PDA

View Full Version : உங்கள் மூளை வளம்பெற ‘SUPERBRAIN YOGAjoy001
07-10-2010, 09:41 AM
நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த ‘SuperBrain Yoga’.
உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

அட, சாதாரணமாணவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் மிக நல்ல பலனைக்கொடுக்கும்.

பிறகு என்ன, நேரம் கிடைக்கும் போது அப்பப்ப தோப்புக்கரணம் போடவேண்டியதுதானே? கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!??

மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?


http://bp2.blogger.com/_deHJfT_2pm4/R-XWP2lkWoI/AAAAAAAAAbo/90JuKSee2_0/s1600-h/ma08-brain-exercise-f.gif
1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

இந்த தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.


by barthee under

விகடன்
07-10-2010, 09:52 AM
பயனுள்ள தகவல்.
இனிமேல் நம்மவர்கள் தோப்புக்கரணந்தான் போடப்போகிறார்கள்.
----
மதத்தில் சொல்லப்பட்ட தோப்புக்கரணம் கோவில்களில் போடும்போது சிரிப்பாகத்தான் இருக்கும். காதைக்கூட பிடிக்க சோம்பல் படைத்தவர்கள் கைகைமட்டும் குறுக்காக வைத்து மூன்றுதடவை முழங்காலிற்கு ஒரு அதிர்வை கொடுத்துவிட்டு கும்பிட்டுவிட்டு போயிடுவார்கள்.

எப்படியிருந்த தொழுகைமுறை இப்படியாகிவிட்டது என்று நொந்துகொள்ளத்தான் முடியும்.

Ravee
07-10-2010, 11:35 AM
ஜாய் உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது .... இன்னும் தாருங்கள் ... தாகமாக இருக்கிறோம் :)

விகடன்
07-10-2010, 11:41 AM
தாகமாக இருக்கிறோம் :) தாமதிக்காதீர்.
தண்னீர் அருந்தவும்:icon_b:

Ravee
07-10-2010, 12:05 PM
தாமதிக்காதீர்.
தண்னீர் அருந்தவும்:icon_b:

ஆவலுடன் இருக்கிறேன் அடுத்த மாதம் கத்தார் வரும் போது சேர்ந்தே அருந்தலாம் .... H2O தாங்க வேற ஏதும் இல்லை .... ஹா ஹா ஹா :lachen001:

விகடன்
07-10-2010, 01:05 PM
உங்களுக்கெல்லாம் H2O கொடுக்கப்படாது. H2O2 தான் கொடுக்க வேண்டும்

த.ஜார்ஜ்
07-10-2010, 03:59 PM
[QUOTE=joy001;494605
பிறகு என்ன, நேரம் கிடைக்கும் போது அப்பப்ப தோப்புக்கரணம் போடவேண்டியதுதானே?
[/QUOTE]

இப்படியேதான்பா...... வாழ்க்கை ஓடிட்டு இருக்கு.

அனுராகவன்
07-10-2010, 07:52 PM
நானும் தினமும் செய்கிறேன்..:lachen001::lachen001:

Narathar
11-10-2010, 08:38 AM
பயனுள்ள தகவல்
தகவலுக்கு நன்றி

யவனிகா
12-10-2010, 07:20 AM
மதி ஓடி வா. உனக்கு உபயோகமான பதிவு போட்டிருக்காங்க பாரு.:lachen001::lachen001::lachen001:

பூமகள்
12-10-2010, 03:54 PM
இப்படியேதான்பா...... வாழ்க்கை ஓடிட்டு இருக்கு.
படிச்சதும் சிரிப்பு வந்துட்டது ஜார்ஜ் அண்ணா.. :rolleyes::sport-smiley-018::sport-smiley-018::icon_36::icon_36::medium-smiley-041:


ஆனாலும், உங்களையெல்லாம் பார்த்தா பாவமா தான் இருக்கு.. :grin::grin::medium-smiley-088:

சிவா.ஜி
18-10-2010, 04:50 PM
பெரும்பாலான கணவர்கள்....ஏன் இவ்ளோ புத்திசாலிகளா இருக்காங்கன்னு இப்பதான் புரியுது.....

நல்லதொரு தகவலுக்கு நன்றி நண்பரே.

nandabalan
19-10-2010, 01:57 AM
முன்னோர்கள் சொல்லியது எல்லாமே அருமை. இன்றைய காலக்கட்டத்தில் அதைப் பின்பற்றாமல் இருப்பதுதான் தவறாய் முடிகிறது.

xavier_raja
19-10-2010, 01:21 PM
நண்பர் அவர்கள் கொடுத்த இந்த யோகாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நன்புகிறேன்.. தகவலுக்கு மிக்க நன்றி..

hariharans
24-10-2010, 07:57 AM
நல்ல தகவல். மிக்க நன்றி.

catwalk
06-11-2010, 07:28 AM
பள்ளி காலத்தில் என் நண்பன் ஒருவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்குவான்; அவன் தினசரி காலையில் பிள்ளையார் கோவிலுக்குப் போவது வழக்கம். இப்பதான் தெரியுது, அவன் மூளையின் ரகசியம்...

அமரன்
06-11-2010, 07:51 PM
அனுபவஸ்தர்கள் சொன்னால் சரியாகத்தா இருக்கும்.

indiran
12-07-2011, 09:01 PM
ஆமாம் பள்ளியில் படிக்கும்போது மட்டும் ஏன் ரொம்ப புத்திசாலியாக இருந்தேன் என்று இப்போதுதான் தெரிகிறது. நன்றிகள் பல.

கௌதமன்
21-07-2011, 05:01 PM
நல்ல விஷயம்! ஒரே ஒரு சந்தேகம் தோப்புக்கரணம் என்ற பெயர் எப்படி வந்தது?

aren
22-07-2011, 02:09 AM
நல்ல விஷயம்! ஒரே ஒரு சந்தேகம் தோப்புக்கரணம் என்ற பெயர் எப்படி வந்தது?

நல்ல கேள்வி

vseenu
26-09-2011, 08:43 AM
பயனுள்ள தகவலுக்கு நன்றி

sarcharan
30-09-2011, 08:34 AM
அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா
பாடவா பாட்டுப்பாடி ஆடவா

தோர்பி கரணம் தொக்கி தோப்புகரணம் ஆச்சோ?

Thoppu Karanam is a form of sit up excercise pracised by the Hindus. They do it while worshipiing Lord Ganesha (The Elephant Headed God) a.k.a. Vigneshwara.

They hold their eartips with fingers and make a situp. 'Dorbi karnam' is the sanskrit word which means holding one's ears!

Read more: http://wiki.answers.com/Q/What_is_the_advantages_of_doing_thoppu_karanam#ixzz1ZQHUwp2E

seguwera
30-09-2011, 11:11 PM
தோப்பு கரணம் நல்லா இருந்தது. உண்மையில் நல்ல உடற்பயிற்சி

:icon_rollout:
ஒரு சந்தேகம் குட்டிக்கரனத்துக்கும் ஏதாவது பலனுண்டா ஹீ... ஹீ... :icon_rollout: