PDA

View Full Version : நோபல் பரிசு-2010



அறிஞர்
05-10-2010, 01:24 PM
நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ம் ஆண்டில்
பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார். டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ.6 கோடியே 57 லட்சமாகும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

http://images.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2010/edwards.jpg
லண்டன்/ ஸ்டாக்ஹோம், அக். 4: பிரிட்டிஷ் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தைகளை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதனை மருத்துவத்துக்கான நோபல் பரிசு தேர்வு குழுவினர் திங்கள்கிழமை அறிவித்தனர்.

விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸின் முயற்சியால் 1978 ஜூலை 25-ல் பிரிட்டனில் முதல்முறையாக சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது.
1950-ம் ஆண்டுகளுக்கு முன் கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கி பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறை இருந்தது. இதை ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டீப்டோ என்ற சக விஞ்ஞானியுடன் சேர்ந்து மேம்படுத்தினார். அவரது இந்த சிகிச்சை முறைக்கு "இன் விட்ரோ ஃபெர்டிலைசேஸன்' (ஐவிஎஃப்) என்று பெயர்.

ராபர்ட்ஸின் பங்களிப்பால் உலகம் முழுவதும் குழந்தை பாக்கியம் இல்லாத லட்சக்கணக்கான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் மூலம் பிறந்துள்ளனர். அவரது முயற்சி நவீன மருத்துவ உலகில் ஒரு மைல்கல் என்று நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

பிரிட்டனின் மான்செஸ்டரில் 1978 ஜூலை 25-ல் சோதனைக் குழாய் மூலம் முதன்முதலில் பிறந்த குழந்தை லூயிஸ் பிரெüன்.

ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ்

ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் 1925-ல் பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய அவர், 2-ம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயிரியல் படித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழத்தில் சேர்ந்தார். 1955-ல் பி.எச்டி. படிப்பை நிறைவு செய்தார்.

தொடர்ந்து 1958 முதல் லண்டன் தேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். 1963-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து அங்கு பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். இங்குதான் தனது, "இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன்' (ஐவிஎஃப்) (சோதனைக் குழாய் குழந்தை) ஆய்வை மேற்கொண்டார்.
÷அங்கு உலகின் முதல் ஐவிஎஃப் ஆய்வு மையமும் அமைக்கப்பட்டது. அங்கு சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்டோவுடன் இணைந்து சோதனை குழாய் குழந்தை ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இப்போது 85 வயதான நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

உடல்நிலை பாதிப்பு

விஞ்ஞானி ராபர்ட்ஸýக்கு இப்போது 85 வயதாகிறது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நோபல் பரிசு பெற்றது குறித்து கருத்துத் தெரிவிக்க அவரால் செய்தியாளர்களைச் சந்திக்க முடியவில்லை.
÷இது குறித்து நோபல் பரிசு குழுவில் இடம் பெற்றுள்ள ஜி. ஹன்சன் கூறியது:÷இந்த முக்கியமான தருணத்தில் துரதிருஷ்டவசமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியை ராபர்ட்ஸின் மனைவி மூலம் அவருக்குத் தெரிவித்தோம். அதை கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக அவரது மனைவி தெரிவித்தார் என்றார்.


இந்தியாவில் சோதனைக் குழாய் குழந்தை
உலகின் இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தை இந்தியாவில் பிறந்தது. இந்தக் குழந்தையை கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் சுபேஷ் முகோபாத்யா, 1978 அக்டோபர் 3-ம் தேதி உருவாக்கினார். ஆனால், அவரது சாதனை மாநில அரசாலோ மத்திய அரசாலோ உரிய முறையில் அங்கீகரிக்கப்படவில்லை. பல இடங்களில் அங்கீகாரத்துக்குப் பதிலாக அவமானமே மிஞ்சியது.

மத்திய அரசு அவரை சர்வதேச மருத்துவ கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. 1980-ம் ஆண்டில் டாக்டர் சுபேஷ் முகோபாத்யா தற்கொலை செய்து கொண்டார்.1986-ல் தான் இந்தியாவில் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கிய முதல் டாக்டர் என்று முகோபாத்யாவின் பெயர் அங்கீகரிக்கப்பட்டது.

நன்றி - தினமனி

அறிஞர்
05-10-2010, 01:29 PM
இயற்பியல் - "அதிசயப் பொருள்" கண்டுபிடிப்புக்கு (கிராபீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக) நோபல் பரிசு

http://images.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2010/geim.jpg http://images.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2010/novoselov.jpg

ஸ்டாக்ஹோம்: வருங்காலத் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தப் போகும் கிராபீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக் கமிட்டி இன்று வெளியிட்டது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஆந்த்ரே கெய்ம், பிரிட்டனைச் சேர்ந்த நோவோசெலோவ் ஆகிய இருவரும் இயற்பியல் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் கிராபீன்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கார்பன் அணுக்களை தட்டையான வடிவத்தில் அமைத்து, குவாண்டம் இயற்பியல் ஆராய்ச்சியி்ன் புதிய பரிமாணங்களை இரு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்ததாக நோபல் பரிசுக் கமிட்டி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

"இந்த ஆண்டு எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை" என கெய்ம் தெரிவித்திருக்கிறார். நோபல் பரிசு பெற்றதும் பலர் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வதாகக் கவலை தெரிவித்திருக்கும் அவர் இது மனித சமூகத்துக்கு நல்தல்ல எனக் கூறியிருக்கிறார். "எனக்கு நோபல் பரிசு கிடைத்தது ஒரு விபத்து" எனக் கருதும் பிரிவைச் சேர்ந்தவன் தாம் என்பதால், முன்பைவிட அதிகமாக தாம் உழைக்கப் போவதாகவும் கெய்ம் தெரிவித்திருக்கிறார்.

நன்றி தினமனி

சூறாவளி
05-10-2010, 03:13 PM
நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்களை ஒரு வரி செய்தியாக ரேடியோவில் கேட்டதோடு மறந்தும் விட்டேன்... இங்கு முழு விபரமும் படித்து நன்றாய் முழுமையாய் அறிந்து கொண்டேன்..

மேலும் நமது நாட்டில் டாக்டர் சுபேஷ் முகோபாத்யாவுக்கு கிடைக்காத மரியாதயை நினைத்து மிக வருத்தம்தான்..

விரிவான தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..

கீதம்
05-10-2010, 10:08 PM
மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற மருத்துவர் ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பெருமுயற்சியால் எத்தனை வாழ்வுகளில் வசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது!

இந்திய மருத்துவ விஞ்ஞானியின் முடிவு மனம் கனக்கச் செய்தது.

அன்புரசிகன்
05-10-2010, 10:35 PM
உப்பின் அருமை இருக்கும் வரை தெரியாது. இல்லாத போது தான் புரியும். நம்மவர்களின் அருமையும் அவ்வாறு தான். பக்கத்திலிருப்பவர் செய்யும் சாதனையிலும் வேறொருவர் செய்யும் சாதனை தான் கண்ணுக்கு தெரியும்.
இந்திய வைத்தியர்கள் மட்டுமல்ல. எத்தனையோ பேராசிரியர்கள் இவ்வாறு இலைமறைகாயாக உள்ளனர். வரும் சமுதாயம் நிச்சயம் கண்டுகொள்ளும். இதை சொல்லியே தற்போதய சமுதாயத்தை வளர்த்தால் நாடு தானாக முன்னேறிவிடும்.

வீதியில் வாகனவிபத்து. ஒரு வெள்ளையர் மற்றது நம்மவர். வரும் பொலிஸ் யாரை சந்தேக கண்ணுடன் பார்க்கும் என்று நினைக்கிறீர்கள்??? இது தான் இந்த விளைவுகளுக்கு வித்து...

nambi
05-10-2010, 11:21 PM
பயனுள்ள பகிர்வு! நன்றி!

பாரதி
06-10-2010, 01:21 AM
தகவலுக்கு நன்றி. கல்கத்தா மருத்துவரைக்குறித்த செய்தியையும் நேற்றுதான் படித்தேன். வேதனை.... எப்போதுதான் நம்மவர்களையும் நம்புவார்களோ தெரியவில்லை.

அறிஞர்
06-10-2010, 04:13 PM
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

http://images.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/heck.jpg http://images.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/negishi.jpg http://images.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/suzuki.jpg
வேதியியலுக்கான நோபல் பரிசை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒரு அமெரிக்கர் ஆகிய 3 பேர் பகிர்ந்துகொண்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.

210 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வரும், இக்கமிட்டி இன்று வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அறிவித்துள்ளது.

கார்பன் அணுக்களை எளிய முறையில் இணைக்கும் முறையைக் கண்டறிந்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு பரிசு வழங்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹெக் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஐ-இசி நெகிஷி,அகிரா சுஸுகி ஆகிய மூவரும், "பல்லேடிய ஊக்கத்துடனான பிணைப்பு" என்கிற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

கார்பன் அணுக்களை மிக எளிமையான முறையில் இணைத்து வசதியான பல்வேறுவகை மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு இவர்களது கண்டுபிடிப்பு பயன்படுகிறது என்றும், இதற்காகவே இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாகவும் நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது.

நன்றி - வெப்துனியா

அறிஞர்
08-10-2010, 02:33 PM
எழுத்தில் சமூக சீர்திருத்தம் - பெரு எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

http://images.nobelprize.org/nobel_prizes/literature/laureates/2010/vargas_llosa.jpg
ஸ்டாக்ஹோம், அக். 8:
இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பெரு நாட்டைச் சேர்ந்த மரியோ வர்கஸ் லோசாவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு கமிட்டி நேற்று அறிவித்தது.
தென் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்பெயின் மொழி எழுத்தாளர்களுள் ஒருவராக இவர் திகழ்கிறார். தமது எழுத்தின் மூலம் அதிகார அமைப்புகளுக்கான எல்லையை வரையறுத்தது, தனி மனிதர்களின் எதிர்ப்பு, கலகம், தோல்வி உட்பட பல விஷயங்களை படம் பிடித்துக் காட்டியது ஆகியவற்றுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை லோசா எழுதியுள்ளதுடன் சிறந்த பத்திரிகையாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார்.

‘கன்சர்வேஷன் இன் தி கதீட்ரல்’ மற்றும் ‘தி கிரீன் ஹவுஸ்’ ஆகியவை இவரது முக்கிய படைப்புகள். இதில் பெரு நாட்டு அரசியலில் ஊழல் வேரூன்றியது பற்றி எழுதி உள்ளார்.

74 வயதான இவர், 1995ல் ஸ்பெயின் மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘செர்வன்டிஸ் விருதை’ பெற்றுள்ளார்.

‘தி டைம் ஆப் தி ஹீரோ’ என்ற நாவல் மூலம் சர்வதேச புகழ் பெற்றார். நோபல் பரிசாக ரூ 6.75 கோடியை இவர் பெறுகிறார்.
நன்றி-தினகரன்

அறிஞர்
08-10-2010, 02:35 PM
சீன அரசின் எதிர்ப்பாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு


http://images.nobelprize.org/nobel_prizes/peace/laureates/2010/xiaobo.jpg

சீன அரசின் எதிர்ப்பாளரும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் கோரிப் போராடி வருபவருமான லியூ ஜியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய நோபல் பரிசுகளை, நோபல் பரிசு கமிட்டி அறிவித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு, லியூ ஜியாபோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முழு வீச்சிலான அரசியல் சீர்திருத்தம், நாடாளுமன்ற சுதந்திரம், மத வழிபாட்டு சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தி 'சார்ட்டர் 08' என்கிற அரசுக்கு எதிரான சாசனத்தை வெளியிட்டதற்காக சீன அரசு அவரைக் கடந்த 2008 ஆம் ஆண்டில் கைது செய்து, சிறையில் அடைத்தது.

இன்னும் சிறையில் வாடி வரும் லியூ, இதற்கு முன் 1989 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு கட்சி கம்யூனிச ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியதற்காக 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு கோரியதற்காக "மறு கற்பித்தல்" முகாமில் 3 ஆண்டுகள் வைக்கப்பட்டார்.

ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தலாய் லாமா போன்றோர் லியூவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில், தாங்கள் சிறையில் அடைத்திருக்கும் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறித்து சீனா அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள நிலையில், இந்த விடயம் உலக அளவில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - வெப்துனியா

அனுராகவன்
09-10-2010, 07:25 PM
நல்ல பகிர்வு சகோ..
இன்னும் தாருங்கள் ..தொடர்ந்து படிக்க நாங்க வரிசையில்....

கீதம்
09-10-2010, 10:26 PM
நோபல் பரிசு பெற்ற அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும். தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் அறிஞர் அவர்களுக்கு நன்றி.

சிவா.ஜி
10-10-2010, 10:13 AM
நோபல் பரிசு வென்ற சான்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி அறிஞரே.

விகடன்
10-10-2010, 11:09 AM
நோபல் பரிசு பெறுவோர் விபரமும் தகமையினையும் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். பயனுள்ள தகவல்த்தான்.

இந்தியாவில் எத்தனையோ திறமைமிக்கவர்கள் இருந்தும், நாட்டின் நிலமையாலும் பொருளாதார சிக்கல்களினானும் வெளியில் தென்படாது போகின்றது.

அறிஞர்
12-10-2010, 04:02 PM
பொருளாதார நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், அக்.12:

http://images.nobelprize.org/nobel_prizes/economics/laureates/2010/diamond.jpg http://images.nobelprize.org/nobel_prizes/economics/laureates/2010/mortensen.jpg http://images.nobelprize.org/nobel_prizes/economics/laureates/2010/pissarides.jpg
இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 2 அமெரிக்கர்கள். லண்டன்வாழ் சைப்ரஸ் நாட்டவர் ஒருவர் ஆகிய 3 பேர் பெறுகின்றனர்.
அமெரிக்கர்களான பீட்டர் டயமண்ட் (70) டேல் மார்டென்சன் (71), லண்டன் வாழ் சைப்ரஸ் நாட்டவரான கிறிஸ்டோபர் பசாரைட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளால் எப்படி வேலையில்லாத திண்டாட்டம் ஏற்படுகிறது என்பது குறித்த புதிய ஆய்வுரைகளை இவர்கள் வெளியிட்டனர். அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடியால் அதிக அளவுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு, கவலை, மனஅழுத்தம் அதிகரித்த நிலையில் அதிலிருந்து மீள இவர்களது ஆய்வுரைகள் உதவின.

அதற்காக, இந்த ஆண்டின் நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகடமி ஆப் சயின்ஸ் அமைப்பு நேற்று அறிவித்தது. மொத்த பரிசுத் தொகையான
ரூ 6.75 கோடியை மூவரும் பகிர்ந்து கொள்வார்கள். மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பொருளாதார நிபுணராக டயமண்ட் இருக்கிறார். அமெரிக்க ரிசர்வ் வங்கியின் உறுப்பினராக இவரை அதிபர் ஒபாமா சமீபத்தில் நியமித்தார்.

எனினும், அந்த நியமனத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் முன், அமெரிக்க மாகாண தேர்தல் பிரசாரத்துக்காக எம்.பி.க்கள் சென்றதால், டயமண்ட் இன்னும் பதவி ஏற்கவில்லை.

இந்நிலையில், அவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இல்லினாய்ஸ் மாநிலம் நார்த்வெஸ்டர்ஸ் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியராக டேல் மார்டென்சன் இருக்கிறார். 62 வயதாகும் கிறிஸ்டோபர் லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பேராசிரியர்.