PDA

View Full Version : அவரோ? இவரோ? எவரோ? (45 - 48)



கீதம்
06-10-2010, 03:52 AM
(1)

தாவும் பொன்மானொன்று
தானைத் தலைவனாய்
மன்றப் புல்வெளியில்
மேய்கிறது, பாய்கிறது,
ஆய்கிறது, வேய்கிறது,
ஓய்ந்தமரும் வேளையில்
உதிர்க்கிறது தங்கப்புள்ளிகள்!

*****

(2)

கடவுளையும், கன்னியையும்
கசக்கிப் பிழிந்து சாறெடுத்து
கவிதை தருவானவன்,
கவிதைத்தரு ஆனவன்,
கவிதை தரும் வானவன்!

*****

(3)

அந்தத்துவம் இந்தத்துவம்
என தத்துவங்கள் பல விதைப்பான்;
எந்தத்துவமானாலும்
பந்துக்குள் காற்றாய்
பைந்தமிழில் அடைப்பான்;
கவிதைகளை வாழவைத்து
அவற்றின் தலைகளைக் காவு கொடுப்பான்!

*****

(4)

கடிவாளமிடப்படா
கருங்(க்)குதிரைகளின் வேகத்துக்கு
விரல்களால் ஈடுகொடுக்கும் வித்தை
கைவரப்பெற்றவன்,
மன்றத்தாயின் வரம் பெற்றவன்!
மூர்த்தி பெரிது, அவர்
கீர்த்தி அதனினும் பெரிது!

*****

(5)

மன்றத்தின் மணிமுடி
வயசிலோ வணங்காமுடி!
வலதுகால் வைத்து வருவோரை
ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
இந்த இனியவருக்கு
மரியாதை வழங்காமையே
மரியாதை வழங்கலாம்!

*****

(6)

உள்ளுவதெல்லாம்
உயர்வாய் உள்ள....
துள்ளியதெல்லாம்
தொய்ந்து துவள....
உள்ளதையெல்லாம்
சொல்வதா? கொல்வதா?
குழப்பமேகத்துக்குள்
குளிர்நிலவு!

*****

(7)

சீறிவரும் புரவியொன்று
சிறு ஓய்வு கொண்டதின்று!
மாறிவரும் நாளில்
மன்றமெங்கும் துள்ளல் நடைபோடும்,
சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
சேணத்தில் சுமந்துசெல்லும்!

*****

(8)

அழகிய கையெழுத்துக் கண்டால்
பழகிய எவரும்
பழிப்பரோ தமிழை?
பண்பு, பரிவு, பாசமென்னும்
முப்பரிமாணப் பெட்டகம்,
பெயரும், அவரும்!

*****

(9)

இரவில் இல்லாதவர்,
இரவில் இருப்பவர்!
படம்பார்த்து கதைசொல்வதுபோல்
இவர் கதைசொல்லி, படங்காட்டுவார்.
பிரம்மனுடன் ரகசியபோட்டியோ?
படைக்கிறாரே பல புதியமுகங்களை!

*****

கண்மணி
06-10-2010, 04:16 AM
தாவும் பொன்மானொன்று
தானைத் தலைவனாய்
மன்றப் புல்வெளியில்
மேய்கிறது, பாய்கிறது,
ஆய்கிறது, வேய்கிறது,
ஓய்ந்தமரும் வேளையில்
உதிர்க்கிறது தங்கப்புள்ளிகள்!

*****

புழுக்கை போடும் பொன்மான் யாருக்கோ அம்மானாமே..

தானைத் தலைவன் என்கிறீர் நீர்.. தானே தலைவன் என்றிருப்பதாக சிலர் சொல்லக் கேள்வி..

ஆனாலும் இந்தமான் புல்லை மட்டுமல்ல, புலாலையும் மேயுமாம்.


ஆய்ந்து பாய்ந்து வேய்ந்து மேய்ந்து ஓய்ந்து அப்படின்னு படிச்சி காய்ந்து போன கோய்(யி)ந்து தா - மரை யோ?

(2)

கடவுளையும், கன்னியையும்
கசக்கிப் பிழிந்து சாறெடுத்து
கவிதை தருவானவன்,
கவிதைத்தரு ஆனவன்,
கவிதை தரும் வானவன்!

*****
மிச்சத்தை எல்லாம் விட்டுட்டீங்க.. ஆதவா தானே..

(3)

அந்தத்துவம் இந்தத்துவம்
என தத்துவங்கள் பல விதைப்பான்;
எந்தத்துவமானாலும்
பந்துக்குள் காற்றாய்
பைந்தமிழில் அடைப்பான்;
கவிதைகளை வாழவைத்து
அவற்றின் தலைகளைக் காவு கொடுப்பான்!

*****
"த்துவ"த்தில் "இச்"சுவம் ஆதன் தான்

(4)

கடிவாளமிடப்படா
கருங்(க்)குதிரைகளின் வேகத்துக்கு
விரல்களால் ஈடுகொடுக்கும் வித்தை
கைவரப்பெற்றவன்,
மன்றத்தாயின் வரம் பெற்றவன்!
மூர்த்தி பெரிது, அவர்
கீர்த்தி அதனினும் பெரிது!

*****
மூர்த்தின்னு சொல்றீங்க.. தக்ஸோ?
(5)

மன்றத்தின் மணிமுடி
வயசிலோ வணங்காமுடி!
வலதுகால் வைத்து வருவோரை
ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
இந்த இனியவருக்கு
மரியாதை வழங்காமையே
மரியாதை வழங்கலாம்!

*****

அமரன்... ஹி ஹி அமரனைப் பத்தி உங்களுக்குச் சரியா தெரியலை...

(6)

உள்ளுவதெல்லாம்
உயர்வாய் உள்ள....
துள்ளியதெல்லாம்
தொய்ந்து துவள....
உள்ளதையெல்லாம்
சொல்வதா? கொல்வதா?
குழப்பமேகத்துக்குள்
குளிர்நிலவு!

*****

ஹை!!! மதி அங்கிள்...

(7)

சீறிவரும் புரவியொன்று
சிறு ஓய்வு கொண்டதின்று!
மாறிவரும் நாளில்
மன்றமெங்கும் துள்ளல் நடைபோடும்,
சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
சேணத்தில் சுமந்துசெல்லும்!

*****

சிவா,ஜி அண்ணாதானே...

(8)

அழகிய கையெழுத்துக் கண்டால்
பழகிய எவரும்
பழிப்பரோ தமிழை?
பண்பு, பரிவு, பாசமென்னும்
முப்பரிமாணப் பெட்டகம்,
பெயரும், அவரும்!

*****
அன்புரசிகன் அண்ணா!! அவர் கையெழுத்து தானே

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
(9)

இரவில் இல்லாதவர்,
இரவில் இருப்பவர்!
படம்பார்த்து கதைசொல்வதுபோல்
இவர் கதைசொல்லி, படங்காட்டுவார்.
பிரம்மனுடன் ரகசியபோட்டியோ?
படைக்கிறாரே பல புதியமுகங்களை!

*****

ஒரே ஃபோட்டோவில் பிரம்மா ஆன இரவி அண்ணா!!!


எல்லாம் சரியா கணிச்சிருக்கனா?

பூமகள்
06-10-2010, 05:19 AM
ஆஹா.. சொக்க வைக்கிறீர்களே கீதமக்கா..

கலக்கல்ஸ்..

பன்முகம் கொண்ட பலரின் சில முகத்தை மட்டுமே புரிந்திருக்கிறீர்களோ??

ஆய்வு செய்தால் ஒவ்வொருவர் பற்றியும் பல சொல்லலாம்..

கண்மணியக்கா சரியா சொல்லியிருக்காங்களா சொல்லுங்க.. அமரன் அண்ணா பற்றி இன்னும் ஆகழ்வாராய்ச்சி செய்யுங்க.. அவர் அவ்வளவு எளிதில் அரிதியிட முடியாதவர்... :cool:

தமிழ்ல ஏதும் முதுகலைப் பட்டம் முடிச்சிருக்கீங்களா அக்கா?? :eek: அசத்துங்க.. :)பேச்சு மூச்சு இல்லை.. பாராட்டுகள் அக்கா.

Ravee
06-10-2010, 07:21 AM
மன்ற பெரியவர்கள் பட்டியலில் நான் கடைசியில் முதலாய் ...
தகுதி உண்டா தெரியவில்லை !!!
நன்றி கீதம் :p :) :p
உங்கள் மனதில் இந்த சகோதரனுக்கும் இடம் தந்ததற்கு .... :) :p :)

விகடன்
06-10-2010, 07:35 AM
தமிழ்மன்றத்தை நேசிப்போர் பலரிருக்கையில் தமிழ்மன்றத்தின் பதிவாளர்களையும் நேசிக்கும் ஒருவர்!

புரிந்துகொள்ளலும் பகிர்தலும் நன்றாக இருக்கிறது. பெயரிற்கேற்ப பதிவுகள் :)

Ravee
06-10-2010, 07:49 AM
புதிர் போட்ட கீதத்துக்கு ஒரு "ஓ" போட்டால் ., விடை தேடிய கண்மணிக்கு ஒரு "ஓஹோ" போடலாம்....:lachen001: :lachen001: :lachen001:

Nivas.T
06-10-2010, 09:09 AM
பிரமாதம்.............. பிரமாதம்..............
பிரமாதம்................

என்னே ஒரு கவித்துவம்
என்ன ஒரு அடையாள மையம்
என்ன ஒரு வரியமைப்பு

சிவா.ஜி
06-10-2010, 09:27 AM
கணிப்பை பாராட்டுவதா....கவிச்சுவையை பாராட்டுவதா....
கலக்கியிருக்கீங்கம்மா கீதம்.
கண்மணி அசத்தலோ அசத்தல்.

பூ சொன்ன மாதிரி...அமரனை ஒரு கட்டுக்குளோ....கோணத்திலோ...அறுதியிட முடியாது.

தாமரையும் அங்கனமே....

வாழ்த்துக்கள் கீதம் & கண்மணி.

மதி
06-10-2010, 09:29 AM
அசத்திட்டீங்க.. அதிலும் குளிர்நிலவு பாவம்..:D:D

ஆதி
06-10-2010, 12:28 PM
அக்காவ் அசத்தி புட்டீங்க...

கண்மணி அக்காவின் விளக்கம் எல்லாரையும் தெளிவாக கண்டுக்க உதவியது..

//தலைகளைக் காவு கொடுப்பான்!//

நெனச்சு நெனச்சு சிரிச்சிட்டு இருந்தேன் அக்கா :D :D :D

த.ஜார்ஜ்
06-10-2010, 04:41 PM
ஆதவா..ஆதவா... போட்டி ஆரம்பமாயிடுச்சி.

கீதம்.. வார்த்தைகளை நயமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.கவிதையாகவும் இருக்கிறது. விடுகதை போலும் தொனிக்கிறது.கலக்குங்க..[எல்லாரையும் கண்மணி வந்துதான் கண்டு பிடிச்சி தரவேண்டியிருக்கு..]

கீதம்
07-10-2010, 01:19 AM
(1)

புழுக்கை போடும் பொன்மான் யாருக்கோ அம்மானாமே..

தானைத் தலைவன் என்கிறீர் நீர்.. தானே தலைவன் என்றிருப்பதாக சிலர் சொல்லக் கேள்வி..

ஆனாலும் இந்தமான் புல்லை மட்டுமல்ல, புலாலையும் மேயுமாம்.


ஆய்ந்து பாய்ந்து வேய்ந்து மேய்ந்து ஓய்ந்து அப்படின்னு படிச்சி காய்ந்து போன கோய்(யி)ந்து தா - மரை யோ?

(2)

மிச்சத்தை எல்லாம் விட்டுட்டீங்க.. ஆதவா தானே..

(3)

"த்துவ"த்தில் "இச்"சுவம் ஆதன் தான்

(4)


மூர்த்தின்னு சொல்றீங்க.. தக்ஸோ?

(5)

அமரன்... ஹி ஹி அமரனைப் பத்தி உங்களுக்குச் சரியா தெரியலை...

(6)

ஹை!!! மதி அங்கிள்...

(7)

சிவா,ஜி அண்ணாதானே...

(8)

அன்புரசிகன் அண்ணா!! அவர் கையெழுத்து தானே

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

(9)

ஒரே ஃபோட்டோவில் பிரம்மா ஆன இரவி அண்ணா!!!


எல்லாம் சரியா கணிச்சிருக்கனா?

கலக்கல் கண்மணியின்
அலசல் வெகு அசத்தல்!
புள்ளியைப் புழுக்கையாக்கியதில் மட்டும்
மெல்லிய மனக்குடைச்சல்!



ஆஹா.. சொக்க வைக்கிறீர்களே கீதமக்கா..

கலக்கல்ஸ்..

பன்முகம் கொண்ட பலரின் சில முகத்தை மட்டுமே புரிந்திருக்கிறீர்களோ??

ஆய்வு செய்தால் ஒவ்வொருவர் பற்றியும் பல சொல்லலாம்..

கண்மணியக்கா சரியா சொல்லியிருக்காங்களா சொல்லுங்க.. அமரன் அண்ணா பற்றி இன்னும் ஆகழ்வாராய்ச்சி செய்யுங்க.. அவர் அவ்வளவு எளிதில் அரிதியிட முடியாதவர்... :cool:

தமிழ்ல ஏதும் முதுகலைப் பட்டம் முடிச்சிருக்கீங்களா அக்கா?? :eek: அசத்துங்க.. :)பேச்சு மூச்சு இல்லை.. பாராட்டுகள் அக்கா.

நன்றி, பூமகள். நான் தமிழில் இளங்கலை கூட இல்லை.
உங்களுக்கான பதில் பின்னால் வருகிறது.


மன்ற பெரியவர்கள் பட்டியலில் நான் கடைசியில் முதலாய் ...
தகுதி உண்டா தெரியவில்லை !!!
நன்றி கீதம் :p :) :p
உங்கள் மனதில் இந்த சகோதரனுக்கும் இடம் தந்ததற்கு .... :) :p :)

புதிர் போட்ட கீதத்துக்கு ஒரு "ஓ" போட்டால் ., விடை தேடிய கண்மணிக்கு ஒரு "ஓஹோ" போடலாம்....:lachen001: :lachen001: :lachen001:

நன்றி, ரவி.


தமிழ்மன்றத்தை நேசிப்போர் பலரிருக்கையில் தமிழ்மன்றத்தின் பதிவாளர்களையும் நேசிக்கும் ஒருவர்!

புரிந்துகொள்ளலும் பகிர்தலும் நன்றாக இருக்கிறது. பெயரிற்கேற்ப பதிவுகள் :)

தமிழ் மன்றம் என்பதே உறவுகளின் பந்தம்தானே? நன்றி, விராடன் அவர்களே.


பிரமாதம்.............. பிரமாதம்..............
பிரமாதம்................

என்னே ஒரு கவித்துவம்
என்ன ஒரு அடையாள மையம்
என்ன ஒரு வரியமைப்பு

நன்றி, நிவாஸ்.


கணிப்பை பாராட்டுவதா....கவிச்சுவையை பாராட்டுவதா....
கலக்கியிருக்கீங்கம்மா கீதம்.
கண்மணி அசத்தலோ அசத்தல்.

பூ சொன்ன மாதிரி...அமரனை ஒரு கட்டுக்குளோ....கோணத்திலோ...அறுதியிட முடியாது.

தாமரையும் அங்கனமே....

வாழ்த்துக்கள் கீதம் & கண்மணி.

நன்றி, அண்ணா.


அசத்திட்டீங்க.. அதிலும் குளிர்நிலவு பாவம்..:D:D

நன்றி, மதி.


அக்காவ் அசத்தி புட்டீங்க...

கண்மணி அக்காவின் விளக்கம் எல்லாரையும் தெளிவாக கண்டுக்க உதவியது..

//தலைகளைக் காவு கொடுப்பான்!//

நெனச்சு நெனச்சு சிரிச்சிட்டு இருந்தேன் அக்கா :D :D :D

நன்றி, ஆதன்.


ஆதவா..ஆதவா... போட்டி ஆரம்பமாயிடுச்சி.

கீதம்.. வார்த்தைகளை நயமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.கவிதையாகவும் இருக்கிறது. விடுகதை போலும் தொனிக்கிறது.கலக்குங்க..[எல்லாரையும் கண்மணி வந்துதான் கண்டு பிடிச்சி தரவேண்டியிருக்கு..]

நன்றி, ஜார்ஜ் அவர்களே!

கீதம்
07-10-2010, 01:21 AM
தரவரிசைப் பட்டியல்
தொகுக்கும் தகுதி எனக்கின்னுமில்லை,
அகரவரிசைப் பட்டியலோ என்றால்
அதுவும் இங்கு சரிவரவில்லை.

எண்ணத்தில் எழுந்த
வண்ணங்களைக் குழைத்து
தீட்டிய (கவனிக்கவும், திட்டிய அல்ல)
எழுத்தோவியங்களே யாவும்!
புண்படாவண்ணம்
எண்ணம் பகிர்ந்தேனென்று
இறுமாப்பு கொள்கிறேன், நானும்!

ஐந்து வரிகளில் அடைத்திட இயலுமோ,
அளவிலா அன்புள்ளங்களையும், அவர்தம்
எழுத்தாளுமைகளையும்?

நான் பார்த்த கோணங்களையும்
என்னிடம் காண்பிக்கப்பட்ட பக்கங்களையும்
முன்னிறுத்தியே வரையப்படுகின்றன,
நானறிந்த முக்கோணங்களும், நாற்கரங்களும்!

மன்ற சொந்தங்களே! யாவும்
என் மனம் ஏந்திய பிம்பங்களே!
முரணிருந்தால் மன்னியுங்கள்!
விரும்பினால் அரும்பும்
விரைவில் இதுபோல் இன்னும்
சிலபல பரிச்சயமலர்கள்!

அய்யோ அய்யய்யோவென்று
அங்கு அலறிய ஆதவாவுக்கு
அநேக நன்றி!

கண்மணி
07-10-2010, 02:58 AM
கலக்கல் கண்மணியின்
அலசல் வெகு அசத்தல்!
புள்ளியைப் புழுக்கையாக்கியதில் மட்டும்
மெல்லிய மனக்குடைச்சல்!

!

அக்கா, அண்ணன் கிட்ட நான் கத்துகிட்ட பாலபாடமே நல்லது எல்லா இடத்திலும் இருக்கு. ஆனா அதைப் புரிஞ்சிக்காம நாமதான் தப்பா எடுத்துக்கறோம்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற்ய் வள்ளுவர் சொல்லலியா..

புழுக்கைன்னா மானின் கழிவுன்னு நினைப்பதாலதானே இப்படி யோசிக்கறீங்க.

புழுக்கை எப்படி வருதுன்னு பாருங்க..

மான் புல்லை மேயுது... ஜீரணம் செய்யுது. ஜீரணம் செய்தபின்பு மிச்சம் இருக்கும் நார்ச்சத்து புழுக்கை ஆகுது.

இந்தப் புழுக்கை இருக்கே.. மறுபடி அதே புற்களுக்கு உரமா போகுது..

அண்ணனும் அப்படித்தான்.. கவிதையை மேயறது மட்டுமில்லாமல் மென்னு அரைச்சு ஜீரணம் செய்வார். அதில் இருக்கும் சத்தை உறிஞ்சுக்குவார். ஜீரணிக்க முடியா சக்கையை புழுக்கையா அதாவது பின்னூட்டமா தருவார். புழுக்கை புல்லுக்கு உரம். அதில் இருக்கும் உரத்தை வச்சுகிட்டு நம்ம கவிஞர்களின் கவிதைப் பயிர் மேலும் செழிக்கும்.

இதைப் புரிஞ்சவங்க கிடை போடுவாங்க.. தங்களோட மனவளத்தை பெருக்கிக்கொள்வாங்க. புரியாதவங்க அசிங்கம் பண்ணுதுன்னு நினைச்சுப்பாங்க.

ஆபத்தான விஷத்தையும் பயனுள்ள விஷயமா மாத்தறது இதுதானுங்க அக்கா..

மீண்டும் ஒருமுறை அண்ணன் சொன்னதை சொல்லறேன்.

எல்லா விஷயங்களிலும் நல்லது இருக்கு...

அந்த தங்க மான் போடறது புழுக்கையா இல்லையா என்பதை மன்றப் புல்வெளிகளே சொல்லட்டுமே!!!

Ravee
07-10-2010, 06:16 AM
அக்கா, அண்ணன் கிட்ட நான் கத்துகிட்ட பாலபாடமே நல்லது எல்லா இடத்திலும் இருக்கு. ஆனா அதைப் புரிஞ்சிக்காம நாமதான் தப்பா எடுத்துக்கறோம்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற்ய் வள்ளுவர் சொல்லலியா..

புழுக்கைன்னா மானின் கழிவுன்னு நினைப்பதாலதானே இப்படி யோசிக்கறீங்க.

புழுக்கை எப்படி வருதுன்னு பாருங்க..

மான் புல்லை மேயுது... ஜீரணம் செய்யுது. ஜீரணம் செய்தபின்பு மிச்சம் இருக்கும் நார்ச்சத்து புழுக்கை ஆகுது.

இந்தப் புழுக்கை இருக்கே.. மறுபடி அதே புற்களுக்கு உரமா போகுது..

அண்ணனும் அப்படித்தான்.. கவிதையை மேயறது மட்டுமில்லாமல் மென்னு அரைச்சு ஜீரணம் செய்வார். அதில் இருக்கும் சத்தை உறிஞ்சுக்குவார். ஜீரணிக்க முடியா சக்கையை புழுக்கையா அதாவது பின்னூட்டமா தருவார். புழுக்கை புல்லுக்கு உரம். அதில் இருக்கும் உரத்தை வச்சுகிட்டு நம்ம கவிஞர்களின் கவிதைப் பயிர் மேலும் செழிக்கும்.

இதைப் புரிஞ்சவங்க கிடை போடுவாங்க.. தங்களோட மனவளத்தை பெருக்கிக்கொள்வாங்க. புரியாதவங்க அசிங்கம் பண்ணுதுன்னு நினைச்சுப்பாங்க.

ஆபத்தான விஷத்தையும் பயனுள்ள விஷயமா மாத்தறது இதுதானுங்க அக்கா..

மீண்டும் ஒருமுறை அண்ணன் சொன்னதை சொல்லறேன்.

எல்லா விஷயங்களிலும் நல்லது இருக்கு...

அந்த தங்க மான் போடறது புழுக்கையா இல்லையா என்பதை மன்றப் புல்வெளிகளே சொல்லட்டுமே!!!



http://www.lunchensemble.com/images/DancingDeer.gif


இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !!!

இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !!!

இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !!!

கீதம்
07-10-2010, 06:23 AM
கண்மணியின் மணியான விளக்கமும், ரவியின் விளக்கமான படமும் போதும் போதும் என்னும் அளவுக்கு விளக்கி, என் அறியாமையை விலக்கி, அறிவு விளக்கை ஏற்றிவிட்டன. நன்றி, மக்களே.

தாமரை
07-10-2010, 09:34 AM
http://www.lunchensemble.com/images/DancingDeer.gif

[CENTER]இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !!!
/CENTER]

படம் சூப்பர்.

பிரதீப்புக்கு ஒரு கவிதை, தலைக்கு ஒரு கவிதை அப்படின்னு முன்னால எல்லாம் ஒருத்தருக்கு பலபேர் கவிதை எழுதுவாங்க.

ஆதவாவும் கீதமும் இப்போ எல்லோருக்கும் கவிதை எழுதறாங்க...

நல்ல முயற்சி

கீதம்
08-10-2010, 01:12 AM
படம் சூப்பர்.

பிரதீப்புக்கு ஒரு கவிதை, தலைக்கு ஒரு கவிதை அப்படின்னு முன்னால எல்லாம் ஒருத்தருக்கு பலபேர் கவிதை எழுதுவாங்க.

ஆதவாவும் கீதமும் இப்போ எல்லோருக்கும் கவிதை எழுதறாங்க...

நல்ல முயற்சி

நன்றி, தாமரை அவர்களே!
எவரும் விசனப்படாதவரை இவ்விளையாட்டு தொடரும்.

கீதம்
08-10-2010, 01:14 AM
(10)
இருப்பதை இல்லையென்கிறாய்;
இல்லாததை இருக்கிறதென்கிறாய்!
இருக்கிறதோவென எண்ணுவதற்குள்
இல்லையென்று சொல்லிச் சிரிக்கிறாய்!
ஆம்! இல்லையென ஒப்புக்கொள்கையில்
இருக்கிறதேயெனத் திறந்துகாட்டுகிறாய்!
பெண்மானே, உன் விழிகளைக் கொண்டே
வேடிக்கை காட்டுகிறாய்!

*******

(11)
சிறுகதையூர் செல்லும் வண்டியில்
சிறுநெரிசலுண்டாகிவிட,
நான் இந்த வண்டியில் வரலையென்று
எட்டரை மணிக்குள் வண்டியில் ஏறிக்கொண்டு,
சொந்தக்கதை, சோகக்கதை,
நொந்த கதை, நூலான கதையென்று
வேறு வேறு ஊர்களுக்கு
வெகு உல்லாசமாய் பயணிக்கிறார்!

******

(12)
அறுசுவை விஞ்சிய ஆக்கங்கள் ஆக்கி,
மன்றத்தில் படையலிட்டார்;
மணிவிருதுகள் வென்றுவிட்டார்!
இல்லத்தில் படையலிட்டால்
இதயங்கள் வென்றிடுவார்!
எச்சரிக்கை தேவை;
இதயங்களால் நிறைந்திருப்பதே
இவருடைய அரசவை!

*******

(13)
அவிழ்ந்த அரும்புந்தன் நறுமணத்தை
கமழ்ந்த நற்கவிச்சரமென்றேன் நான்!
தவழும் மழலையென்னைப் புகழ்ந்து
தடுமாறச் செய்யாதே என்றாய் நீ!
நான் காணாத வேளையிலோ
கபடி விளையாடிக் களிக்கிறாய்!
குறும்பூ கொண்ட குறும்பு?

******

(14)
பொன்னுலைக்களம்தன்னில்
பொற்பாளங்கள் பலவும்
புடம்போடக் காத்திருக்க...
உக்கிரமிழந்த கங்குகள் யாவும்
வெண்ணீறு பூத்திருக்க....
ஊதுகுழலை ஊதாகுழலாக்கி,
எந்த ஊரைப் பார்க்கப் போனாரோ,
எங்கள் ஊர்ப்பொற்கொல்லர்?

******

பூமகள்
08-10-2010, 03:46 AM
காலம் பல முன்னிருந்து
காற்றில் கலந்திருந்து
கார்குளிர்காலத்தில்
கவிக்கதைமழை தநதாயே..
ராகம் கேட்டு
பலர் காதில் பனி..!!

:rolleyes::D:D

கண்மணி
08-10-2010, 04:47 AM
யார் யார்னு வேற யாராச்சும் கண்டுபிடிங்களேன்...

நான் கொஞ்ச நாள் வேடிக்கைப் பார்க்கணும்

பூமகள்
08-10-2010, 05:01 AM
(10)
இருப்பதை இல்லையென்கிறாய்;
இல்லாததை இருக்கிறதென்கிறாய்!
இருக்கிறதோவென எண்ணுவதற்குள்
இல்லையென்று சொல்லிச் சிரிக்கிறாய்!
ஆம்! இல்லையென ஒப்புக்கொள்கையில்
இருக்கிறதேயெனத் திறந்துகாட்டுகிறாய்!
பெண்மானே, உன் விழிகளைக் கொண்டே
வேடிக்கை காட்டுகிறாய்!

*******

இது கண்ணுக்குக் கண்ணான கண்மணி அக்கா. :) சரிங்களா?? :icon_ush:


(11)
சிறுகதையூர் செல்லும் வண்டியில்
சிறுநெரிசலுண்டாகிவிட,
நான் இந்த வண்டியில் வரலையென்று
எட்டரை மணிக்குள் வண்டியில் ஏறிக்கொண்டு,
சொந்தக்கதை, சோகக்கதை,
நொந்த கதை, நூலான கதையென்று
வேறு வேறு ஊர்களுக்கு
வெகு உல்லாசமாய் பயணிக்கிறார்!******
இது ஜார்ஜ் அண்ணா. ஹி ஹி.. :)

(
12)
அறுசுவை விஞ்சிய ஆக்கங்கள் ஆக்கி,
மன்றத்தில் படையலிட்டார்;
மணிவிருதுகள் வென்றுவிட்டார்!
இல்லத்தில் படையலிட்டால்
இதயங்கள் வென்றிடுவார்!
எச்சரிக்கை தேவை;
இதயங்களால் நிறைந்திருப்பதே
இவருடைய அரசவை!

*******இது யாருன்னு தெரியலியே.. :confused:

(
13)
அவிழ்ந்த அரும்புந்தன் நறுமணத்தை
கமழ்ந்த நற்கவிச்சரமென்றேன் நான்!
தவழும் மழலையென்னைப் புகழ்ந்து
தடுமாறச் செய்யாதே என்றாய் நீ!
நான் காணாத வேளையிலோ
கபடி விளையாடிக் களிக்கிறாய்!
குறும்பூ கொண்ட குறும்பு?

******
ஹிஹி.. :rolleyes::icon_03::huepfen024::wub::medium-smiley-100:


(14)
பொன்னுலைக்களம்தன்னில்
பொற்பாளங்கள் பலவும்
புடம்போடக் காத்திருக்க...
உக்கிரமிழந்த கங்குகள் யாவும்
வெண்ணீறு பூத்திருக்க....
ஊதுகுழலை ஊதாகுழலாக்கி,
எந்த ஊரைப் பார்க்கப் போனாரோ,
எங்கள் ஊர்ப்பொற்கொல்லர்?

******அக்னி பிளம்போ?? :icon_ush::icon_rollout:

அன்புரசிகன்
08-10-2010, 05:09 AM
அறுசுவை விஞ்சிய ஆக்கங்கள் ஆக்கி,
மன்றத்தில் படையலிட்டார்;
மணிவிருதுகள் வென்றுவிட்டார்!
இல்லத்தில் படையலிட்டால்
இதயங்கள் வென்றிடுவார்!
எச்சரிக்கை தேவை;
இதயங்களால் நிறைந்திருப்பதே
இவருடைய அரசவை!

எனக்கு கவிதைகள் படிக்க பெரிசா அறிவில்ல. ஆனா இத மேலோட்டமா பார்த்தா அவங்க கலையரசி அக்காவோ...

கீதம்
08-10-2010, 05:13 AM
*******

இது கண்ணுக்குக் கண்ணான கண்மணி அக்கா. :) சரிங்களா?? :icon_ush:
******
இது ஜார்ஜ் அண்ணா. ஹி ஹி.. :)


இது யாருன்னு தெரியலியே.. :confused:


ஹிஹி.. :rolleyes:


அக்னி பிளம்போ?? :icon_ush::icon_rollout:

எல்லாம் சரி. ஆனா எங்க கலையக்காவை விட்டுட்டீங்களே!:traurig001:

பாராட்டுகள் பூமகள்.

கீதம்
08-10-2010, 05:14 AM
எனக்கு கவிதைகள் படிக்க பெரிசா அறிவில்ல. ஆனா இத மேலோட்டமா பார்த்தா அவங்க கலையரசி அக்காவோ...

சும்மா சொல்லாதீங்க,
சூப்பராக் கண்டுபிடிக்கிறீங்க. பலே!:icon_b:

பூமகள்
08-10-2010, 05:17 AM
இதயங்களால் நிறைந்திருப்பதே
இவருடைய அரசவை!
இதை நான் அன்புரசிகன் அண்ணாவோன்னு குழம்பிட்டேன் அக்கா.. அதான் சொல்லலை.. :icon_rollout:

நன்றிகள் அக்கா., :)

ஆதவா
08-10-2010, 05:35 AM
முதலில் படிக்கும் போது உடனே தோணவில்லை, ஆனால் தலைப்பு காட்டி கொடுத்துவிட்டது. பிறகு சாவகாசமாக நிதானித்தேன்.
இருந்தாலும் என்னை இப்படியா அசிங்க அசிங்கமாகத் திட்டுவது??? traurig001:
கண்மணியின் விளக்கங்கள் பலே!

தொடருங்கள் சகோதரி!
(கலையக்காவை கூட்டிட்டு வாங்க சீக்கிரமா)

தாமரை
08-10-2010, 05:47 AM
(1)

தாவும் பொன்மானொன்று
தானைத் தலைவனாய்
மன்றப் புல்வெளியில்
மேய்கிறது, பாய்கிறது,
ஆய்கிறது, வேய்கிறது,
ஓய்ந்தமரும் வேளையில்
உதிர்க்கிறது தங்கப்புள்ளிகள்!


*****

தாவும் மான் என்று தாமரையை முன்னால சொல்லிட்டு...

அதன் பின்னால் மன்றத்தில தாமரை என்ன செய்யறார் என்று சொல்லி இருக்கீங்க. எளிதாக கண்டு பிடித்து விடக் கூடிய ஒன்று..

ஆதவா
08-10-2010, 05:55 AM
தாவும் மான் என்று தாமரையை முன்னால சொல்லிட்டு...

அதன் பின்னால் மன்றத்தில தாமரை என்ன செய்யறார் என்று சொல்லி இருக்கீங்க. எளிதாக கண்டு பிடித்து விடக் கூடிய ஒன்று..

கீதம் அக்காவோட பழைய அவதார்ல மான் இருக்கும், கூடவே புள்ளிகளும் இருக்கும். அதனால அந்த கவிதை அவங்களுதோன்னு நினைச்சேன். தலைவின்னு போட்டிருந்தா சரியா இருந்திருக்கும்!!!

தாமரை
08-10-2010, 05:57 AM
(1)

(2)

கடவுளையும், கன்னியையும்
கசக்கிப் பிழிந்து சாறெடுத்து
கவிதை தருவானவன்,
கவிதைத்தரு ஆனவன்,
கவிதை தரும் வானவன்!


*****

வானவன் - வானத்தில் உள்ளவன் - அமரனா, நிலா, சூரியன் சம்பந்தப்பட்டவரா எனப் பார்க்கணும்.

கவிதி என்பதால் இரவி சூரியன் மதி எல்லாம் அடிபட்டுப் போறாங்க. ஆதனா கூட இருக்கலாம் னு தோணும்..

ஆனால் கன்னியைக் கசக்கி என்றவுடன் தனியா நிக்கிறது ஆதவாதான்.

ஆனாலும் நீங்க ஆதவா வோட பெண்பா வை முழுசா எல்லோரின் பின்னூட்டத்தோட படிச்சே ஆகணும். சுட்டி இங்கே..

http://tamilmantram.com/vb/showthread.php?t=13586

தாமரை
08-10-2010, 06:02 AM
(1)


(3)

அந்தத்துவம் இந்தத்துவம்
என தத்துவங்கள் பல விதைப்பான்;
எந்தத்துவமானாலும்
பந்துக்குள் காற்றாய்
பைந்தமிழில் அடைப்பான்;
கவிதைகளை வாழவைத்து
அவற்றின் தலைகளைக் காவு கொடுப்பான்!


*****

பைந்தமிழில் அடைப்பான் என்ற வரியியும் "த்துவங்களும்" இங்கே அடையாளங்கள். ஆதன் ஆதியாக இருந்த பொழுது வர்ணனைகள் மிக அதிகமாக இருக்கும். ஆதன் ஆகிய பின் வர்ணனைகள் போயாச்சு.

தலைகளை காவு கொடுக்க ஆரம்பித்தது ஆதவாதான். ஆதன் இப்பதான் ஆரம்பித்து இருக்கிறார்.

தாமரை
08-10-2010, 06:08 AM
(1)


(4)

கடிவாளமிடப்படா
கருங்(க்)குதிரைகளின் வேகத்துக்கு
விரல்களால் ஈடுகொடுக்கும் வித்தை
கைவரப்பெற்றவன்,
மன்றத்தாயின் வரம் பெற்றவன்!
மூர்த்தி பெரிது, அவர்
கீர்த்தி அதனினும் பெரிது!



*****
குதிரை என்னும்பொழுது நினைவிற்கு வருபவர்கள் இருவர்

1. பரஞ்சோதி
2. சிவா.ஜி

இவங்க இரண்டு பேர்தான் குதிரையை அடையாளமா வச்சிருந்தவங்க. அதில் பரஞ்சோதி சிறுவர்கள் பக்கத்திற்கு சொந்தக்காரர். சிவா.ஜி மர்மக்கதை மன்னர்..

பரம்ஸ் வேகமாக பதியக் கூடியவர், சிவா.ஜி விறுவிறுப்பான மர்மக் கதைகளை படுவேகத்தில் கொண்டு செல்லக் கூடியவர். கருக் குதிரை என்றவுடன் பரம்ஸ் காலி..

மூர்த்தி பெரிது என்றவுடன் சிவா.ஜி அவுட். "கரு", பெரிய மூர்த்தி என்றவுடன் தக்ஸ் வந்து உட்கார்ந்திடறார்.

குதிரை மட்டும் கொஞ்சம் அவுட் ஆஃப் சிங்க்.. நகைச்சுவையை காட்டி இருக்கலாம்.

தாமரை
08-10-2010, 06:14 AM
(1)



(5)

மன்றத்தின் மணிமுடி
வயசிலோ வணங்காமுடி!
வலதுகால் வைத்து வருவோரை
ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
இந்த இனியவருக்கு
மரியாதை வழங்காமையே
மரியாதை வழங்கலாம்!


*****

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..

அமரனை இப்படிக் கிண்டல் செய்திருக்கக் கூடாது,,

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று கேட்பார்கள். வயதில் வணங்காமுடி என்றால்

அவருக்கு வளையாத வயது அதாவது ஐம்பதுக்கு மேல வயசு என்று ஆகிறது. பாவம் இன்னும் கல்யாணம் ஆகாத புள்ளை. கொஞ்சமாச்சும் கருணை காட்டுங்கம்மா..

மத்தபடி எல்லாம் சரிதான்.

தாமரை
08-10-2010, 06:17 AM
(1)



(6)

உள்ளுவதெல்லாம்
உயர்வாய் உள்ள....
துள்ளியதெல்லாம்
தொய்ந்து துவள....
உள்ளதையெல்லாம்
சொல்வதா? கொல்வதா?
குழப்பமேகத்துக்குள்
குளிர்நிலவு!



*****


மதி பெண்பார்க்கும் படலத்தை தொட்டிருக்கலாம். எல்லொரும் ஈஸியா கண்டுபிடிச்சிருப்பாங்க..

கொல்வது, குளிர்நிலவு இரண்டும் மதி என காட்டுகின்றன. மொக்கை மதியின் காதல் காவியங்கள் இங்கே இடம் பெறாதது வருத்தம்தான். வெங்காயபாய்ஸ் படிச்சீங்களா?

தாமரை
08-10-2010, 06:19 AM
(7)

சீறிவரும் புரவியொன்று
சிறு ஓய்வு கொண்டதின்று!
மாறிவரும் நாளில்
மன்றமெங்கும் துள்ளல் நடைபோடும்,
சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
சேணத்தில் சுமந்துசெல்லும்!

*****



முதல்லயே சொல்லியாச்சு குதிரைன்னா யார் யாருன்னு,.

சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
சேணத்தில் சுமந்துசெல்லும்!

இந்த வரிகள் சிவா.ஜி என்பதை காட்டுகிறது..

கூடவே அவர் சுமந்து மர்ம தேசங்களுக்கு அழைத்துச் செல்லுவார்னு சொல்லு இருந்தா சூப்பரா இருந்திருக்கும்.

தாமரை
08-10-2010, 06:22 AM
(8)

அழகிய கையெழுத்துக் கண்டால்
பழகிய எவரும்
பழிப்பரோ தமிழை?
பண்பு, பரிவு, பாசமென்னும்
முப்பரிமாணப் பெட்டகம்,
பெயரும், அவரும்!



*****

அன்புரசிகருக்கு என்ன கவிதை எழுதறது? அவர் படைப்புகள் எங்க இருக்கு? அவர் உருவம், கையொப்பம் பின்னூட்டம் வச்சு சாதுர்யமா காரியத்தை முடிச்சிகிட்டீங்க. அன்புரசிகனைப் பற்றி அமரன் / ஓவியன் சொன்னா நல்லா இருக்கும்.

தாமரை
08-10-2010, 06:24 AM
(9)

இரவில் இல்லாதவர்,
இரவில் இருப்பவர்!
படம்பார்த்து கதைசொல்வதுபோல்
இவர் கதைசொல்லி, படங்காட்டுவார்.
பிரம்மனுடன் ரகசியபோட்டியோ?
படைக்கிறாரே பல புதியமுகங்களை!

*****

இரவி தளத்திற்கு வந்து கொஞ்ச மாதங்கள் என்றாலும் அவருக்குன்னு ஒரு முத்திரை பதிச்சிட்டார் என்பது இதில் தெரியுது..

தாமரை
08-10-2010, 06:31 AM
(10)
இருப்பதை இல்லையென்கிறாய்;
இல்லாததை இருக்கிறதென்கிறாய்!
இருக்கிறதோவென எண்ணுவதற்குள்
இல்லையென்று சொல்லிச் சிரிக்கிறாய்!
ஆம்! இல்லையென ஒப்புக்கொள்கையில்
இருக்கிறதேயெனத் திறந்துகாட்டுகிறாய்!
பெண்மானே, உன் விழிகளைக் கொண்டே
வேடிக்கை காட்டுகிறாய்!

******

உன் விழிகளைக் கொண்டே பெண்மானே என்று கண்மணியைக் காட்டறீங்க.. கண்மணி ரொம்பவுந்தான் குழப்பப் பேர்வழி என்று நீங்க சொல்லவர்ரீங்க.

தலை கிர்ர்ர்ர்ர்ருன்னு சுத்தர மாதிரி ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி பேசிறாங்க அப்படின்னு சொல்றீங்க..

ஒருவேளை பட்டி மன்றம் - சூழல் உங்களை ரொம்பவுமே பாதிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

இந்தத் திரியில் இதுக்கு மேல படிங்க.. அப்புறம் கண்மணியின் கையொப்பத்தில் உள்ள சுட்டிகளைப் படிங்க உங்க எண்ணம் மாறலாம்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=364332#post364332:icon_b:

தாமரை
08-10-2010, 06:37 AM
(10)


(11)
சிறுகதையூர் செல்லும் வண்டியில்
சிறுநெரிசலுண்டாகிவிட,
நான் இந்த வண்டியில் வரலையென்று
எட்டரை மணிக்குள் வண்டியில் ஏறிக்கொண்டு,
சொந்தக்கதை, சோகக்கதை,
நொந்த கதை, நூலான கதையென்று
வேறு வேறு ஊர்களுக்கு
வெகு உல்லாசமாய் பயணிக்கிறார்!

******

இது ஜார்ஜ் என்பது அவரோட திரிகளை உப்யோகித்திருப்பதிலிருந்தே தெரியுது. எட்டரைக்குள்ள வண்டி கொல்லி டிரிப் போகும் போது. அவர் எழுதிய திரி அஞ்சரைக்குள்ள வண்டிதான்,

தாமரை
08-10-2010, 06:41 AM
******

(12)
அறுசுவை விஞ்சிய ஆக்கங்கள் ஆக்கி,
மன்றத்தில் படையலிட்டார்;
மணிவிருதுகள் வென்றுவிட்டார்!
இல்லத்தில் படையலிட்டால்
இதயங்கள் வென்றிடுவார்!
எச்சரிக்கை தேவை;
இதயங்களால் நிறைந்திருப்பதே
இவருடைய அரசவை!





விருது வென்றவர்கள் மன்றத்தில் அவார்ட் வின்னர்ஸ் ப்குதியின் மூலம் அறியலாம். இல்லத்தில் படையலிட்டால் இதயங்களை வென்றிடுவார் என்றால் இருவர் யவனிகா, கலையரசி. யவனிகா பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க ஞாயமில்லை. அதனால் கலையக்காவைத் தான் சொல்லி இருப்பீங்க என்று தெரியும்.

ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், ஏற்கனவே அரசவையில் இருக்கும் இதயங்களை எதுக்கு வெல்லணும். தன்மக்கள் மீதே ஏன் போர்தொடுக்கிறார் இந்த அரசி?

இப்படிப் பார்த்தா, கலை அக்கா தன்னுடைய சமையல் பரிசோதனைக்கு முயல்களா உங்களை உபயோகிக்கற மாதிரி சொல்லுதே?

(ஹையா கோள்மூட்டி விட்டாச்சி,,)

தாமரை
08-10-2010, 07:32 AM
(10)

(13)
அவிழ்ந்த அரும்புந்தன் நறுமணத்தை
கமழ்ந்த நற்கவிச்சரமென்றேன் நான்!
தவழும் மழலையென்னைப் புகழ்ந்து
தடுமாறச் செய்யாதே என்றாய் நீ!
நான் காணாத வேளையிலோ
கபடி விளையாடிக் களிக்கிறாய்!
குறும்பூ கொண்ட குறும்பு?

******


உங்க கதைக்கு பூ போட்ட விமர்சனமும் அதற்கு நீங்க சொன்ன பதிலும்.

ஹிந்தியில் ஒரு சொற்றொடர் உண்டு.

பஹ்லே ஆப் என்று சொல்வார்கள்.. இருவர் உணவு அருந்தச் செல்லும்போது..

நீங்க முதல்ல எடுத்துக்குங்க என்பார் முதலாமவர்..

இல்லல்ல நீங்க முதல்ல எடுத்துக்குங்க என்பார் அடுத்தவர்..

மாறி மாறி நீங்க முதல்ல என்று சொல்லிகிட்டே யாருமே எடுத்துக்கவும் மாட்டாங்க..

அந்த மாதிரி மாறி மாறி... ஹி.. ஹி..
:D:D:D:D

தாமரை
08-10-2010, 07:35 AM
(14)
பொன்னுலைக்களம்தன்னில்
பொற்பாளங்கள் பலவும்
புடம்போடக் காத்திருக்க...
உக்கிரமிழந்த கங்குகள் யாவும்
வெண்ணீறு பூத்திருக்க....
ஊதுகுழலை ஊதாகுழலாக்கி,
எந்த ஊரைப் பார்க்கப் போனாரோ,
எங்கள் ஊர்ப்பொற்கொல்லர்?

******

அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க, மன்றத்தில் இருக்கும் போது கல்யாணம் ஆன்வர்கள் எல்லோருடைய வரத்தும் மன்றத்தில் எப்பவுமே குறைவாத்தான் இருக்கு.

எங்க் ஊர் பொற்கொல்லர் என்பதை தமிழ்மன்றத்து பொற்கொல்லர் என்று படிக்கணும்..

புடம் போட காத்திருக்கும் பொற்பாளங்கள் என்று சொல்லியதால் அக்னி எனத் தெரிந்தது. அக்னியோட விமர்சனம் பேர் வாங்கின ஒண்ணு.

வரட்டும் பேசிக்கலாம்.

அமரன்
08-10-2010, 10:42 PM
அருமை.. அருமை...

உங்கள் கண்ணில் தெரிந்த முகங்களை சொல்லோவியமாக்கிவிட்டீர்கள்..

ஒன்றாய்
ஒன்றுடன் ஒன்றாய்..

திரிமுகமும் சதுரகமும்
பஞ்சமாய்..

ஆறு...
ஆறுமாய் சப்தம்..

அட்டமாய்க் கொட்டும்
நவரசம்..

தமிழ்
தருமே உனக்குத்
தசம்!

கீதம்
08-10-2010, 11:52 PM
முதலில் படிக்கும் போது உடனே தோணவில்லை, ஆனால் தலைப்பு காட்டி கொடுத்துவிட்டது. பிறகு சாவகாசமாக நிதானித்தேன்.
இருந்தாலும் என்னை இப்படியா அசிங்க அசிங்கமாகத் திட்டுவது??? traurig001:
கண்மணியின் விளக்கங்கள் பலே!

தொடருங்கள் சகோதரி!
(கலையக்காவை கூட்டிட்டு வாங்க சீக்கிரமா)

ரொம்பவும் திட்டிட்டேனா? அடப்பாவமே! இனிமே குறைச்சுக்கறேன். ஒரு விஷயம் கவனிச்சீங்களா, ஆதவா? எழுதியதிலேயே உங்களைத்தான் குறைந்த வரிகளில் (ஐந்தே ஐந்து வரி) திட்டியிருக்கிறேன். அதனால் ரொம்பவும் வருத்தப்படாதீங்க.

(கலையக்காவுக்கு பணிச்சுமை அதிகம். ஓரளவு குறைந்தபின் வருவார்கள்.)

கீதம்
09-10-2010, 12:02 AM
தாவும் மான் என்று தாமரையை முன்னால சொல்லிட்டு...

அதன் பின்னால் மன்றத்தில தாமரை என்ன செய்யறார் என்று சொல்லி இருக்கீங்க. எளிதாக கண்டு பிடித்து விடக் கூடிய ஒன்று..

எழுதிய யாவுமே எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவைதான். ஒரு விளையாட்டாய் ஆரம்பித்தேன். அதனால் மேலோட்டமாகவே எழுதிவிட்டேன். வந்து சேர்ந்த இரண்டு வருடத்துக்குள் இதுபோன்றதொரு முயற்சி தேவையா என்று தோன்றுகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் போனபின் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருக்கட்டும், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் இவற்றைப் புதுப்பித்துவிடுகிறேன். அலசிப் பிழிந்து காயப்போட்டு என்று எல்லாவற்றையும் வெளுத்துக்கட்டிவிட்டீர்கள். :icon_b:
மிகவும் நன்றி, தாமரை அவர்களே.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இணைப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். பிரமிப்பா இருக்கு. சுட்டியதற்கு மிகவும் நன்றி.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழையவற்றைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நிறைய பேருடைய அரிய திறமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடிகிறது.

கீதம்
09-10-2010, 12:23 AM
அருமை.. அருமை...

உங்கள் கண்ணில் தெரிந்த முகங்களை சொல்லோவியமாக்கிவிட்டீர்கள்..

ஒன்றாய்
ஒன்றுடன் ஒன்றாய்..

திரிமுகமும் சதுரகமும்
பஞ்சமாய்..

ஆறு...
ஆறுமாய் சப்தம்..

அட்டமாய்க் கொட்டும்
நவரசம்..

தமிழ்
தருமே உனக்குத்
தசம்!

ஆகாயவிமானமொன்றை
அரைப்பக்கக் காகிதத்தில்
அழகாய் அடக்கிவிட்டதுபோல்
அமர உள்ளத்தை
ஆறுவரிகளில் அடைத்துவிட்டேனென்று
அதீத பெருமை கொள்கிறேன்!
அடிப்பாவி!
அமரத்துவத்துக்கு
அளவுகோல் எதற்கென்று
எழுகிறது அதிருப்தி!
எனக்கோ அதி திருப்தி!
அண்ணாந்து பார்த்தால்
ஆகாயத்தில் விமானம்
அண்டக்காக்கை அளவுதானே!

பிச்சி
09-10-2010, 02:24 PM
கவிஞ்சர்களுக்கு கவிதையா பிரமாதம். ஒவ்வொன்றும் அருமையாக உள்ளன கீதம் அக்கா. (அக்கான்னு கூப்பிடலாம்தாநே ?

கண்மணி
09-10-2010, 03:15 PM
அண்ணாந்து பார்த்தால்
ஆகாயத்தில் விமானம்
அண்டக்காக்கை அளவுதானே!

ங்-கை ரொம்ப விழிப்போட தவிர்த்து விட்டீர்களக்கா..

அவர் "அண்டம்(ங்)காக்கை அல்ல
மன்றம்(ங்)காக்கை

அமரன்
09-10-2010, 08:05 PM
ஆரோகணம்.. அவரோகணம்..
கர்த்தா மட்டுமே
சம்பூர்ணம்.
சம்பூர்ணம் மட்டுமல்ல
கீதம்.

கீதம்
09-10-2010, 10:21 PM
ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், ஏற்கனவே அரசவையில் இருக்கும் இதயங்களை எதுக்கு வெல்லணும். தன்மக்கள் மீதே ஏன் போர்தொடுக்கிறார் இந்த அரசி?

இப்படிப் பார்த்தா, கலை அக்கா தன்னுடைய சமையல் பரிசோதனைக்கு முயல்களா உங்களை உபயோகிக்கற மாதிரி சொல்லுதே?

(ஹையா கோள்மூட்டி விட்டாச்சி,,)

வெல்லப்பட்ட இதயங்களால்
நிறைந்திருக்கிறது அரசவை!
இன்னும் பல இதயங்கள் வென்றால்
விரிவுபடுத்தப்படுமே பேரவை!

கீதம்
10-10-2010, 12:16 AM
கவிஞ்சர்களுக்கு கவிதையா பிரமாதம். ஒவ்வொன்றும் அருமையாக உள்ளன கீதம் அக்கா. (அக்கான்னு கூப்பிடலாம்தாநே ?

புதுமணம் வீசுகிறதேயென்று
ஓடிவந்துபார்த்தால்
பூத்திருக்கிறதே பிச்சி!

(அக்காவென்றே அழையுங்கள். தவறில்லை)

கீதம்
10-10-2010, 12:17 AM
ங்-கை ரொம்ப விழிப்போட தவிர்த்து விட்டீர்களக்கா..

அவர் "அண்டம்(ங்)காக்கை அல்ல
மன்றம்(ங்)காக்கை

எழுதும்போதே நினைத்தேன்.
கண்மணியின் கண்களுக்குத் தப்பாதோ எதுவும்?

கீதம்
10-10-2010, 12:22 AM
ஆரோகணம்.. அவரோகணம்..
கர்த்தா மட்டுமே
சம்பூர்ணம்.
சம்பூர்ணம் மட்டுமல்ல
கீதம்.

நாவோடு உடன்படாது
சங்கீதம் எனக்கு!
காதுகளுடன் மட்டுமே
அதற்கெப்போதும் இசைவு!
சங்கீதம் அறியா கீதம்,
விசித்திரம்!

தாமரை
10-10-2010, 02:58 AM
வெல்லப்பட்ட இதயங்களால்
நிறைந்திருக்கிறது அரசவை!
இன்னும் பல இதயங்கள் வென்றால்
விரிவுபடுத்தப்படுமே பேரவை!

குலேப்காவலி மாதிரி, பலே"பக்காவ்"வலி போல (பக்காவ் - சமை(ஹிந்தி)) :lachen001::lachen001::lachen001:

தாமரை
10-10-2010, 03:58 AM
ஆரோகணம்.. அவரோகணம்..
கர்த்தா மட்டுமே
சம்பூர்ணம்.
சம்பூர்ணம் மட்டுமல்ல
கீதம்.
ஆரோகணம் - இதில் "க" உச்சரிப்பு இலக்கணப்படி கல் என்பதில் உள்ளது போல் ஒலிக்கணும்.ஆனால் "கனம்" என்று சொல்வது மாதிரி தடித்து உச்சரிக்கப்படும்..

உச்சரிப்பின் படி கீழே கண்டமாதிரிதான் வரும்.

ஆரோ கனம்?
அவரோ கனம்?

(கீதமக்கா வெயிட்டை கிண்டல் செய்யறீங்க போல)

கர்த்தா மட்டுமே
சம்பூர்ணம்

பூர்ணம் என்பது நிறைவு, சம்பூர்ணம் என்பது சுப / இன்ப / நிறைவு.

இப்போ பூர்ண சந்திரன் என்றால் முழு வட்ட நிலவு. பூரண திருப்தி என்றால் முழு திருப்தி என்று பொருள்.

சங்கீத மொழியில் சம்பூர்ணம் என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் சங்கேத மொழியின் சம்பூர்ணம் என்றால் படைத்தவர் சந்தோஷமா முழு உருண்டையா இருக்கிறவர் என்று அர்த்தம்.

ஏன் இந்தச் சங்கீ(கே)த மொழி? :lachen001::lachen001::lachen001::lachen001:

விகடன்
10-10-2010, 06:41 AM
சம்பூர்ணம் மட்டுமல்ல
கீதம்.

என்ன அமரா இப்படிச் சொல்லிப்போட்டீர்கள்?
:eek:
சம்பூர்ணம் என்றால் முழுமை அல்லது நிறைந்தது என்று பொருள்படும்.:)
அப்படி மட்டும் இல்லை கீதம் என்று சொல்லிவிட்டீர்களே? :traurig001:
இதை வன்மையாக கண்(ண)டிக்கிறேன்;).

கீதம்
11-10-2010, 02:10 AM
ஆரோகணம் - இதில் "க" உச்சரிப்பு இலக்கணப்படி கல் என்பதில் உள்ளது போல் ஒலிக்கணும்.ஆனால் "கனம்" என்று சொல்வது மாதிரி தடித்து உச்சரிக்கப்படும்..

உச்சரிப்பின் படி கீழே கண்டமாதிரிதான் வரும்.

ஆரோ கனம்?
அவரோ கனம்?

(கீதமக்கா வெயிட்டை கிண்டல் செய்யறீங்க போல)

கர்த்தா மட்டுமே
சம்பூர்ணம்

பூர்ணம் என்பது நிறைவு, சம்பூர்ணம் என்பது சுப / இன்ப / நிறைவு.

இப்போ பூர்ண சந்திரன் என்றால் முழு வட்ட நிலவு. பூரண திருப்தி என்றால் முழு திருப்தி என்று பொருள்.

சங்கீத மொழியில் சம்பூர்ணம் என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் சங்கேத மொழியின் சம்பூர்ணம் என்றால் படைத்தவர் சந்தோஷமா முழு உருண்டையா இருக்கிறவர் என்று அர்த்தம்.

ஏன் இந்தச் சங்கீ(கே)த மொழி? :lachen001::lachen001::lachen001::lachen001:




என்ன அமரா இப்படிச் சொல்லிப்போட்டீர்கள்?
:eek:
சம்பூர்ணம் என்றால் முழுமை அல்லது நிறைந்தது என்று பொருள்படும்.:)
அப்படி மட்டும் இல்லை கீதம் என்று சொல்லிவிட்டீர்களே? :traurig001:
இதை வன்மையாக கண்(ண)டிக்கிறேன்;).

முரண்பட்ட ஐயம் தீர்க்க முன்வருவீரோ அமரன்?

அல்லிராணி
11-10-2010, 04:44 AM
வரகவியின்
சரகவியில்
பிறகவிகள்
தரகவிகள்
சுரகவியில்

அமரன்
11-10-2010, 05:39 AM
முரண்பட்ட ஐயம் தீர்க்க முன்வருவீரோ அமரன்?

முரண் மட்டுமல்ல
கீதம்
இனிமையும் கூட.

தீரணும் ஐயம்!

தீரவே வேண்டாம் தாகம்!

கீதம்
11-10-2010, 09:48 PM
வரகவியின்
சரகவியில்
பிறகவிகள்
தரகவிகள்
சுரகவியில்

நிறைகவிகள்
நிறைசபையில்
அரைகுறை நான்!
உரைகவியின்
உறைகளைந்து
உரை கவியே!

கீதம்
11-10-2010, 09:49 PM
முரண் மட்டுமல்ல
கீதம்
இனிமையும் கூட.

தீரணும் ஐயம்!

தீரவே வேண்டாம் தாகம்!

நன்றி, அமரன்!

கண்மணி
12-10-2010, 02:18 AM
வெல்லப்பட்ட இதயங்களால்
நிறைந்திருக்கிறது அரசவை!
இன்னும் பல இதயங்கள் வென்றால்
விரிவுபடுத்தப்படுமே பேரவை!

அவை - பேரவை

ஹோட்டல் - ஃபைவ ஸ்டார் ஹோட்டல்

அக்கோவ், எனக்கென்னவோ சில அண்ணன்கள் மாவாட்டுற மாதிரி கனவெல்லாம் வருது...:eek::eek::eek::eek:

அல்லிராணி
12-10-2010, 02:51 AM
வரகவியின்
சரகவியில்
பிறகவிகள்
தரகவிகள்
சுரகவியில்

நினைத்த மாத்திரத்தில் எண்ணங்களை பாடும் வரம் பெற்ற கவிஞரின் கதம்ப மாலை போல சரம் சரமாய் தொடுக்கப்பட்ட கவிதைகளுனூடே, அவற்றைக் கண்ட பிற கவிஞர்கள் தரம் மிகுந்த கவிதைகள் சுரம் கூட்டும் பக்க வாத்தியங்கள் ஆக மாறி ஒலிக்கின்றன.

கீதம்
12-10-2010, 11:19 AM
(15)
அன்னையவள் அங்கந்தழுவும்
இரவல் நகைகளை
இனிதே அகற்றி மகிழ்வார்!
மென்மனம் இரங்குவார்,
மென்பொருள் இறக்குவார்!
ரவுத்திரம் பழகியவராம்!
ரவையளவும் நம்பமுடியவில்லை!


(16)
கண்களுக்குள் உருவானது,
கனவுத்தொழிற்சாலை!
கல்யாணக் கனவுகளின்
அபரிமித உற்பத்தியால்
கைபேசி அழைக்கும்போதெல்லாம்
கனவுகளுடன் கைகுலுக்கச்
செல்வதும் வருவதுமாய்
ஊஞ்சலாடும் நினைவலைகள்!


(17)
வரைகலை மன்னராம்;
மன்றம் வரும்கலை மறந்தாரோ?
எண்ணம் தேடிப்போனாரோ?
எழுத்தைத் தேடிப்போனாரோ?
வண்ணம் தேடிப்போனாரோ?
வண்ணத்தின் வேரைத் தேடிப்போனாரோ?
இசையை வசைபாடவேனும்
இவ்விடம் வந்தருளமாட்டாரோ?

கீதம்
12-10-2010, 11:22 AM
அவை - பேரவை

ஹோட்டல் - ஃபைவ ஸ்டார் ஹோட்டல்

அக்கோவ், எனக்கென்னவோ சில அண்ணன்கள் மாவாட்டுற மாதிரி கனவெல்லாம் வருது...:eek::eek::eek::eek:

குடும்பத்தில் குழப்பம் உண்டாக்காமல் ஓயமாட்டீர்கள் போலிருக்கே, அண்ணனும் தங்கையும்?

கீதம்
12-10-2010, 11:24 AM
நினைத்த மாத்திரத்தில் எண்ணங்களை பாடும் வரம் பெற்ற கவிஞரின் கதம்ப மாலை போல சரம் சரமாய் தொடுக்கப்பட்ட கவிதைகளுனூடே, அவற்றைக் கண்ட பிற கவிஞர்கள் தரம் மிகுந்த கவிதைகள் சுரம் கூட்டும் பக்க வாத்தியங்கள் ஆக மாறி ஒலிக்கின்றன.

நன்றி, நன்றி அல்லிராணி அவர்களே.

சிவா.ஜி
12-10-2010, 12:27 PM
(15)
அன்னையவள் அங்கந்தழுவும்
இரவல் நகைகளை
இனிதே அகற்றி மகிழ்வார்!
மென்மனம் இரங்குவார்,
மென்பொருள் இறக்குவார்!
ரவுத்திரம் பழகியவராம்!
ரவையளவும் நம்பமுடியவில்லை!

இரவல் நகைகளைக் கண்ட மாத்திரத்தில் கழற்றி வீச
கைவாளோடு வரும்,
பிறவெல்லாம் வீணெனச் சொல்லும் பிரவீண்.

(16)
கண்களுக்குள் உருவானது,
கனவுத்தொழிற்சாலை!
கல்யாணக் கனவுகளின்
அபரிமித உற்பத்தியால்
கைபேசி அழைக்கும்போதெல்லாம்
கனவுகளுடன் கைகுலுக்கச்
செல்வதும் வருவதுமாய்
ஊஞ்சலாடும் நினைவலைகள்!

இன்று சொல்வாரோ என்று சொல்வாரோ
இதோ உன் இணையென நன்று சொல்வாரோ என
ஊஞ்சலாடும் செல்வா...
பொறுத்திருங்கள்...
விரைவிலேயே ஒருவர் உங்கள்
மனம் வெல்வா(ர்)

(17)
வரைகலை மன்னராம்;
மன்றம் வரும்கலை மறந்தாரோ?
எண்ணம் தேடிப்போனாரோ?
எழுத்தைத் தேடிப்போனாரோ?
வண்ணம் தேடிப்போனாரோ?
வண்ணத்தின் வேரைத் தேடிப்போனாரோ?
இசையை வசைபாடவேனும்
இவ்விடம் வந்தருளமாட்டாரோ?

முன்பொருநாள் தூரிகை தொலைத்தவர்
இன்றோ காரிகை இணைந்தவர்
தினந்தினம் மன்ற வருகையில் பேருவுகையடந்தவர்
இன்று மாளாப் பணிச்சுமையில்
முட்டிமோதி எட்டிப்பார்க்கும் ஓவியரோ...

அமரன்
12-10-2010, 04:26 PM
பதினஞ்சாவது பாரதி அண்ணா!

சிவா.ஜி
12-10-2010, 04:30 PM
ஆமா...பாஸ்...இப்ப தெரியுது.

பிறமொழிக் கலப்பை விரும்பாத பாரதி....
மென்பொருள் உதவிக்கென தட்டச்சி..பதிவை
இட்டவுடன் சுட்டி தரும் பாரதி.....!!!

ஆதவா
12-10-2010, 04:48 PM
கலக்கல் கீதம் அக்கா..
பாரதி அண்ணா, ஓவியனை சட்டென்று பிடித்துவிட்டேன்,
செல்வா தெரியவில்லை!!

கீதம்
12-10-2010, 09:54 PM
(15)

இரவல் நகைகளைக் கண்ட மாத்திரத்தில் கழற்றி வீச
கைவாளோடு வரும்,
பிறவெல்லாம் வீணெனச் சொல்லும் பிரவீண்.

(16)

இன்று சொல்வாரோ என்று சொல்வாரோ
இதோ உன் இணையென நன்று சொல்வாரோ என
ஊஞ்சலாடும் செல்வா...
பொறுத்திருங்கள்...
விரைவிலேயே ஒருவர் உங்கள்
மனம் வெல்வா(ர்)

(17)

முன்பொருநாள் தூரிகை தொலைத்தவர்
இன்றோ காரிகை இணைந்தவர்
தினந்தினம் மன்ற வருகையில் பேருவுகையடந்தவர்
இன்று மாளாப் பணிச்சுமையில்
முட்டிமோதி எட்டிப்பார்க்கும் ஓவியரோ...

ஆமா...பாஸ்...இப்ப தெரியுது.

பிறமொழிக் கலப்பை விரும்பாத பாரதி....
மென்பொருள் உதவிக்கென தட்டச்சி..பதிவை
இட்டவுடன் சுட்டி தரும் பாரதி.....!!!

என் பாணியிலேயே விடை சொன்னது அருமை, அண்ணா.

ரவுத்திரம் பழகியவர் என்று பாரதி அவர்களைதான் மறைமுகமாய்க் குறிப்பிட்டேன். மற்றவர்கள் சரியே! நன்றி, அண்ணா.

கீதம்
12-10-2010, 09:55 PM
பதினஞ்சாவது பாரதி அண்ணா!

மிகச்சரி அமரன். பாராட்டுகிறேன்.

கீதம்
12-10-2010, 09:58 PM
கலக்கல் கீதம் அக்கா..
பாரதி அண்ணா, ஓவியனை சட்டென்று பிடித்துவிட்டேன்,
செல்வா தெரியவில்லை!!

செல்வாவைத் தெரியவில்லையா?

கனவுத்தொழிற்சாலையும் ஊஞ்சலாடும் நினைவலைகளும் அவருக்கு உரித்தானவை.

போகட்டும். கல்யாணக்கனவுகள், செல்வதும், வருவதும் போன்ற வார்த்தைகளை வைத்தும் அறியமுடியவில்லையா?

அப்படியென்றால்........

நீ இன்னும் வளரணும் தம்பி!:lachen001:

கீதம்
12-10-2010, 10:08 PM
இந்தத்திரியை தொடர்கவிதைகள் பக்கம் திருப்பிவிடமுடியுமா பொறுப்பாளர்களே?

ஆதவா
13-10-2010, 04:33 AM
செல்வாவைத் தெரியவில்லையா?

கனவுத்தொழிற்சாலையும் ஊஞ்சலாடும் நினைவலைகளும் அவருக்கு உரித்தானவை.

போகட்டும். கல்யாணக்கனவுகள், செல்வதும், வருவதும் போன்ற வார்த்தைகளை வைத்தும் அறியமுடியவில்லையா?

அப்படியென்றால்........

நீ இன்னும் வளரணும் தம்பி!:lachen001:

ஹி ஹி ஹி....
மதி அளவுக்கு வளர்ந்தா போதுமா அக்கா????? :rolleyes:

சிவா.ஜி
13-10-2010, 04:24 PM
ஹி ஹி ஹி....
மதி அளவுக்கு வளர்ந்தா போதுமா அக்கா????? :rolleyes:

அடக்கொடுமையே....இங்கேயும் மதியா.....மதி.....இதுதான் உங்க விதியா....???

கீதம்
15-10-2010, 04:43 AM
ஹி ஹி ஹி....
மதி அளவுக்கு வளர்ந்தா போதுமா அக்கா????? :rolleyes:

டூ மச்!:lachen001:

கீதம்
15-10-2010, 04:44 AM
(18)
மன்றச்சோலைதனிலே
மனம்போல் திரியும் தும்பி!
இன்றையத் தகவல்களை
இனிதே திரட்டும் தேனீ!
விஷயம் அறிந்த வண்ணப்பூச்சி!
விவாதங்களுக்கிடுமே வண்ணப்பூச்சு!

(19)
அழகிய நினைவுகளை மெல்கிறது
அந்தக்கால சுவடியொன்று!
தமிழ்ச்சுவை மணக்கச் சொல்கிறது,
தம்மைப் படுத்திய பாடுகளை!
தெள்ளத்தமிழில் ஒரு திறந்த புத்தகம்!
அள்ளக்குறையாத அனுபவப் பெட்டகம்!

(20)
பண் நீர் தெளித்தீர், மன்றப்பண்ணையில்!
பின் நீர் தெளித்தீர், பழவிதைகள் பல!
தீந்தமிழ்த் தூறல்வரும்
திசைபார்த்திருக்கின்றன,
பழ(மொழிகள்) வி(டுக)தைகள் யாவும்!
கவிமழையில் நனையக்
காத்திருக்கிறோம் யாமும்!

அன்புரசிகன்
15-10-2010, 05:58 AM
மன்றச்சோலைதனிலே
மனம்போல் திரியும் தும்பி!
இன்றையத் தகவல்களை
இனிதே திரட்டும் தேனீ!
விஷயம் அறிந்த வண்ணப்பூச்சி!
விவாதங்களுக்கிடுமே வண்ணப்பூச்சு!

செய்திச்சோலை - செய்தி
நம்பி

அழகிய நினைவுகளை மெல்கிறது
அந்தக்கால சுவடியொன்று!
தமிழ்ச்சுவை மணக்கச் சொல்கிறது,
தம்மைப் படுத்திய பாடுகளை!
தெள்ளத்தமிழில் ஒரு திறந்த புத்தகம்!
அள்ளக்குறையாத அனுபவப் பெட்டகம்!

N - I புகழ் :D :D :D சொல்லவேண்டுமா??? ஆனா அவருக்கு அவ்வளவு வயசாகீட்டுதா??? :lachen001:

(20)
பண் நீர் தெளித்தீர், மன்றப்பண்ணையில்!
பின் நீர் தெளித்தீர், பழவிதைகள் பல!
தீந்தமிழ்த் தூறல்வரும்
திசைபார்த்திருக்கின்றன,
பழ(மொழிகள்) வி(டுக)தைகள் யாவும்!
கவிமழையில் நனையக்
காத்திருக்கிறோம் யாமும்!

குணமதியாக இருக்கலாம். சரியா தெரியல.

தாமரை
15-10-2010, 07:00 AM
முதலும் மூன்றாவதும் சொல்லாமலே விளங்கிடும்

இரண்டாவது

சொல் ஞாயிறு ஐயாவோ எனச் சந்தேகம். கண்டிப்பா இரவி இல்லை!!!

கீதம்
15-10-2010, 07:15 AM
மன்றச்சோலைதனிலே
மனம்போல் திரியும் தும்பி!
இன்றையத் தகவல்களை
இனிதே திரட்டும் தேனீ!
விஷயம் அறிந்த வண்ணப்பூச்சி!
விவாதங்களுக்கிடுமே வண்ணப்பூச்சு!

செய்திச்சோலை - செய்தி
நம்பி

அழகிய நினைவுகளை மெல்கிறது
அந்தக்கால சுவடியொன்று!
தமிழ்ச்சுவை மணக்கச் சொல்கிறது,
தம்மைப் படுத்திய பாடுகளை!
தெள்ளத்தமிழில் ஒரு திறந்த புத்தகம்!
அள்ளக்குறையாத அனுபவப் பெட்டகம்!

N - I புகழ் :D :D :D சொல்லவேண்டுமா??? ஆனா அவருக்கு அவ்வளவு வயசாகீட்டுதா??? :lachen001:

(20)
பண் நீர் தெளித்தீர், மன்றப்பண்ணையில்!
பின் நீர் தெளித்தீர், பழவிதைகள் பல!
தீந்தமிழ்த் தூறல்வரும்
திசைபார்த்திருக்கின்றன,
பழ(மொழிகள்) வி(டுக)தைகள் யாவும்!
கவிமழையில் நனையக்
காத்திருக்கிறோம் யாமும்!

குணமதியாக இருக்கலாம். சரியா தெரியல.

முதலும் முடிவும் சரி. பாராட்டுகள், அன்புரசிகன். தாமரை அவர்களுக்கு பாராட்டுகள். நடுவில் உள்ளவர் நமது ஐயாதான்.

அந்தக்காலம், மை படுத்திய பாடு, அனுபவப் பெட்டகம் இவை அவரை அறிய நான் தந்த குறிப்புகள்.

கீதம்
17-10-2010, 04:12 AM
(21)
பெருவிருட்சமொன்றின் சிறுவிழுதொன்று
பெருங்கடல் கடந்து வேரூன்றிநின்று
நூற்றாண்டுப் பெருமை பேசுது இன்று!
திருநாட்களுக்கு திரியேற்றிய விளக்கு
வெள்ளமென ஒளி சிந்தும்!
செல்லப்பிள்ளைகள் கதையை விளக்க….
வெல்லமென தமிழ் கொஞ்சும்!

(22)
திரிலோகம் எங்கணும்
திரிந்தலைந்தபோதிலும்
வாழும் திரி திரிக்கவும்
வாழ்த்துத் திரி திறக்கவும்
வழக்கம்போல வந்திடுவார்;
வழக்குண்டாக்கிச் சென்றிடுவார்!

(23)
வண்ணப்பறவைகள் போதாதோ?
எங்கள் எண்ணப்பறவைகளையும்
ஏன் சிறைபிடித்தாய்?
பெயர் தெரியா உன் தேவதைக்கு
திகட்டத் திகட்ட காதல் தரு(ம்)வாய்!
முரணாய் பல தருணம்
மரணக்கவிதை பாடு(ம்)வாய்!

ஆதி
17-10-2010, 04:20 AM
மனோஜி அண்ணா, நாரதர் அண்ணா, அடுத்தவரொரு பெண் புலவரென்று தோன்றுது, அவருக்கு ஏற்கனவே ஒரு கவிதை எழுதிவிட்டபடியால் ஊர்ஜித*மாக சொல்ல இயலவில்லை..

கீதம்
17-10-2010, 04:29 AM
(23)

பெயர் தெரியா உன் தேவதைக்கு
திகட்டத் திகட்ட காதல் தரு(ம்)வாய்!


முதலிரண்டும் மிகச்சரி. பாராட்டுகள் ஆதன்!

அதுசரி, தேவதையைக் காதலிக்கும் தேவதை உண்டோ?

நிச்சயமாய் அவர் ஒரு ஆண்கவியே!:icon_b:

தாமரை
17-10-2010, 08:20 AM
சசிதரனைக் கண்டு பிடிக்க முடியலையா ஆதன்?

சசிதரன்
17-10-2010, 03:54 PM
ஆஹா... எப்பொழுதோ ஒரு முறை மன்றம் வரும் என்னையும் ஆட்டத்துல சேர்த்திருக்கிங்க... ரொம்ப மகிழ்ச்சி கீதம் அக்கா.... ரொம்ப ரொம்ப நன்றி....[:)]

சசிதரன்
17-10-2010, 03:55 PM
சசிதரனைக் கண்டு பிடிக்க முடியலையா ஆதன்?

மன்றத்துக்கு அதிகமா வருவது கிடையாதில்லையா அண்ணா... அதான் அவரால கண்டுபிடிக்க முடியல...:D

தாமரை
19-10-2010, 09:01 AM
படம் சூப்பர்.

பிரதீப்புக்கு ஒரு கவிதை, தலைக்கு ஒரு கவிதை அப்படின்னு முன்னால எல்லாம் ஒருத்தருக்கு பலபேர் கவிதை எழுதுவாங்க.

ஆதவாவும் கீதமும் இப்போ எல்லோருக்கும் கவிதை எழுதறாங்க...

நல்ல முயற்சி

பிரதீப்புக்கு ஒரு கவிதை! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5526)

தலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5493)

கீதம்
19-10-2010, 09:43 PM
சசிதரனைக் கண்டு பிடிக்க முடியலையா ஆதன்?

மிகச்சரி. பாராட்டுகள்.

நீங்கள் அறியாத பதிப்புகளா? சசிதரனின் கிளிகள் பற்றி தக்ஸ் சொன்னதையும், பெயர் தெரியா தேவதைக்கு என்ற அவரது கவிதை மற்றும் மரணம் பற்றி பல கவிதைகள் புனைந்துள்ளதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டேன்.

கீதம்
19-10-2010, 09:47 PM
ஆஹா... எப்பொழுதோ ஒரு முறை மன்றம் வரும் என்னையும் ஆட்டத்துல சேர்த்திருக்கிங்க... ரொம்ப மகிழ்ச்சி கீதம் அக்கா.... ரொம்ப ரொம்ப நன்றி....[:)]


மன்றத்துக்கு அதிகமா வருவது கிடையாதில்லையா அண்ணா... அதான் அவரால கண்டுபிடிக்க முடியல...:D

எப்போது மன்றம் வருகிறீர்கள், எத்தனை பதிவுகள் தருகிறீர்கள் என்பது கணக்கில்லை, சசிதரன். பதிக்கும் ஒருசில பதிவுகளும் படிப்பவர் மனதில் ஒரு பாதிப்பை உண்டுபண்ணினால் அதில்தானே இருக்கிறது பதிவின் பெருமை!

அந்த வகையில் பார்த்தால் என் மனம் பாதித்த கவிஞர்களில் உங்கள் பெயரும் அடங்கும்.

கீதம்
19-10-2010, 09:49 PM
பிரதீப்புக்கு ஒரு கவிதை! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5526)

தலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5493)

இவர்கள் எல்லோரும் இப்போதும் இணைந்து செயல்பட்டால் எத்தனை இனிமையாக இருக்கும்!

ஆதி
20-10-2010, 01:49 AM
//மனம் பாதித்த கவிஞர்களில் //

நான் கூட அப்படித்தான் இல்லையா :D :D


பட் சின்ன வித்யாசம் பாதிச்ச பாதிப்புல என் கவிதை பக்கமே வரமாட்டேனு சொல்லிட்டு பொய்டீங்கோ ஹாஹ்ஹா

கீதம்
20-10-2010, 03:59 AM
//மனம் பாதித்த கவிஞர்களில் //

நான் கூட அப்படித்தான் இல்லையா :D :D


பட் சின்ன வித்யாசம் பாதிச்ச பாதிப்புல என் கவிதை பக்கமே வரமாட்டேனு சொல்லிட்டு பொய்டீங்கோ ஹாஹ்ஹா

எங்கே வராமல் போனேன்? விமர்சனப்போட்டிக்கு உங்க கவிதையைத்தானே எடுத்திருக்கேன்!

ஆதி
20-10-2010, 04:02 AM
எங்கே வராமல் போனேன்? விமர்சனப்போட்டிக்கு உங்க கவிதையைத்தானே எடுத்திருக்கேன்!

அக்கா சீரியஸா எடுத்துக்காதீங்க.. :)

பண்பட்டவர் பகுதில, அந்த தலைப்பற்ற கவிதைக்கு பதில் போட்டிருந்தீங்க இல்ல "இனி வருவதில்லை னு"அதை சொன்னேன் :D :D :D

கீதம்
20-10-2010, 04:07 AM
அக்கா சீரியஸா எடுத்துக்காதீங்க.. :)

பண்பட்டவர் பகுதில, அந்த தலைப்பற்ற கவிதைக்கு பதில் போட்டிருந்தீங்க இல்ல "இனி வருவதில்லை னு"அதை சொன்னேன் :D :D :D

ஏதாவது ஸ்மைலி போடலைன்னா அது சீரியஸா எடுத்துக்கிறதுன்னு அர்த்தமா? :)

அந்தக்கவிதை எழுப்பிய பாதிப்பு அது. அதை அங்கேதானே எழுதமுடியும்?

ஆதி
20-10-2010, 04:09 AM
அந்தக்கவிதை எழுப்பிய பாதிப்பு அது. அதை அங்கேதானே எழுதமுடியும்?

ஹாஹ்ஹா

:D :D :D

தாமரை
20-10-2010, 04:11 AM
ஏதாவது ஸ்மைலி போடலைன்னா அது சீரியஸா எடுத்துக்கிறதுன்னு அர்த்தமா? :)



http://www.tamilmantram.com/vb/showthread.php?p=397610#post397610

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. தென்றல் வீசிய ஞாபகம் வருதே...!!!

ஆமாம் அதுக்கப்புறம் அது மகாபாரதக் காட்சின்னு எழுதி இருந்தனே அதைப் படிச்சீங்களா?

கீதம்
20-10-2010, 04:16 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=397610#post397610

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. தென்றல் வீசிய ஞாபகம் வருதே...!!!

ஆமாம் அதுக்கப்புறம் அது மகாபாரதக் காட்சின்னு எழுதி இருந்தனே அதைப் படிச்சீங்களா?

கவிதையைப் படிக்கும்போது எனக்கும் மகாபாரதக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. பல சமயம் இப்படிதான்! தோன்றுவதை எழுத பயந்து சும்மா இருந்துவிடுவேன். உங்கள் பின்னூட்டம் பார்த்தபிறகு உறுதி செய்துகொண்டேன்.

கீதம்
26-10-2010, 04:41 AM
(24)

பாரதத்தேரில் பவனிவருபவர்!
பாண்டவர்க்குப் புகலிடம்தந்த
இவருக்கும் அஞ்ஞாதவாசம்
அடிக்கடி அறிவிப்பவர் எவரோ?
வளம் கொஞ்சும் வார்த்தைக்காரர்,
உளம் கொஞ்ச அடிவைத்திருக்கிறார்,
கவிமாளிகையின் கவின்வாயிலில்!


(25)

அசத்தல் நாயகனாம்;
அழகில் நாயகியாம்;
நகைச்சுவைத் தா(த்)தாவாம்;
நல்லதொரு பாட்டியுமாம்;
பழக்கத்தில் குழந்தையாம்;
பக்தியில் பெருமகனாம்!
அத்தனையும் அறிமுகமே எனக்கு!
அறிந்தபின் சொல்ல அநேகமிருக்கு!


(26)

குறைவிலா குதூகலத்துடன்
கும்மாளமிட்டிருந்த குட்டிப்பாப்பா,
பிறந்தநாள் கொண்டாடி
பெருமகிழ்வுடன் போனதப்பா!
போனதிப்போ வாய்பொத்தி
கண்ணாமூச்சி ஆடுதப்பா!
‘கா’ விட்டது யாரப்பா?
கடிவாளமிட்டது ஏனப்பா?


(27)

ஏட்டை மறந்தாள், எழுத்தாணி மறந்தாள்,
திரியனுப்பி, திரித் திறவ, ஒருபோதும் மறவாள்!
கண்ணனை யசோதை கட்டியதுபோல்,
அண்ணனை தம்பியை அழுத்தமாய்க்கட்டும்
அன்பும், பாசமும், அளவிலா நேசமும்
முறுக்கி முறுக்கித் திரித்திட்ட
முத்திரைக்கயிற்றுக்கு முழுசொந்தக்காரி!

ஆதி
26-10-2010, 07:03 AM
24) பாரதி அண்ணா

25) தலை

26) அகிலா

27) யவனியக்கா

சரியா அக்கா ?

கீதம்
26-10-2010, 08:07 AM
கண்டுபிடித்ததில் பாதி சரி. பாதி தப்பு. எதெது எதெது என்று கண்டுபிடியுங்கள்.

இருந்தாலும் ஆதன், உங்களுக்கு இவ்வளவு மறதி கூடாது.

த.ஜார்ஜ்
26-10-2010, 08:28 AM
27 -ஓவியா -சரிதானே

கீதம்
26-10-2010, 08:51 AM
27 -ஓவியா -சரிதானே

மிகச்சரி ஜார்ஜ். பாராட்டுகள்.

ஆதி
26-10-2010, 09:37 AM
27 -ஓவியா -சரிதானே


மிகச்சரி ஜார்ஜ். பாராட்டுகள்.

ஓவியா அக்கா இதை பார்த்தால், என் கதை முடிஞ்சுது..

கீதம்
26-10-2010, 10:02 AM
ஓவியா அக்கா இதை பார்த்தால், என் கதை முடிஞ்சுது..

அவ்வளவு பயமுள்ளவர் எப்படி தப்பாகக் கணிக்கலாம்? எங்கிருந்தாலும் ஓவியா வருக...அன்புத்தம்பிக்கு பரிசு தருக!

ஏன் வம்பு என்று ஓடிவிடாதீர்கள்.. மற்றவர்களில் முதலாமிடத்தில் இருப்பவர் யாரென்று கண்டுபிடியுங்கள்.

நிச்சயம் பாரதி அவர்களைக் குறிக்கவில்லை. பாரதம் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

ஆதி
26-10-2010, 10:47 AM
பாரதத்தை = பா ரதம் என்று பிரித்ததின் விளைவு அக்கா..

விராடன்..

கீதம்
26-10-2010, 11:15 AM
பாரதத்தை = பா ரதம் என்று பிரித்ததின் விளைவு அக்கா..

விராடன்..

:icon_b::icon_b::icon_b:

ஓவியன்
26-10-2010, 01:27 PM
(17)
வரைகலை மன்னராம்;
மன்றம் வரும்கலை மறந்தாரோ?
எண்ணம் தேடிப்போனாரோ?
எழுத்தைத் தேடிப்போனாரோ?
வண்ணம் தேடிப்போனாரோ?
வண்ணத்தின் வேரைத் தேடிப்போனாரோ?
இசையை வசைபாடவேனும்
இவ்விடம் வந்தருளமாட்டாரோ?

ஆஹா இப்படியெல்லாம் கதை போயிட்டிருக்கா...??? :confused::confused::eek:

எண்ணம், எழுத்து, வண்ணமெல்லாம் இருக்கு
தேட வேண்டியதில்லை, நேரத்தைத் தேடுவதாலேயே
நீங்க இப்படிப் பாட வேண்டியதாயிற்று..!!

Akila.R.D
12-11-2010, 04:18 AM
(26)

குறைவிலா குதூகலத்துடன்
கும்மாளமிட்டிருந்த குட்டிப்பாப்பா,
பிறந்தநாள் கொண்டாடி
பெருமகிழ்வுடன் போனதப்பா!
போனதிப்போ வாய்பொத்தி
கண்ணாமூச்சி ஆடுதப்பா!
‘கா’ விட்டது யாரப்பா?
கடிவாளமிட்டது ஏனப்பா?



என் அலுவலகத்தில் ரொம்பா நாள் கழிச்சு எனக்கு நிறையா வேலை கொடுத்திருக்காங்க அக்கா..

அதுவும் இல்லாம நவராத்திரி தீபாவளின்னு அடிக்கடி ஊருக்கு போய்ட்டதால சரியா மன்றம் வர முடியலை...


அது என்ன என்னை குட்டிப்பாப்பா சொல்லிட்டீங்க...
என் உயரத்தை யாராவது உங்களுக்கு சொல்லிட்டாங்களோ?..

கீதம்
12-11-2010, 04:20 AM
என் அலுவலகத்தில் ரொம்பா நாள் கழிச்சு எனக்கு நிறையா வேலை கொடுத்திருக்காங்க அக்கா..

அதுவும் இல்லாம நவராத்திரி தீபாவளின்னு அடிக்கடி ஊருக்கு போய்ட்டதால சரியா மன்றம் வர முடியலை...


அது என்ன என்னை குட்டிப்பாப்பா சொல்லிட்டீங்க:traurig001:...
என் உயரத்தை யாராவது உங்களுக்கு சொல்லிட்டாங்களோ?:sprachlos020::sprachlos020::sprachlos020:..

உங்க அவதாரில் இருக்கும் பாப்பாவை அப்படிக் குறிப்பிட்டேன், அகிலா.:)

மதி
12-11-2010, 04:23 AM
என் அலுவலகத்தில் ரொம்பா நாள் கழிச்சு எனக்கு நிறையா வேலை கொடுத்திருக்காங்க அக்கா..

அதுவும் இல்லாம நவராத்திரி தீபாவளின்னு அடிக்கடி ஊருக்கு போய்ட்டதால சரியா மன்றம் வர முடியலை...


அது என்ன என்னை குட்டிப்பாப்பா சொல்லிட்டீங்க...
என் உயரத்தை யாராவது உங்களுக்கு சொல்லிட்டாங்களோ?..

..........குதிர்ல இல்லே..!! :icon_b:

Akila.R.D
12-11-2010, 04:25 AM
உங்க அவதாரில் இருக்கும் பாப்பாவை அப்படிக் குறிப்பிட்டேன், அகிலா.:)

ஓ அப்படியா?...சரிங்க அக்கா...

ஆன்டனி ஜானி
12-11-2010, 04:28 AM
..........குதிர்ல இல்லே..!! :icon_b:

லேட்டா வந்தாலும் லேட்டஷ்டா வந்ததுக்கு மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் :icon_b:

Akila.R.D
12-11-2010, 04:29 AM
..........குதிர்ல இல்லே..!! :icon_b:

:traurig001::traurig001::traurig001:

ஆன்டனி ஜானி
12-11-2010, 04:31 AM
என் அலுவலகத்தில் ரொம்பா நாள் கழிச்சு எனக்கு நிறையா வேலை கொடுத்திருக்காங்க அக்கா..

அதுவும் இல்லாம நவராத்திரி தீபாவளின்னு அடிக்கடி ஊருக்கு போய்ட்டதால சரியா மன்றம் வர முடியலை...


அது என்ன என்னை குட்டிப்பாப்பா சொல்லிட்டீங்க...
என் உயரத்தை யாராவது உங்களுக்கு சொல்லிட்டாங்களோ?..

பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ..... ஆராயகூடாது

govindh
18-11-2010, 01:10 PM
உறுப்பினர்களின்
உணர்வறிந்து -
உளம் படித்து...

கவிப் படைக்கும்
கீதம் அவர்களுக்குப்
பாராட்டுக்கள்.

கீதம்
21-11-2010, 08:28 AM
உறுப்பினர்களின்
உணர்வறிந்து -
உளம் படித்து...

கவிப் படைக்கும்
கீதம் அவர்களுக்குப்
பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றி கோவிந்த்.

கீதம்
21-11-2010, 08:30 AM
28

மெய்ஞ்ஞானச்செடியில்
செஞ்சுடர்ப்பூ அரும்பா!
கவிதை சாகுபடியில்
கனப்பதெல்லாம் அருட்பா!
இருண்ட பக்கத்தில்
விளைந்ததெல்லாம் கரும்பா?
ஞானபோதையிலோ
வாலைக்கும்மி ஆட்டமப்பா!

*********************

29

மலர்முக பாலகன்;
மன்றத்தின் நூலகன்;
சுட்டுவிரல் நீட்டுமுன்னே
சுட்டிகளைக் காட்டிடுவான்;
சுட்டிய அவன் பெருமை காணவும்
சுட்டினால்தான் வருவானோ?

*******************

கீதம்
23-11-2010, 12:36 AM
மேலே குறிப்பிடப்பட்ட உறவுகளை யாரும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது இந்தத் திரியை யாரும் கண்டுகொள்ளவில்லையா?:confused:

கண்மணி
23-11-2010, 12:46 AM
28. நாகரா..

29. பிரவீன்???

கீதம்
23-11-2010, 12:57 AM
28. நாகரா..

29. பிரவீன்???

கலக்கல் கண்மணி என்றால் சும்மாவா? ரொம்ப சரி. பாராட்டுகள் கண்மணி.:icon_b:

(ஆனால் பிரவீணுக்கு இத்தனைக் கேள்விக்குறிகள் தேவையா, என்ன?)

ஆதவா
23-11-2010, 03:41 AM
எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன்.... பலரை நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!!!

ஓவியா இடம் காலியான பிறகு அங்கே நன்றாக ஊன்றி அமர்ந்து எல்லா தட்டிலும் விளையாடி நல்ல படைப்பாளியாகத் திகழும் உங்களுக்கு

“மன்றத்தின் மஹாராணி” எனும் பட்டத்தை தம்பியாகிய நான் சூடுகிறேன்!!

கீதம்
23-11-2010, 05:11 AM
எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன்.... பலரை நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!!!

ஓவியா இடம் காலியான பிறகு அங்கே நன்றாக ஊன்றி அமர்ந்து எல்லா தட்டிலும் விளையாடி நல்ல படைப்பாளியாகத் திகழும் உங்களுக்கு

“மன்றத்தின் மஹாராணி” எனும் பட்டத்தை தம்பியாகிய நான் சூடுகிறேன்!!

மன்றத்தின் மகாராணி என்ற பட்டத்தை தம்பியாகிய நீங்கள் எப்படி சூடமுடியும்? அது பெண்ணுக்குரித்தானதன்றோ?:lachen001:

(அக்கோ...வ், குடுமி வலிக்குது, விட்டுடுங்க என்று ஆதவா அலறுவது என் காதில் நன்றாகக் கேட்கிறது.)

கண்மணி
23-11-2010, 06:23 AM
(அக்கோ...வ், குடுமி வலிக்குது, விட்டுடுங்க என்று ஆதவா அலறுவது என் காதில் நன்றாகக் கேட்கிறது.)

குடுமி பிடிச்சு ஆட்டறதா? இப்படியா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=149686#post149686

ஆதவா
23-11-2010, 06:31 AM
மன்றத்தின் மகாராணி என்ற பட்டத்தை தம்பியாகிய நீங்கள் எப்படி சூடமுடியும்? அது பெண்ணுக்குரித்தானதன்றோ?:lachen001:

(அக்கோ...வ், குடுமி வலிக்குது, விட்டுடுங்க என்று ஆதவா அலறுவது என் காதில் நன்றாகக் கேட்கிறது.)

:icon_shok::medium-smiley-100:

கீதம்
23-11-2010, 06:39 AM
குடுமி பிடிச்சு ஆட்டறதா? இப்படியா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=149686#post149686
படித்தேன், ரசித்தேன். நன்றி கண்மணி.

இங்கே பாருங்கள், இன்று ஆதவாவே அவர் கையால் அளித்த வாக்குமூலத்தை!
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=501845&postcount=6

கீதம்
29-03-2011, 07:01 AM
உறவுகளே, ரொம்பநாளாச்சு உங்களை இந்தத் திரிப்பக்கம் பார்த்து. வாருங்கள், கண்டுபிடியுங்கள்!

(30)
அடிப்பார் ஆட்டுவார்;
ஆக்குவார் அணைப்பார்;
ஆக்குவார் அளிப்பார்;
அழிப்பார் போற்றுவார்;
அழுவார் தேற்றுவார்;
பரிபற்றிய பாலகர் பெற்றார்;
நெறிபற்றிய நூல்கள் கற்றார்!


(31)
கூடுவிட்டுக்கூடு தாவி
கூட்டாளிக் குறளிகளை ஏவி
குறுநகைப்பூக்களைத் தூவி
கூர்மழுங்கிய அரத்தால் ராவி
குருதி சொட்டச் சிரங்கள் சீவி
கொலைகொலையாம் என்று தானே கூவி
கும்மாளமிடுகிறான் அப்பாவி!


(32)
அறுந்த காற்றாடி போல் நானும்...
தொலைத்த என்னைத் தேடி
எங்கோ அலைகிறேன்.
வாழ்க்கைப்பாதையில் தொடரும்
என் பயணத்தில் சுவடுகளே மிச்சம்.
ஏதோ சொல்கிறாய் என்கிறீர்கள்,
சொல்லத்தான் வேண்டும்.
சும்மா இருந்தாலும் எனக்கது
சுவாரசிய சம்பவம் அன்றோ?


(33)
பீடி வலிக்காத, சரக்கடிக்காத
ஒயுங்கா வூடு போய்ச்சேரு நைனா....!
அப்பால தார் ரோட்டுல நாய் கணக்கா
தண்ணிலாரியில அடிபட்டுப்பூடுவ!
சொன்னா கேளு, ஒன் பிளட் குருப்பு
இன்னான்னு தெரிஞ்சி வச்சிணுக்கீறியா?
இன்னாத்துக்கு என்னிய இப்புடி
மொறச்சி மொறச்சிப் பாக்குறே? ஐயே... தெர்ல?
மன்றத்துல நானும் படா ஆளுதாம்பா!!


(34)
கவிதைகள் பாடுவார்,
கவியினுள் மூடத்தனம் சாடுவார்,
இட்டலிக்கும் கவிபுனைவார்,
இனிய காதலிக்கும் கவிபுனைவார்,
கதைகள் சொல்லுவார்,
கதையில் புதிரும் போடுவார்,
சிரிக்கச் செய்வார்,
சிந்திக்கவும் சில தருவார்!


(35)
பாடங்கள் பற்றிச் சொன்னான்,
ஆசிரியனென நினைத்தேன்,
பயிரிடச் சொன்னான்,
உழவனென நினைத்தேன்,
கொள்கைகள் பற்றிப் பேசினான்,
அரசியல்வாதியென நினைத்தேன்,
கதை, கவிதைகள் படைத்தான்,
கலைஞனென நினைத்தேன்,
உண்மையில் யாரென்றால்
எதிர்க்கேள்வி கேட்கிறான்.
ஓ! அவன்தானா இவன்?


என்ன கண்டுபிடிச்சாச்சா?:icon_b:

கீதம்
31-03-2011, 05:19 AM
என்ன, ஒருத்தரும் இந்த விளையாட்டுக்கு வரலையா? அடுத்ததும் ரெடி!

(36)
குறளிகளில் ஒருவனாம்,
புரளிபேசும் குறும்பனாம்,
ரகளைபல செய்தாலும்
ரசனைமிக செய்வானாம்,
அறுவையோடு ஆனவரை
உறவை ஊக்குவிப்பானாம்,
இறவை நிலம் போலிவன்
வரவைப் பார்க்கவைப்பானாம்.


(37)
மூச்சிருக்குமிடத்தை அம்பலப்படுத்திவிட்டு
அம்பலவாணனிடம் சாகாவரம் கேட்கிறான்,
ஆழ்த்தியதென்ன மரணமயக்கமோ?
யாரப்பா நீ என்றால்
நானே நானப்பா என்கிறான்.
நாலு பேரைச் சேர்த்தே சொல்கிறான்.
அட, மூன்றெழுத்து முத்தண்ணா...
ஒற்றையாளுக்கு எத்தனைப் பேரண்ணா...


(38)
வாழிய நீவிர் பல்லாண்டென்று
வாழ்த்தியதெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியென்று
வஞ்சி நான் உண்மையுணருமுன்பு
கத்தி வேண்டாம் கழுத்தறுக்க,
கவிதை போதும் உயிரெடுக்கவென்றே
வஞ்சகமாய் ஒரு வேடங்கட்டி
வண்ணத்திரையில் மின்னச்செய்தார்.
கொஞ்சமா இவர் குசும்பு?
கொட்டமடிக்குதே கோடிக்குறும்பு!

ஜானகி
31-03-2011, 05:34 AM
ஏதோ எனக்குத் தெரிந்தது....

31.........ராஜாராம் ?

33.....ஆளுங்க ?

36....முரளிராஜா ?

37.....நாகரா ?

35......கௌதமன் ?

கீதம்
31-03-2011, 05:45 AM
ஏதோ எனக்குத் தெரிந்தது....

31.........ராஜாராம் ?

33.....ஆளுங்க ?

36....முரளிராஜா ?

37.....நாகரா ?

35......கௌதமன் ?

அப்பாடா, நீங்க ஒருத்தராவது வந்தீங்களே... ரொம்ப சந்தோஷமா இருக்கு, பாராட்டுகள் ஜானகி அம்மா.:aktion033:

மூணு பேரைச் சரியா கண்டுபிடிச்சிருக்கீங்க. ஆனா அவங்க யாருன்னு சொல்லமாட்டேன்.:) :icon_ush:

வேற யாராவது வந்து சொல்றாங்களான்னு பார்ப்போம்.:icon_hmm:

முரளிராஜா
31-03-2011, 06:01 AM
அப்பாடா, நீங்க ஒருத்தராவது வந்தீங்களே... ரொம்ப சந்தோஷமா இருக்கு, பாராட்டுகள் ஜானகி அம்மா.:aktion033:





நானும் வந்தேன் யார்யார்னு கண்டுபுடிக்க சிரமமா இருக்கு

ராஜாராம்
31-03-2011, 06:17 AM
எனக்கு விளங்கவில்லை....
நான் அப்பாவி.....,சகோதரி கீதம் அவர்களே....
அதனால் என்னால் கண்டறியமுடியலை

கீதம்
05-04-2011, 11:29 PM
(31)
கூடுவிட்டுக்கூடு தாவி
கூட்டாளிக் குறளிகளை ஏவி
குறுநகைப்பூக்களைத் தூவி
கூர்மழுங்கிய அரத்தால் ராவி
குருதி சொட்டச் சிரங்கள் சீவி
கொலைகொலையாம் என்று தானே கூவி
கும்மாளமிடுகிறான் அப்பாவி!


எனக்கு விளங்கவில்லை....
நான் அப்பாவி.....,சகோதரி கீதம் அவர்களே....
அதனால் என்னால் கண்டறியமுடியலை

அப் பாவி நீங்கதான்னு ஒத்துக்கறீங்களா? அப்படியென்றால் ஜானகி அம்மா சரியாகக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர் நீங்கள் என்பது உறுதியாகிவிட்டது. பாராட்டுகள் இருவருக்கும்.:)

கீதம்
05-04-2011, 11:36 PM
(39)


இனிதே கொட்டுங்கள் முரசு!
இறங்கிவந்தார் சம்மனசு!
இனி காணக்கிடைக்காது தரிசு,
இனிய வசந்தமாகும் நம்மனசு!
புதியவர்களுக்கிவர் புதுசு,
பழகிய மனங்களின் இருசு!
என்றும் இளகிய மனசு,
இவர் எழுத்தே இனிய பரிசு!

ஜானகி
06-04-2011, 03:12 AM
39....இளசு....?

கீதம்
06-04-2011, 04:14 AM
39....இளசு....?

மிகச்சரி. பாராட்டுகள் அம்மா.:aktion033: :aktion033:

அக்னி
06-04-2011, 08:52 AM
30. ???
31. ராஜாராம்
32. நிவாஸ்
33. லொள்ளு வாத்தியார்?
34. ஜெகதீஸன்
35. கௌதமன்
36. முரளிராஜா
37. ஆளுங்க (மூன்றெழுத்து முத்தண்ணாதான் புரியல...)
38. சர்சரண் ?
39. இளசு

திரி பற்றிப் பின்னர்...

கீதம்
06-04-2011, 09:02 AM
30. ???
31. ராஜாராம்
32. நிவாஸ்
33. லொள்ளு வாத்தியார்?
34. ஜெகதீஸன்
35. கௌதமன்
36. முரளிராஜா
37. ஆளுங்க (மூன்றெழுத்து முத்தண்ணாதான் புரியல...)
38. சர்சரண் ?
39. இளசு

திரி பற்றிப் பின்னர்...

கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச உங்களுக்கு என் பாராட்டுகள் அக்னி.

ஒருத்தரைத் தெரியலைன்னு விட்டுட்டீங்க. ஏழு பேரைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. அதில் ரெண்டு யூகம் தவறு. எட்டுக்கு ஐந்து மதிப்பெண். :icon_b:

அக்னி
06-04-2011, 09:04 AM
தவறான இரண்டும் இடம்மாறி வந்தாற் சரியாகுமோ...

கீதம்
06-04-2011, 09:06 AM
தவறான இரண்டும் இடம்மாறி வந்தாற் சரியாகுமோ...

ஒருத்தர் மட்டும்தான் இடம் மாறலாம். ஒருத்தர் வெளியேறணும், இன்னொருத்தர் உள்ளே வரணும்.:)

Nivas.T
06-04-2011, 09:12 AM
30 ஜானகியம்மா :confused:
31 ராரா :cool:
32 ஹி ஹி நானு :D:D:D
33 பிரபு :confused:
34 ஜெகதீஸன்
35 கௌதமன்
36 முரா

அக்னி
06-04-2011, 09:12 AM
சரண இடம்மாத்தீட்டு வாத்தியப் புடிச்சு வெளிய விட்டாச்சு...
பார்க்கலாம்...

30. ???
31. ராஜாராம்
32. நிவாஸ்
33. சர்சரண்
34. ஜெகதீஸன்
35. கௌதமன்
36. முரளிராஜா
37. ஆளுங்க (மூன்றெழுத்து முத்தண்ணாதான் புரியல...)
38. ???
39. இளசு

உமாமீனா
06-04-2011, 09:23 AM
அட நல்ல இருக்கே....:aktion033::aktion033:

கீதம்
06-04-2011, 09:55 AM
30 ஜானகியம்மா :confused:
31 ராரா :cool:
32 ஹி ஹி நானு :D:D:D
33 பிரபு :confused:
34 ஜெகதீஸன்
35 கௌதமன்
36 முரா

எங்கே இன்னும் ரெண்டுபேரைக் காணோம்?:)


சரண இடம்மாத்தீட்டு வாத்தியப் புடிச்சு வெளிய விட்டாச்சு...
பார்க்கலாம்...

30. ???
31. ராஜாராம்
32. நிவாஸ்
33. சர்சரண்
34. ஜெகதீஸன்
35. கௌதமன்
36. முரளிராஜா
37. ஆளுங்க (மூன்றெழுத்து முத்தண்ணாதான் புரியல...)
38. ???
39. இளசு

ஐயையோ.... ஆள் மாறிப் போயிடுச்சு. உள்ளே இருக்கவேண்டியவரை வெளியில துரத்திவிட்டுட்டீங்க.:D

கீதம்
06-04-2011, 09:57 AM
அட நல்ல இருக்கே....:aktion033::aktion033:

நன்றி உமாமீனா.

கீதம்
06-04-2011, 10:03 AM
சரி, இனியும் உங்களுக்குத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை மக்களே.... சொல்லிடறேன்.

30. ஜானகி அம்மா
31. ராஜாராம்
32. நிவாஸ்
33. மகாபிரபு
34. ஜெகதீசன் ஐயா
35. கெளதமன்
36. முரளிராஜா
37. ஆளுங்க
38. லொள்ளு வாத்தியார்
39. இளசு அவர்கள்.

விளக்கம் பிறகு தரப்படும்.

முரளிராஜா
06-04-2011, 10:03 AM
எங்கே இன்னும் ரெண்டுபேரைக் காணோம்?:)



ஐயையோ.... ஆள் மாறிப் போயிடுச்சு. உள்ளே இருக்கவேண்டியவரை வெளியில துரத்திவிட்டுட்டீங்க.:D

இதுக்குதான் சரியா தெரியலைனா என்ன மாதிரி வேடிக்கைபாக்கறதோட
நிறுத்திக்கனும் அக்னி:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

Nivas.T
06-04-2011, 10:13 AM
இதுக்குதான் சரியா தெரியலைனா என்ன மாதிரி வேடிக்கைபாக்கறதோட
நிறுத்திக்கனும் அக்னி:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:eek::eek:
எட்ட பார்வையா? :sprachlos020:
கிட்ட பார்வையா? :sprachlos020:

:aetsch013::aetsch013::aetsch013:

முரளிராஜா
06-04-2011, 10:14 AM
:eek::eek:
எட்ட பார்வையா? :sprachlos020:
கிட்ட பார்வையா? :sprachlos020:

:aetsch013::aetsch013::aetsch013:
கிட்டபார்வைதான் ஹிஹிஹிஹி:D:D:D:D:D:D

இப்ப சந்தோசமா நிவாஷ்

Nivas.T
06-04-2011, 10:20 AM
கிட்டபார்வைதான் ஹிஹிஹிஹி:D:D:D:D:D:D


அப்பா உங்களுக்கு பக்கத்துல இருக்ககுற எதுவுமே தெரியாதா முரா??? ஐயோ பாவம் :D:D:D:D


இப்ப சந்தோசமா நிவாஷ்

என்னோட துணிய நான்தான் முரா வாஷ் பண்ணுவேன் :D:D:D:D

கீதம்
07-04-2011, 06:43 AM
(30)
அடிப்பார் ஆட்டுவார்;
ஆக்குவார் அணைப்பார்;
ஆக்குவார் அளிப்பார்;
அழிப்பார் போற்றுவார்;
அழுவார் தேற்றுவார்;
பரிபற்றிய பாலகர் பெற்றார்;
நெறிபற்றிய நூல்கள் கற்றார்!

அடிப்பார் ஆட்டுவார்

தான் படித்தவற்றை தட்டச்சில் அடிப்பார், அடுத்தவர் கருத்துக்களையும் ஆமோதித்துத் தலை ஆட்டுவார். (இத்தலை அத்தலை இல்லை:))

அடிப்பார் ஆட்டுவார் = அடிப்பாராட்டுவார்

நாலடியாரைப் பாராட்டி நமக்கு நல்ல கருத்து சொல்லுவார்.

ஆக்குவார் அணைப்பார்

புதிய ஆக்கங்கள் ஆக்குவார், மற்றவர்களுக்குப் பின்னூட்டமிட்டு அரவணைத்துச் செல்வார்.

ஆக்குவார் அளிப்பார்

அருமையாய் ஆக்குவார் (சமைப்பார்) அதன் செய்முறையை மன்றத்தில் அளித்து மகிழ்வார்.

அழிப்பார் போற்றுவார்

அழிக்கும் கடவுளான சிவனைப் போற்றும்வகையில் திருமந்திரம் பதிவிடுவார்.

அழுவார் தேற்றுவார்

சோர்ந்த மனங்களை தினசரி தியானம் மூலம் அமைதிப்படுத்தித் தேற்றுவார்.

பரி பற்றிய பாலகர் பெற்றார்

பரியைக் கைப்பற்றிய பாலகர்கள் யார்? லவனும் குசனும். அவர்களைப் பெற்றவள் சீதை.... ஜானகி...

நெறி பற்றிய நூல்களைக் கற்றார்

வாழ்க்கை நெறிகளைப் புகட்டும் பதிவுகளைக் கற்றதோடு நமக்கும் கற்றுத்தருகிறாரே...

இப்படி ஜானகி அம்மாவைக் குறித்தது சரிதானே?:)

அக்னி
07-04-2011, 06:59 AM
உண்மையில் ஊகித்தேன்... அ, ஆ களின் குழப்பத்திற் குறிப்பிடவில்லை.
மன்றம் தெரிந்த அவர் இயல்புகளை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

ஜானகி
07-04-2011, 07:22 AM
அப்பப்பா.... கவிதைக்குப் பொய் அழகு தான்.....! அதற்காக இப்படியா...

உங்கள் வார்த்தை ஜாலங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

யாரங்கே....யாராவது கீதம் அவர்களுக்குத் தகுந்த பாட்டெழுதவும்...[ எனக்குக் கைதட்ட மட்டும் தான் தெரியும்....அதாவது தெரிகிறதே...என்கிறீர்களா...?]

முரளிராஜா
07-04-2011, 07:36 AM
ஆக்குவார் அணைப்பார்

புதிய சமையல் ஆக்குவார், பின்னர் அடுப்பை அணைப்பார்

ஆக்குவார் அளிப்பார்

சமைப்பார் சமைத்து அதை நமக்கு அளித்து நாம் மாட்டிகொண்டதை நினைத்து மகிழ்வார்.


அழுவார் தேற்றுவார்

இதை சாப்பிட்டுவிட்டு அழுபவரை நான் வெளியில் வேற எதாவது நல்லதா வாங்கி தருகிறேன் என தேற்றுவார்


இதுதான் அர்த்தமா இருக்கும் என்று நான் நினைத்தேன்:lachen001::lachen001::lachen001:

ஜானகி
07-04-2011, 07:41 AM
ஆக்குவார் அணைப்பார்

புதிய சமையல் ஆக்குவார், பின்னர் அடுப்பை அணைப்பார்

ஆக்குவார் அளிப்பார்

சமைப்பார் சமைத்து அதை நமக்கு அளித்து நாம் மாட்டிகொண்டதை நினைத்து மகிழ்வார்.


அழுவார் தேற்றுவார்

இதை சாப்பிட்டுவிட்டு அழுபவரை நான் வெளியில் வேற எதாவது நல்லதா வாங்கி தருகிறேன் என தேற்றுவார்


இதுதான் அர்த்தமா இருக்கும் என்று நான் நினைத்தேன்:lachen001::lachen001::lachen001:

இந்தப் புறளியெல்லாம் இங்கு எடுபடாது...... வேறு இடம் பார்க்கவும் !

கீதம்
07-04-2011, 07:52 AM
அப்பப்பா.... கவிதைக்குப் பொய் அழகு தான்.....! அதற்காக இப்படியா...

உங்கள் வார்த்தை ஜாலங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

யாரங்கே....யாராவது கீதம் அவர்களுக்குத் தகுந்த பாட்டெழுதவும்...[ எனக்குக் கைதட்ட மட்டும் தான் தெரியும்....அதாவது தெரிகிறதே...என்கிறீர்களா...?]

நான் சொன்னதை பொய் என்று சொன்னதால் முரளிராஜா உண்மையைச் சொல்கிறேன் என்று எப்படி கிண்டல் செய்கிறார் பாருங்க. :)

கை தட்ட மட்டும்தான் தெரியும் என்று நீங்கள் சொன்னாலும் கவியெழுதவும் தெரியும் என்பதை நாங்கள் அறிவோம். சத்தியமாம், சாத்தியமாவென்று கேள்வியெழுப்பி, எங்கே தேடுகிறாய் இறைவனையென்று அலையும் மனதை சும்மா இருவென்று ஆசுவாசப்படுத்தி ஏனோ தானோவென்று ஏகப்பட்ட கவிதைகள் எழுதினீர்களே... நீங்கள் மறக்கலாம், நாங்கள் மறக்க இயலுமோ? :icon_b:

கீதம்
07-04-2011, 07:55 AM
(31)
கூடுவிட்டுக்கூடு தாவி
கூட்டாளிக் குறளிகளை ஏவி
குறுநகைப்பூக்களைத் தூவி
கூர்மழுங்கிய அரத்தால் ராவி
குருதி சொட்டச் சிரங்கள் சீவி
கொலைகொலையாம் என்று தானே கூவி
கும்மாளமிடுகிறான் அப்பாவி!

இதை அந்த அப்பாவியே (ராஜாராம்)அவர் வாயால் ஒத்துக்கொண்டுவிட்டார். கூட்டாளிக்குறளிகள் என்றது ராணாக்களைதான். (ராணாக்கள் கோவிக்காதிருப்பார்களாக):)

(32)
அறுந்த காற்றாடி போல் நானும்...
தொலைத்த என்னைத் தேடி
எங்கோ அலைகிறேன்.
வாழ்க்கைப்பாதையில் தொடரும்
என் பயணத்தில் சுவடுகளே மிச்சம்.
ஏதோ சொல்கிறாய் என்கிறீர்கள்,
சொல்லத்தான் வேண்டும்.
சும்மா இருந்தாலும் எனக்கது
சுவாரசிய சம்பவம் அன்றோ?

நிவாஸைக் கண்டுபிடிக்க நான் கொடுத்த துப்புகள்:
1. நானும் காற்றாடி போல்...
2. என்னைத்தேடி...
3. எங்கோ...
4. வாழ்க்கைப்பாதையில்...
5. பயணம் மட்டும் தொடரும்
6. ஏதோ சொல்கிறாய்
7. சும்மா...
8. சுவாரசிய சம்பவம்

மேலே குறிப்பிடப்பட்டவை நிவாஸின் கவிதைகள் உள்ளிட்ட பதிவுகளின் தலைப்புகள் சில.

(33)
பீடி வலிக்காத, சரக்கடிக்காத
ஒயுங்கா வூடு போய்ச்சேரு நைனா....!
அப்பால தார் ரோட்டுல நாய் கணக்கா
தண்ணிலாரியில அடிபட்டுப்பூடுவ!
சொன்னா கேளு, ஒன் பிளட் குருப்பு
இன்னான்னு தெரிஞ்சி வச்சிணுக்கீறியா?
இன்னாத்துக்கு என்னிய இப்புடி
மொறச்சி மொறச்சிப் பாக்குறே? ஐயே... தெர்ல?
மன்றத்துல நானும் படா ஆளுதாம்பா!!

மகாபிரபுவைக் கண்டுபிடிக்க அவர் துவங்கிய திரிகள் சில....
1. புகைவது நான், எரிவது நீ.
2. மதுவுக்கு அடிமையாகிவிட்டவர்களைக் காப்பாற்ற என்ன செய்வது?
3. மன்ற உறவுகளின் இரத்தவகை என்ன?
4. நைனா! ஊட்டான்ட வந்துகினு போறது...(பொழுதுபோக்கு மையம்)

(34)
கவிதைகள் பாடுவார்,
கவியினுள் மூடத்தனம் சாடுவார்,
இட்டலிக்கும் கவிபுனைவார்,
இனிய காதலிக்கும் கவிபுனைவார்,
கதைகள் சொல்லுவார்,
கதையில் புதிரும் போடுவார்,
சிரிக்கச் செய்வார்,
சிந்திக்கவும் சில தருவார்!

ஜெகதீசன் ஐயா என்று சுலபமாய்க் கண்டுபிடித்துவிடலாம்.

கவிதைகளில் மூடத்தனம் சாடுவார் (எ-டு) வாஸ்து, பல்லி விழும் பலன், அமாவாசையும் ஆண்குழந்தையும் போன்றவை

காதல் கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார்.
இட்டலியும் சாம்பாரும் என்றொரு கவிதை எழுதியுள்ளார்.

அக்னி
07-04-2011, 08:04 AM
கீதம்+அக்கா...
நீங்க கொஞ்சம் அப்பால போங்க... உங்க விளக்கத்தை விடவும் முரா விளக்கம் பொருத்தமா இருக்கு...

முராவைக் கட்டிவச்சு, ராரா கையால சமைத்து, சரா கையால ஊட்ட வைக்கணும்... :cool:

கீதம்
07-04-2011, 08:10 AM
(35)
பாடங்கள் பற்றிச் சொன்னான்,
ஆசிரியனென நினைத்தேன்,
பயிரிடச் சொன்னான்,
உழவனென நினைத்தேன்,
கொள்கைகள் பற்றிப் பேசினான்,
அரசியல்வாதியென நினைத்தேன்,
கதை, கவிதைகள் படைத்தான்,
கலைஞனென நினைத்தேன்,
உண்மையில் யாரென்றால்
எதிர்க்கேள்வி கேட்கிறான்.
ஓ! அவன்தானா இவன்?

இவர் கெளதமன்.
ஆசிரியன் என நினைத்தக் காரணம்...
1. பள்ளிகளும் பாடத்திட்டமும்
2. தாய்மொழியில் கல்வி
போன்றவை.

உழவனென நினைத்தக் காரணம்...
காலியிடத்தில் பயிரிடுவோம் என்னும் திரி

அரசியல்வாதியென நினைத்தக் காரணம்...
புதிய அரசியல் கட்சி-கொள்கைகள் திரி

மேலும் துப்புகள்
கேள்வியின் நாயகன், அவன் தானா இவன்- சிறுகதைகள்.

(36)
குறளிகளில் ஒருவனாம்,
புரளிபேசும் குறும்பனாம்,
ரகளைபல செய்தாலும்
ரசனைமிக செய்வானாம்,
அறுவையோடு ஆனவரை
உறவை ஊக்குவிப்பானாம்,
இறவை நிலம் போலிவன்
வரவைப் பார்க்கவைப்பானாம்.

முன்பே ராஜாராம் பற்றிச் சொல்கையில் கூட்டாளிக் குறளிகளை எவுவான் என்று சொல்லிவிட்டதால் குறளிகளில் ஒருவன் என்பது ராணாக்களில் ஒருவர் என்பது புரியும். புரளி எதுவும் பேசாவிட்டாலும் குறளி, புரளி என்று ரிதமிக்காக இருந்தால் முரளி என்று கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என்று நினைத்தேன். இறவை நிலத்துக்கு தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவை. அதுபோல் பதிவுகளுக்குத் தொடர்ந்து பின்னூட்ட ஆதரவு தருபவன் என்று கொள்ளலாம்.

(37)
மூச்சிருக்குமிடத்தை அம்பலப்படுத்திவிட்டு
அம்பலவாணனிடம் சாகாவரம் கேட்கிறான்,
ஆழ்த்தியதென்ன மரணமயக்கமோ?
யாரப்பா நீ என்றால்
நானே நானப்பா என்கிறான்.
நாலு பேரைச் சேர்த்தே சொல்கிறான்.
அட, மூன்றெழுத்து முத்தண்ணா...
ஒற்றையாளுக்கு எத்தனைப் பேரண்ணா...


ஆளுங்கவைக் கண்டுபிடிக்க கொடுத்த துப்புகள்...

சாகாவரம், மரணமயக்கம் போன்ற அவரது சிறுகதைகள்.

ஆளுங்கவின் இயற்பெயர் அருண் என்று அறிமுகத்தில் சொல்லியிருப்பதால் அந்த மூன்றெழுத்து முத்தண்ணா. (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் விளையாட்டும் முத்தண்ணா புதிர்களும் அவர் துவங்கியவை)

ஆளுங்க என்பது அநேகப் பேரைக் குறிப்பதால் ஒற்றையாளுக்கு எத்தனைப் பேரண்ணா என்றேன்.

(38)
வாழிய நீவிர் பல்லாண்டென்று
வாழ்த்தியதெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியென்று
வஞ்சி நான் உண்மையுணருமுன்பு
கத்தி வேண்டாம் கழுத்தறுக்க,
கவிதை போதும் உயிரெடுக்கவென்றே
வஞ்சகமாய் ஒரு வேடங்கட்டி
வண்ணத்திரையில் மின்னச்செய்தார்.
கொஞ்சமா இவர் குசும்பு?
கொட்டமடிக்குதே கோடிக்குறும்பு!


லொள்ளு வாத்தியாரின் காப்பியங்களில் எனக்கு மருத்துவர் வேடம் கொடுத்திருக்கிறார்...(கவிதை சொல்லியே கொல்றேனாம்)
அதற்குமுன் கவிச்சமரில் கொலையைக் கொலை செய்ததைப் பாராட்டி வாழ்த்தும் இ-பணமும் கொடுத்திருக்கிறாரே....அதான் இப்படி!:)


(39)
இனிதே கொட்டுங்கள் முரசு!
இறங்கிவந்தார் சம்மனசு!
இனி காணக்கிடைக்காது தரிசு,
இனிய வசந்தமாகும் நம்மனசு!
புதியவர்களுக்கிவர் புதுசு,
பழகிய மனங்களின் இருசு!
என்றும் இளகிய மனசு,
இவர் எழுத்தே இனிய பரிசு!

பழைய ஆட்கள் எனில் இளசு அவர்களை மிக எளிதாகவே கண்டுபிடித்துவிடலாம். புதுசு, பரிசு, மனசு என்று ஒரு தினுசாய் எழுதியிருக்கிறேனே... அதை வைத்துப் புதியவர்களும் கண்டுபிடிக்கலாம்.

Nivas.T
07-04-2011, 08:38 AM
அப்பப்பா எதனை முறைதான் உங்களை பாராட்டுவது
பாராட்டு பெறுவதை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர் நீங்கள் தான்

மீண்டும் பாராட்டுக்கள்

ஜானகி
07-04-2011, 09:51 AM
உடனடித் தேவை........எல்லோரையும் வார்த்தைகளால் கட்டிப் போட்டு, கீதம் இசைக்கும் குயிலுக்கு வாழ்த்தாரம் சூட்ட, ஒரு கவி உடனடியாகத் தேவை......

[ இதுவரை ' ரா ' ணாக்களின் லொள்ளுகளில் மாட்டாமல் இருப்பதே உங்களுக்குக் கிடைத்த ஒரு புகழாரம் ! ]

அக்னி
07-04-2011, 12:08 PM
ஆளுங்கவின் இயற்பெயர் அருண் என்று அறிமுகத்தில் சொல்லியிருப்பதால் அந்த மூன்றெழுத்து முத்தண்ணா. (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் விளையாட்டும் முத்தண்ணா புதிர்களும் அவர் துவங்கியவை)

ஓ... இது தெரியாமல் ‘ஆளுங்க’ என்ற அவர் பெயரை,
எனக்குத் தெரிஞ்ச அஞ்சாறு பாசைல எழுதிப் பார்த்தும்,
மூன்றெழுத்தில வராததால கொஞ்சம் குழம்பிப் போனேன்...

(அந்த அஞ்சாறு பாசையும் எதெது என்று கேட்கத் தடை...)

ஆளுங்க
07-04-2011, 03:05 PM
(அந்த அஞ்சாறு பாசையும் எதெது என்று கேட்கத் தடை...)

இங்கிலீஷ், ஆங்கிலம், இங்கிலிபீசு, தமிழ், டமில், தமில்....
இவை தானே நீங்க சொன்ன அந்த அஞ்சாறு பாசை??? :lachen001:

அவையோ? இவையோ ? எவையோ?

ஆளுங்க
07-04-2011, 03:08 PM
மூச்சிருக்குமிடத்தை அம்பலப்படுத்திவிட்டு
அம்பலவாணனிடம் சாகாவரம் கேட்கிறான்,
ஆழ்த்தியதென்ன மரணமயக்கமோ?
யாரப்பா நீ என்றால்
நானே நானப்பா என்கிறான்.
நாலு பேரைச் சேர்த்தே சொல்கிறான்.
அட, மூன்றெழுத்து முத்தண்ணா...
ஒற்றையாளுக்கு எத்தனைப் பேரண்ணா...



என்னைப் பற்றி கவிதை எழுதி என்னைத் திக்குமுக்காட செய்த கீதம் அவர்களுக்கு நன்றிகள் பல...:smilie_flags_kl:

கீதம்
12-04-2011, 10:30 AM
(40)
அதிபருமன் குறைத்திடவே
அற்புத உபாயம் பகர்வார்,
அதிவிரைவில் கவியெழுதி
அட்டகாசமாய் சமர் புரிவார்,
அரும்பெயரை மன்றப்புத்தகத்தில்
அழுத்தமாய்ப் பதித்திட்ட இவருக்கு
அழைப்புகள் விடுத்தும் இரங்கவில்லையே,
ஈரவிறகானதோ இவர் மனம்?

(41)
கணக்கில் புலியாராம்,
கவிதையும் மொழிவாராம்,
கலங்கரை விளக்காக
கருணை மிகக் கொள்வாராம்,
கண்டுகொள்ளாத் திரியெல்லாம்
கண்டுபிடித்துத் தருவாராம்,
கண்டுகொள்ளா இவரையும்
கண்டுபிடித்து சொல்வீரோ?


(42)
என் அம்மாவை நயந்து கவிபாடி
அடைந்துவிட்டேனடி அவள் சம்மதம்!
பேருந்துப் பயணங்களின்போது
பெருமூச்சுடன் பின்தொடர்ந்ததெல்லாம்
பேரழகி உன்னையென்று நீ அறிவதென்று?
நிலவுக்கும் விடுமுறை உண்டு,
உன் நினைவுக்கு விடுமுறை ஏதடி?
வாலிபன் என் காதலைப் புரிந்துகொள்வாயா?
வளர்பிறையென வாழ்வை நிறை செய்வாயா?

(43)
மட்டைப்பந்தாட்டம் மட்டுமல்ல,
மானிடமகத்துவமும் அறிந்தவர்,
முற்றிய வெண்டைக்கும் பிறவிப்பயன்
மீட்டெடுத்து சொர்க்கத்தைக் காட்டியவர்,
மரிக்கொழுந்தென மணக்கும் கவிகளால்
மலர்ந்திருந்த வசந்தம் மீண்டும் வருவதெப்போ?
காத்திருக்கிறேன் ஆவலுடன்,
ஒன்றும் புரியாமல் நான்!
அவர் அப்படித்தானோ?

(44)
நீர் கொழுக்கட்டைப்பிரியர் நீர்!
உள்ளத்தில் வைத்துள்ளீர்
மணக்கும் பையொன்று!
சொல்லிக் கொள்கிறீர்,
மனக்குப்பையென்று!
குப்பையைக் கிளறினால்
கோமேதகம் கிட்டலாம்,
கும்பளாம்பிகையும் சில குளறுபடிகளும்
கிட்டியதே எனக்கு!

ஆதி
12-04-2011, 10:45 AM
40) எங்கக்கா யவனியக்கா

41) ஜெகதீசன் ஐயா

42) ரசிகன்

43) தாமரையண்ணா

அக்னி
12-04-2011, 11:14 AM
40. யவனிகா+அக்கா

ஆதன் முந்திட்டாரு... அவர அப்புறமா பாத்துக்கிறேன்... :icon_ush:

ஏற்கனவே எழுதப்பட்டவங்க திரும்பவுமா... அப்படி இருக்காது ஆதன்...

தாமரை
12-04-2011, 11:23 AM
43. ஆரென்
44. பென்ஸ்

அக்னி
12-04-2011, 11:31 AM
41. மனோஜ்
42. ???

கீதம்
13-04-2011, 03:21 AM
40) எங்கக்கா யவனியக்கா

41) ஜெகதீசன் ஐயா

42) ரசிகன்

43) தாமரையண்ணா

யவனிகா மட்டும் சரி. முயற்சிக்கு பாராட்டுகள் ஆதன்.:icon_b:


40. யவனிகா+அக்கா

ஆதன் முந்திட்டாரு... அவர அப்புறமா பாத்துக்கிறேன்... :icon_ush:

ஏற்கனவே எழுதப்பட்டவங்க திரும்பவுமா... அப்படி இருக்காது ஆதன்...

சரிதான் அக்னி. முன்பே இடம்பெற்றவர்கள் இதுவரை மறுபடியும் இடம்பெறவில்லை. :)


43. ஆரென்
44. பென்ஸ்

உங்களுக்குத் தெரியாதவர்களா? வாய்ப்பே இல்லை. :) பாராட்டுகள் தாமரை அவர்களே.


41. மனோஜ்
42. ???

பாராட்டுகள் அக்னி. மனோஜ் மிகச்சரி. அந்த இன்னொருவரையும் கண்டுபிடித்துவிடுங்களேன். இவர் கவிஞர்தான். ஆனால் ரசிகன் இல்லை. :icon_b:

p.suresh
13-04-2011, 03:27 AM
பிரேம்?

கீதம்
13-04-2011, 03:32 AM
பிரேம்?

மிகச்சரி, பாராட்டுகள் சுரேஷ்.:icon_b:

கீதம்
25-04-2011, 05:42 AM
45

காந்தவிழிகளால் கவரப்பட்டு
காலச்சமுத்திரத் துளிகளில்
கரைந்துவிட்ட சூழ்நிலைக்கைதி!
காதல் தீயின் தகிப்பை
கனவுக் கண்ணீரால் தணிக்கும்
கடைசி இருக்கைக் களவாணி!
புரியாமலும் புன்னகைக்காமலும்
பாவையும் பார்வையும் புதிராட...
நிழல்நண்பனெனத் தொடரும்
நட்புள்ள நாய்க்குட்டி!


46
புளூட்டோவில் குடியேறிவிட்ட
இந்தப் பெருந்துறைக்காரருக்கு
பூமியில் வசிப்போரோடு
பூர்வ ஜன்மப் பகையோ? நட்போ?
புளகாங்கிதத்துடன் அவிழ்த்துவிடுவதெல்லாம்
புளுகுமூட்டையோ? புனுகுமூட்டையோ?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


47
தினமொரு கவிபுனையும்
திறத்தால் கவிப்புயலாம்;
இனிதாய்க் காதல் சொல்லும்
இதத்தால் கவிக்குயிலாம்;
மனங்குளிரப் பொழியும்
மனத்தால் கவிமுகிலாம்;
இனிக்கவியில்லை என்னும் சேதிமட்டும்
இனிக்கவில்லை இன்றைய தேதிமட்டும்!

இளசு
25-04-2011, 05:49 AM
47.கவிதா

http://www.tamilmantram.com/vb/member.php?u=222



( இத்திரி மூலம் உங்கள் மனம், அறிவு, கவனம், அன்பு ஆகியவற்றின் பரிமாணங்கள் மீண்டும் நிரூபணம். பிரமிக்கிறேன் கீதம் அவர்களே..)

கீதம்
25-04-2011, 05:53 AM
47.கவிதா

http://www.tamilmantram.com/vb/member.php?u=222



( இத்திரி மூலம் உங்கள் மனம், அறிவு, கவனம், அன்பு ஆகியவற்றின் பரிமாணங்கள் மீண்டும் நிரூபணம். பிரமிக்கிறேன் கீதம் அவர்களே..)

நன்றி இளசு அவர்களே....

கவி தரவில்லை என்பதால் கவிதா என்றீர்களா?

இன்னும் முயன்றால் இனிதாய்க் கண்டுபிடிக்க இயலுமே...

தினமொரு கவி என்பது இவருக்கான துப்பு.

கீதம்
10-06-2011, 04:59 AM
48

கமலம் நெற்றியில் திலகம்!
கமழும் மலரும் சுடரும்!
நீரேந்திய செம்மாமலரின்
மாரேந்திய சோதி சொல்லும்
மகத்தான சேதியென்ன?
சோதனையோ? போதனையோ?
வேதனையோ? சாதனையோ? :)

Nivas.T
10-06-2011, 05:18 AM
தாமரை அண்ணாவைத்தான் கேக்கனும் :D:D:D:D

கலைவேந்தன்
10-08-2012, 07:25 AM
முதல் பக்கம் மட்டும் தற்சமயம் வாசித்தேன். வாயடைத்தேன்.. மலைத்தேன் மாந்தியதுபோல் மலைத்தேன். துளித்தேன் துய்ந்தபோதே இத்தனை துள்ளலா என துயிர்த்தேன். கவிதை கனம் கண்டு வியர்த்தேன். சொல்லின் வளம் கண்டு அயர்ந்தேன். என்ன சொல்லிப் பாராட்ட என களைத்தேன்.. படித்தேன் என்றுமுடித்தேனில்லை. இன்னும் பல படித்தேன் பக்கங்களில் காணப்படுகின்றன என உணர்ந்தேன். விரைவில் அதையும் வாசித்தே உணர்வுகளை அள்ளித்தெளிப்பேன்..

பாராட்டுகள் கீதம்..!

கீதம்
10-08-2012, 08:04 AM
முதல் பக்கம் மட்டும் தற்சமயம் வாசித்தேன். வாயடைத்தேன்.. மலைத்தேன் மாந்தியதுபோல் மலைத்தேன். துளித்தேன் துய்ந்தபோதே இத்தனை துள்ளலா என துயிர்த்தேன். கவிதை கனம் கண்டு வியர்த்தேன். சொல்லின் வளம் கண்டு அயர்ந்தேன். என்ன சொல்லிப் பாராட்ட என களைத்தேன்.. படித்தேன் என்றுமுடித்தேனில்லை. இன்னும் பல படித்தேன் பக்கங்களில் காணப்படுகின்றன என உணர்ந்தேன். விரைவில் அதையும் வாசித்தே உணர்வுகளை அள்ளித்தெளிப்பேன்..

பாராட்டுகள் கீதம்..!

நானே மறந்த இந்தத் திரியைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி கலைவேந்தன். தங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு இன்னும் எழுதும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. விரைவில் தொடர்வேன். மீண்டும் நன்றி தங்களுக்கு.

கலைவேந்தன்
10-08-2012, 08:19 AM
அனைத்துப் பக்கங்களையும் அலசிப்பார்த்துவிட்டேன்..

விடுகதைகள் இடுவோரைக் கண்டிருக்கிறேன்.
விடுவிடுவென கதைகள் அளப்’போரை’ விட்டு ஓடி இருக்கிறேன்..
கதைகள் விடுவோரை வியந்திருக்கிறேன்..
கவிதைகள் தருவோரைக் கவனித்திருக்கிறேன்..
விரு விரு கவிதைகளைச் சுவைத்திருக்கிறேன்..
விடு விடு கவிதை பிழைக்கட்டும்
தமிழும் சேர்ந்தே தழைக்கட்டும் என்றே கண்டித்திருக்கிறேன்..
கவிதைக் கொலைவாளால் கொல்பவரைச் சாடி இருக்கிறேன்..
விடுகவிதைகள் இட்டு விடுபடாது அனைவரையும்
நடுநிலையில் பாராட்டிய கீதமை இன்று கண்டேன்..

மன்றத்தின் பேரிலும் பதிவுகளை ஆழ்ந்து வாசித்து உணர்ந்த அனுபவத்திலும்
பதிவர்களின் மனம் கனிந்த நிலைகளை மனம் கணித்த நிலையினில்
உதித்திட்ட இவ்வருங்கவித்துளிகளைக் கண்டு வியந்தே நிற்கிறேன்..!

வாழ்க தமிழ்மன்றம்.. வாழிய கீதம்.. மனம் நிறைந்ததெனக்கின்று..!

கீதம்
10-08-2012, 08:31 AM
மிக மிக மகிழ்வோடு நன்றி நவில்கிறேன். உங்களுடைய மனந்திறந்த இப்பாராட்டு, சிலகாலமாய் எழுத சோம்பி நிற்கும் என் மனதுக்கு அளிக்கப்படும் ஊக்கமருந்து. மிகவும் நன்றி கலைவேந்தன். மன்றத்தின் பால் எனக்குள்ள ஈடுபாட்டை சொல்லில் விவரிக்க இயலாது. என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது இம்மன்றமும் உறவுகளும்தான். என்னை வளர்த்த மன்றத்திற்கு என்னாலான நன்றிக்கடன் இப்பதிவுகள்.