PDA

View Full Version : மரணம் சொல்லுதல்



சசிதரன்
05-10-2010, 05:04 PM
ஒரு மரண செய்தியை எதிர்கொள்வதென்பது
அத்தனை எளிதாய் இருப்பதில்லை.

பெரும்பாலான மரணக் குறிப்புகள்
அதிகாலையில் வந்து சேர்கிறது.

அகாலத்தில் அலறும் தொலைபேசி
எப்பொழுதும் ஓர் பயத்தையும்
சேர்த்தே ஒலிக்கிறது.

கலைந்த தலையோடும்
வியர்த்த முகத்தோடும் வருபவரைத்
தொலைவில் பார்த்ததுமே
பதறத் தொடங்குகிறது மனம்.

ஒரு மரணச் செய்தியைத் தெரிவிப்பதை போல்
அத்தனை எளிதாய் இல்லை
ஒரு மரணச் செய்தியை எதிர்கொள்வதென்பது.

Ravee
05-10-2010, 05:51 PM
சசி , மிக சிறு வயதில் ஒருநாள் ஒரு தந்தி வர என் அம்மாவுடன் ஒரு வற்றிப்போன கிழவியின் சாவுக்கு போய் மூன்று மணிநேரம் பரிதாபமாக உக்கார்ந்து இருந்தேன் . எனக்கென்னவோ அந்த கிழவி நான் அந்த அறையின் எந்த மூலைக்கு போனாலும் என்னையே பார்ப்பது போல ஒரு பிரமை . இப்போதும் கூட கனவில் அந்த கிழவி எப்போதாவது வந்து என் தூக்கத்தை கெடுப்பாள் . இப்போதும் கூட தந்தி சேவகனை பார்த்தால் இழவு கொட்ட வந்துட்டியா என்றே கேட்கத்தோன்றுகிறது :lachen001:

nambi
05-10-2010, 11:36 PM
இலங்கை வானொலியில் மட்டும் தான் மரண அறிவிப்பு என்று ஒரு நிகழ்ச்சி மதியவேலையில் ஒளிபரப்புவர்கள்! இப்பொழுதும் ஒளிபரப்புகிறார்கள் என நினைக்கிறேன். அதை சிறுவயதிலேயே கேட்பேன்! அதை அறிவிப்பவரின் குரலும் சற்று உடைந்து போயிருக்கும். ஆனால் உறவுகளின் கைகள் உடனே வானொலியை அணைத்துவிடும். கூடவே வசவும், கொட்டும் கொடுத்து விடும்.

மரணம் முடிந்து சடங்குகள் அறிவிப்பின் பத்திரிகை (காரியப்பத்திரிகை) கூட வீட்டிற்குள் வர அனுமதி இல்லை...வீட்டிற்கு வெளியே தான் எங்காவது தொங்கி கொண்டிருக்கும், இல்லையேல் அதன் மூலம் மரணம் தொற்றிக்கொள்ளும் என்ற பயம் தான்!

....தூங்கப் பயம், விழிக்க பயம், இடிக்க பயம், அடிக்க பயம், அழுதப்பிள்ளையை அடிக்க பயம், அணைக்க பயம், கொடுக்கப் பயம், எடுக்கப் பயம், சாகப்பயம்.....மெத்த பயமெனக்கு...எல்லாம் பயமயம்!....(தெனாலி சோமன்) :D

மரணத்தை யார் தான் விரும்புவார்கள்? (அது பற்றித் தெரியாத குழந்தைகளைத் தவிர) மரணம், மரணச்செய்தி இரண்டையுமே வளர்ந்த மனித மனங்கள் விரும்புவதில்லை? அதன் மீதுள்ள பயம் மட்டும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி!

தாமரை
06-10-2010, 02:22 AM
மரணச் செய்தி
இன்று வந்துவிடுமோ
எண்ணிப் பயந்து உறங்கிய நாட்களெல்லாம்
மரணச் செய்தி
தப்பாமல் வந்திருக்கிறது.

என்றோ எதனாலோ
ஒரு மரணச் செய்தி
மனதை அறுத்ததில்
ஒரே ஒரே இழை அறுந்த போது
மரணத்தால் அதற்கு மேல்
பயமுறுத்த முடியவில்லை..

ஒரு மரணத்துடன்
பல கோபங்கள்
இறந்து போகின்றன

ஒரு மரணத்துடன்
பல வேதனைகள்
இறந்து போகின்றன

ஒரு மரணத்துடன்
பல பழிபாவங்கள்
இறந்து போகின்றன

மரணத்தைப் பற்றி யோசிக்கும் பொழுது.. காலத்தே வரும் மரணங்கள்.. சோகத்தைத் தந்தாலும்.. கேட்பவரின் மனதில் சிறிது பயத்தைத் தந்தாலும்...


மரணம் மறுசுழற்சியின் ஜனனம்

என்று எண்ணும் பொழுது..

அது "ம(ற)ர"ணம்

மரணம் - மறக்க வேண்டிய ரணம்.

தீபா
06-10-2010, 04:54 AM
மரணசெய்தியை எதிர்கொள்ளும் பொழுது மரணித்தவர் மட்டுமே நினைவுக்குள் இருக்கிறார். அவரது தீமைகள் ஒதுக்கப்பட்டு அவரோடு வாழ்ந்தது, அனுபவித்தது எல்லாமே மனத்திரையில் ஓடும். ஆனால் கவிதையில் உடன்பாடில்லாதது மரணச்செய்தியைச் சொல்லுவதைக் காட்டிலும் எதிர்கொள்வது கடினம் என்று சொல்வதே...
மரணச்செய்தியைச் சொல்லுவதே என்னைப் பொறுத்தவரையிலும் கடினமானது!! எதிர்கொள்வது அவரவர் திறம்!
இதேமாதிரி ஒரு கவிதையைப் படித்த ஞாபகம் இருக்கிறது. அதனாலோ என்னவோ அவ்வளவாகக் கவரவில்லை. மரணம் சொல்லுதல் பற்றி இன்னும் கொஞ்சமாவது கவிதையில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது

வாழ்த்துக்கள் சசிதரன் சார்.

தீபா
06-10-2010, 04:59 AM
சசி , மிக சிறு வயதில் ஒருநாள் ஒரு தந்தி வர என் அம்மாவுடன் ஒரு வற்றிப்போன கிழவியின் சாவுக்கு போய் மூன்று மணிநேரம் பரிதாபமாக உக்கார்ந்து இருந்தேன் . எனக்கென்னவோ அந்த கிழவி நான் அந்த அறையின் எந்த மூலைக்கு போனாலும் என்னையே பார்ப்பது போல ஒரு பிரமை . இப்போதும் கூட கனவில் அந்த கிழவி எப்போதாவது வந்து என் தூக்கத்தை கெடுப்பாள் . இப்போதும் கூட தந்தி சேவகனை பார்த்தால் இழவு கொட்ட வந்துட்டியா என்றே கேட்கத்தோன்றுகிறது :lachen001:

உங்கள் ஊரில் இன்னுமா தந்தி சேவை இருக்கிறது?
என் வாழ்நாளில் ஒரு தந்தியைக் கூட நான் பெற்றதுமில்லை, அனுப்பியதுமில்லை, பார்த்ததுகூட இல்லை.

Ravee
06-10-2010, 08:18 AM
உங்கள் ஊரில் இன்னுமா தந்தி சேவை இருக்கிறது?
என் வாழ்நாளில் ஒரு தந்தியைக் கூட நான் பெற்றதுமில்லை, அனுப்பியதுமில்லை, பார்த்ததுகூட இல்லை.

அட கல்யாணத்துக்கு வாழ்த்து தந்தி கூடவா வரவில்லை ... ஆச்ச்ச்சச்சரியம் தீபா . :aetsch013:

Nivas.T
06-10-2010, 09:28 AM
நான் இங்க வந்து இந்த கவிதைய படிச்சுட்டு பின்னூட்டம் போட்டனான்னு கேட்டா இல்லன்னு சொல்லிடுங்கோ

மரணம்னா அம்புட்டு தெய்ரியம் நமக்கு

நல்ல இரு(ங்க)க்கு சசி

சிவா.ஜி
06-10-2010, 10:01 AM
ஆமாம் சசி....

ஒரு மரணச் செய்தியைத் தெரிவிப்பதை போல்
அத்தனை எளிதாய் இல்லை
ஒரு மரணச் செய்தியை எதிர்கொள்வதென்பது.

சத்தியமான வரிகள்.

தாமரையின் பின்னூட்டக் கவிதையும், கருத்தும் ரொம்ப ரொம்ப ஆழமானவை. மிக அருமை தாமரை.

வாழ்த்துக்கள் சசி.

சசிதரன்
17-10-2010, 03:56 PM
நன்றி ரவி அண்ணா, நம்பி, தீபா, நிவாஸ் மற்றும் சிவாஜி அண்ணா...:)

சசிதரன்
17-10-2010, 03:58 PM
மரணச் செய்தி
இன்று வந்துவிடுமோ
எண்ணிப் பயந்து உறங்கிய நாட்களெல்லாம்
மரணச் செய்தி
தப்பாமல் வந்திருக்கிறது.

என்றோ எதனாலோ
ஒரு மரணச் செய்தி
மனதை அறுத்ததில்
ஒரே ஒரே இழை அறுந்த போது
மரணத்தால் அதற்கு மேல்
பயமுறுத்த முடியவில்லை..

ஒரு மரணத்துடன்
பல கோபங்கள்
இறந்து போகின்றன

ஒரு மரணத்துடன்
பல வேதனைகள்
இறந்து போகின்றன

ஒரு மரணத்துடன்
பல பழிபாவங்கள்
இறந்து போகின்றன

மரணத்தைப் பற்றி யோசிக்கும் பொழுது.. காலத்தே வரும் மரணங்கள்.. சோகத்தைத் தந்தாலும்.. கேட்பவரின் மனதில் சிறிது பயத்தைத் தந்தாலும்...


மரணம் மறுசுழற்சியின் ஜனனம்

என்று எண்ணும் பொழுது..

அது "ம(ற)ர"ணம்

மரணம் - மறக்க வேண்டிய ரணம்.



மரணத்தை பற்றிய மிக கச்சிதமான வரிகள் அண்ணா... என் கவிதைக்கு உங்கள் கவிதை பின்னூட்டமாய் கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி அண்ணா...:)