோடத்தையும் ஒரு ethernet card யையும் நிறுவிகொள்ளுங்கள்.பிறகு அந்த கனினியில் இருந்து இணையதொடர்பை உங்கள் மோடம் வழியாக அமைகிறதா? என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் நெட்வொர்க் கார்டில் (பிராக்ஸ்சி மெசினில்) 192.168.3.1 என்ற IP யையும் 255.255.255.0 subnet mask ம் கொடுக்கவும். இங்கு gateway மற்றும் DNS எதுவும் கொடுக்க தேவையில்லை. பின்பு கடைசியாக பிராக்ஸி செர்வரில் நீங்கள் குறிப்பிட்ட winproxy மென்பொருளை நிறுவிகொள்ளுங்கள். அதில் install wizard தொடரவும். மிகவும் எளிதானது. அதில் internal IP என்றிருக்கும் பகுதியில் 192.168.3.1 என்றும் external IP modem என்று கொடுத்து தொடரவும். இப்போது நீங்கள் finish செய்யும் போது winproxy இனைய தொடர்பை ஏற்படுத்தும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் வெற்றிகரமாக டிக் மார்க் போட்டுக்கொண்டே வரும். இறுதியில் எல்லாம் சுபமான பிறகு உங்கள் கிளையன்ட் கணினிக்கு வருவோம்....

முறை 1

கிளையன்ட் கணினியில் மேல்சொன்னவாறு IP முகவரி 192.168.3.2 என்றும் subnetmask 255.255.255.0 என்றும் கொடுத்து internet explorer ல் 192.168.3.1 என்ற முவரியை மற்றும் போர்ட் என் (இது winproxy setting பகுதியை திறந்து பார்த்தால் தெரியும்) பிராக்ஸி முகவரியாக கொடுத்தால் இப்போது உங்கள் கிளையண்ட் pc வழியாக நீங்கள் பிரவுஸ் செய்யலாம்.

முறை 2

winproxy ல் setting>protocol என்ற பகுதியில் DHCP எண்றிருக்கும் அதை டிக் செய்து ஒருமுறை அப்ளிகேசனை மூடி திறக்கவும். இப்போது அனைத்து கிளையன்ட் கனினியிலும் rightclick NetworkNeighbourhood>TCPIP> அங்கே ஏதேனும் IP முகவரி இருந்தால் நீக்கிவிட்டு optain IP address
automatically என்றிருப்பதை செலக்ட் செய்து அப்ளை செய்யவும். இப்போது கிளையண்ட் கனினி ரீபூட் செய்யவேண்டும் என்று கேட்கும். ரீபூட் ஆகிவரும்போது தானாகவே பிராக்ஸி செர்வர்மூலமாக ip,subnetmask,gateway மற்றும் DNS அனைத்தும் பன்னிக்கொள்ளும். இப்போது நீங்கள் அதுவும் பிராக்ஸி முகவரி உங்கள் பிரவுசருக்கு கொடுக்க வேண்டியதில்லை.

ஏதேனும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நானும் நண்பர்களும் உதவ தயாராய் இருக்கிறோம்

பாலமுருகன்

poo
25-11-2003, 06:30 AM
மிக எளிதான தெளிவான விளக்கம் பாலா...

நன்றிகள் பல!!

இப்படி DNS கொடுக்காமல் எல்லா ISP -யுடைய package-களும் வேலை செய்யும் அல்லவா?!

மேலும்..

router வைத்து எப்படி நிறுவுவது எனவும் சொல்லிவிட்டால்.. எதிர்காலத்தில் உங்களை தொல்லைப்படுத்த மாட்டேனே!!

ப்ளீஸ்..ப்ளீஸ்..

பாலமுருகன்
25-11-2003, 07:06 AM
இதில் என்ன தொல்லை பூ!!!
DNS கொடுக்காமல் ப்ராக்ஸி முகவரி மட்டும் கொடுத்தால் சில பேக்கேஜ் மட்டுமே வேலை செய்யும். உதாரனத்திற்கு....
யாஹ மெசெஞ்சரில் உங்கள் நன்பர் டைப் செய்யும் போது (your friend is typing) என்று வரும். இது DNS வழியாக சென்றால் மட்டுமே வரும். சில ப்ராக்ஸி சாப்ட்வேர்கள் இதையும் தடுத்துவிடும்.பிறகு ப்ராக்ஸி வழியாக மெசெஞ்சரில் டைப் செய்து அனுப்பினால் உடனடியாக உங்கள் நன்பருக்கு போய்சேராது. கொஞ்சம் தாமதமாகும். அதிலும் நீங்கள் cache enable செய்திருந்தால் சுத்தம்.... லாகவுட் செய்தால் கூட லேட்டாகத்தான் ஆகும். இதுபோன்று இன்னும் பல.....

உங்களிடம் router இருப்பின்..
உங்கள் ப்ராக்சி செர்வரில் மற்றுமொரு நெட்வொர்க் கார்டு நிறுவிகொள்ளவும்.அதற்கு உங்கள் இனையதொடர்பாளரிடமிருந்து IP,subnet,Gateway,DNS பெற்றுகொள்ளுங்கள். இப்போது winproxy install wizard போனால் external IP ல் மோடம் பதிலாக புதிதாக நிறுவப்பட்ட நெட்வொர்க் கார்டின் IP முகவரியை மாற்றி அமைக்கவும். கிளையண்ட் சைடில் ஒருமாறுதலும் இல்லை. மேலே சொன்ன இரண்டு இரண்டு முறையில் ஏதாவது ஒன்றை பின்பற்றவும்.

poo
25-11-2003, 07:14 AM
பொறுமையான விளக்கங்களுக்கு நன்றி பாலா...


மேலும் விண்டோஸ்'2000-னில் நிறுவ என்ன செய்யவேண்டும்?! (மாற்றங்கள் நிறைய உள்ளதா.. )

இணையம் வேகமாக இயங்க என்னதான் செய்யவேண்டும்?!
router வேகத்தை கூட்டுமா?

நான் சோதித்துப் பார்க்கலாம் என்றால் என்னிடம் உள்ள 7 கணனிகளிலுமே விண்'2000 தான் உள்ளது!

எனவே...

மீண்டும் ப்ளீஸ்..

poo
25-11-2003, 07:19 AM
DNS மட்டும்தான் ISP-யில் தருவார்கள் என நினைக்கிறேன்..

ஒவ்வொருமுறையும் நிறுத்தி மீண்டும் கனெக்ட் செய்யும்போது IP வெவ்வேறாக அல்லவா இருக்கும்?.

பாலமுருகன்
25-11-2003, 08:06 AM
இரண்டு முறையில் உங்களுக்கு IP அமையும்.
Static , dynamic
Static IP உங்களுக்கு leased line ஆக இருக்கும் பட்சத்தில் அமையும்.
dynamic IP நீங்கள் மோடம் வழியாக கனெக்ட் செய்யும் போது கிடைக்கும். இது அடிக்கடி மாறிகொண்டே இருக்கும். ஆதலால் நீங்கள் மோடம் வழியாக dialup செய்கிறீர்கள் என்றால் router இங்கு வராது. அப்படியே வருமாயின் ஒரு IP இருந்தால் வேலைசெய்ய முடியாது. மோடம் உபயோகிக்க போகிறீர்கள் என்றால் நேரிடையாக உங்கள் ப்ராக்சி செர்வரில் கனெக்ட் செய்துகொள்ளத்தான் வேண்டும். இங்கு router தெவையில்லை. மேலும் நான் குறிப்பிட்டது static IP with leased line கானது. மோடம் உப்யோகிப்பது என்றால் முன்சொன்ன முறையை கையாளவும்.


நான் தற்காலிகமாக விடைபெறுகிறேன்

http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=34701#34701

poo
25-11-2003, 10:08 AM
மிக்க நன்றி பாலா...

உங்கள் புதியபணிக்கு வாழ்த்துக்கள்...

நீங்கள் இல்லாவிட்டால் நான் யாரிடம் சந்தேகம் கேட்பது?!

பாலமுருகன்
29-11-2003, 05:01 AM
பூ நான் திரும்ப வந்துவிட்டேன். வாழ்த்துகளுக்கு நன்றி,.உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டதா? ஆரம்பித்த சிவாவை கானோமே என்னவாயிற்று??

poo
30-11-2003, 06:35 PM
திரும்பியதில் பெரும்மகிழ்ச்சி பாலா...

கேட்ட கேள்விகள் இன்னமும் கேள்விகளாகத்தான்.. முடியும்போது விடைகள் தாருங்கள்.

பாலமுருகன்
01-12-2003, 01:13 PM
கேள்விகளை கேளுங்கள் பூ!!!!!!!!!!!

poo
01-12-2003, 02:38 PM
கேபிள் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு எவ்வளவு GB மாதத்திற்கு தேவைப்படும் என கேட்கிறார்கள்.. தெரியலயென்னு முழித்தபோது.. சாப்ட்வேர் இருக்கு பாருங்கன்னு சொல்லிட்டாங்க..

நான் எங்கள் செண்டரில் ஒரு நாளைக்கு எவ்வளவு GB உபயோகிக்கிறேன் என்பதை எப்படி அறிவது?!

ஏதேனும் இலவச சாப்ட்வேர்கள் உள்ளனவா?

சொல்லுங்க பாலா..

(என் சிற்றறிவுப்படி temp-ல இருக்கிற files size எல்லாம் கூட்டி.. அப்புறம் download manager-ல இருக்கிறதோட கூட்டி.. தினமும் மண்டை காயறேன் தலைவா..)

பாலமுருகன்
02-12-2003, 06:59 AM
நீங்கள் கூட்டி கழிப்பதும் ஏறக்குறைய ஒத்துபோகும். இருந்தாலும் இது சரியான முறையல்ல.. நீங்கள் கேட்பது router ல் ஒரளவுக்கு சாத்தியம். பார்த்து சொல்றேன் பூ.... கொன்சம் பொறுங்க...

poo
02-12-2003, 11:53 AM
பாலா..

இன்னொரு உதவி..

எனது கணனி ஒன்று (விண்டோஸ்'98) திடீரென தகராறு செய்கிறது...

windows protection error. (Vxd or vdl...... loading error.)
system haulted

இப்படி வந்து நின்றுவிடுகிறது..

safe mode-ல் வேலை செய்கிறது...


normal mode- select செய்தால் அதற்குமேல் உள்ளே போகவில்லை..
என்ன செய்வது...
மீண்டும் ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவ வேண்டுமா?!


அதில் சில முக்கிய கோப்புகள் உள்ளன.. அதைமட்டுமாவது எடுக்க முடியுமா?!
உடன் பதில் பிளீஸ் பாலா..

பாரதி
02-12-2003, 04:22 PM
அன்பு பூ,
இப்போது இருக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மேலேயே மறுமுறையும் விண்டோஸ் 98-ஐ நிறுவ முடிகிறதா என்று பாருங்கள். (என்ன vxd என்று வருகிறதா...?)
அவசரம் எனில் வன் தகட்டை கழற்றி வேறொரு கணிணியில் slave - ஆக பொருத்தி அதில் உள்ள தேவையான கோப்புகளை மற்ற வன் தகட்டில் காப்பி செய்து கொள்ளுங்கள். கண்டிப்பாக கோப்புகளை மீட்க முடியும்.

ஒரு ஆலோசனை: முக்கிய கோப்புகள் எனில் CD-யில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாமே..! CD ரைட்டர்ன் விலையும் CDயின் விலையும் குறைவே. CD நீண்ட நாட்கள் உழைக்கும்.

poo
02-12-2003, 04:55 PM
அன்பு பாரதி..

நன்றி..

அப்படி மீண்டும் நிறுவும் பட்சத்தில் கோப்புகள் காணாமல்போய்விடுமல்லவா?

இந்த பிரச்சிணை வர என்ன காரணமாக இருக்கும்.. முன்பு ஒருமுறை இப்படி protection error வந்து நின்ற சிஸ்டத்தில் மதர்போர்டையே மாற்ற வேண்டியிருந்தது..

slave -ஆக நான் அதை நிறுவி இயக்கினால் பிரச்சினை இல்லாமல் வருமா.. உள்ளே ஏதும் மாற்றங்கள் செய்யவேண்டுமா.?
ஏனெனில் நான் சி.டி ரைட்டர் மற்றும் சி.டி.ரோம் இரண்டையும் ஒரு சிஸ்டத்தில் இணைத்த புதிதில் அடிக்கடி ஒன்று மாற்றி ஒன்று தெரியாமல் போகும்.. நிறுத்தி மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்யவேண்டி இருந்தது...

சி.டி-யில் பதியலாம்.. ஆனால் அவை முற்றுபெற்ற கோப்புகள் அல்ல.. கம்பெனி கணக்கு வழக்குகள்.. தினமும் அதில் வேலை செய்யப்படுகிறது.. திடீர் என இப்படி நிகழும்போது என்ன செய்வது?!

baranee
13-01-2004, 01:24 AM
பூ அவர்களே,

இப்போது இருக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மேலேயே மறுமுறையும் விண்டோஸ் 98-ஐ நிறுவினால் உங்கள் கோப்புகள் நிச்சயம் காணாமல்போய்விடாது. ஆனாலும் கவனமாக கையாலுங்கள்.

இந்த பிரச்சினை வர காரணம்
1.உங்கள் பதிவேடு பாழ் பட்டிருக்கலாம்.
2.ஏதேனும் சில கோப்புகலை வைரஸ் தாக்கி இருக்கலாம்.
3.மதர்போர்டில் உள்ள "கேஷ் மெமொரி" பழுதாகி இருக்கலாம்,

நன்றி
பரணீ

poo
14-01-2004, 02:36 PM
உங்கள் ஆலோசனைக்கு நன்றி பரணீ அவர்களே..

அடிக்கடி மன்றம் வாருங்கள்!!

siva
01-05-2004, 04:50 PM
அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் அதிக வேலையாக இருந்து விட்டேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பர்களே!

siva
02-05-2004, 05:03 AM
நான் 10 கணினிகளை இணக்க விரும்புகின்றேன். விண்டோஸ் ME பயன்படுத்தலாம் என்று இருக்கின்றேன். router இருக்கின்றது. சற்று விளக்கம் தேவை.

baranee
02-05-2004, 10:04 AM
நண்பர் சிவா...

மேலும் சில விவரங்கள் கொடுத்தால் விளக்க உதவியாக இருக்கும்.
Router - உங்களிடம் leased Line உள்ளதா அல்லது ( Hub அல்லது switch - ஐ) router என்கிறீர்களா ?
10 கணினிகளையும் இணையத்தில் இணைக்க போகிறீர்களா அல்லது வெறும் LAN - மட்டுமா ?

இக்பால்
02-05-2004, 10:06 AM
Hub என்றால் என்ன?

baranee
02-05-2004, 10:27 AM
HUB என்பது இரண்டிற்கு மேற்பட்ட கணினிகளை குறும்பரப்பு வலையமைப்பில் (LAN) பகிர்ந்து (sharing) கொள்ள, கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் ஒரு கருவி.

http://www.techsoup.org/images/simplenetwork.gif

siva
05-05-2004, 05:14 PM
10 கணினிகளையும் இணையத்தில் இணைக்க வேண்டும். leased Line என்றால் என்ன? என்னிடம் இருப்பது router தான். ஆனால் நீங்கள் கேட்டது விளங்கவில்லை.

அருள்
10-05-2004, 09:00 AM
மீண்டும் நிறுவினால் சரியாகும் என நினைக்கிறேன். பாலா என்ன சொல்கிறாரோ? பார்ப்போம்.

இந்தப் பிரச்சினை அதிகமாக விண்டோஸ் எக்ஸ்-பி, மில்லினியம் இவற்றில் வருகிறதே. ஏன்?

சில சமயம் ரேம் நினைவு பதிப்பகம் மாற்றினால் நடக்கிறது. சில சமயம் பார்மேட் செய்தால் சரியாகிறது. எதனால்?

பாலமுருகன்
11-05-2004, 05:39 AM
அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் அதிக வேலையாக இருந்து விட்டேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பர்களே!

சிவா எங்கே போயிருந்தீர்கள்... ?? இந்த பதிவை நீங்கள் துவங்கி ஆறுமாத காலம் ஆகிவிட்டது.. இன்னமும் உங்கள் பிரச்சினை தீரவில்லையா? விரைவில் உங்கள் பிரச்சினை தீர வாழ்த்துகள்.

நண்பர் பரணீ கேள்விகளுக்கு அருமையான விளக்கம் அளித்துகொண்டிருக்கிறார்.

நன்றி
பாலா

பாலமுருகன்
11-05-2004, 05:41 AM
மீண்டும் நிறுவினால் சரியாகும் என நினைக்கிறேன். பாலா என்ன சொல்கிறாரோ? பார்ப்போம்.

இந்தப் பிரச்சினை அதிகமாக விண்டோஸ் எக்ஸ்-பி, மில்லினியம் இவற்றில் வருகிறதே. ஏன்?

சில சமயம் ரேம் நினைவு பதிப்பகம் மாற்றினால் நடக்கிறது. சில சமயம் பார்மேட் செய்தால் சரியாகிறது. எதனால்?

நன்பர் அருள் அவர்களே ...புரியவில்லையே... உங்கள் பிரச்சினை என்னவென்று தெளிவாக விளக்கினால்.. உங்களுக்கு உதவ ஏதுவாக இருக்கும்.

நன்றி
பாலா

பாலமுருகன்
11-05-2004, 05:45 AM
10 கணினிகளையும் இணையத்தில் இணைக்க வேண்டும். leased Line என்றால் என்ன? என்னிடம் இருப்பது router தான். ஆனால் நீங்கள் கேட்டது விளங்கவில்லை.

சிவா.. 10 கணினிகளையும் நேரிடையாக இணையத்தில் இணைக்கவேண்டுமா?( செக்யூரிட்டியை கவனத்தில் கொள்க) இல்லை பிராக்ஸி வழியாக இணைக்கவேண்டுமா?

Leased line என்பது உங்களுக்கென்று தனியே வழங்கபட்ட லைன் ஆகும். இது பெரும்பாலும் 24 மணிநேரமும் இணைய வசதி வேண்டுவோரிடம் இருக்கும்.

நன்றி
பாலா

siva
14-05-2004, 06:28 PM
உங்கள் வாழ்த்துக்கும் தகவலுக்கும் நன்றி பாலா. செக்யூரிட்டி என்பதனை இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா? ஆம் 10 கணினிகளையும் நேரிடையாக இணையத்தில் இணைக்க விரும்புகின்றேன்.

siva
26-01-2005, 05:04 PM
நண்பர்களுக்கு மிக்க நன்றி. நான் இன்னும் 10 கணினிகளை இணைக்க விரும்புகின்றேன். அதாவது 20 கணினிகள்.

siva
19-02-2005, 11:09 AM
நண்பர்கள் அனைவரும் படு பிஸியாகிவிட்டார்கள் போலும்?!

vetri
12-09-2007, 11:39 AM
உங்கள் பதிவைப்படித்தேன்... மிக இலகுவான வழிகாட்டல்.
நான் நேரடி இணைப்பை பயன்படுத்துகிறேன்...
வேறு சில proxy பற்றிய விளக்கம் தரமுடியுமா..
நான் analog proxy பாவித்திருக்கிறேன். ஆனால் அதன் வேகம் மிகக்குறைவு. பக்கங்களை திறக்கமுடிவதில்லை

தமிழாக்கம் செய்யப்பட்டது... தமிழாக்கத்தில் தவறிருப்பின் மன்னிக்க...

வெற்றி அவர்களே.... உங்கள் பதிவுகளை தயவு செய்து தமிழில் பதியுங்கள்... இனி இது போல் வரும் உங்கள் ஆங்கில பதிவுகள் நீக்கப்படும்.

உங்களுக்கு உதவி ஏதும் தேவைப்படும் பட்ச்சத்தில் பொறுப்பாளர்களை தனிமடலில் அணுகுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவர்.

Hi Friend
read lan connection simple and easy guide
I am using Direct connection
Proxy server install in winproxy disturb connection provider
Please tell me any more proxy
I have used anlog proxy but connection is very slow and don't open pages
by
Vetri