PDA

View Full Version : வழு தொடர்பாக...! - 4

குணமதி
05-10-2010, 11:47 AM
வழுவமைதி (தொடர்ச்சி)

வினா

வினாவாவது, அறியக் கருதியதை வெளிப்படுத்துவதாம்

உயிர் எத்தன்மையது? - வினா வழாநிலை.

கறக்கின்ற எருமை சினையோ? என்பது வினா வழு.

வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.

எடுத்துக்காட்டு

1. மாணவன் ஆசிரியரிடம், ஐயா, இந்த வெண்பாவிற்குப் பொருள் என்ன? என்று கேட்பது அறியா வினா.
2. அங்கு தெரிவது குச்சியோ கிழவரோ? என்று கேட்பது ஐய வினா.
3. ஆசிரியர், மாணவனிடம், இந் நூற்பாவிற்குப் பொருள் யாது? என்று கேட்பது அறிவினா.
4. காராமணிப்ப பயறுண்டோ கடைக்காரரே? என்று கேட்பது கொளல் வினா
5. செழியனுக்கு ஆடையில்லையா? என்று கேட்பது கொடை வினா
6. கதிர்! சாப்பிட்டாயா? என்று கேட்பது ஏவல் வினா.

விடை

விடையாவது, வினா ஆகிய பொருளை அறிவிப்பதாம்.

உயிர் உணர்தல் தன்மையது - விடை வழாநிலை.

தில்லைக்கு வழி எது? என்று கேட்டால் சிவப்புக்காளை
முப்பது ஆயிரம் உருபாய் என்பது விடைவழு.

விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும்.

எடுத்துக்காட்டு

1. சென்னைக்கு வழி யாது? என்று வினவினால் இது என்பது சுட்டு
2.. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேன் என்பது எதிர்மறை
3. இது செய்வாயா? என்பதற்குச் செய்வேன் என்பது உடன்பாடு
4. இது செய்வாயா? என்பதற்கு நீ செய் என்பது ஏவல்
5. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேனோ? என்பது வினாவெதிர் வினாதல்
6. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கிறது எனபது உற்றது உரைத்தல்
7. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கும் என்பது உறுவது கூறல்
8. இது செய்வாயா? என்பதற்கு மற்றையது செய்வேன் என்பது இனமொழி விடை.

(மரபு வழுவமைதியுடன் தொடர் முடியும்)

கீதம்
05-10-2010, 09:48 PM
எளிய விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும், அறியாதவற்றை அறியத்தருகிறீர்கள். உங்கள் முயற்சிக்கு என் நன்றியும், பாராட்டும்.

nambi
05-10-2010, 10:48 PM
வினா, விடை.....அருமை! பகிர்வுக்கு நன்றி!

ஆதவா
06-10-2010, 06:27 AM
ரொம்ப அருமையா போகுதுங்க, மற்ற வழு தொடர்களை ஒன்றாக இணைத்தால் ஒரெ திரியில் எல்லாம் கிடைக்கும் என்று நப்பாசை!!

எடுத்துக் காட்டுகளை இன்னும் சற்று எளிமையாக்குங்களேன். அதாவது வழக்கு தமிழில் எழுதினால் இன்னும் நன்றாகப் புரியும் என்பது என் கருத்து. நீங்கள் குறிப்பிடும் பெயரும் எடுத்துக் காட்டுகளும் பழங்காலத்தவை போன்று இருக்கிறது!! உதாரணத்திற்கு “வழுதி” என்ற பெயருக்குப் பதில் “ஆதவா” என்று போட்டால் நன்றாக இருக்கும் ஹி ஹி :D

அன்புடன்
ஆதவா

பாரதி
06-10-2010, 10:58 AM
நன்றி நண்பரே.
ஆதவாவின் வேண்டுகோள் மிகவும் சரியானது. தொடர் முடிந்ததும் அனைத்தையும் ஒரே திரியில் இணைத்தால் படிப்பவர்களுக்கு எளிதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

விகடன்
06-10-2010, 12:18 PM
அறிவுபுகட்டும் வகையில் நன்றாகவே இருக்கிறது. மழுங்கியிருக்கும் விடயங்களை செப்பனிடுவதாகவும் அமைகிறது. ஆதவா சொன்னதுபோல் இன்றைய பேச்சுவழக்கிலிருக்கும் சொற்களை பயன்படுத்தின் விளங்கிக்கொள்வது எளிதாக இருக்குமெனத்தான் தோன்றுகிறது. பரிசீலனை செய்யவும்.

குணமதி
06-10-2010, 12:29 PM
எளிய விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும், அறியாதவற்றை அறியத்தருகிறீர்கள். உங்கள் முயற்சிக்கு என் நன்றியும், பாராட்டும்.

மனமார்ந்த நன்றி.

குணமதி
06-10-2010, 12:30 PM
வினா, விடை.....அருமை! பகிர்வுக்கு நன்றி!

நம்பிக்கு நன்றி.

குணமதி
06-10-2010, 12:38 PM
ரொம்ப அருமையா போகுதுங்க, மற்ற வழு தொடர்களை ஒன்றாக இணைத்தால் ஒரெ திரியில் எல்லாம் கிடைக்கும் என்று நப்பாசை!!

எடுத்துக் காட்டுகளை இன்னும் சற்று எளிமையாக்குங்களேன். அதாவது வழக்கு தமிழில் எழுதினால் இன்னும் நன்றாகப் புரியும் என்பது என் கருத்து. நீங்கள் குறிப்பிடும் பெயரும் எடுத்துக் காட்டுகளும் பழங்காலத்தவை போன்று இருக்கிறது!! உதாரணத்திற்கு “வழுதி” என்ற பெயருக்குப் பதில் “ஆதவா” என்று போட்டால் நன்றாக இருக்கும் ஹி ஹி :D

அன்புடன்
ஆதவா

நன்றி ஆதவா.
இதுவரை எழுதப்பட்டுள்ளவற்றை விட எளிமையாக்கவே முயன்றிருக்கிறேன். இன்னும் எளிமை தேவைப்படுவதை அறிந்து அவ்வாறே எழுத முயல்வேன்.
ஆதவன் என்பதும் பழங்காலத்துப் பெயர்தானே!
ஆதவன் என்றால் கதிரவன் என்று பொருள்.
எனவே, 'கதிர்' என்று மாற்றியிருக்கின்றேன்.
5ஆம் பகுதி எழுதியதும் யாராவது ஐந்தையும் ஒரு தொகுப்பாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

குணமதி
06-10-2010, 12:40 PM
நன்றி நண்பரே.
ஆதவாவின் வேண்டுகோள் மிகவும் சரியானது. தொடர் முடிந்ததும் அனைத்தையும் ஒரே திரியில் இணைத்தால் படிப்பவர்களுக்கு எளிதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

நன்றி பாரதி.
ஐந்தாம் பகுதியுடன் முடிகிறது. ஐந்தையும் ஒருதொகுப்பில் கொண்டுவரலாம்.

குணமதி
06-10-2010, 12:43 PM
அறிவுபுகட்டும் வகையில் நன்றாகவே இருக்கிறது. மழுங்கியிருக்கும் விடயங்களை செப்பனிடுவதாகவும் அமைகிறது. ஆதவா சொன்னதுபோல் இன்றைய பேச்சுவழக்கிலிருக்கும் சொற்களை பயன்படுத்தின் விளங்கிக்கொள்வது எளிதாக இருக்குமெனத்தான் தோன்றுகிறது. பரிசீலனை செய்யவும்.

கருத்துரைக்கு மிக்க நன்றி விராடன்.
கருத்தில் கொள்கிறேன்.