PDA

View Full Version : தொடரும் மழை...!



செல்வா
06-10-2010, 06:44 AM
காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…

தாமரை
06-10-2010, 06:51 AM
நான் உள்ளே மழைன்னு கேள்விப்பட்டனே!!!:sprachlos020::sprachlos020::sprachlos020:

ஆதவா
06-10-2010, 07:13 AM
காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…

கல்யாணம் முடிஞ்சிடுச்சா?
சொல்லவேயில்ல?? :D

விகடன்
06-10-2010, 07:30 AM
நான் உள்ளே மழைன்னு கேள்விப்பட்டனே!!!:sprachlos020::sprachlos020::sprachlos020:

உள்ளே இருக்கும் மழையின் விளைவுதான் வெளியே தொடர்ந்துகொண்டிருக்கும் மழை!

மதி
06-10-2010, 07:35 AM
நான் உள்ளே மழைன்னு கேள்விப்பட்டனே!!!:sprachlos020::sprachlos020::sprachlos020:
உள்ளேன் அய்யா சொல்லுதோ? :icon_b:

விகடன்
06-10-2010, 07:39 AM
உள்ளேன் அய்யா சொல்லுதோ? :icon_b:

:confused: :confused: :confused:

Nivas.T
06-10-2010, 09:25 AM
பெய்யென பெய்யும் மழை
நல்லமழை பெய்யட்டும்
நாடும் வீடும் சிறக்கட்டும் :D

த.ஜார்ஜ்
06-10-2010, 04:58 PM
நனையுங்கள். நனையுங்கள்.. நன்றாக நனையுங்கள்.[அதுதான் இங்கேயும் மழையா?]

பாரதி
06-10-2010, 05:13 PM
வசந்தகாலம் வரப்போவதை கொண்டாடுகிறதோ மழை..?
மாலை மழையால் கழுத்து நனையும் வரையும் பின்னரும் தொடரட்டும் மழை.

செல்வா... உங்க விளக்கத்தையும் சொல்லுங்களேன்.

செல்வா
08-10-2010, 08:43 AM
பின்னூட்ட ஊக்கமளித்த தாமரை, ஆதவா, மதி,விராடன்,நிவாஸ்,ஜார்ஜ் மற்றும் பாரதி அனைவருக்கும் நன்றிகள்.

பாரதியண்ணா...
விளக்கம் இன்னொரு உரைநடைப் பதிவாக வரும்... :icon_ush:

அமரன்
08-10-2010, 06:04 PM
ஆம்..
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
மழையும்..

ஏன் வீட்டுக்குள்ளயே அடைபட்டுக் கிடக்கே..